Tuesday, July 31, 2012

இந்திய உணவு வகைகள் துபாயில்


இந்திய உணவு வகைகள் துபாயில்

இந்திய உணவு வகைகளை துபாயில் விற்பதில் அல் அடில் டிரேடிங் மிகவும் புகழ் பெற்றதாகும். சமீபத்தில் துபாயில் தனது 20தாவது கிளையை திறந்தது. இந்தியாவில் இருந்து அங்கிருக்கும் இந்தியர்களுக்கு என்னென்ன தேவைகள் என்று அறிந்து அவைகளை விற்பது தான் இவர்களின் முக்கிய குறிக்கோள். 
யுனைடெட் அரபு எமிரேட்சில் 20 கடைகளை திறந்துள்ளார்கள் மசாலா கிங் நிறுவனத்தினர். 1984ல் முதல் கடையை திறந்தார்கள். இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து விற்று வருகின்றனர். உணவுப்பொருட்கள் விற்க விரும்புபவர்கள் இது போன்ற கம்பெனிகளை தொடர்பு கொள்வது நல்லது.

Monday, July 30, 2012

இந்திய சேலைகள்


இந்திய சேலைகள்

இந்தியா சேலைகளுக்கு புகழ்பெற்றது என்று எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் சேலைகளுக்கு புகழ்பெற்ற மாநிலங்களும் அங்கு தயாரிக்கப்படும் சேலைகளின் பெயர்களும். இவைகளில் பெரும்பாலான வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ஆந்திரா - தர்மாவரம், போச்சம்பள்ளி, 
அசாம்- மூங்கா, 
பீகார்- காந்தா, மதுபானி பெயிண்டிங், 
சட்டிஸகர்- கோசா சில்க்
குஜராத்- பட்டோலா
ஜார்கண்ட்-காந்தா, கோசா சிலக்
கர்நாடகா- சிந்தாமணி, கர்நாடகா சில்க்
மத்திய பிரதேஷ்- சந்தேரி, மகேஸ்வரி 
மஹாராஷ்டிரா- பைதனி, 
ஒரிசா- போம்கல், சம்பல்புரி,
ராஜஸ்தான் - – பந்தேஷ்
தமிழ்நாடு- காஞ்சிபுரம்
உத்திரபிரதேஷ்- ஜம்தானி, பனாரசி
மேற்கு வங்காளம்- பாலுசாரி, காந்தா, தாங்கைல்

Sunday, July 29, 2012

கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும், மாம்பழமும்


கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும், மாம்பழமும்

கோகோ கோலாவின் மாசா குளிர்பானத்திற்காக மாம்பழங்களை உற்பத்தி செய்ய கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும் சேர்ந்து ஆந்திரா மாநிலத்தில் 100 ஏக்கரில் தோத்தாப்புரி வகை மாம்பழ செடிகளை நடுவதற்கு 62 விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். "மாசா" குளிர் பானத்திற்காக  வருடத்திற்கு 50000 டன் மாம்பழச் சாறு தேவைப்படுகிறது. கூடிவரும் தேவைக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் சாதாரணமாக 40 மரங்கள் தான் நடப்படும். ஆனால் ஜெயின் இரிகேஷனில் உற்பத்தி செய்யப்பட்ட வீரிய செடிகளை நடுவதால் ஒரு ஏக்கருக்கு 670 கன்றுகளை நடமுடியும். சாதாரணமாக 7 வருடத்தில் தான் பலன் தரும் மா, இந்த வகை கன்றுகளை நடுவதால் 3 வருடத்தில் பலன் தர ஆரம்பித்து விடும்.  தோத்தாப்புரி மாம்பழங்கள் நமது கிருஷ்ணகிரியிலும் அதிகம் விளைவதால் ஜெயின் இரிகேஷனுடனும், கோகோ கோலாவுடனும் ஏன் ஒப்பந்தம் போட தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது?

Thursday, July 26, 2012

வெங்காயம் ஏற்றுமதி


வெங்காயம் ஏற்றுமதி 

அரசு
குறிஞ்சிப்பாடி

கேள்வி

எனக்கு வெங்காயம் ஆர்டர் கிடைத்தது. ஏற்றுமதி செய்து சரக்கு அந்த நாட்டு துறைமுகத்தை அடைந்த பிறகு அங்கு வெங்காய இறக்குமதிக்கு தடை இருப்பதாகவும் ஆதலால் பணம் அனுப்ப முடியாது என்றும் இறக்குமதியாளர் கூறுகிறார். என்ன செய்வது?



