Sunday, December 25, 2011

ஏறுகிறதா ஏற்றுமதி? அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?, மஞ்சள் விலை மர்மம், காடு வளர்ப்பும், ஏற்றுமதியும், ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்,


ஏறுகிறதா ஏற்றுமதி? அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?

நாம் சில வாரங்களுக்கு முன்பு எதிர்பார்த்தது நடந்தே விட்டது. அதாவது ஏற்றுமதி புள்ளிவிபரங்களில் தவறு நடந்துள்ளதா என்று பலரும் அரசாங்கத்திடம் கேட்ட போது, அப்போது இல்லை என்று சமாளித்தாலும், தற்போது கொல்கத்தாவில் உள்ள ஏற்றுமதி புள்ளி விபர அலுவலகத்தில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குளறுபடியால் 9 பில்லியன் டாலர் அளவு ஏற்றுமதி உயர்த்தி காட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது 45,000 கோடி ரூபாய் அளவிற்கு.  ஆண்டு தொடக்கத்தில் நன்றாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி படிப்படியாக குறைந்து தற்போது நவம்பர் மாத ஏற்றுமதி சென்ற வருட இதே கால ஏற்றுமதி அளவை விட 4.2 சதவீதமே கூடியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஷாக்கடிக்கும் செய்தி தான். உலகம் முழுவது பல ஷாக்கடிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இது ஒரு பெரிய செய்தியல்ல என்பதே நமது கருத்து. இந்த வருட ஏற்றுமதி டார்கெட்டை எட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் என்று அரசாங்கமே தெரிவித்துள்ளது.
இந்த வருடம் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளவை தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், பெட்ரோலியம் பொருட்கள், எஞ்சினியரிங் பொருட்கள், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், செயற்கை இழை, காட்டன் யார்ன் மேட் அப்ஸ், எலக்ட்ரானிக் சாமான்கள், மருந்துப் பொருட்கள், கெமிக்கல்ஸ், ப்ளாஸ்டிக் பொருட்கள், லெதர் மற்றும் லெதர் பொருட்கள், மெரைன் ப்ராடக்ஸ் போன்றவை ஆகும்.


மஞ்சள் விலை மர்மம்
200 கிராம் மஞ்சள்தூள் வாங்கினேன், விலை ரூபாய் 50 என்று போட்டிருந்தது. அதற்கு அரை மணிநேரம் முன்பு தான் ஒரு மஞ்சள் உற்பத்தியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறினார் சென்ற வருடம் 100 ரூபாய் கிலோ வரை இருந்தது, தற்போது கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கு வந்து விட்டது என்று கூறினார். பாருங்கள் அரைக்காத மஞ்சள் கிலோ 35 முதல் 45 ரூபாய், ஆனால் அரைத்த மஞ்சள் கிலோ 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? பொருளை வேல்யு அடிசன் செய்து விற்பது நல்லது என்று. 

இந்தியாவில் மொத்தமே மூன்று மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. முதலிடம் ஆந்திராவுக்கு. தமிழ்நாடும், ஒரிசாவும் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன. ஆந்திரா 60 சதவீதமும், தமிழ்நாடு, ஒரிசா தலா 20 சதவீதமும் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளில் 70 சதவீதம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. மீதம் 30 சதவீதம் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாகிஸதான், சைனா, ஹைதி, ஜமைக்கா நாடுகள் மஞ்சள் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன. ரஷ்யா, அமெரிக்கா, யு.கே., ஜப்பான் ஆகிய நாடுகள் முக்கியமான இறக்குமதி நாடுகள் ஆகும்.


காடு வளர்ப்பும், ஏற்றுமதியும்
சும்மா இருந்த தரிசு நிலங்களில் காடு வளர்ப்புக்காக பிரித்து கம்பெனிகளுக்கும், தனியார்களுக்கும் பிரித்து கொடுத்து வியட்நாம் தமது காட்டுப் பொருட்களின் ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது 1998ல் 108 மில்லியன் டாலர் அளவாக இருந்த ஏற்றுமதி, 2005ம் வருடம் 1700 மில்லியன் டாலராக கூட்டியுள்ளது. இது போல இந்தியாவில் 28 மில்லியன் ஹெக்டேர்கள் இது போல காடு வளர்க்க ஏதுவாக இருக்கிறது. கம்பெனிகளுக்கும், தனியார்களுக்கும் பிரித்து கொடுத்து காடு வளர்ப்பை ஊக்கப்படுத்தினால் காட்டுப் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் கூடும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. முன்பு டீ, காபி தோட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் இது போல செய்துள்ளது. இது டிம்பர், பேப்பர் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தாராளமாக வழங்கும். மேலும், நாட்டின் பசுமைக்கும் வழிவகுக்கும்.


ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்
ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கு இந்தியாவில் பல அரசாங்க இன்ஸ்பெக்ஷன் நிலையங்கள் இருக்கின்றன. சில சமயம் பல வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் வெளிநாட்டை சேர்ந்த இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகளை குறிப்பிடுவார்கள். இதில் இரண்டு ஏஜென்சிகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று SGS, இன்னொன்று Lloyd's Register Inpsection Agency.  இவை இரண்டும் உலகப் புகழ் பெற்ற இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகள். இவை இந்தியாவில் பல இடங்களில் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன.


கேள்விக்கு என்ன பதில்?

சுதர்சன்
கேள்வி

ASAP மற்றும் MAQ என்றால் என்ன?

பதில்ASAP என்றால் As Soon As Possible என்று அர்த்தம். அதாவது எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று பொருள். MAQ என்றால் Minimum Order Quantity என்று அர்த்தம். அதாவது ஏற்றுமதியிலோ அல்லது உள்நாட்டு வியாபாரத்திலோ குறைந்த பட்ச ஆர்டர் என்பதை தான் இவ்வாறு கூறுவார்கள்.


கேள்வி
நாம் முன்னோர்கள் போல அரிசி உணவை குறைத்து வரகு, சோளம், கம்பு, கேப்பை என்று உட்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இது போல தானியங்களுக்கு வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இவைகள் ஹிந்தியில் எப்படி அழைக்கப்படுகின்றன?

பதில்
வரகு ஹிந்தியில் செனா என்றும், சோளம் ஹிந்தியில் ஜோவர் என்றும், கம்பு ஹிந்தியில் பஜ்ரா என்றும், கேப்பை ஹிந்தியில் ராகி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ப்ரோஸ, சோர்கம், பேர்ல், பிங்கர் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த வார இணையதளம்
 
www.msme.gov.in

சிறிய மற்றும் குறும் தொழில்களை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்க இணையதளம். சிறிய தொழில்கள் செய்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணையதளம். அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் உதவி, ஏற்றுமதி, டிரெயினிங், அவர்களின் பப்ளிகேஷன்ஸ், மேலும் பல இணையதளங்களின் இணைப்புக்கள் என்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்த தொடர் சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, December 19, 2011

என்னுடைய அடுத்த புத்தகம் எனது அன்பளிப்பாக

வணக்கம்

தாங்கள் தங்கள் 50 நண்பர்களுக்கு மெயில் மூலமாகவோ அல்லது facebook மூலமாகவோ அல்லது தங்களது  ப்ளாக் மூலமாகவோ  அல்லது ஓர்குட் மூலமாகவோ  என்னுடைய ப்ளாக் யை (http://www.sethuramansathappan.blogspot.com/) பற்றி சொல்லி அதன் பிறகு எனக்கு தங்களுடைய முகவரி அனுப்புவீர்கள் ஆனால் முதலில் வரும் 50 ௦ ஈமெயில் களுக்கு பொங்கல் சமயத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படவுள்ள என்னுடைய அடுத்த புத்தகம் எனது அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்

சேதுராமன் சாத்தப்பன்

Sunday, December 18, 2011

வணக்கம்

வணக்கம்,

சென்ற வர ஏற்றுமதி உலகம் (http://www.sethuramansathappan.blogspot.com/) ப்ளாக் க்கு தினசரி 50 பார்வையாளர்கள் வரை தான் வருகிறார்கள். இது மிகவும் குறைவு என்பது என் கருத்து. தங்கள் தங்கள் நண்பர்களுக்கு ஜிமெயில் மூலமாகவோ அல்லது facebook மூலமாகவோ அல்லது தங்களது  ப்ளாக் மூலமாகவோ  அல்லது ஓர்குட் மூலமாகவோ  என்னுடைய ப்ளாக் யை (http://www.sethuramansathappan.blogspot.com/) பற்றி சொல்வீர்களேயானால் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். இனி சென்ற வார ஏற்றுமதி உலகத்தை படியுங்கள்.

