Sunday, March 27, 2016

ரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது?தெரிந்து கொள்வது?

கேள்வி
ரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது?தெரிந்து கொள்வது?

பதில்

ரிசர்வ் வங்கியின் சர்க்குலர்களை அவர்களின் வெப்சைட்டில் சென்று பார்க்க முடியும். அதாவது www.rbi.org.in என்ற இணையதளத்தில் சென்று notifications என்ற பிரிவுக்கு சென்று சர்க்குலர்களை பார்க்கலாம். 2106ம் வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி மாஸ்டர் சர்க்குலர் வெளியிடுவதில்லை. தற்போது மாஸ்டர் டைரக்ஷன்ஸ் தான் வெளியிடுகிறார்கள். தினசரி வெளியிடும் சர்க்குலர்களை சேர்த்து வருடந்தோறும் ஜனவரி   தேதியில் மாஸ்டர் டைரக்ஷன் என வெளியிடுகிறார்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். இது சப்ஜெக்ட் வாரியாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியும் இதில் அடங்கும். சென்று பாருங்கள் உபயோகமான தகவல்கள் அடங்கிய இணையதளம்.
ஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com

சவூதிக்கு அரிசி

சவூதிக்கு அரிசி

சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகம் அரிசி இறக்குமதி செய்கின்றன. சவூதி அரேபியா நாடு இறக்குமதி செய்யும் அரிசியில் 63 சதவீதம் இந்தியாவிலிருந்து தான் செய்கிறது. பெரும்பாலும் பாசுமதி அரிசி தான் இறக்குமதி செய்யப்பட்டாலும், சாதாரண அரிசியும் சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சவூதி அரேபியா நாட்டில் வருடத்திற்கு ஒரு தனி நபர் 43 கிலோ அரிசியை உணவாக சாப்பிடுகின்றார். ஆதலால் அங்கு தேவை அதிகமாக இருக்கிறது.

தங்களின் சந்தேகங்களுக்கு

ஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com

மொபைல் 098 204 51259, www.sethuramansathappan.blogspot.com.

Saturday, March 26, 2016

பாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி? ஏற்றுமதிக்கு பாக்கேஜிங் படிப்பறிவுதேவையா?

ராபர்ட்

திருப்பூர்

கேள்வி
பாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி? ஏற்றுமதிக்கு பாக்கேஜிங் படிப்பறிவுதேவையா?

பதில்
உலகளவில் பாக்கேஜிங் துறை அமெரிக்க டாலரில்  571  பில்லியன் மதிப்புள்ளது.வருடந்தோறும் அவ்வளவு  பிசினஸ் நடக்கிறது. இந்தியாவில் 25 பில்லியன்டாலர் அளவிற்கு  பிசினஸ் நடக்கிறது.இந்தியாவில் உள்ள பாக்கேஜிங் கல்லூரிகளில் மிகச் சிறந்தது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாக்கேஜிங் ஆகும்.இதில் வருடந்தோறும்  200 மாணவர்கள்வெளியேறுகிறார்கள். ஆனால் இந்த இண்டஸ்டிரியில் தேவை சுமார் 22,000கம்பெனிகள் உள்ளன.  சம்பளம் சுமார் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை தொடக்க சம்பளமாக கிடைக்கிறது. ஏற்றுமதிக்குபாக்கேஜிங் எவ்வளவு முக்கியம் என்பதுஅனைவரும் அறிந்ததே. னால், ஏற்றுமதிக்கு பாக்கேஜிங் டிப்பு அறிவுமுக்கியமல்ல.  அதெற்கன இருக்கும்கம்பெனிகளில் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.

 ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் அனுப்பும்போது டாக்குமெண்ட்களுக்குமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

கேள்வி பதில்

இவான்
கரூர்

கேள்வி
ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் அனுப்பும்போது டாக்குமெண்ட்களுக்குமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

கேள்வி
ஏற்றுமதி கலெக்ஷன் முறையில் செய்யும் போதுடாக்குமெண்ட்களுக்கு  அதிகம் முக்கியத்துவம்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் டிஸ்கிரிபன்சிகளைப் பற்றி கவலைப்படவேண்டாம். அதே சமயம் இறக்குமதியாளர் கேட்கும் டாக்குமெண்ட்களை கொடுக்க வேண்டும்.ஆனால், .சி.சி.ஜி.  பாலிசி எடுத்து செய்வது தான் உத்தமம்.  
 ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

Friday, March 25, 2016

மஸ்ரூம் இந்தியாவில் எங்கு அதிகம்விளைகிறது?