பதில்

காண்டிராக்ட் எப்படி போட்டுள்ளீர்களோ அப்படித்தான் நடக்கும். அதாவது சரக்குகளை நீங்கள் ஏற்றி அனுப்பிய பிறகு சரக்குகளுக்கு அந்த நாட்டில் தடை வருமானால் அதை இறக்குமதியாளர் தான் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் காண்டிராக்ட் இருந்திருந்தால் உங்கள் பணம் பத்திரம். இல்லாவிடில் நஷ்டம் வரும் சூழ்நிலை தான். அடிக்கடை தடை வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது கவனம் தேவை.

தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?


கேள்வி பதில்

ராமசாமி
மாயவரம்


கேள்வி

தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?

பதில்

இதை வைத்தெல்லாம் ஏற்றுமதி செய்வதா இல்லையா என்று முடிவு செய்யாதீர்கள். ஏன் அது போன்ற புள்ளி விபரங்கள் தரப்படுகின்றன என்றால், எந்தெந்தெப் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளத்தான். உங்கள் பொருள் மீது நம்பிக்கை வையுங்கள், தரமான பொருட்களை ஏற்றுமதி செய்ய நினையுங்கள், இறக்குமதியாளரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு ஏற்றுமதி செய்யுங்கள், சரியான விலை நிர்ணயிங்கள். இவையே ஏற்றுமதியின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.

Wednesday, July 25, 2012

பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி


பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி

உலகளவு பிளாஸ்டிக் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகச்சிறியது தான். அதாவது 1.5 சதவீதம் தான். அதுவும் மிகவும் விலை குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் தாம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு கிலோ ரூபாய் 100க்கும் குறைவானவை தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிளாஸடிக் பொருட்கள் தயாரிப்பில் நான்கு வகை இருக்கின்றது. அவை:
எக்ஸட்ரூஷன் - அதாவது கேபிள், பிலிம், பிலிமெண்ட்ஸ், ஷீட்ஸ ஆகியவை தயாரிக்க.
இன்ஸ்பெக்ஷன் மோல்டிங் - கன்டெய்னர் மற்றும் பாக்ஸ்  தயாரிக்க
ப்ளோ மோல்டிங்- பாட்டில்கள், பாரல்கள், ஜார் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிக்க
ரோட்டார் மோல்டிங்- வாட்டர் டாங்க் முதலியவை தயாரிக்க

Tuesday, July 24, 2012

தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள்


தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள் 

தமிழ்நாட்டில் 556000 சுய உதவிக்குழுக்கள் உள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் இதில் சேர்ந்து பயனடைகின்றனர். இவர்கள் வாங்கிய கடன்களின் மதிப்பு 15633 கோடி ரூபாய்கள். இவர்களின் சேமிப்பு 3374 கோடி ரூபாய்கள். இவர்களுக்கென்று ஒரு பிராண்ட் நேம், மோனோகிராம் ஆகியவை கொண்டு வந்து அவர்கள் தயாரிக்கும் பொருட்களை பிரபலமடைய செய்ய தமிழ்நாடு அரசு விரும்புகிறது. 

Monday, July 23, 2012

ஹைதராபாத் கராச்சி பேக்கரியும், நிலான் என்டர்பிரைசும்


ஹைதராபாத் கராச்சி பேக்கரியும், நிலான் என்டர்பிரைசும்

ஹைதராபாத் சென்றவர்கள் கராச்சி பேக்கரியில் பிஸ்கட வாங்காமல் வந்தால் அது ஹைதராபாத் போனதற்கான அடையாளமே இல்லை. மொறுமொறுவென வகைவகையான பிஸ்கட்கள் தயாரிப்பவர்கள். இவர்கள் தயாரிக்கும் புரூட் பிஸ்கட்களுக்கு டூட்டி புரூட்டி சப்ளை மாதம் 2.5 டிரக் லோட் சப்ளை செய்வது நிலான் என்டர்பிரசைஸ்  தான். வருடத்திற்கு 18000 டன் டியூட்டி புரூட்டி தயாரிக்கிறார்கள். இவைகளை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். பிரான்ஸ், , ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, சவூத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆகும். இது தவிர உலகத்திலேயே அதிகளவு ஊறுகாய் தயாரிப்பவர்களும் இவர்களே. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வருடத்திற்கு 240 கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

Saturday, July 21, 2012

ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி?


