Monday, February 8, 2016

ஏற்றுமதி சரக்குகளை தபால் மூலம் அல்லது கூரியர் மூலம் அனுப்ப முடியுமா?


சரவணன்
கோவை

கேள்வி

ஏற்றுமதி சரக்குகளை தபால் மூலம் அல்லது கூரியர் மூலம் அனுப்ப முடியுமா?

பதில்

தாராளமாக அனுப்பலாம். இந்திய அரசின் இந்தியா போஸ்ட் மூலம் இண்டர்நேஷனல் போஸ்ட் பார்சல் மூலம் அனுப்பலாம். அல்லது தனியார் கூரியர் (டி.எச்.எல்.போன்றவை) மூலம் அனுப்பலாம். இவைகளும் இந்திய கஸ்டம்ஸை கடந்து தான் செல்ல வேண்டும். இவைகள் மூலம் சரக்குகள் அனுப்பும் போது அவை நேரடியாக இறக்குமதியாளரைச் சென்றடையும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது சரக்குகளை பெற்றுக் கொண்டு பணம் தராமல் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. முன் பணம் அதாவது அட்வான்ஸ் பேமண்ட் வாங்கிக் கொண்டு இந்த வகை ஏற்றுமதி செய்வது நல்லது.

மஹாராஷ்டிராவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?


ராமசேஷன்
மும்பை

கேள்வி
மஹாராஷ்டிராவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கியமான பொருட்கள் என்னென்ன?

பதில்
பெரிய வெங்காயம்திராட்சைஒயின்மலர்கள்ஸ்டிராபெரிமாதுளம்பழம்இஞ்சினியரிங் பொருட்கள்கெமிக்கல்ஸ்தங்க ஆபரணங்கள்வைர ஆபரணங்கள்துணி வகைகள் ஆகியவை பெருமளவில் ஏற்றுமதி ஆகின்றன. மஹாராஷ்டிராவிலிருந்து பெரும்பாலும் எல்லாப் பொருட்களும் ஏற்றுமதியானாலும் மேலே கண்ட பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.

Sunday, February 7, 2016

பங்களாதேஷில் இருந்து கித்தான் சாக்குகள்இறக்குமதி செய்ய விரும்புகின்றேன்.

பல்லடம் வாசகர்

கேள்வி
பங்களாதேஷில் இருந்து கித்தான் சாக்குகள்இறக்குமதி செய்ய விரும்புகின்றேன். அதற்கு எவ்வளவு டுயூட்டி வரும் என்று எப்படி கண்டுபிடிப்பது?

பதில்
இறக்குமதிக்கான டுயூட்டிகளை தெரிந்து கொள்ளwww.ieport.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள். முழு விபரங்களும் கிடைக்கும். இது தவிர இன்னும் பல இணையதளங்களிலும் கிடைக்கிறது.