அன்புடன்

சேதுராமன் சாத்தப்பன்
௦ 

சென்ற வார ஏற்றுமதி உலகம், போலி ஆர்டர்கள் உஷார், மீன்கள் ஏற்றுமதி, வெங்காயம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


இந்த தொடருக்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது  மகிழ்சியாக இருக்கின்றது. இனி  சென்ற வார ஏற்றுமதி உலகத்தை பார்ப்போம்.


போலி ஆர்டர்கள் உஷார்

ஏற்றுமதி செய்ய ஆர்வம் பலருக்கு இருப்பதால், ஆர்டர் ஏதும் கிடைத்து விட்டால் வானத்துக்கும், பூமிக்கும் குதித்து விட்டு யாரிடமும் இது பற்றி சொல்வதில்லை. சொன்னால், அந்த ஆர்டரை அந்த நண்பர் செய்து விடுவாரோ என்ற எண்ணமும் தலை தூக்கி விடுகிறது. ஆதலால், ரகசியத்தை காப்பது போல் காத்து ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்கள். என்னிடம் சந்தேகம் கேட்கும் போது கூட யாரிடமிருந்து ஆர்டர் வந்துள்ளது, என்ன ஆர்டர் வந்துள்ளது என்று கூறுவதில் சிறிது தயக்கம். எங்கே ஆர்டர் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? பலர் தங்களுக்கு வரும் ஆர்டரை உண்மையான ஆர்டரா இல்லை போலியா என்று கூட பார்ப்பதில்லை. இதுவோ பல இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அவர் நேரடியாக வருவார், சரக்கை பார்த்து விட்டு சென்றுவிடுவார் (சரக்கு நன்றாக இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்கு). பின்னர் ஆர்டர் வரும். நீங்கள் சரக்குகளை அனுப்புவீர்கள், அவர் டாக்குமெண்டில் குறை கண்டுபிடித்து சரக்குகளை நிராகரித்து விடுவார். சரக்குகளை நிராகரித்து விடும் போது உங்களுக்கு பயம் வந்து விடும், ஆதலால் பெரிய தள்ளுபடிகள் கொடுத்து நீங்கள் மீதிப்பணத்தை பெறவேண்டி இருக்கும். இதற்காக தான் சொல்வது ஏற்றுமதியில் ஒவ்வொரு படியும் மிகவும் முக்கியம். அவசரப்படக்கூடாது. தமிழ்நாட்டில் ஏற்றுமதி டாக்குமெண்ட்கள் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. உங்களுக்கு எல்.சி. மற்றும் டாக்குமெண்ட்களில் சந்தேகம் வரும் போது உடனடியாக எங்களுக்கு மெயில் செய்யுங்கள், இலவசமான ஆலோசனைகளைப் பெறுங்கள். நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம் பத்திரமாக இருக்க இது உதவும்.


மீன்கள் ஏற்றுமதி

மீன்கள் ஏற்றுமதி ஆந்திரா சிறந்து விளங்கி வருகிறது. அங்கிருக்கும் விவசாயிகள் மீன்கள் வளர்ப்பதிலும், மார்க்கெட்டிங் செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் தற்போது சிறந்து விளங்கி வருகிறார்கள். நெல்லூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, சிரிகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இந்த தொழில் சிறந்து விளங்கி வருகிறது. மீன் வளர்ப்பது மட்டும் முக்கியம் அல்ல, அதற்கான கட்டமைப்பு வசதிகளும் தேவை. அதாவது ஐஸ்   பேக்டரிகள், பாக்கேஜிங் வசதிகள் போன்றவை. இவைகளையும் இவர்களே ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியம். தற்போது அமெரிக்கா, ஜப்பான், யூ.கே., ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

வெங்காயம்

வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ஒரு டன்னுக்கு 250 அமெரிக்க டாலர்கள் என்று குறைக்கப்பட்டுவுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு சிறிது டிமாண்ட் கூடியுள்ளது. நாசிக்கில் இருக்கும் யுனைடெட் பசிபிக் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி அதிக அளவில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

கேள்விக்கு என்ன பதில்

சுதர்சன்

கேள்வி
ஒ.இ.எம். என்றால் என்ன?
 பதில்
ஒ.இ.எம். என்றால் ஒரிஜினல் எக்யூவிப்மெண்ட் மெனுபெக்சரர் என்று அர்த்தம். அதாவது, நீங்கள் ஒரு கம்பெனி வைத்துள்ளீர்கள், ஏற்றுமதி செய்யப் போகும் பொருளை நீங்கள் தான் தயாரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தாம் ஒ.இ.எம். எனப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த கேள்வியை உங்களிடம் கேட்பார்கள். ஏனெனில் சரக்குகள் உங்களிடம் இருந்து தான் வருகிறதா, இல்லை வேறு யாரிடமாவது நீங்கள் வாங்கித் தருகிறீர்களா என்று தெரிந்து கொள்வதற்காகத் தான்.
ராமசாமி
திருப்பூர்


கேள்வி
எனக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை, டாலராகவே வங்கியில் வைத்துக் கொள்ள முடியுமா?

பதில்
தாராளமாக முடியும். ஈ.ஈ.எப்.சி., என்ற கணக்கின் கீழ், அதாவது எக்சேஞ் ஏனர்ஸ் பாரின் கரன்சி என்ற கணக்கில் வரும் வெளிநாட்டு பணத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாம். பிறகு வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த பணத்திற்கு வட்டி கிடைக்காது. வங்கியில் ஏற்றுமதிக்காக கடன்கள் வாங்கியிருந்தால் அதை முதலில் செலுத்த வேண்டும், மீதியைத் தான் இந்தக் கணக்கில் வைத்துக் கொள்ள இயலும்.

இந்த வார இணையதளம்
www.textrendsindiafair.com

டெல்லியில் ஜனவரி 19 முதல் 21 வரை பிரகதி மைதானில் நடக்கவிருக்கும் பெரிய கண்காட்சி இது. இதில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தபட்ட 1000 ஸ்டால்கள் இருக்கும். டெக்ஸ்டைல்ஸ் தவிர, கார்பெட், கைவினைபொருட்கள், சணல் பொருட்கள் ஹாண்ட்லூம், சில்க், பேஷன் ஜுவல்லரி,  ஆகியவையும் காட்சியில் இருக்கும். டெல்லியும் பார்த்தது போல இருக்கும், கண்காட்சியும் பார்த்தது போல இருக்கும்.

இந்த தொடர் சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com

Tuesday, December 13, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம், டாலரும் ரூபாயும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாசுமதி அரிசி, சைனா கண்காட்சி, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும் போட்டியும்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


டாலரும் ரூபாயும்
வாராவாரம் எழுத வேண்டிய அளவிற்கு முக்கியமான விஷயமாகி விட்டது டாலர் ரூபாய். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இழந்து கொண்டே இருக்கிறது. ஒரு நிலையில் 52.73 வரை சென்று ஏற்றுமதியாளர்களுக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டது. ஏன் ரூபாய் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டிருக்கிற சரிவை விட அதிகமாக பொருட்களின் விலையில் டிஸகவுண்ட் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான் கவலையான விஷயம்.


பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சிறிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு வென்சர் கேபிட்டல் உதவிகளும், வரி விலக்குகளும் வருங்காலத்தில் இருக்கும் என்று தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாக பெரிய அளவில் புட் பார்க்குகளும், குளிர்சாதன கிடங்குகளும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இந்த வசதிகள் இல்லாமல் பெரிய அளவில் செய்ய முடியாமல் இருக்கிறது. வருங்காலங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு குளிர்காலமாக இருக்கட்டும்.

பாசுமதி அரிசி
அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பாசுமதி அரிசியில் டிரைசைக்லாசோல் டிரேசஸ்  இருப்பதாக கண்டுபிடித்து அனுப்பப்பட்ட கண்டெய்னர்களில் 150 வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 டன்கள் அரிசி உள்ளது. ஆனால், குறைந்த அளவு டிரைசைக்லாசோல் இருப்பது துரு அண்டுவதை தடுக்கவும் உதவுகிறது எனவும், இதை அரிசி ஏற்றுமதி நாடுகள் பலவும் (தாய்லாந்து, ஜப்பான் போன்றவை) பயன்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது.

சைனா கண்காட்சி
மும்பையில் சமீபத்தில் நடந்த சைனா கண்காட்சியில் சைனாவை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நுகர்பொருள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. எலக்ட்ரானிக், செக்யூரிட்டி உபகரணங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், பரிசுப் பொருட்கள், கட்டுமானத்துறை பொருட்கள், பாத்ரூம் புராடக்ட்ஸ்  போன்றவை இருந்தன. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்தியாவின் மிகப்பெரிய கம்பெனிகள் இந்த கண்காட்சியை பார்க்கவும், வாங்கவும் மிகவும் ஆர்வம் காட்டின.

ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும், போட்டியும்
இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு போட்டி அருகில் உள்ள நாடுகளான பங்களாதேஷும், வியட்நாமும் தான். ஏனெனில் அங்கு லேபர் மிக மலிவாக இருப்பது தான். இதை சமாளிப்பது தான் தற்போது இந்தியாவிற்கு பெரிய தலைவலி. சைனா போன்று பெரிய அளவில் புரடெக்ஷன் செய்யவும் முடியாது, அதே நடுத்தர அளவில் செய்யும் போது மிஷன் மூலம் உற்பத்திகளை அதிகரிக்கலாம் என்றால் அது மூலதனத்தை அதிகப்படுத்துகிறது.


கேள்விக்கு என்ன பதில்?

ராமு
புதுக்கோட்டை
ஹோம் டெக்ஸ்டைல்ஸ்  என்றால் என்ன? அதில் என்னென்ன பொருட்கள் வரும்?

பதில்
ப்ளாங்கெட், திரைசீலைகள், பெட்ஷீட்டுக்கள், பில்லோ கவர்கள், டவல்கள், நாப்கின்கள், ரக், குவில்ட், சமையலறையில் உபயோகப்படுத்தப்படும் துணிவகைகள் போன்றவை அடங்கும்.
விவேக்
சென்னை 


கேள்விநாஸ்ட்ரோ, வாஸ்ட்ரோ அக்கவுண்ட் என்றால் என்ன?
 


பதில்

இந்திய வங்கி தான் வெளிநாட்டில் ஒரு வங்கியுடன் வைத்திருக்கும் அக்கவுண்டிற்கு பெயர் நாஸ்ட்ரோ அக்கவுண்ட் ஆகும். வெளிநாட்டில் இருக்கும் ஒரு வங்கி தன்னுடைய தேவைகளுக்காக இந்தியாவில் உள்ள ஒரு வங்கியுடன் வைத்திருக்கும் அக்கவுண்ட் வாஸ்ட்ரோ அக்கவுண்ட் ஆகும்.

இந்த வார இணையதளம்
www.fibre2fashion.com

இந்தியாவில் ஆயத்த ஆடைகள தயாரிப்பில் இருப்பவர்கள், துணி வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட மிஷினரி தயாரிப்பவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும் ஒரு சிறப்பான இணையதளம் இது. ஆயத்த ஆடைகள், துணி, லெதர், யார்ன், ஹேண்ட்லூம், ஹோம் டெக்ஸடைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில்  இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இணையதளம்.

அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com

Monday, December 5, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம், பூடான் நாட்டிற்கு ஏற்றுமதி, தங்கம், வைரம் ஏற்றுமதி, காட்டன் ஏற்றுமதி, 25 வகை தேன்

சென்ற வார ஏற்றுமதி உலகம் 21
சேதுராமன் சாத்தப்பன்


பூடான் நாட்டிற்கு ஏற்றுமதி

பூட்டான் போன்ற பக்கத்து நாடுகள் அவர்களுடைய தினசரி தேவைகளுக்கு கூட நம்மையே சார்ந்திருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பிரச்சனை. என்னவென்றால் தூரம் தான். கெல்கத்தாவிற்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து பெரும்பாலான பொருட்கள் சென்று விடுகின்றன. ஆனால், நீங்கள் ஒரு முறை சென்று வந்தால் அங்கு என்னென்ன பொருட்கள் விரும்பி வாங்கப்படுகின்றன, என்ன விலைக்கு விற்கிறார்கள். அதன் இந்திய மதிப்பு என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஏற்றுமதி செய்வதா வேண்டாமா என்று முடிவு எடுக்கலாம். அழகு பிரதெசம், குளிர் அதிகம், மக்கள் அங்கு ஆங்கிலம், இந்தி சரளமாக பேசுகின்றனர், பூடான் ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பிறகு சமம். இது போல நமக்கு சாதகமாக உள்ள இடங்கள் அந்தமான் (போர்ட்பிளயர்), மாலத்தீவுகள்  போன்றவை ஆகும். அங்கும் சென்று அழகையும் ரசித்து, வியாபரமும் செய்து வரலாம். மாலத் தீவுகளுக்கு செய்யப்படுவது ஏற்றுமதியாக கருதப்படும், ஆனால் அந்தமான் இந்தியாவின் பகுதியாக இருப்பதால் அங்கு விற்பது ஏற்றுமதியாக கருதப்படாது. ஆனால், அங்கு தமிழர்கள் அதிகம் இருப்பதால் வியாபார வாய்ப்புக்கள் அதிகம். அங்கு அருமையான மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. அங்கிருந்து மீன் முதலியவற்றை இறக்குமதி செய்யவும் முயற்சிக்கலாம்.


தங்கம், வைரம் ஏற்றுமதி


இந்தியா உலகத்தில் அதிக அளவில் தங்கம், வைரம் இறக்குமதி செய்பவர்கள். அப்படி இறக்குமதி செய்யும் தங்கம், வைரம் எல்லாம் இங்கே உபயோகப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. ஏனெனில் பெருமளவு அவை ஆபரணமாக செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  ஒரு மாதத்திற்கு கிட்டதட்ட 17000 முதல்18000 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள ஆபரணப் பொருட்களை ஏற்றும்தி செய்கிறோம். வாங்குபவர்கள் யார்? வளைகுடா நாடுகள், ஹாங்காங், அமெரிக்கா முக்கியமானவை. புதிய மார்க்கெட்டுக்கள் என்று எடுத்துக் கொண்டால் ரஷ்யா, சீனா, ஐரோப்பா ஆகும்.

பழங்கள், காய்கறிகள் இறக்குமதி


பழங்கள், காய்கறிகள் பாகிஸ் தானில் இருந்து வருடத்திற்கு 10000 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதியும் செய்கிறோம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை.
குறிப்பாக மாம்பழம் போன்றவைகளை இரண்டு நாடுகளும் கூட்டாக சேர்ந்து செய்தால் உலகளவில் நல்ல வாய்ப்புக்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் மாம்பழ சீசன் மார்ச் முதல் ஜுன் வரை உள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் ஜுன் முதல் அக்டோபர் வரை உள்ளது. கூட்டாக செய்யும் போது உலகளவில் 9 மாதங்களுக்கு மாம்பழம் விற்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கருதப்படுகிறது. இதிலாவது கூட்டாக இருக்கலாமே?


