என்னைப் பற்றி!

Sethuraman Sathappan

Executive Vice President, Bank Internasional Indonesia, India



பெயர்!
  • தனது தந்தையார் பெயரையும் தன் பெயரின் முன்பு இணைத்துக் கொண்டிருக்கும் சேதுராமன் சாத்தப்பன் அவர்களை யாரிடமும் அறிமுகப்படுத்தும் போது சாத்தப்பன் என்று கூறினால் உடனடியாகத் பலருக்கும் தெரியாது. ஆனால் சேதுராமன் சாத்தப்பன் என்றால் உடனடியாகத் தெரியும். ஏனெனில் அந்தப் பெயரில் தான் தமிழ்நாட்டில் அவர் பிரபலம்.

பதவி!
  • சேதுராமன் சாத்தப்பன். மும்பையில் உள்ள இந்தோனிஷியாவைச் சார்ந்த  பாங்க் இண்டர்நேஷனல் இந்தோனிஷியா வங்கியில் எக்ஸ்கியூடிவ் வைஸ் பிரசிடண்டாக பணிபுரிந்து வருகிறார்.

எழுத்து!
  • தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் எழுதும் கட்டுரைகள் தினமலர் நாளிதழில் கடந்த பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. இது தவிர பல பத்திரிக்கைகளிலும் எழுதியுள்ளார்.
  • சேமிப்பு, வர்த்தகம், பங்குச் சந்தை, ஏற்றுமதி / இறக்குமதி ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர்.
  • தமிழில் இவர் எளிமையாக எழுதும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அதிகம். கடந்த 12 ஆண்டுகளாக பத்திரிக்கைகளில் எழுதி வரும் இவர் இதுவரை சுமார் 1000 கட்டுரைகளுக்கு மேல் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார்.

எழுதிய புத்தகங்கள்!
  • தமிழ்நாட்டின் தமிழில் பல இடங்களில் ஏற்றுமதி சம்பந்தமாக கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். ஏற்றுமதி, சேமிப்பு சம்பந்தமாக தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். இவரது தமிழ் புத்தங்கங்களை கோவையை சேர்ந்த விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்களும் எழுதியுள்ளார். அவற்றை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் வெளியுட்டுள்ளது.

கருத்தரங்குகள்!
  • ஏற்றுமதியில் ஆவணங்களுக்காக உலகளவில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி சம்பந்தமாகவும், ஏற்றுமதி டாக்குமெண்ட்கள் சம்பந்தமாகவும் பல கருந்தரங்களில் சிறப்பு பேச்சாளராக இருப்பவர். ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்றுமதி ஆவணங்கள் சம்பந்தமாக கருத்தரங்குகள் நடத்துவதற்கு அந்த நாட்டு அரசங்கத்தால் கடந்த பத்து வருடங்களாக அழைக்கப்பட்டு வருபவர். இது தவிர இந்தியாவின் பல நகரங்களிலும் ஏற்றுமதி சம்பந்தமாக கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.

தமிழ் கருத்தரங்குகள்!
  • தமிழ்நாட்டில் ஏற்றுமதியாளர்களில் பலர் ஆங்கில புலமை இல்லாதவர்கள் என்ற நிலையில் அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழில் ஏற்றுமதிக் கருத்தரங்குகளை, தினமலர் பத்திர்க்கைக்காக திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் போன்ற நகரங்களில் நடத்தியுள்ளார். கரூர் கருத்தரங்கில் சுமார் 1700 பேர் கலந்து கொண்டது ஒரு முக்கியமான நிகழ்வு.