மூர்த்தி
கரூர்



கேள்வி

ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி?


பதில்

ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிலிருந்து அதிக அளவு பொருட்களை வாங்கும் நாடுகள் ஆகும்.  ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அங்கு பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், அங்கு புதிதாக பொருட்கள் வாங்குவதையே குறைத்துள்ளது. ஆதலால் பல நாடுகளின் ஐரோப்பிய ஏற்றுமதி குறைந்துள்ளது. இருந்தாலும் அங்கு தயாரித்தால் விலை கூடுதலாகும், அதைவிட வெளிநாடுகளிலிருந்து வாங்குவதே மேல் என்று பல பொருட்கள் இருக்கின்றன. அவைகளெல்லாம் வாங்கப்படவேண்டிய கட்டாயமான பொருட்கள் ஆகும். ஆதலால் ஏற்றுமதி முழுமையாக நின்றுவிடவில்லை, குறைந்திருக்கிறது. அவ்வளவு தான்.



Friday, July 20, 2012

ஏற்றுமதிக்கான ஆர்டர் வாங்கும் முன்பு அதற்கான காண்டிராக்டை போடும் வழிகள் என்னென்ன?


ஏற்றுமதி கேள்வி பதில்

ரபீக்
சேலம்

கேள்வி
ஏற்றுமதிக்கான ஆர்டர் வாங்கும் முன்பு அதற்கான காண்டிராக்டை போடும் வழிகள் என்னென்ன?

பதில்

முன்பெல்லாம் முறைப்படி அக்ரிமெண்ட் போட்டு இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர் கையெழுத்திட்டு ஆளுக்கு ஒரு காப்பி வைத்துக் கொள்வார்கள். தற்போதுள்ள இந்த பரபரப்பான உலகத்தில் அதற்கெல்லாம் பலருக்கு நேரமே இருப்பதில்லை. இருவரும் தெரிந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒப்பந்தங்கள் வாய்வழியாகவே முடிந்து விடுகின்றன. அதாவது, ஔரல் காண்டிராக்ட தான். இல்லாவிடில் ஈமெயில், கடிதங்கள் மூலமாக நடைபெறுகிறது. அக்ரிமெண்ட் போடுவது சிறந்த முறை. அதை இருவரும் கையெழுத்திட்டு ஸகேன் செய்து ஆளுக்கு ஒரு காப்பி வைத்துக் கொள்ளலாம்.

Wednesday, July 18, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்



ஏற்றுமதிக்கு உதவும்  இணையதளம்

உணவுப்பொருட்கள் தயாரிப்பில் இருப்பவர்கள் கீழ்கண்ட நல்ல முறைகளை பயனபடுத்தித்தான் பொருட்களை தயாரிக்க வேண்டும். அவை  Good Hygiene Practices (GHP), Good Manufacturing Practices (GMP), Food Retail Management (FRM). இவைகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கவேண்டும். Bureau of Indian Standards இணையதளம் இவைகள் பற்றிய தேவையான தகவல்களை உங்களுக்கு அளிக்கும்.

Tuesday, July 17, 2012

எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி


எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 

எலுமிச்சம்பழம் உற்பத்தியில் ஆந்திரா (33), குஜராத் (19), மஹாராஷ்டிரா (12), கர்நாடகா (11), பீகார் (6), மத்திய பிரதேஷ் (5), அசாம் (5), சட்டீஸ்கர்க் (3), மற்ற மாநிலங்கள் (6) ஆகியவை முன்னணியில் இருக்கின்றன. அடைப்புக் குறிக்குள் இருப்பவை சதவீதம் ஆகும். 

"எலுமிச்சம்பழ சாதத்தை" கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் தாம். ஆனால், எலுமிச்சம் பழம் உற்பத்தியில் நாம் இந்தியாவில்  கடைக்கோடியில் தாம் இருக்கிறோம் என்பது ஆச்சரியமான உண்மை. ஏற்றுமதியிலும் ஆந்திரா, குஜராத் தான் முண்ணனியில் இருக்கின்றன.