காட்டன் ஏற்றுமதி

காட்டன் ஏற்றுமதி வரும் வருடத்தில் 8 மில்லியன் பேல்களாக இருக்கும். இது இந்த வருட ஏற்றுமதியை விட 1 மில்லியன் பேல்கள் கூடுதலாக இருக்கும். இந்த கூடுதல் ஏற்றுமதி வாய்ப்புக்களுக்கு காரணம் சீனாவின் இறக்குமதி தான். ஒரு கிலோ ரூபாய் 170 வரை செல்கிறது.


25 வகை தேன்

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்  25 வகை தேன்கள் சமீபத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் நடந்த இண்டர்நேஷனல் டிரேட் பேரில் நாவற்பழ தேன், நெல்லிக்காய் மிட்டாய்கள் போன்றவற்றிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தது. ஏனெனில் உலகளவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் இந்தியாவில் இருக்கிறார்கள். அதற்கு நெல்லிக்காய், நாவற்பழம் போன்றவை அருமருந்தாகும்.

நாவற்பழ தேன் நாவற்பழ மரத்தில் தேன் கூடு வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் தேன் ஆகும். இது பற்றி அறிய விபிஸ நேச்சுரல் பீ பார்ம் என்ற கம்பெனியை தொடர்பு கொள்ளலாம்.



இந்த வார இணையதளம்http://www.ecgc.in/

உலகளவில் பல நாடுகளில் ஏற்றுமதி கியாரண்டி கார்ப்பரேஷன்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகமாகும். இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான பல உபயோகமான தகவல்கள் உள்ளது. புதிய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த கடன் உத்திரவாத கழகம் ஒரு வரப்பிரசாதமாகும்.



கேள்விக்கு என்ன பதில்?
ரவிக்குமார்
திண்டுக்கல


அய்யா என் பெயர் ரவிகுமார்   நான் திண்டுக்கல் லிருந்து மெயில் அனுப்புகிறேன். நான் ஏற்றுமதி செய்வதற்கு மிக ஆர்வமாக உள்ளேன், நான் கடந்த ஆண்டு IE CODE வாங்கிவிட்டேன். இறக்குமதியாளர்களை  கண்டு பிடிக்க பல வழிகளில்  முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எனது நோக்கம் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்து சிறந்த ஏற்றுமதியாளர் ஆக வேண்டும் . எனது ஊரை சுற்றி ஏற்றுமதி செய்வதற்கு நிறைய பொருட்கள் உள்ளன (ஒட்டன்சத்திரம்  -காய்கறிகள்  , சிறுமலை -பழங்கள் , நத்தம் -புளி, மாங்காய் , கரூர் -துணிகள் , நிலக்கோட்டை -பூக்கள் ). அகவே இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய  இறக்குமதியாளர்களை அறிந்து கொள்வதற்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பதில்

இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி:
1  உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வரவேற்பு இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.
2  அந்த நாட்டில் அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் சிறிய / பெரிய இறக்குமதியாளர்களை கண்டுபிடியுங்கள்.
3  இதற்கு அங்குள்ள எல்லோ பேஜஸ் / இணைய  தளங்கள் ஆகியவற்றை தொடர்பு கொண்டு வாங்குபவர் முகவரி கண்டுபிடியுங்கள். உங்கள் உறவினர் / நண்பர்களும் உதவலாம்.
4 பின் அவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
5 பின்னர் அந்த இறக்குமதியாளரை   பற்றி விசாரித்து ஏற்றுமதி செய்யுங்கள்.
6 சில பொருட்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள். நிறைய பொருட்களை எடுத்து கொள்ளாதீர்கள்


இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gamil.com

Sunday, November 27, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20, ஆர்கானிக், ஏமாற்று புராடக்ட்கள், சணல் பொருட்கள் ஏற்றுமதி, அக்டோபர் மாத ஏற்றுமதி, கேள்விக்கு என்ன பதில்?, இந்த வார இணையதளங்கள்

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20
சேதுராமன் சாத்தப்பன்



டாலர் ரூபாய் மதிப்பு 50ரூபாயை தாண்டி ஏற்றுமதியாளர்கள் மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. சென்ற வார நிகழ்வுகளை பார்ப்போம்.

கைவினைப்பொருட்கள்
நவம்பர் 14 முதல் 27ம் தேதி வரை டெல்லி பிரகதி மைதானில் இண்டர்நேஷனல் டிரேட் பேர் நடக்கவுள்ளது. அதை ஒட்டி கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியை கூட்டுவதற்காக கைவினைபொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகமும், தேசிய டிசைன் மற்றும் புராடக்ட் டெவலப்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஏற்றுமதியாளர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. இது இந்திய கைவினைப்பொருட்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் விளங்கும். க்ராப்ட் எக்ஸ்சேஞ் புரோகிராமும் நடைபெறவுள்ளது. அதாவது இந்தியாவில் ஒரு மாநிலத்தில், ஒரு கிளஸ்டரில்  உள்ள கைவினைஞர்கள் தங்கள் திறமைகளை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும். ஒருகிணைந்த விற்பனை முயற்சி, ஒருகிணைந்த மார்க்கெட்டிங் போன்றவைகளுக்கு அடித்தளங்கள் ஏற்பட இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும்.


ஆர்கானிக்
கர்நாடாகாவில் மட்டும் 76000 ஹெக்டேர்களுக்கு மேல் ஆர்கானிக் விவசாயம் நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆர்கானிக் பேரில் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 170 ஸ்டால்கள் பங்கு பெற்றன. இது தவிர இந்தியாவின் 12 மாநிலங்களும் பங்கு பெற்றன. ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிகம் வாய்ப்புக்கள் இருக்கிறது. ஜெர்மனி ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குகிறது. அதாவது 40 சதவீதம் பொருட்களை சீனா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வாங்குகிறது. இந்தியாவில் இருந்து 5 முதல் 6 சதவீதம் மட்டுமே வாங்குகிறது.



ஏமாற்று புராடக்ட்கள்

ஒரு பிராண்டட் புராடக்டைப் போலவே போலியான புராடக்ட்கள் தயாரித்து விற்பனை செய்பவர்களால் வருடத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் நஷ்டமாகிறது (சுமார் 25000 கோடி ரூபாய்கள்). இது கடத்தப்படுதல், வரி ஏமாற்றும், பிராண்ட் மோசடி, போலியான புராடக்ட்கள் என்று பல வழிகளில் நடக்கிறது. மருந்திலும் போலிகள் உலவுகிறது.


சணல் பொருட்கள் ஏற்றுமதி

சணல் வாரியம் சிறிய மற்றும் நடுத்தர  தயாரிப்பாளர்களுக்கும், சிறிய குழுக்களுக்கும் சணல் பொருட்கள் தயாரிப்பில் பயிற்சி அளிக்கிறது சணல் வாரியம். பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பல இடங்களில் சணல் பைகளுக்கும், பேப்பர் பைகளுக்கும் நல்ல தேவை இருக்கிறது. இந்த வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 14000 கோடி ரூபாய்களுக்கு சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த வருடம் 15000 கோடி ரூபாய்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சணல் வாரியம் பல இடங்களில் பொருட்காட்சிகள் நடத்துகிறது. அங்கு ஸ்டால்களில் தங்களது தயாரிப்புக்களை வைப்பதற்கு சிறிய தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக இடம் வழங்கப்படுகிறது

அக்டோபர் மாத ஏற்றுமதி

ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி குறைவது கவலையளிக்ககூடிய விஷயம் தான். இந்த வருட அக்டோபர் மாத இந்திய ஏற்றுமதி, சென்ற வருட அக்டோபர் மாத ஏற்றுமதியை விட 10 சதவீதம் மட்டுமே கூடியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற வளர்ச்சி 80 சதவீதத்திற்கு மேல் இருந்தது. இரும்பு தாது ஏற்றுமதி தடை செய்யப்பட்டதும் ஒரு காரணம். அக்டோபர் மாதம் 19.9 பில்லியன் டாலர் அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு வருடத்தில் மிகவும் குறைந்த அளவாகும்.

