Showing posts with label ஏற்றுமதி கேள்வி பதில். Show all posts
Showing posts with label ஏற்றுமதி கேள்வி பதில். Show all posts

Friday, September 14, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி
அருணாசலம்
அம்பத்தூர், சென்னை

ஒரு ஏற்றுமதியாளர் வருடத்திற்கு இவ்வளவு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டா?

பதில்
நல்ல கேள்வி. அப்படி கட்டுப்பாடுகள் இல்லை. சிலவகை பொருட்களுக்கு முன்பு கோட்டா இருந்தது. தற்போது அதுவும் இல்லை. தடையற்ற, எல்லையற்ற வியாபாரம் என்பது தான் தற்போது உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் தாரக மந்திரம். எல்லைகள் இல்லாத உலகத்தை உலக வர்த்தக மையம் கொண்டுவர நினைக்கிறது

Sunday, July 15, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்



ஏற்றுமதி கேள்வி பதில்


கலியரசன்
சென்னை


கேள்வி

வெளிநாட்டில் இருந்து டெக்னீஷியன்களை இந்தியாவிற்கு கூட்டி வர முடியுமா? அவர்களுக்கு வெளிநாட்டு பணமாக கொடுக்க முடியுமா? 

பதில்

ஏன் முடியாது? இந்தியாவில் பல புராஜக்ட்களில் லட்சகணக்கான வெளிநாட்டவர்கள் வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தாரளமாக நீங்கள் கூட்டி வரலாம். அவர்களுக்கான கட்டணத்தை வெளிநாட்டுப் பணமாக கொடுக்கலாம், வங்கி மூலமாக அனுப்பலாம்.

Saturday, July 14, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்

சாரதி
கரூர்


கேள்வி

ஏற்றுமதியில் LIBOR  என்றால் என்ன?


பதில்

LIBOR என்பது LONDON INTER BANK OFFER RATE  என்பதன் சுருக்கமாகும். அதாவது லண்டனில் ஒரு வங்கிகளுக்கிடையேயான கடன்கள் வாங்கும் போது கொடுக்கப்படும் வட்டியை குறிப்பிடுவதாகும். இது ஏற்றுமதியில் எவ்வாறு உதவுகிறது என்றால், ஒரு இந்திய ஏற்றுமதியாளர் ஏற்றுமதிக்கான கடனை இந்திய வங்கியில் வாங்கும் போது இந்திய வட்டியில் ரூபாயில் வாங்கலாம் அல்லது LIBOR அடிப்படையிலும் வெளிநாட்டுப்பணமாக வாங்கலாம். LIBOR அடிப்படையில் வாங்குவது ஏற்றுமதியாளர்களுக்கு சிறிது பயனளிக்கும்.


Monday, July 9, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி பதில்

கபிலன்
திருப்பூர்


ஏற்றுமதி கேள்வி பதில் 

கேள்வி 
இன்கோடெர்ம்ஸ்  என்றால் என்ன? அதன் பயன் என்ன?

பதில்
ஏற்றுமதி இறக்குமதி வணிகம் உலகளவில் பல நாடுகளுக்கிடையே நடைபெறுவது. ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி இறக்குமதிக்காக தனித்தனி விதிகள் வைத்திருக்கமுடியாது. இதனால் தான் அகில உலக அளவில் எல்.சி., கியாரண்டி, கலெக்ஷன், வணிகக்குறியீடுகள் (இன்கோடெர்ம்ஸ்) போன்ற பலவற்றிக்கு இண்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ்  விதிகளை உருவாக்கியுள்ளது. இதில் ஒன்று தான் இன்கோடெர்ம்ஸ 2010 ஆகும். 2010ம் வருடம் திருத்தி அமைக்கப்பட்ட இந்த விதிகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் போது வணிகக்குறியீடுகள் (அதாவது சரக்குக் கட்டணம் யார் செலுத்த வேண்டும், இன்சூரன்ஸ்  யார் செலுத்த வேண்டும், வண்டி வாடகை யார் செலுத்த வேண்டும் என்று ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களின் பொறுப்புக்களை விளக்கும் குறியீடுகள் ஆகும்). முன்பு 13 குறியீடுகள் இருந்தன. தற்போது திருத்தி அமைக்கப்பட்டு 11 குறியீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. 

