Thursday, March 22, 2012

ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்கள்

ஜெம் அண்ட் ஜுவல்லரி, பினிஷ்ட் லெதர், எலக்ட்ரானிக் சாமான்கள், மெரைன் ப்ராடக்ட்ஸ், இயற்கை சில்க் யார்ன், காட்டன் யார்ன் பேப்ரிக்ஸ், மேட் அப்ஸ், பிளாஸ்டிக்  பொருட்கள். வருடத்திற்கு 7000 முதல் 8000 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாகிறது. இதில் பெரும்பகுதி ஜெம் அண்ட் ஜுவல்லரி ஆகும்.

Tuesday, March 20, 2012

கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க

கிரீன் டீ தற்போது ஒரு பெரிய பிசினஸ வாய்ப்பாகிவிட்டது. மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் இந்தியா அளவில் கிரீன் டீ குடிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கிரீன் டீ குடிப்பவர்கள் இந்தியாவில் வருடந்தோறும் 10 சதவீதம் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்தியா உலகளவில் இரண்டாவது டீ உற்பத்தி செய்யும் நாடு. வருடந்தோறும் 9 முதல் 11 மில்லியன் கிலோக்கள் கிரீன் டீயும் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகின்றன. சைனா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு சென்றிந்தால் பார்த்திருக்கலாம். அங்கு ஹோட்டல்களில் கிரீன் டீ என்பது ஒரு பிரதன பானமாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ சீனக்காரர்களில் குண்டானவர்களையே பார்க்கமுடிவதில்லை. மேலும் உணவில் தினாரி மாமிசம் எடுத்துக் கொண்டாலும் அது அவர்களை பாதிப்பதில்லை. நாயர் ஒரு கிரீன் டீ போடுங்க என்று வருங்காலங்களில் டீக்கடைகளில் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.




மதுரை மல்லி

மதுரை என்றால் மல்லிக்கைப்பூவை யாரும் மறக்கமாட்டார்கள். உலகளவில் பிரசித்தி பெற்றது மதுரை மல்லி. அந்த மல்லிகைப்பூவை உலகளவில் ஒரு பிராண்டாக கொண்டு செல்ல கோவை விவசாயப் பல்கலைக்கழகமும், இக்ரிசாட்டும் சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது. அப்படியென்ன மதுரை மல்லியில் விசேஷம் என்கிறீர்களா? தூக்கும் வாசனை, அதிகநாட்கள் கெடாமல் இருப்பது, கனமான இதழ்கள். அப்புறம் என்ன வேணும் மதுரை மல்லி உலக பிராண்டாக வருவதற்கு? மல்லிகைச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சரியான குளிர்பதனக்கிடங்குகளும் இருக்குமெனில் மதுரை மல்லி இன்னும் மணக்கும் என்பது அங்குள்ள உற்பத்தியாளர்களின் கோரிக்கை. நிறைவேறுமா? அடுத்த முறை மதுரை சென்று வரும் போது உங்கள் மனைவிக்கும் மறக்காமல் ஒரு முழும் மல்லிகைப்பூ வாங்கிச் செல்லுங்கள். கல்யாணம் ஆகாதவர்கள் காதலிக்கு வாங்கிச் செல்லுங்கள். 

Friday, March 16, 2012

இந்த வர இணையதளம் 


இரண்டு கல்லூரி பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட இணையதளம். இதை ஒரு வழிகாட்டி இணையதளம் என்று கூறினால் மிகையாகாது. மார்க்கெட்டிங், விற்பனை, சந்தை உருவாக்க போன்றவைகளுக்கு உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் இணையதளம். 

கேள்வி பதில்
கேள்வி
சாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா?

பதில்
ஏன் முடியாது? 50 ஐயிட்டங்கள் வரை இறக்குமதி வரி கட்டாமல் இறக்குமதி செய்யலாம்.