ராமசாமி

ஊட்டி

கேள்வி
மஸ்ரூம் இந்தியாவில் எங்கு அதிகம்விளைகிறது?

பதில்

இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசில் உள்ளசோலன் சிட்டி, மஸ்ரூம் 
சிட்டி என்றேஅழைக்கப்படுகிறது. திலுள்ள சாம்லாச் என்ற ஊரில்            உள் அனைவரும் மஸ்ரூம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். சோலன் மாவட்டத்தில் உள்ள மஸ்ரூம் உற்பத்தியாளர்கள் பலரும் ஒன்று சேர்ந்துஒரு கோ ஆப்பரேட்டிவ் முறையில் ஒன்று  சேர்ந்து மஸ்ரூம் உற்பத்தி செய்து மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளார்கள். ஒரு முறை சோலன் சென்று பார்த்து வாருங்கள், அது உங்களுக்கு நல்ல பயன்களைத் தரும்.
 
ஏற்றுமதி உலகத்தின்
 எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

வாழைப்பழம் ஏற்றுமதி

வாழைப்பழம் ஏற்றுமதி

வாழைப்பழம் ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் உள்ளதாஎன்று பலர் 
கேட்கிறார்கள். இந்தியா உலகளவில் மிக அதிகமாக வாழைப்பழங்கள் உற்பத்தி செய்தாலும் ஏற்றுமதியில் பின் தங்கியே இருக்கிறது. உலகளவில் ஒரு குறிப்பிட்ட பழத்திற்கு தான் வரவேற்பு அதிகம்.அதன் பெயர் கவாண்டிஷ். இந்த வகைப் பழம் தான் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. அதுவும்சில நாடுகளில் இருந்து தான். இந்தியாவில் இந்தவெரைட்டி அதிகம் உற்பத்தி ஆவதில்லை. அதே சமயம் இந்தியாவில் இருந்து கேரளா வகை வாழைப்பழங்கள் ஏற்றுமதி ஆகின்றன. அதுவும்குறிப்பிட்ட அளவில் கல்ப் போன்ற நாடுகளுக்குதான். தேனி, திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி நடக்கிறது.

ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

Thursday, March 24, 2016

கொய்யா பழம் ஏற்றுமதி செய்ய முடியுமா?

கேள்வி பதில்
கருணாகரன், மதுரை

கேள்வி பதில்
கொய்யா பழம் ஏற்றுமதி செய்ய முடியுமா?

கேள்வி
ஏன் ஏற்றுமதி செய்ய முடியாது? உலகளவில் கொய்யா என்றால் பெரிய சைஸ் தான் இருக்கும். இந்திய அளவில் கொய்யா என்றால் மீடியம் சைஸ் தான் கிடைக்கிறது. ஆதலால், வெளிநாடுகளில் அதிகம் விரும்பபடுவதில்லை. மஹாராஷ்டிராவில் நாசிக், ஷிரிடி ஆகிய ஊர்களில் கிடைக்கும் கொய்யா மிகவும் சுவையாகவும், பெரிய சைஸ் ஆகவும் இருக்கிறது. ஆதலால், அங்கிருந்து நிறைய ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மிகவும் குறைவாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கொய்யா என்றால் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கோவிலாம்பூண்டியும், மதுரையும் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது.

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இப்படிகுறைந்து செல்கிறதேஅது 
ஏற்றுமதியாளர்களுக்குலாபம் தானே என்று பலர் கேட்கிறார்கள்அதாவதுவெளிநாட்டிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் ஆர்டர் ஒருபொருளைக் கொடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அதன் மதிப்பு ஒரு டாலர் என்றால் முன்பு பணம் உங்களுக்கு கிடைக்கும் போது 62 ரூபாய் வரை  
கிடைக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால், தற்போது 66 முதல் 67 ரூபாய் வரை கிடைத்திருக்கும்ஆதலால் இது லாபம் தான்.