Monday, July 2, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்

குணசீலன்
திருச்சி

கேள்வி

கென்யாவிற்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உள்ளது?

பதில்
கென்யாவில் உலகிலேயே சிறந்த டீ, காபி விளைகிறது. இது தவிர விவசாய விளைபொருட்களும் நிறைய விளைகிறது. மற்ற எல்லாப் பொருட்களுமே இறக்குமதி செய்ய வேண்டிய நிலை தான். ஆதலால் இந்த நாட்டுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புக்கள் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்களை தேடலாம்.

Friday, April 27, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்

ராமநாதன்
அருப்புக்கோட்டை

கேள்வி

நான் தற்போது ஒரு கம்பெனி வைத்து நடத்தி வருகிறேன். அதற்கு லஷ்மி அண்டு கம்பெனி என்று பெயர் வைத்துள்ளேன். இனி ஏற்றுமதியில் ஈடுபட விருப்பம். அதற்காக கம்பெனி பெயரை லஷ்மி இண்டர்நேஷனல் அல்லது புதிதாக இன்னொரு கம்பெனி லஷ்மி இண்டர்நேஷனல் என்று துவங்கலாம் என்றுள்ளேன். இது சரியான முடிவா?

பதில்

முன்னமே ஒரு கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருப்பதால் அந்தக் கம்பெனி பெயரிலே ஏற்றுமதி செய்யலாம். அதில் தவறு ஏதும் இல்லை. ஏற்றுமதிக்காக தனிக் கம்பெனி துவங்க வேண்டும் என்பதும் இல்லை. ஆதலால் தங்களது தற்போதைய கம்பெனியிலேயே உங்களது ஏற்றுமதி வியாபாரத்தையும் செய்யுங்கள். அந்தக் கம்பெனி பெயரிலேயே ஐ.ஈ.சி. கோடு எடுங்கள்.

Sunday, April 15, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி
தாமோதரன்
டைரக்டர், கிரேட்

நாங்கள் திருச்சியில் கிரேட் என்ற பெயரில் ஒரு பெண்கள் சுய உதவிக்குழு வைத்துள்ளோம். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உதவியுடனும், தஞ்சாவூர் பயிர் பதனப்படுத்தும் நிலையம் உதவியுடனும் வாழைப்பூ தொக்கு   தயார் செய்து வருகிறோம். இதை தற்போது தமிழ்நாடு அளவில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். ஐ.ஈ.சி. கோடு எடுக்க விரும்புகின்றோம். என்ன செய்வது?

பதில்

வாழ்த்துக்கள். ஐ.ஈ.சி. கோடு வாங்குவது எளிது. உங்களது நிறுவனம் பெயரில் வங்கியில் ஒரு கரண்ட் அக்கவுண்ட் இருக்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் என்ன ரிஜிஜ்டிரேஷன்கள் தேவையோ அவையும் வேண்டும் (TIN, SHG registration போன்றவை). இவையெல்லாம் இருந்தால்  http://zjdgft.tn.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்றால் ஐ.ஈ.சி. கோடு வாங்குவதற்கான அப்ளிகேஷன் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் பெயர் ஆயத் நிரயத் பார்ம் ANF2A என்று பெயர். இன்னும் பல இணையதளங்களிலும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கும். முழு விபரங்களுக்கு இந்த இணையத்தளத்தையும் பார்க்கலாம்http://www.eximguru.com/iec-code/default.aspx

திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இருப்பதால், வாழைப்பூ தொக்கு தவிர மற்ற வாழை சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபடுங்கள். மேலும் உங்கள் ஏற்றுமதிப் பொருட்களுக்கென ஒரு இணையதளம் ஆரம்பியுங்கள். நிச்சியம் வெற்றியைத் தரும், ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உண்டு. என்னுடைய ஆதரவு / உதவியும் எப்போதும் உண்டு.



Thursday, April 12, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி


ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானவையாக கருத்தில் கொள்ள வேண்டியவை எவை?


பதில்


ஏற்றுமதியின் கண்களாக கருதப்படவேண்டியவை
1. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம்
2. சரியான நியாமான விலை
3. நேரம் தவறாது குறித்த காலத்தில் ஏற்றுமதி செய்தல்.