கேள்விக்கு என்ன பதில்?
கேள்வி

சென்ற வார கேள்வியை தொடர்ந்து, ஏற்றுமதி பணம் டிமாண்ட் டிராப்டாக அல்லது செக்காக வரும் போது என்ன ரேட் தருவார்கள் வங்கியில் என்று பலர் கேட்டுள்ளார்கள். நல்ல கேள்வி.

பதில்

ஏற்றுமதிக்கு பணம் சாதாரணமாக வங்கி மூலம் டி.டி. (டெலிகிராபிக் டிரான்ஸ்பர்) ஆகத்தான் வரும். டிமாண்ட் டிராப்ட் அல்லது செக்காக வரும் பட்சத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அது போலியாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே, அந்த டிமாண்ட் டிராப்ட் அல்லது செக் மாறி உங்கள் அக்கவுண்டில் பணமாக வரும் வரை சரக்குகளை ஏற்றி அனுப்பி விட வேண்டாம். அப்படி பணமாக மாறி உங்கள் அக்கவுண்ட்க்கு வரும் பட்சத்தில் உங்களுக்கு டி.டி. பையிங் (அதாவது டெலிகிராபிக் டிரான்ஸ்பர் பையிங்) என்ற ரேட்டே கிடைக்கும்.



இந்த வார இணையதளங்கள்
நிறைய பேர் இந்திய அளவில் நடக்கும் டிரேட் பேர் பற்றிய தகவல்கள் கேட்பதால் அது சம்பந்தமான இணையதளங்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

அக்ரி டெக்னாலஜி பொருட்காட்சி, டெல்லி, டிசம்பர் 8 முதல் 10 வரை
http://www.eimaagrimach.in/

தேசிய மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அரசாங்கம் நடத்தும் நேஷனல் எக்ஸ்போ, டிசம்பர் 16 முதல் 18 வரை, ஆக்ரா. http://www.dcmsme.gov.in/  . மேலும்  விபரங்களுக்கு dcdi-agra@dcmsme.gov.in என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

தேசிய பிளாஸ்டிக் கண்காட்சி, பிப்ரவர் 1 முதல் 6 வரை, 2012, டெல்லியில். 1600க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்குபெறவுள்ளார்கள். 40 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள். விபரங்களுக்கு http://www.plastindia.org/

இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் sethuraman.sathappan@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.

Monday, November 21, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 19,உலகத்தில் ஏற்றுமதியில் உயர்ந்து நிற்கும் நாடுகள் (டாலர் மதிப்பில்),செப்டம்பர் மாத இந்திய ஏற்றுமதி,உலகத்தின் நம்பர் ஒன் பால் உற்பத்தியாளர் இந்தியா

சென்ற வார ஏற்றுமதி உலகம் 19
சேதுராமன் சாத்தப்பன்



அமெரிக்க டாலர் ரூபாய் மதிப்பு மேலும் கீழுமாக ஏறி இறங்கியது.  சென்ற வாரம் ஏற்றுமதி உலகம் சுழன்ற வேகமும் அப்படித்தான் இருந்தது. நிகழ்வுகளை காண்போம்.

உலகத்தில் ஏற்றுமதியில் உயர்ந்து நிற்கும் நாடுகள் (டாலர் மதிப்பில்)
ஐரோப்பிய நாடுகள்                   1952,000,000,000
சீனா                                                   1581,000,000,000
டச்சுலாந்து                                     1303,000,000,000
அமெரிக்கா                                     1289,000,000,000
ஜப்பான்                                              765,000,000,000
பிரான்ஸ                                           517,300,000,000
நெதர்லாந்து                                     485,900,000,000
தென் கொரியா                               448,400,000,000
இத்தாலி                                             448,400,000,000
யு.ஏ.ஈ.                                                  410,300,000,000
ரஷ்யா                                                 400,100,000,000
கனடா                                                  392,700,000,000
ஹாங்காங்                                        388,600,000,000
சிங்கப்பூர்                                            358,400,000,000
மெக்சிகோ                                          298,500,000,000
பெல்ஜியம்                                          284,200,000,000
ஸபெயின்                                           253,000,000,000
இந்தியா                                               245,900,000,௦௦000௦

இந்தியா 245 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிற்கு கீழேயும் பல நாடுகள் உள்ளது. இந்தியாவிற்கு மேலே உள்ள நாடுகள் கொடுக்கப்படவில்லை. இது சென்ற வருட மதிப்பு. நம்மை விட சிறிய நாடான சிங்கப்பூர் நம்மை விட அதிகம் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நறுமண பொருட்கள் ஏற்றுமதி
2025ம் வருடத்தில் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி 50000 கோடி ரூபாய்க்கு
2025ம் வருடத்தில், இன்னும் 14 வருடத்தில் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி மட்டும் 50000 கோடி ரூபாய்க்கு செய்ய இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய டாலர் மதிப்பில் 10 பில்லியன் டாலர் மதிப்பிற்கு. இது 2010-11ம் வருடத்தில் 6840 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தியா 175 வகை நறுமணப் பொருட்களை 160க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


செப்டம்பர் மாத இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் செப்டம்பர் மாத ஏற்றுமதி 36.3 சதவீதம் கூடி அமெரிக்க டாலர் மதிப்பில் 24.8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இதற்கு முந்தைய இரண்டு மாதங்களில் இந்த சதவீத விகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், செப்டம்பரில் குறைந்துள்ளது.  ஐரோப்பா, மேற்கு ஆசிய நாடுகளி ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைகள் தாம் இதற்கு காரணம். சிரியா நாட்டிற்கு நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பினால், இசிசிஜி ஏற்றுமதி இன்சூரன்ஸ அளிக்கும் போது பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கீரிஸ, துனிஷிய, யெமன், எகிப்து போன்ற நாடுகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். கிரீஸ, சிரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி அளவு 2010-11 ஆண்டில் பாதியாக குறைந்துள்ளது.


உலகத்தின் நம்பர் ஒன் பால் உற்பத்தியாளர் இந்தியா

பால் உற்பத்தி இந்தியாவின் பல கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமானத்தையும், அதே சமயம் கிராமப்புற குழந்தைகளுக்கு, மக்களுக்கு சக்தியான உணவையும் அளிக்கிறது. இந்தியா உலகத்தின் நம்பர் 1 பால் உற்பத்தியாளராக இருக்கிறது. உலகத்தின் மொத்த உற்பத்தியில் 13 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.  அதே சமயம் பால் பொருட்கள் ஏற்றுமதியில் இன்னும் அதிகம் நாம் கவனம் செலுத்தவில்லை. அரசாங்கம் பல சலுகைகள் அளித்தாலும், இன்னும் ஏற்றுமதியில் பின் தங்கி உள்ளோம்.. கிராமப்புறத்தில் அல்லது நகர்புற எல்லையில் பலர் சேர்ந்து செய்ய, நல்ல வருமானம் ஈட்டும் தொழில் இது.

கேள்விக்கு என்ன பதில்?

ராஜராஜன்
கரூர்

கேள்வி

ஆங்கில பேப்பர்களில் அமெரிக்க டாலரின் மதிப்பை போடும் போது பல மாதிரி குறிப்பிடுகின்றனர். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. எந்த ரேட் நமக்கு கிடைக்கும்?


பதில்:
ஏற்றுமதி செய்து பணத்தை நீங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு டி.டி. பையிங் என்ற ரேட் வழங்கப்படும். அதாவது உங்களுக்கு டெலிகிராப் டிரான்ஸபராக (டி.டி) வந்துள்ள டாலரை அவர்கள் (பையிங்) செய்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். இது தவிர பில் பையிங் என்று ஒன்று இருக்கும். அதாவது நீங்கள் ஏற்றுமதி டாக்குமெண்டை சமர்பிக்கும் போதே வங்கியில் டிஸகவுண்ட் செய்து பணத்தை கேட்டால் அப்போது பில் பையிங் ரேட் அப்ளை செய்வார்கள். உங்கள் ஏற்றுமதி பணம் கரன்சியாக உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு கரன்சி பையிங் ரேட் அப்ளை செய்வார்கள்.