காய்கறிகள் வாங்குவதற்கு


காய்கறிகள் வாங்குவதற்கு

பல சமயம் நமக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்திருக்கும் ஆனால் அதற்கு தேவையான காய்கறிகள் எங்கு வாங்குவது, விலை எங்கு குறைவாக கிடைக்கும், குவாலிட்டி எப்படி இருக்கும் என்று பல சமயம் குழம்பி இருப்போம். இதையெல்லாம் தவிர்க்க ஆனால் தமிழ்நாட்டில் www.efarm.in என்ற இணையதளத்தை நடத்தி வருகின்றனர். இது விவசாயிகளையும், வாங்குபவர்களையும் இணைக்கும் ஒரு இணையதளம். 

Monday, July 16, 2012

சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி


சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி

சிட்பி (SIDBI) நிறுவனம் குறுந்தொழில்கள் செய்பவர்களுக்கு உதவும் வகையில் 5000 கோடி ரூபாய் பண்ட் ஒன்று துவக்கியுள்ளது. இதன் மூலம் குறுந்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மூலதன வசதி, ரிஸ்க் கேபிடல் வசதி ஆகியவை செய்ய உத்தேசித்துள்ளது. 
திறமையானவர்கள் சிறிய தொழில் செய்பவர்கள் இந்த உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, July 15, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்



ஏற்றுமதி கேள்வி பதில்


கலியரசன்
சென்னை


கேள்வி

வெளிநாட்டில் இருந்து டெக்னீஷியன்களை இந்தியாவிற்கு கூட்டி வர முடியுமா? அவர்களுக்கு வெளிநாட்டு பணமாக கொடுக்க முடியுமா? 

பதில்

ஏன் முடியாது? இந்தியாவில் பல புராஜக்ட்களில் லட்சகணக்கான வெளிநாட்டவர்கள் வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தாரளமாக நீங்கள் கூட்டி வரலாம். அவர்களுக்கான கட்டணத்தை வெளிநாட்டுப் பணமாக கொடுக்கலாம், வங்கி மூலமாக அனுப்பலாம்.

Saturday, July 14, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்

சாரதி
கரூர்


கேள்வி

ஏற்றுமதியில் LIBOR  என்றால் என்ன?


பதில்

LIBOR என்பது LONDON INTER BANK OFFER RATE  என்பதன் சுருக்கமாகும். அதாவது லண்டனில் ஒரு வங்கிகளுக்கிடையேயான கடன்கள் வாங்கும் போது கொடுக்கப்படும் வட்டியை குறிப்பிடுவதாகும். இது ஏற்றுமதியில் எவ்வாறு உதவுகிறது என்றால், ஒரு இந்திய ஏற்றுமதியாளர் ஏற்றுமதிக்கான கடனை இந்திய வங்கியில் வாங்கும் போது இந்திய வட்டியில் ரூபாயில் வாங்கலாம் அல்லது LIBOR அடிப்படையிலும் வெளிநாட்டுப்பணமாக வாங்கலாம். LIBOR அடிப்படையில் வாங்குவது ஏற்றுமதியாளர்களுக்கு சிறிது பயனளிக்கும்.


Thursday, July 12, 2012

உலகளவில் ரீடெய்ல் கம்பெனிகளின் விற்பனைகள்


உலகளவில் ரீடெய்ல் கம்பெனிகளின் விற்பனைகள்

உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்களான வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன் ரீடெய்ல் (இந்தியா) ஆகிய கம்பெனிகளின் விற்பனை எவ்வளவு தெரியுமா? முறையே 446,950 மில்லியன் டாலர்கள், 115,778 மில்லியன் டாலர்கள், 104,995 மில்லியன் டாலர்கள், 86,172 மில்லியன் டாலர்கள், 63767 மில்லியன் டாலர்கள், 59,885 மில்லியன் டாலர்கள், 26,940 மில்லியன் டாலர்கள், 24,749 மில்லியன் டாலர்கள், 1,461 மில்லியன் டாலர்கள். இந்தியா இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் ரீடெய்ல் துறையில் இன்னும் பெரிதாக கால் பதிக்க இயலவில்லை. எதிர்ப்புக்கள் பலமாக இருப்பதும், மக்களின் எதிர்பார்ப்புக்கள் பலமாக இருப்பதும் தான் காரணம்.