Thursday, March 15, 2012

கொய்யாபழம் ஏற்றுமதி

கொய்யாபழத்தில் பல வகைகள் உண்டு. இந்தியாவில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படுவது அலகாபாத் சபேதா, சர்தார், லலித், அனகாபள்ளி, பனாரசி, ஆர்கா மிருதுலா, நாக்பூர் சீட்லெஸ் போன்றவையாகும். இவற்றில் அலகாபாத் சபேதா, சர்தார் ஆகியவை மிகவும் அதிகம் அளவில் பயிரிடப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட கொய்யாபழம், சாறு ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. சென்ற வருடம் சுமார் 20 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. அதிகம் ஏற்றுமதியாகும் நாடுகள் அரபு நாடுகள், நெதர்லாந்து, யு.கே., இந்தோனேஷியா ஆகியவை ஆகும். 

கார்மெண்ட் ஈடெயிலிங்

கார்மெண்ட் ஈடெயிலிங் என்றால் என்ன? அதாவது கடைகள் வைத்து டிஸபிளே செய்து வியாபாரம் செய்வதை விட இண்டர்நெட் மூலமாக ஆடைகளின் படங்களையும், அளவுகளையும் வெளியிட்டு மக்களை அதன் மூலமாகவே வாங்கச் செய்வது ஈடெய்லிங் எனப்படும். சமீபகாலமாக இந்தத் துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த சந்தை 2105ம் வருடம் சுமார் 6000 கோடி ரூபாய் அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சயம் நூற்றுக்கணக்கான ஈடெய்லிங் இணையதளங்கள் வந்துவிட்டாலும் பிலிப்கார்ட், லெட்ஸ்பை, பேஷன் அண்டு யூ, ஏபி, ஸ்நாப்டீல் ஆகியவை அதிகம் பிரபலமானவை.

Monday, March 12, 2012

அர்ஜென்டினாவில் புதிய இறக்குமதி விதி

அர்ஜென்டினாவில் புதிதாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இறக்குமதி செய்வதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுத் தான் இறக்குமதி செய்யமுடியும் என்று. இது முன்பே காண்டிராக்ட் போட்டவர்களுக்கும், சரக்குகளை தயார் செய்து வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் கஷ்டமான ஒன்று. இதனால் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் நாட்டின் பிரபலமான லோகோ, அந்த நாட்டின் பிரபலமான கம்பெனிகளின் லோகோ போன்றவைகளை போட்டு சரக்குகள் தயார் செய்து வைத்திருப்பவர்களின் பாடு இன்னும் திண்டாட்டம் தான். தற்போது இந்திய அரசாங்கத்தின் மூலம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் இந்த கஷ்டங்களை எடுத்துக் கூற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதி நிலவரம் 

மார்ச் மாதம் நிறைவடையவுள்ளது. இந்த வருட ஏற்றுமதி டார்கெட்டான 300 பில்லியன் டாலரை கடப்போமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான். ஜனவரி மாத ஏற்றுமதி அளவைப் பார்ப்போம்.

இந்த வருட ஜனவரி மாத ஏற்றுமதி சென்ற வருட ஜனவரி மாத ஏற்றுமதியை விட 10 சதவீதம் கூடுதலாகி 25 பில்லியன் டாலராக இருந்தது. சென்ற வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் ஜனவரி வரை ஏற்றுமதி அளவு 242          மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் 58 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி செய்தாக வேண்டும் 300 மில்லியன் டாலர் ஏற்றுமதி அளவை எட்டுவதற்கு.

Friday, March 9, 2012


ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 47 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களால் செய்யப்படுகிறது.

நாமக்கல்லிருந்து தற்போது அதிக அளவில் ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



Wednesday, March 7, 2012

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


என்னுடைய ப்ளாக்

ஏற்றுமதி செய்திகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட என்னுடைய ப்ளாக்www.sethuramansathappan.blogspot.com ஆரம்பித்த 6 மாதத்தில் 13000 வாசகர்கள் பார்த்திருக்கின்றனர். ஏற்றுமதி செய்திகள் வாசகர்களை சென்று அடைய வேண்டும், மேலும் தவறில்லாத ஏற்றுமதிக்கு அது வழிவகுக்க வேண்டும் என்பது தான் அந்த ப்ளாக்கின் குறிக்கோள். அதை அடைவது கண்டு மிக்க மகிழ்ச்சி.
ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


மிளகு ஏற்றுமதி

இந்தியாவில் மிளகு உற்பத்தி தென் இந்திய மாநிலங்களில் தான் அதிகம் இருக்கிறது. அதாவது குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான். கேரளா இந்திய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு அதிகமாக  செய்து வருகிறது. இந்தியாவில் 75 வகையான மிளகு விளைவிக்கப்படுகிறது.

