Tuesday, February 19, 2013

அதிகமாக வரும் கேள்வி


அதிகமாக வரும் கேள்வி

கேள்வி

எனக்கு ஏற்றுமதித் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஏற்றுமதி பற்றி அடிப்படையிலிருந்து ஈமெயில் மூலமாக தெரிவிக்க முடியுமா?

பதில்

எப்படி இது போன்ற கேள்விகளுக்கு பதில் எழுதுவது. ஏற்றுமதித் துறையில் உங்களுக்கு ஆர்வம் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் ஏற்றுமதி என்பதும் மற்ற தொழில்களைப் போன்றது தான். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் ஆரம்பிப்பதற்கு முன். நிறைய ஏற்றுமதி பற்றி படியுங்கள். நிறைய புத்தகங்கள் தமிழில், ஆங்கிலத்தில் உள்ளன. பின்னர் ஏதாவது குறிப்பிட்ட சந்தெகம் இருந்தால் ஈமெயில் செய்யுங்கள். இது போன்ற பொதுப்படையான கேள்விகளை அனுப்பாதீர்கள்.

Sunday, February 17, 2013

பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?


பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் அதிகம் செய்யப்படுவது எது தெரியுமா?  ஆப்பிள் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்ற எண்ணமும், வேறு ஒருவர் வீட்டுக்கு செல்லும் போது ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு சென்றால் போது அது தொந்தரவு இல்லாதது என்ற எண்ணமும் தான். இந்தியா 2011ம் வருடம் மட்டும் 162000 டன்கள் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளது. அதாவது 16,20,00,000 கிலோக்கள் (16 கோடியே 20 லட்சம் கிலோக்கள்). சைனா, அமெரிக்க, சிலி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

மற்ற பழங்களில் பியர் 18,000 டன்களும், ஆரஞ்சு 10,000 டன்களும், கிவி 3200 டன்களும், கிரேப் 2600 டன்களும், பிளம் 670 டன்களும் இறக்குமதி செய்துள்ளோம்.

வேறு வீடுகளுக்கு செல்லும் போது ஏன் இந்தியாவில் அதிகமாக உற்பத்தியாகும் பழங்களை உடம்புக்கு கெடுதல் இல்லாத பழங்களை வாங்கி செல்லக் கூடாது? அதாவது கெய்யா, பப்பாளி, திராட்சை போன்றவை. ஆப்பிள் இறக்குமதி குறையுமே? 

பழங்களை பற்றி நிறைய பேசி டயர்டாக இருக்கு., ஒரு ஆப்பிள் ஜுஸ சர்க்கரை குறைத்து போடுப்பா!!!!

Monday, February 4, 2013

டெக்ஸடைல்ஸ் மிஷினரி ஏற்றுமதி



டெக்ஸடைல்ஸ் மிஷினரி  ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து டெக்ஸடைல்ஸ்  மிஷினரி ஏற்றுமதி கடந்த வருடத்தில் 14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய வருடத்தை விட 17 சதவிதம் கூடுதலாகும். வியட்நாம், பாகிஸ்தான், எகிப்து, ஈரான், சைனா ஆகியவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் ஆகும். ஸ்பின்னங் மிஷினரி, ஸபேர் பார்ட்ஸ், யார்ன் புராசசிங் மிஷின்ஸ்  ஆகியவை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Sunday, February 3, 2013

மருந்துப் பொருட்கள் கண்காட்சி


மருந்துப் பொருட்கள் கண்காட்சி

மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகத்திலேயே புரடக்ஷன் வால்யூமை வைத்துப் பார்த்தால் 4வது இடத்தில் வருகிறது. உள்நாட்டில் உபயோகிப்பதில் உலகத்திலேயே 13வது இடத்தில் வருகிறது. உலகத்திலேயே ஜெனிரிக் பார்முலேசன்ஸ்  ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. 150 நாடுகளுக்கு மேலாக இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக்திற்கு தேவையான மீசல்ஸ்  தடுப்பூசியில் 40 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புடையது இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறை. மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம் வரும் ஏப்ரல் மாதம் 24 முதல் 26 வரை மும்பையில் iPHEX 2013 என்ற மருத்துப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் கண்காட்சியை நடத்துவுள்ளது. இதில் 400 உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் இருந்து 5000 விசிட்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.