Saturday, September 20, 2014

கத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்

கத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்

கத்தார் நாட்டுக்கு அதிக அளவு பழங்கள், காய்கறிகள் அனுப்புவதில் முதலிடம் வகிப்பது இந்தியா தான். அங்கு  அதிக அளவு இந்தியர்கள் இருப்பதும், அந்த நாடு அருகில் இருப்பது தான் காரணம்.

Thursday, September 18, 2014

கென்யாவிற்கு ஏற்றுமதி

கென்யாவிற்கு ஏற்றுமதி

கென்யா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது. கென்யா நாடு பல பொருட்களை இறக்குமதி செய்து தான் உபயோகித்து வருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்து வரும் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஒரு தீர்வு. ஆதலால் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது.
2012 ம் வருடத்தில் கென்யா 195 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 149 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.

2012 ம் வருடத்தில் கென்யா 167 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 143 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.

 

மதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அது வெளிநாடுகளில் எந்த வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது?

காசிராம்

சூளைமேடு


கேள்வி

மதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அது வெளிநாடுகளில் எந்த வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது?

 

பதில்

அது நம்ம ஊர் மாதிரி தலையில் சூடிக்கொள்ள அதிகம் பயனபடுத்தப்படுவதில்லை. அங்கு கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது அல்லது பூவிலிருந்து வாசனைத் திரவியங்கள் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.


Wednesday, September 17, 2014

ஒரிசாவிலிருந்து கடல் பொருட்கள்

ஒரிசாவிலிருந்து கடல் பொருட்கள்

ஒரிசாவிலிருந்து கடல் பொருட்கள் ஏற்றுமதி 20 சதவீதம் கூடியுள்ளது. 2012-13ம் வருடத்தில் 903 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. இது சென்ற வருடத்தில் 792 கோடியாக இருந்தது. ஷிரிம்ப் மீன் வகைகள் தாம் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. அதுவும் அதிக அளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகின்றது.

இந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதில் சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா?


கண்மணி
சென்னை

கேள்வி
இந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதில் சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புக்கள் ஏதாவது உள்ளதா?

பதில்

நல்ல கேள்வி. இப்படி எங்கெங்கு வாய்ப்புக்கள் இருக்கிறது என்று பார்த்து அந்த நாடுகளில் இறக்குமதியாளர்களை தேடுவது நல்லது. இந்தோனிஷியா, இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர்களாக இருந்தாலும் அதில் பெரும்பாலும் நிலக்கரி, பாமாயில் இறக்குமதியாக இருக்கிறது. சிறிய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புக்கள் பெரிதாக இல்லை.

Tuesday, September 16, 2014

ஜெ.சி.பி.

ஜெ.சி.பி.

ஜெ.சி.பி. என்றால் சின்ன குழந்தை கூட தமிழ்நாட்டில் சொல்லிவிடும். அந்த அளவிற்கு அந்த கம்பெனியின் மிஷின் கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கன்ஸ்டிரக்ஷன் மிஷனரி என்றால் இங்கிலாந்தில் உள்ள ஜெ.சி.பி. கம்பெனியை யாரும் மறக்க முடியாது. சென்ற வருடம் மட்டும் இந்தியாவில் 26000 மிஷின் கள் விற்பனை செய்துள்ளார்கள். இது அவர்களின் 30 சதவீதம் சேல்ஸ் ஆகும். ஆதலால் இந்திய விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும்  சேர்த்து ஜெய்ப்பூரில் தற்போது ஒரு பிளாண்ட் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Sunday, September 14, 2014

மெஹாடிரின்

மெஹாடிரின்

இஸ்ரேலில் உள்ள மெஹாடிரின் என்ற கம்பெனி பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்து வருகிறது. உலகத்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் இதுவும் ஒன்று. 8500 ஹெக்டேரில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்து வருகிறது. ஜெப்பா என்ற பிராண்டில் உலகளவில் விற்பனை செய்து வருகிறது. மெஹாடிரின் ஐரோப்பாவில் உள்ள ரீடெய்ல் செயின் களில்மிகப்பெரியதாகும். இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள். பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும்.

www.mehadrin.co.il

 

Saturday, September 13, 2014

கேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்

கேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்

கேரளத்தவர்கள் வாழைப்பழத்திற்கு அடிமையானவர்கள். அதற்கு தகுந்தது போல் அங்கு பல வகை வாழைப்பழங்கள் விளைகின்றது. ஆனால், தற்போது கேரளத்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து பழங்களை இறக்குமதி செய்து உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். சிலியிலிருந்து ஆப்பிள், எகிப்திலிருந்து ஆரஞ்சு, இஸ்ரேலிருந்து திராட்சை என்று தினசரி நிறைய இறக்குமதி ஆகின்றன.
ஒரு நாளைக்கு 40,000 பாக்ஸ் ஆப்பிள்கள், அதாவது 80,000 கிலோக்கள் இறக்குமதி ஆகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இது தவிர ஒரு நாளைக்கு 30 முதல் 35 லோடு வரை திராட்சை மஹாராஷ்டிராவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் ஏற்றுமதி


எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் ஏற்றுமதி

எம்.எஸ்.எம்.இ. என்றால் என்ன? மீடியம், சுமால், மைக்ரோ எண்டர்பிரைசஸ் என்று அர்த்தம். அதாவது மீடியம் சைஸ் கம்பெனிகளுக்கு கீழே வருபவை. இந்த வகை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிக்கின்றன. 

சிறிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய முடியுமா என்ற கேள்வி பல தடவைகள் என்னிடம் கேட்கப்படுகிறது. இந்தியாவின் 40 சதவீத ஏற்றுமதி சிறிய கம்பெனிகளால் தான் செய்யப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது என்று.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் பங்கு ஏற்றுமதியில் அதிகம் இருப்பதால் அதை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசாங்கம் ஒரு கமிட்டி நிர்ணயித்துள்ளது.

உலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்


உலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்


உலகத்தின் பாதியளவு மாங்காய் உற்பத்தி இந்தியாவில் நடக்கின்றது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. அது தான் உண்மை.இந்தியா வருடத்திற்கு10.9 மில்லியன் டன்கள் மாங்காய் உற்பத்தி செய்கிறது. ஆனால் ஏற்றுமதி மிகவும் குறைவு.

Thursday, September 11, 2014

பாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது?

ராமசுவாமி
இந்தூர்

கேள்வி

பாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது?

பதில்

உலகிலேயே அதிக அளவு பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தோனிஷியா, மலேஷியா ஆகும். இந்தியாவில் இந்த இரண்டு நாடுகளிலிருந்துமே இறக்குமதி செய்தாலும், இந்தோனிஷியாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் பரிட்சாத்த முறையில் ஆந்திராவில் பாம் மரங்கள் வளர்க்கப்பட்டு பாமாயில் எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

 

ஏற்றுமதி உதவும் இணையதளம்


ஏற்றுமதி உதவும் இணையதளம்

www.perishablenews.com

 

எளிதில் அழுகக்கூடிய அல்லது கெட்டுபோகக்கூடிய பொருட்களின் ஏற்றுமதி, உற்பத்தி, பேக்கிங் ஆகியவைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய இணையதளம். பேக்கரி, மலர்கள், மாமிசம், ரீடெய்ல் துறையில் உள்ள ப்ரெஷ் உணவு வகைகள் ஆகியவை பற்றி ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியானது. சென்று பாருங்கள்.

 

Wednesday, September 10, 2014

பவர் செக்டார் ஏற்றுமதி

பவர் செக்டார் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து பவர் செக்டார் சம்பந்தமான ஏற்றுமதிக்கு தென் ஆப்பிரிக்காவில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. இதுவரை அங்கு ஐரோப்பிய நாடுகள் தாம் ஆதிக்கம் செய்து வந்தன. தற்போது இந்திய கம்பெனிகளுக்கு அங்கு நிறைய வாய்ப்புக்கள் வருகின்றன. தற்போது வருடத்திற்கு சுமார் 12,500 கோடி ரூபாய்க்கு அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற ஒரு பவர் செக்டர் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 39 கம்பெனிகள் கலந்து கொண்டன.

  

சிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்குகள்டாக்குமெண்டிற்கு முன்பே போய் சேர்ந்து விடுகிறது. பின்பு டிமரேஜ் அதிகம் ஆகி விடுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது.

அன்புகரசன்
சென்னை

கேள்வி

சிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்குகள்டாக்குமெண்டிற்கு முன்பே போய் சேர்ந்து விடுகிறது. பின்பு டிமரேஜ் அதிகம் ஆகி விடுகிறது. இதை எவ்வாறு தவிர்ப்பது.

பதில்

அருகில் உள்ள நாடுகளுக்கு சரக்குகள் கப்பல் மூலம் அனுப்பும் போது நான் நெகோசியபுள் சீ வே பில் மூலம் அனுப்புவது நல்லது. இதன் மூலம் சரக்குகள் அங்கு டாக்குமெண்ட்களுக்கு முன்பு போய் சேர்ந்து விட்டால் ஏர்வே பில் போல ஒரிஜினல் இல்லாமலேயே எடுக்கலாம். இந்த முறைய பின்பற்றி சரக்குகளை அனுப்பலாம். ஆனால் இந்த வகை கப்பல் ரசீதை மாற்றிக் கொடுக்க முடியாது.

 

Monday, September 1, 2014

ஏற்றுமதி லாபம் தரும் தொழிலா? அதில் இப்போது இறங்கலாமா?


ராஜாமணி
கோவை

கேள்வி

ஏற்றுமதி லாபம் தரும் தொழிலாஅதில் இப்போது இறங்கலாமா?


பதில்
  

எந்த தொழிலிலும் ஆராய்ந்துவிருப்ப பட்டு இறங்கினால் லாபமே. அதாவது அரசாங்கம் ஏற்றுமதியை ஊக்குவிக்க பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆதலால் இது இறங்க சிறந்த சந்தர்ப்பம். ஆனால்முழுமையாக ஏற்றுமதியின் நெளிவு சுளிவுகள் தெரிந்து இறங்குவதே நல்லது.