Tuesday, March 6, 2012

6.3.2012
ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
பட்ஜெட்டும் ஏற்றுமதியாளர்களும்
வரும் மார்ச் மாத பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏதும் பெரிய சலுகைகள் கிடைக்குமா என்ற இல்லை என்ற பதில் தான். அரசாங்கம் பெரிய அளவில் எந்த சலுகைகளையும் அறிவிக்காது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 5, 2012

ஏற்றுமதியாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்?, மிளகு ஏற்றுமதி


ஏற்றுமதியாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்?

வெளிநாட்டில் கம்பெனி வைத்திருப்பவர் உங்களை தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பார்கள். அந்த நாட்டில் அவர்கள் கம்பெனி, கம்பெனி அதிகாரிகள் மற்றும் கவர்மெண்ட் அதிகாரிகளை பார்த்துப் பேசலாம் என்றும் பின்னர் ஏற்றுமதி பற்றி பேசலாம் என்று கூறுவார்கள். நீங்களும் இது தான் சரியான வழி என்று நினைத்து போவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் போது அங்கு இருப்பவர்களுக்கு கிப்ட்கள் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு லிஸ்ட்  வரும். அதை நீங்கள் வாங்கிக் கொண்டு சென்றால் உங்களை தங்கியிருக்கும் ஒட்டலில் வந்து பார்த்து அந்த கிப்ட்களை வாங்கி முடித்தவுடன் ஆட்கள் மாயமாக மறைந்து விடுவார்கள். அப்புபுறம் எவ்வளவு தொடர்பு கொண்டாலும் போனை எடுக்க மாட்டார்கள்.


மிளகு ஏற்றுமதி

இந்தியாவில் மிளகு உற்பத்தி தென் இந்திய மாநிலங்களில் தான் அதிகம் இருக்கிறது. அதாவது குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான். கேரளா இந்திய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு அதிகமாக  செய்து வருகிறது. இந்தியாவில் 75 வகையான மிளகு விளைவிக்கப்படுகிறது.

ஆட்டோ உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி, உங்களுக்கு தெரியுமா?


ஆட்டோ உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி


ஆட்டோ உதிரிப் பாகங்கள் ஏற்றுமதிக்கு இந்தியாவிலிருந்து நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது. 2010-11ம் வருடத்தில் இந்தத் துறை 54 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. 5.20 பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது கிட்டதட்ட 25000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்று இருக்கிறது. இது 2020ம் வருடத்தில் 30 பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது 150,000 கோடி ரூபாய்கள் அளவிற்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் கண்டங்கள் ஆப்பிரிக்கா (7.4 சதவீதம்), வட அமெரிக்கா (24 சதவீதம்), ஐரோப்பா (37 சதவீதம்), ஆசியா (28 சதவீதம்) ஆகும்.


அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் எலக்ட்ரிக்கல் பாகங்கள் (9 சதவீதம்), எக்யூப்மெண்ட்ஸ் (10 சதவீதம்), சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேகிங் பாகங்கள் (12 சதவீதம்), என்ஜின் பாகங்கள் (31 சதவீதம்), ஸ்டீரிங் பார்ட்ஸ (19 சதவீதம்) மற்றும் பாடி, சேசிஸ் (12 சதவீதம்) ஆகும்.


உங்களுக்கு தெரியுமா?


இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 47 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களால் செய்யப்படுகிறது.


நாமக்கல்லிருந்து தற்போது அதிக அளவில் ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.