Thursday, July 24, 2014

ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் ஏற்றுமதி கருத்தரங்கத்திற்கு

ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் ஏற்றுமதி கருத்தரங்கத்திற்கு அக்ஸிஸ் வங்கியில் பணம் கட்டி விட்டு இன்னும் பணம் கட்டிய விபரங்களை உங்கள் பெயருடன் தெரிவிக்கவில்லையென்றால் உடனடியாக எஸ்.எம்.எஸ்., அல்லது ஈமெயில் மூலமாக தெரிவிக்கவும். எஸ்.எம்.எஸ்., என்றால் 09869616533 என்ற எண்ணில் தெரிவிக்கவும். ஈமெயில் என்றால்     sethuraman.sathappan@gmail.com                                             என்ற முகவரிக்கு தெரிவிக்கவும். பின்னர் உங்களுக்கு செமினார் ரிஜிஸ்டிரேஷன் நம்பர் அனுப்பி வைக்கப்படும்.
கருத்தரங்கம் சென்னையில் கீழ்கண்ட இடத்தில் நடைபெறுகிறது:
மீனாட்சி காலேஜ் ஆடிட்டோரியம்
வெம்புளியம்மன் கோவில் தெரு
மேற்கு கே.கே.நகர், சென்னை
ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9 மணிக்கு வருமாறு பார்த்துக் கொள்ளவும்.

Wednesday, July 23, 2014

ஆகஸ்ட் 3ம் தேதி ஏற்றுமதி கருத்தரங்கம் நடக்கும் இடம்

ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் கீழ்கண்ட இடத்தில் ஏற்றுமதி கருத்தரங்கம் நடக்கிறது.

மீனாட்சி காலேஜ் ஆடிட்டோரியம்
வெம்புலியம்மன் கோவில் தெரு
கே.கே.நகர் (மேற்கு)
சென்னை

முன்பதிவு செய்து கொள்ளுங்கள் 09869616533
  • ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை தயாரிக்கும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு இலவச பங்கு பெறும் வாய்ப்பு.
  • மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை

Saturday, July 19, 2014

ஏற்றுமதி கருத்தரங்கம் பற்றி இன்றைய தினமலரில் செய்தி

சென்னை: ஏற்றுமதி, பங்குச் சந்தை சார்ந்த கட்டுரைகளை, 15 ஆண்டுகளாக எழுதியும், பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி' என்ற கருத்தரங்கை, சென்னையில் முதன் முறையாக தமிழில் நடத்துகிறார்.

சிறு தொழில் வணிகம் துவங்கி, முன்னணி நிறுவனங்கள் வரை, எல்லாருமே தொழில் வியாபாரத்தில் முன்னணி இடத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்திய கரன்சிகளை பார்த்து பூரித்து தொழில் செய்யும் பலருக்கும், அமெரிக்க டாலர்களையும், உலக கரன்சிகளையும் கொட்டித்தரும் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. ஏற்றுமதி என்பது, வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யும் தொழில் தான். ஆனால் அது, தொழில் துவங்கியவுடன் புதையல் போல டாலர்கள் கொட்டாது. முறைப்படி, தவறில்லாமல், தெளிவான வெளிநாடுகளின் சட்ட, திட்டங்களை புரிந்து கொண்டு செய்தால் ஏற்றுமதியில் ஜெயிக்கலாம். இறக்குமதி செய்ய நினைப்போர், பொருட்களை மார்கெட்டிங் செய்வது எப்படி என்று தெரியாமல் உள்ளனர். இதில் தான், பல தடங்கல்கள் வருகின்றன. இவற்றைப் போக்கும் விதமாக, ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி மற்றும் இணையம் மூலம் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என, ஏற்றுமதி, பங்குச்சந்தை சார்ந்த கட்டுரை களை, 15 ஆண்டுகளாக எழுதி, பல நாடுகளிலும் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், சென்னையில், ஆக., 3ம் தேதி, விவரிக்க உள்ளார். இந்த கருத்தரங்கம், முற்றிலும் தமிழில் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடக்கும். பயிற்சிக் கட்டணம், 2,500 ரூபாய். தேநீர், மதிய உணவு, பயிற்சி புத்தங்கள் இதில் அடங்கும். ஏற்றுமதி தரத்துக்கு பொருட்களை தயாரித்து, ஆனால், ஏற்றுமதியில் இதுவரை ஈடுபடாமல் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த, 20 பேருக்கு, இலவச அனுமதியுடன் பயிற்சி தரப்பட உள்ளது. மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 'தகுதி உடைய மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மும்பை எண்ணுக்கு தொடர்பு கொண்டு (எண்: 098204 51259) முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, www.exportimportnews.com, மற்றும் sethuraman.sathappan@gmail.com என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, சேதுராமன் சாந்தப்பன் தெரிவித்துள்ளார்.

இந்த ப்ளாக்கில் நீங்கள் எழுதிய பழைய ஏற்றுமதி பகுதிகளையும் படிக்க முடியுமா?

சுதாகர்
சென்னை


கேள்வி

இந்த ப்ளாக்கில் நீங்கள் எழுதிய பழைய ஏற்றுமதி பகுதிகளையும் படிக்க முடியுமா?


பதில்

ஏன் முடியாது? ப்ளாக்கில் வலது பக்கம் சென்றால் 2011ம் வருடத்திலிருந்து நான் எழுதியவற்றை படிக்கலாம். சென்று பாருங்கள்.

Thursday, July 17, 2014

ஆகஸ்ட் 3 - சென்னையில் ஏற்றுமதி செமினார் - LEARN EXPORT MARKETING

தமிழ்நாட்டில் பல ஏற்றுமதி பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆதலால் ஏற்றுமதி பற்றி பலருக்கு அடிப்படைகள் நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எங்கு தவறுகிறார்கள்? ஏற்றுமதி மார்க்கெட்டிங் பற்றி அதிகம் தெரியவில்லை. எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். தற்போது உலகம் உள்ளங்கையில் அடங்கி விட்டது. ஆமாம், இண்டர்நெட்டில் தான் எல்லாம் இயங்குகிறது. அந்த இண்டர்நெட்டை வைத்து எப்படியெல்லாம் எக்ஸ்போர்ட் மார்க்கெட்டிங் செய்யலாம் என்பதை பற்றி இந்த செமினாரில் விளக்கமாக கூறவுள்ளேன். வாருங்கள் அங்கு சந்திப்போம்.

மேலும் விபரங்களுக்கு www.exportimportnews.com 

Monday, July 7, 2014

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஏற்றுமதி செமினார் - ஆகஸ்ட் 3ம் தேதி - சென்னையில்

செமினார் சம்பந்தப்பட்ட முழு விபரங்களை   www.exportsimportnews.com  என்ற இணையதளத்தில் காணலாம்.