ஆனால் தற்போது புதிதாக போடும் காண்டிராக்ட்களுக்கு 
வெளிநாட்டிலிருந்து வரும் ஆர்டர் அதேபொருளுக்கு வந்தால் தற்போது ஒரு டாலர் கிடைக்காது, 80 முதல் 90 செண்ட் வரை தான் நிர்ணயிப்பார்கள். ஆதலால் பல ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ரூபாய் 
மதிப்பு குறைவால் பெரிய லாபங்கள் ஏற்பட வாய்ப்புக்கள்இல்லை.

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

Wednesday, March 23, 2016

பேரிச்சம்பழம் இறக்குமதி செய்ய உகந்த நாடு எது?

ஏற்றுமதி கேள்வி பதில்
தமிழ், சிதம்பரம்

கேள்வி
பேரிச்சம்பழம் இறக்குமதி செய்ய உகந்த நாடு எது?
பதில்
பேரிச்சம்பழம் இறக்குமதி செய்ய உகந்த நாடு அரபு நாடுகள் தாம். குறிப்பாக சவுதி அரேபியா தான். அங்கிருந்து தான் உலகின் பல நாடுகளுக்கு பேரிச்சம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிகச்சிறந்த பேரிச்சம்பழங்கள் உற்பத்தி செய்வதில் சவுதி முண்ணனி வகிக்கிறது.
(ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com
ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com)

அக்ரி எக்ஸ்போர்ட்சில் எது முண்ணனி வகிக்கிறது?

அக்ரி எக்ஸ்போர்ட்சில் எது முண்ணனி வகிக்கிறது?

அக்ரி எக்ஸ்போர்ட்சில் எந்த பொருள் முண்ணனி வகிக்கிறது என்று கேட்டால் பாசுமதி அரிசி என்று பலரும் கூறி விடுவர். ஆனால் தற்போது மாட்டிறைச்சி (எருமை) அதற்கு போட்டியாக வந்து கொண்டிருக்கிறது. மும்பையைச் சார்ந்த இரண்டு நிறுவனங்கள் இந்த ஏற்றுமதியில் போட்டி போடுகின்றன. அல்லானா சன்ஸ் என்ற மும்பையைச் சார்ந்த நிறுவனம் 146 வருட பழைமையானது. இந்த நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் இறைச்சி ஏற்றுமதியாளர் ஆகும். இதை தொடர்ந்து வரும் கம்பெனி அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகும். இவர்கள் பிராண்ட்கள் இந்தியாவிலும் சக்கை போடு போடுகின்றன.
(ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com
ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com)

Tuesday, March 22, 2016

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

பல நாடுகளில் உள்ள காய்கறிபழங்கள் விலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கேட்கின்றனர். எப்படி பேக்கிங் இருக்கும்அந்த நாடுகளில் விலைகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது தவிர பழங்கள்காய்கறிகள் பற்றிய பல தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இணையதளம். சென்று பாருங்கள் உங்கள் ஏற்றுமதிக்கு உதவியாக இருக்கும்.

(ஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா?கவலையை விடுங்கள் செல்லுங்கள்.www.sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, March 21, 2016

பால் பொருட்கள் ஏற்றுமதி

பால் பொருட்கள் ஏற்றுமதி
ஒரு காலத்தில் நம் உள்நாட்டுத் தேவைகளுக்கே பால் உற்பத்தி செய்ய முடியாமல் தவித்தோம். அதன் பிறகு வெண்மைப் புரட்சி ஏற்பட்டு இந்தியாவிற்கு போதுமான பால் உற்பத்தி செய்யத் தொடங்கினோம். அந்த வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் கேரளாவின் குரியன் ஆவார். இவர் சமீபத்தில் காலமானார். அவர் குஜராத்தில் வித்திட்ட அமுல் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் வருடத்திற்கு சுமார் 550 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இன்று வளர்ந்திருக்கிறது.