கேள்வி பதில்
கபிலன்
திருப்பூர்
ஏற்றுமதி கேள்வி பதில்
கேள்வி
இன்கோடெர்ம்ஸ் என்றால் என்ன? அதன் பயன் என்ன?
பதில்
ஏற்றுமதி இறக்குமதி வணிகம் உலகளவில் பல நாடுகளுக்கிடையே நடைபெறுவது. ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி இறக்குமதிக்காக தனித்தனி விதிகள் வைத்திருக்கமுடியாது. இதனால் தான் அகில உலக அளவில் எல்.சி., கியாரண்டி, கலெக்ஷன், வணிகக்குறியீடுகள் (இன்கோடெர்ம்ஸ்) போன்ற பலவற்றிக்கு இண்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ் விதிகளை உருவாக்கியுள்ளது. இதில் ஒன்று தான் இன்கோடெர்ம்ஸ 2010 ஆகும். 2010ம் வருடம் திருத்தி அமைக்கப்பட்ட இந்த விதிகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் போது வணிகக்குறியீடுகள் (அதாவது சரக்குக் கட்டணம் யார் செலுத்த வேண்டும், இன்சூரன்ஸ் யார் செலுத்த வேண்டும், வண்டி வாடகை யார் செலுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களின் பொறுப்புக்களை விளக்கும் குறியீடுகள் ஆகும்). முன்பு 13 குறியீடுகள் இருந்தன. தற்போது திருத்தி அமைக்கப்பட்டு 11 குறியீடுகளாக மாற்றப்பட்டுள்ளது.
மிக பயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி
ReplyDelete