கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும், மாம்பழமும்
கோகோ கோலாவின் மாசா குளிர்பானத்திற்காக மாம்பழங்களை உற்பத்தி செய்ய கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும் சேர்ந்து ஆந்திரா மாநிலத்தில் 100 ஏக்கரில் தோத்தாப்புரி வகை மாம்பழ செடிகளை நடுவதற்கு 62 விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். "மாசா" குளிர் பானத்திற்காக வருடத்திற்கு 50000 டன் மாம்பழச் சாறு தேவைப்படுகிறது. கூடிவரும் தேவைக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் சாதாரணமாக 40 மரங்கள் தான் நடப்படும். ஆனால் ஜெயின் இரிகேஷனில் உற்பத்தி செய்யப்பட்ட வீரிய செடிகளை நடுவதால் ஒரு ஏக்கருக்கு 670 கன்றுகளை நடமுடியும். சாதாரணமாக 7 வருடத்தில் தான் பலன் தரும் மா, இந்த வகை கன்றுகளை நடுவதால் 3 வருடத்தில் பலன் தர ஆரம்பித்து விடும். தோத்தாப்புரி மாம்பழங்கள் நமது கிருஷ்ணகிரியிலும் அதிகம் விளைவதால் ஜெயின் இரிகேஷனுடனும், கோகோ கோலாவுடனும் ஏன் ஒப்பந்தம் போட தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது?
No comments:
Post a Comment