Wednesday, July 11, 2012

பாசுமதி அரிசி ஏற்றுமதி


பாசுமதி அரிசி ஏற்றுமதி 

பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு நீக்கி விட்டது. இதனால் பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகளின் விலை சந்தையில் நன்கு கூடியது. கோஹினூர் புட்ஸ், கேஆர்பிஎல், எல்டி புட்ஸ்  ஆகிய கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் நன்கு விலை கூடின.

சணல் பொருட்கள் ஏற்றுமதி


சணல் பொருட்கள் ஏற்றுமதி

சணல் பொருட்கள் என்றாலே நம்மில் பலருக்கு சாக்குப்பை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்காலத்தில் சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை பார்த்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு பொருட்கள், அவ்வளவும் சுற்றுப்புறத்தையும், சுகாதாரத்தையும் காக்கும் பொருட்கள். சணல் பொருட்கள் விற்பனை 8500 கோடி ரூபாய் அளவு இருக்கிறது. இதில் 1925 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. இதில் 15 முதல் 18 சதவீதம் வரை அமெரிக்காவிற்கு நடைபெறுகிறது. ஷாப்பிங் பேக், ஜியோ டெக்ஸடைல்ஸ், திரைச்சீலைகள் ஆகிய பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது. சாமான்கள் வைத்து அனுப்பப்படும் சணல் பைகளுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது.

Monday, July 9, 2012

அலங்கார மீன் ஏற்றுமதி


அலங்கார மீன் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து அலங்கார மீன் விற்பனை வருடத்திற்கு 200 முதல் 250 கோடி வரை நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ப்ரயாக் குரூப், மெரைன் புராடக்ஸ்  டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் சேர்ந்து விற்பனைக்கு அலங்கார மீன் வளர்ப்பதற்கென்றே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவர்கள் கம்பெனியில் 60 முதல் 65 வகையான அலங்கார மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவது கோல்டு பிஷ், ஷார்க், ஏஞ்சல், பார்ப், டெட்ரா, டானியா ஆகும்.

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி பதில்

கபிலன்
திருப்பூர்


ஏற்றுமதி கேள்வி பதில் 

கேள்வி 
இன்கோடெர்ம்ஸ்  என்றால் என்ன? அதன் பயன் என்ன?

பதில்
ஏற்றுமதி இறக்குமதி வணிகம் உலகளவில் பல நாடுகளுக்கிடையே நடைபெறுவது. ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி இறக்குமதிக்காக தனித்தனி விதிகள் வைத்திருக்கமுடியாது. இதனால் தான் அகில உலக அளவில் எல்.சி., கியாரண்டி, கலெக்ஷன், வணிகக்குறியீடுகள் (இன்கோடெர்ம்ஸ்) போன்ற பலவற்றிக்கு இண்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ்  விதிகளை உருவாக்கியுள்ளது. இதில் ஒன்று தான் இன்கோடெர்ம்ஸ 2010 ஆகும். 2010ம் வருடம் திருத்தி அமைக்கப்பட்ட இந்த விதிகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் போது வணிகக்குறியீடுகள் (அதாவது சரக்குக் கட்டணம் யார் செலுத்த வேண்டும், இன்சூரன்ஸ்  யார் செலுத்த வேண்டும், வண்டி வாடகை யார் செலுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களின் பொறுப்புக்களை விளக்கும் குறியீடுகள் ஆகும்). முன்பு 13 குறியீடுகள் இருந்தன. தற்போது திருத்தி அமைக்கப்பட்டு 11 குறியீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. 

Saturday, July 7, 2012

ஏற்றுமதி சந்தேகங்கள்


ஏற்றுமதி  சந்தேகங்கள் 


உலகளவில் காய்கறிகள், பழங்கள் விற்பவர்களை இணைக்கும் ஒரு இணையதளம். ரிஜிஸடிரேஷன் தேவை. பல உபயோகமான தகவல்கள் வாங்குபவர், விற்பவர்களின் தேவைகளும் பதியப்பட்டு அவை கிடைக்கின்றன. ஒரு புதிய உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும் இணையதளம்.



Friday, July 6, 2012

தமிழ்மணம் ப்ளாக் ரேங்க்

தமிழ்மணம் ப்ளாக் ரேங்க் மாறுவதேயில்லை கடந்த ஒரு மாதமாக.
காரணம் என்ன?

Thursday, July 5, 2012

10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி


10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி

சென்ற வருடத்தில் 10000 கோடி ரூபாய் அளவிற்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். ஏலக்காய், மிளகாய் ஏற்றுமதி தான் நமக்கு இந்த அளவு ஏற்றுமதியை எட்ட உதவியது. சென்ற வருடம் எல்லா வாசனைப்பொருட்களும் சேர்ந்து 575,270 டன்கள் ஏற்றுமதி செய்துள்ளோம்.


வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை


வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை இருந்தது  தற்போது நீக்கப்பட்டு விட்டது. இது ஏற்றுமதியை கூட்டுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். தற்போது ரீடெய்ல் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 ரூபாய் அளவில் விற்கப்பட்டு வருகிறது. நாசிக்கில் இருந்து தான் அதிக அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் 15.48 லட்சம் டன்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை விட 15 சதவீதம் கூடுதலாகும். ஆனந்த “கண்ணீர்” விடவைக்கும் செய்தியாகும்.

Tuesday, July 3, 2012

செக்கோஸ்லோவோக்கியா வாங்கும் குர்கான் துணிகள்


செக்கோஸ்லோவோக்கியா வாங்கும் குர்கான் துணிகள்

செக் ரிபபிளிக் நாடு இந்தியாவில் குறிப்பாக குர்கானில் இருந்து அதிக அளவு டெக்ஸ்டைல்ஸ்  வாங்குகிறது. கடந்த சில வருடங்களாக இது சிறிது குறைவாக இருந்ததால் அங்கு இருக்கும் சுமார் 2000 ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதி மிகவும் குறைந்து போனது. தற்போது மறுபடி வாங்க ஆரம்பித்திருக்கிறது. இது போன்று நாடுகளின் பிரதிநிதிகளை தமிழ்நாடு அரசும் தேடிப்பிடித்து திருப்பூர், கோவை  போன்ற இடங்களுக்கு கூட்டி வந்து காண்பிக்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி பெருகும். இது தனிப்பட்ட நபர்கள் செய்யக்கூடிய முயற்சி அல்ல. அரசாங்கம் தான் செய்ய வேண்டும். பவர் ஜெனரேஷன் மிஷினரிகள், காலணிகள், துணிகள், எலக்டிரிக்கல் சாமான்கள், ஆர்கானிக் பொருட்கள், ஆட்டோமொபைல் சாமான்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றது.

Monday, July 2, 2012

மாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா ?


மாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா ? 

மாம்பழம் சீசன் முடியப்போகிறது. மாம்பழம் பற்றிய செய்திகள் இல்லாமல் ஏற்றுமதி செய்திகளா? இருக்கவே முடியாது, கஷ்டம் தான். பண்டிட் நேரு தான் இந்திய மாம்பழங்களை உலகளவில் பிரபலப்படுத்தியவர் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். பண்டிட் நேரு அவர்கள் மாம்பழம் சீசன் டயத்தில் எப்போது வெளிநாடு சென்றாலும் இந்திய மாம்பழங்களை குறிப்பாக அல்போன்சா மாம்பழங்களை தான் எடுத்து செல்வார் பரிசாக அளிக்க. ஒரு சமயம் அல்போன்சா சீசன் முடிந்து விட்டதால், பங்கனப்பள்ளி எடுத்துச் செல்லுங்கள் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதை கொண்டுவரச் சொல்லி சுவைத்து பார்த்தவர் அதன் சுவைக்கு அடிமையாகி விட்டார். அவ்வளவு சுவையானது பங்கனப்பள்ளி. இது போல வெளிநாட்டு தூதுவர்கள் இந்தியா வருகை தரும் போது தற்போது பழக்கம் என்னவெனில் மாம்பழங்களை சுவைத்துப் பார்க்க சொல்வது தான். உத்திரபிரதேச மாநிலத்திற்கு வந்திருந்த வெளிநாட்டு தூதுவர்களை அங்கு விளையும் தசேரி மாம்பழத்தை சுவைத்துப் பார்க்க கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.  

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்

குணசீலன்
திருச்சி

கேள்வி

கென்யாவிற்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உள்ளது?

பதில்
கென்யாவில் உலகிலேயே சிறந்த டீ, காபி விளைகிறது. இது தவிர விவசாய விளைபொருட்களும் நிறைய விளைகிறது. மற்ற எல்லாப் பொருட்களுமே இறக்குமதி செய்ய வேண்டிய நிலை தான். ஆதலால் இந்த நாட்டுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்களை தேடலாம்.