இந்த வார இணையதளம்www.fnbnews.கம

உணவு பதப்படுத்துதல், குளிர்பானங்கள், பால் பொருட்கள், விவசாயம், நொறுக்கு தீனிகள், பழங்கள், காய்கறிகள், கடலுணவு, இறைச்சி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள், நறுமணப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியற்றைப் பற்றி தற்போதைய செய்திகளையும், தேவையான தகவல்களையும் கொண்டுள்ளது. மிகவும் உபயோகமான இணையதளம். இந்திய தகவல்கள் நிறைய உள்ளது ஒரு முக்கியமான அம்சம்.

இந்த தொடர் பற்றிய உங்கள் கருத்துக்களையும்,  கேள்விகளையும்  sethuraman.sathappan@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.

Wednesday, November 16, 2011

இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி

அய்யா என் பெயர் ரவிகுமார்   நான் திண்டுக்கல் லிருந்து மெயில் அனுப்புகிறேன். நான் ஏற்றுமதி செய்வதற்கு மிக ஆர்வமாக உள்ளேன், நான் கடந்த ஆண்டு IE CODE வாங்கிவிட்டேன். இறக்குமதி  யாளர் கலை கண்டு பிடிக்க பல வழிகளில்  முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். எனது நோக்கம் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்து சிறந்த ஏற்றுமதியாளர் ஆக வேண்டும் . எனது ஊரை சுற்றி ஏற்றுமதி செய்வதற்கு நிறைய பொருட்கள் உள்ளன (ஒட்டன்சத்திரம்  -காய்கறிகள்  , சிறுமலை -பழங்கள் , நத்தம் -புளி, மாங்காய் , கரூர் -துணிகள் , நிலக்கோட்டை -பூக்கள் ). அகவே இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய  இறக்குமதி  யாளர் கலை அறிந்து கொள்வதற்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .  நன்றி ரவிக்குமார் ,திண்டுக்கல் .


பதில்:

இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி:

1  உங்கள் பொருட்களுக்கு எந்த நாட்டில் வரவேற்பு இருக்கிறது என்று கண்டு பிடியுங்கள்.
2  அந்த நாட்டில் அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் சிறிய / பெரிய இறக்குமதியாளர்களை கண்டுபிடியுங்கள்.
3  இதற்கு அங்குள்ள எல்லோ பேஜஸ் / இணைய  தளங்கள் ஆகியவற்றை தொடர்பு கொண்டு வாங்குபவர் முகவரி கண்டுபிடியுங்கள். உங்கள் உறவினர் / நண்பர்களும் உதவலாம்.
4 பின் அவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.
5 பின்னர் அந்த இறக்குமதியாளரை   பற்றி விசாரித்து ஏற்றுமதி செய்யுங்கள்.
6 சில பொருட்களை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள். நிறைய பொருட்களை எடுத்து கொள்ளாதீர்கள்

அன்புடன்
சேதுராமன் சாத்தப்பன்

Tuesday, November 15, 2011

முருங்கக்காய்

அய்யா வணக்கம்,
எனக்கு கனடாவில் உள்ளவர் முருங்கக்காய் வேண்டும் என்று கேட்டு உள்ளார். நான் ஏஜெண்ட் மூலமாக ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன் , உடன் இது பற்றிய தகவல்களை தெருவிக்கும்படி கேட்டு கொள்கிறேன் .

         நன்றி!                                                                                          இப்படிக்கு,
                                                                                                                 ச.சுந்தர்.

====================
உங்களுக்கு ஏஜென்ட் தேவை இல்லை. நீங்களே ஏற்றுமதி செய்யலாம். ஆர்டர் எடுத்து தர தான் ஏஜென்ட் தேவை. ஏற்றுமதி செய்ய தேவை இல்லை. உங்களால் இந்த ஆர்டரை ஏற்றுமதி செய்ய இயலவில்லை என்றல் இன்னொருவருக்கு மாற்றி கொடுக்கலாம். அதற்கான கமிஷன்யை நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
வாழ்த்துகளுடன்
சேதுராமன் சாத்தப்பன்
===========================

Sunday, November 13, 2011

சென்ற வாரம் ஏற்றுமதி உலகம் - 18, சிவகாசி வெடி, காய்கறிகள் ஏற்றுமதி, எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?, கார்பெட் ஏற்றுமதி, சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி, தஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


சிவகாசி வெடி
இந்திய அளவில் சிவகாசி என்றாலே பட்டாசு தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற சிவகாசி பட்டாசு ஏற்றுமதியில் இன்னும் பெரிய அளவு வளரவில்லை. பல தடைகள் அவர்களுக்கு இருந்தாலும், தொடர்ந்து அவர்கள் விற்பனை கூடிக்கொண்டு தான் இருக்கிறது. ஏற்றுமதிக்கு இன்னும் விலை போட்டியாக இருக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் சீனாவுடன் போட்டி போடும் அளவிற்கு விலை வைக்க வேண்டும், மிஷனரி மூலமாக வெடி தயாரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். சீனா தான் இதிலும் நமது நாட்டிற்கு போட்டியாக உள்ளது.


காய்கறிகள் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து காய்கறிகள் நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதில்லை. அருகிலுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதியாகிறது. மத்திய கிழக்கு நாடுகள், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நோபாள், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.
 

எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?
பலர் பல சமயத்தில் கேட்கும் கேள்வி இது. அந்நிய செலாவணி விஷயங்களை கையாளும் வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைப்பதே உத்தமமானது. கூட்டுறவு வங்கிகளில் சில வங்கிகளில் தான் அந்நிய செலாவணி விஷயங்களை கையாளுவார்கள். அதே சமயம், எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வைக்கலாம்.



கார்பெட் ஏற்றுமதி
உலகளவில் இந்திய கார்பெட்களுக்கும் நல்ல மவுசு இருக்கிறது. விலை சகாயமாகவும் இருப்பதாலும், வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாகவும் இருப்பதாலும் இவை விரும்பப்படுகின்றன. இதன் ஏற்றுமதியை கூட்டுவதற்கென்றே ஒரு ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் இருக்கின்றது. தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகின்ற நாடுகளை தவிர மற்ற நாடுகளிலும் தற்போது மார்க்கெட்டிங் செய்ய இந்த கழகம் உதவி வருகிறது. குறிப்பாக பிரேசில், துபாய், சைனா, ஜப்பான், சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மிகவும் நுணுக்கமான பட்டுப்புடவைகள் நெய்பவர்கள் இருந்தாலும், கார்பெட் நெய்யும் கலை இன்னும் வரவில்லை. இது ஒரு குறைதான். தமிழ்நாட்டின் சீதோஷண நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.



சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி
சிட்பி சிறுதொழில் செய்பவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய பலவகைகளில் உதவுகிறது. வர்த்தக கண்காட்சிகளில் பங்குபெறவும், அது உள்நாட்டு கண்காட்சியாகவும் இருந்தாலும் சரி, வெளிநாட்டு கண்காட்சியாக இருந்தாலும் சரி. மேலும், வாங்குபவர், விற்பவர் இடையே நடக்கும் மீட்களில் கலந்து கொள்ளவும் இன்னும் பல வழிகளிலும் உதவுகிறது. சிட்பி வங்கியை தொடர்பு கொண்டு அவர்களின் உதவிகளை பெற முயலுங்கள்.



கேள்விக்கு என்ன பதில்?

கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்

கேள்விதஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்இந்திய ஓவியங்களுக்கு, குறிப்பாக தஞ்சாவூர் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், நல்ல முறையில் இந்த வகை ஓவியங்கள் மார்க்கெட்டிங் செய்யப்படவில்லை. அது தான் குறை. இந்த வகை ஓவியர்களை அல்லது விற்பவர்களை ஒருங்கிணைத்து ஏற்றுமதி முயற்சிகள் செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எல்லா வழிகாட்டுதலும் இந்த பகுதி மூலம் கிடைக்கும். மேலும், பத்தமடை, தைக்கால் போன்ற இடங்களில் பாய் நெய்பவர்கள் போன்று ஒரு இடத்தில் / ஒரு ஊரில் இருந்து சிறப்பான கலையை பரப்பி வருபவர்களுக்கு ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கேள்வி
கலையரசி
மேட்டூர்
2011-12ம் ஆண்டு 300பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு இருக்கிறது? அதற்கு முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு ஏற்றுமதி செய்திருக்கிறோம்?

பதில்2009-10ம் ஆண்டில் 178 பில்லியன் டாலர்களும், 2010-11ம் ஆண்டில் 246பில்லியன் டாலர்களும் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த ஆண்டு 300பில்லியன் டாலர்கள் கிட்டே நெருங்க வாய்ப்புக்கள் மிகவும் அதிகம்.
 


சென்ற வார இணையதளம்www.international.gc.ca

கனடாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விரும்புபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய உபயோகமான அரசாங்க இணையதளம். இதில் கனடாவைப் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர பல நாடுகளைப் பற்றியும் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.


தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Monday, November 7, 2011

சென்ற வர ஏற்றுமதி உலகம் 17

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


சென்ற வார ஏற்றுமதி இறக்குமதி உலகத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடந்துள்ளது என்று பார்ப்போம். பெரிய நிகழ்வு என்று பார்த்தால் ரூபாய் மதிப்பு கீழே விழுந்தது தான். கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு 50க்கும் கீழே சென்று முடிவடைந்தது.

டாலரும், ரூபாயும்
ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் இவை. அதே சமயம் இந்தியா இறக்குமதியையும் அதிகம் சார்ந்துள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவை பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டில் மற்ற பொருட்களின் விலை கூடும் வாய்ப்புக்கள் உள்ளது.


பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி

பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனையை விட ஏற்றுமதி கூடுதல்
கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. பஜாஜ் ஆட்டோவின் த்ரி வீலர், அதாங்க நம்ம ஆட்டோ அதிகம் ஓடுவது இந்தியாவில் தான் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்தியாவில் விற்பனையாகும் ஆட்டோக்களை விட அதிக அளவில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவைகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் ஹமாரா பஜாஜ் என்ற வாசகத்தை பார்க்கும் போது உள்ளம் உண்மையாகவே துடிக்கிறது.


ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை

ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை, அதாவது கிளஸ்டர் முறை மிகுந்த பயனளிக்கும் என்று எக்சிம் பாங்கின் தலைவர் டிசிஏ ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகமாக கிடைக்கும் பொருட்களை வைத்தோ அல்லது அதிகமான தொழில் செய்பவர்களை வைத்தோ ஒருங்கிணைந்து பெரிய அளவில் உற்பத்தியை கூட்டி செய்யும் போது உற்பத்தி செலவுகள் குறையும். அது நமக்கு ஏற்றுமதியில் உலகளவில் மற்ற நாடுகளின் விலையுடன் போட்டி போட இயலும். மேலும் இது போன்ற முயற்சிகளுக்கு அரசாங்க ஆதரவுகளும் உள்ளன என்றார்.

இந்திய பர்மா உறவுகள்இந்திய பர்மா உறவுகள் நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பேர்கள் குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவுக்கு சென்று அந்த நாட்டையே வளப்படுத்தி விட்டு நிர்கதியாக எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தார்கள். தற்போது அங்கு சூழ்நிலைகள் சரிவர வந்து கொண்டிருக்கிறது. இந்திய பர்மா உறவுகளும் நன்கு இருக்கிறது. அங்கு விவசாயம், எரிசக்தி ஆகிய துறைகளில் இந்திய முதலீடு செய்ய நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிய வருகிறது.

 டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சிசென்ற வாரம் நடைபெற்ற இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, இந்திய கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு சுமார் 900 கோடி அளவு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுத் தந்துள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதியை பெருக்க கட்டாயம் இது போன்ற கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். புதிய ஏற்றுமதியாளர்கள் இது போன்ற கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் சென்று பார்த்து வரவேண்டும். அப்போது தான் எப்படிப்பட்ட பொருட்கள் தயாரிக்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள், எப்படி ஸ்டால் டிஸ்ப்ளே செய்கிறார்கள் போன்ற ஐடியாக்கள் கிடைக்கும்.

பின்னலாடைகள் ஏற்றுமதி
உலகளவில் பின்னலாடைகள் ஏற்றுமதியில் சீனா தான் முன்னணியில் இருக்கிறது. 53.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டி சர்ட்கள் உற்பத்தியில் உலகளவில் பங்களாதேஷ் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிற்கு மூன்றாவது இடம் தான். தொழிலாளர்கள் பிரச்சனை, சாயப்பட்டறை பிரச்சனை போன்றவை நம்மை பின்னுக்கு தள்ளி வருகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பலர் பங்களாதேஷ் சென்று அங்கு தொழிற்சாலைகள் நிறுவி வருகின்றனர்.

பஹாமஸ்  தந்த பயம்
பஹாமஸ்  நாட்டுக்கு ஏற்றுமதிகள் கூடிவருவதால் அது வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர ஒரு வழியா என்று எல்லோரும் பயந்தனர். அதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹாமசுக்கு ஏற்றுமதி 2 பில்லியன் டாலர் தான் இருந்தது. அது சென்ற வருடம் 4 பில்லியன் டாலராக உயர்ந்ததை கண்டு எல்லோரும் பயந்தனர். பின்னர் அது இந்தியாவிலிருந்து ஆயில் ஏற்றுமதி 88 சதவீதம் கூடியுள்ளது என்று கண்டுபிடித்து ஆறுதல் அடைந்தனர். எங்கு ஓவர்  இன்வாசியிங் நடைபெறுகிறதோ என்ற பயம் தான் காரணம்.



கண்ணபிரான்
சேலம்


கேள்வி

சேலத்திலிருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்கள் என்னென்ன?

பதில்

சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. சேலத்தில் இருந்து காட்டன் துணிகள், கொலுசுகள், எவர்சில்வர் பாத்திரங்கள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் அது சார்ந்த பொருட்கள், மூலிகைகள் போன்றவைகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால், சேலம் ஈரோடில் உள்ளவர்கள் நேரடி ஏற்றுமதியில் ஈடுபடாமல், ஏற்றுமதி செய்பவர்களுக்கு சப்ளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சேலம், ஈரோடு இரு இடங்களிலும் தினமலர் சார்பாக ஏற்றுமதி செய்யலாம் போன்ற கருத்தரங்கள் நடத்தி பலரை ஊக்குவித்தும் இருக்கிறோம்.


இந்த வார இணையதளம்

www.kompass.com

உலகளவிலுள்ள பி டு பி இணையதளம். அதாவது பிசினஸ்  டு பிசினஸ் இணையதளம். உலகத்தின் சிறந்த கம்பெனியால் நடத்தப்படும் இணையதளம். நல்ல பல பயனுள்ள செய்திகளும் அடங்கியுள்ளது. சென்று பாருங்கள். மெம்பராக சேரும் பட்சத்தில் பல நல்ல லீட்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி
sethuraman.sathappan@gmail.com.

Monday, October 31, 2011

ஏற்றுமதி உலகம் 16

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



ஏற்றுமதி இறக்குமதி உலகத்தை வாரா வாரம் வேறு எந்த இணையதளமும் தொட்டதாக தெரியவில்லை. அந்தப் பெருமை உங்கள் இணையதளத்தையே சாரும் என்று வரும் கடிதங்கள் மகிழ்ச்சிப்படுத்துகின்றன. சென்ற வார ஏற்றுமதி உலகத்தை பார்ப்போம்.


டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி

2300 கலைஞர்கள், 950 பொருட்கள் என களைகட்டியது டெல்லியில் சமீபத்தில் நடந்த கைவினைப்பொருட்கள் கண்காட்சி. இதில் முக்கிய அம்சம் வெளிநாட்டை சேர்ந்த 5000 பார்வையாளர்கள் கலந்துகொண்டது தான். இது இந்திய கைவினைப்பொருட்களுக்கு உலகளவில் உள்ள மதிப்பை காட்டுகிறது. இந்த கண்காட்சி வர்த்தக நோக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற முறையில் நடந்தது. இது போன்ற கண்காட்சியில் கலந்து கொள்வது உங்களுக்கு நல்லது, நிறைய ஐடியா கிடைக்கும்.


பே பால் மூலமாக ஏற்றுமதி பணம்

இதுவரை ஈகாமர்ஸ்  இணையதளங்களின் மூலம் விற்கும் போது 500 டாலர் வரையே பே பால் மூலமாக பெறமுடியும் என்ற தடை இருந்தது. அதாவது 500 டாலருக்கு மேல் இ பே போன்ற இணையதளங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பொருட்களுக்கு பணம் பே பால் மூலமாக வாங்க முடியாது என்று இருந்ததை, தற்போது 3000 டாலராக ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.


புளி ஏற்றுமதி

முன்பெல்லாம் ஒரு கிராமத்தையும், இன்னொரு கிராமத்தையும் இணைக்கும் ரோட்டின் இருபுறங்களிலும் புளிய மரங்களை தான் நடுவார்கள். நிழலுக்கும் நிழல், வருமானத்துக்கும் வருமானம், மண் அரிப்பையும் தடுக்கும், அதிக நீரும் தேவையில்லை, நீண்டகாலம் பயன்தரும். கடந்த 22 மாதத்தில் புளி விலை மூன்று மடங்காக கூடியுள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதி டிமாண்ட் அதிகரித்தது, உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. கடந்த வருடத்தில் 17500 டன் புளி ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மதிப்பு 80 கோடி ரூபாய்கள் ஆகும். நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பங்களாதேஷ், பாகிஸதான், மலேஷியா, வளைகுடா நாடுகள். காலியாக இருக்கும் இடத்தில் புளியமரம் வளர்க்கலாமே?


ஜீரா ஏற்றுமதி

இந்திய ஜீரா விலை உலகளவில் மற்ற நாடுகளை வைத்துப் பார்க்கும் போது குறைவாக இருக்கிறது. அதாவது இந்திய ஜீரா ஒரு டன்னுக்கு3200 டாலருக்கு விற்கப்படுகிறது. அதே சமயம் சிரியா, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஜீரா 3450, 3500 டாலர் ஒரு டன்னுக்கு விலை கூறப்படுகிறது. ஆதலால், இந்திய ஜீராவிற்கு மதிப்பு கூடி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுவதில்லை. அதிகளவில் ராஜஸதான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது.


செப்டம்பர் மாத ஏற்றுமதி

இந்த செப்டம்பர் மாத ஏற்றுமதி சென்ற வருடம் செப்டம்பர் மாத ஏற்றுமதியை விட 36     சதவீதம் கூடி 24.8     பில்லியன் டாலர் மதிப்பிற்கு (        121,520 கோடி ரூபாய் மதிப்பிற்கு) ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை என்று எடுத்துக் கொண்டால் 52 சதவீதம் அதிகமாக செய்துள்ளோம். அதுவும் ஒரு மாதத்தில் 82 சதவீதம் அதிகமாக செய்துள்ளோம். இந்த அளவு ஏற்றம் ஒரு மாதத்தில் சீனாவில் கூட இருந்ததில்லை. இந்த முழு வருடத்திற்கும் 300 பில்லியன் டாலர் ஆக உள்ள ஏற்றுமதி அளவை எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் சாப்ட்வேர் ஏற்றுமதி கணக்கில் இல்லை (அதாவது சர்வீசஸ ஏற்றுமதி). 


ஏற்றுமதி புள்ளி விபரங்கள் தவறா?

அரசாங்கம் கொடுக்கும் ஏற்றுமதி புள்ளி விபரங்களும், ஒவ்வொரும் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி ஆகும் சரக்குகளின் மதிப்பையும் கூட்டி பார்க்கும் போது அவை இரண்டும் சரிசமமாக வரவில்லை. அரசாங்கம் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் அதிகமாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. புள்ளி விபரங்கள் சரிவர தரப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இது சரி செய்யப்பட வேண்டும்.


வெளிநாட்டு வர்த்தக கொள்கை

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தியமைக்கப்பட்டு கடந்த வாரம் வெளியானது. அதில் ஏற்றுமதியாளர்களுக்கு 900 கோடி ரூபாய்கள் வரை சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனிகளுக்கு செய்யப்படும் அப்பாரல் ஏற்றுமதிகளுக்கு 2 சதவீதம் ஏற்றுமதி மதிப்பில் கிடைக்கும். சில ஏற்றுமதி பொருட்களுக்கு 2 சதவீதம் சரக்குக் கட்டணத்தில் திருப்பி அளிக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது சரக்குக் கட்டணத்தில் 1 சதவீதம் திருப்பி அளிக்கப்படும் போன்றவை முக்கியமானவை ஆகும்.


கேள்விக்கு என்ன பதில்?

சேகர்
ஈரோடு
கேள்வி

ஏற்றுமதி சரக்குகளை விமானம், கப்பல் மூலமாக தான் அனுப்ப முடியுமா? லாரி, டிரக் வழியாக அனுப்ப இயலாதா?

பதில்
ஏற்றுமதி சரக்குகளை தாராளமாக லாரி, டிரக் ஏன் போட் மூலமாக கூட அனுப்ப இயலும். ஏற்றுமதி செய்யப்படும் நாட்டிற்கும், இறக்குமதி செய்யப்படும் நாட்டிற்கும் இடையே தரை வழி இருந்தால் லாரி, டிரக் மூலமாக சரக்குகள் அனுப்பப்படலாம். உதாரணமாக இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு சரக்குகள் லாரி, டிரக் வழியாக நிறைய அனுப்பப்படுகிறது. இது போல ஐரோப்பிய நாடுகளுக்குள் தரை வழி போக்குவரத்து அதிகமாக உள்ளது. சில சமயம் கப்பல் மூலம் சரக்குகள் அனுப்பும் போது செலவுகள் அதிகமாக இருக்கும். ஆதலால், சரக்குகள் போட் மூலமாக அனுப்பப்படும். உதாரணமாக பாகிஸதான் நாட்டிலிருந்து துபாய் போன்ற இடங்களுக்கு போட் மூலம் சரக்குகள் அனுப்பப்படுகின்றன.


இந்த வார இணையதளம்

http://www.e-tendering.com/

ஆசிய அளவில் வெளிவரும் ஈ-டெண்டர்கள் எல்லாவற்றையும் தொகுத்து தரும் இணையதளம். குறிப்பாக ஹாங்காங், சைனா, ஜப்பான் போன்ற நாடுகளின் நிறுவனங்கள் வழங்கும் ஈ-டெண்டர்கள் இதில் இருக்கும். பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இலவச ட்ரையல் மற்றும் டெமோ வசதியுள்ளது.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Monday, October 24, 2011

ஏற்றுமதி உலகம் 15

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

உலகளவில் பங்குச் சந்தைகள் பரபரத்துக் கொண்டிருந்தாலும், தங்கம், வெள்ளி ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும், இந்திய ஏற்றுமதி உலகம் ஒரு சீரான இயக்கத்திலேயே இருக்கிறது. ஆகஸட் மாத இந்திய ஏற்றுமதியும் இதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.


டெக்னிகல் டெக்ஸடைல்ஸ்

சாதாரண டெக்ஸ்டைல்சை விட டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். அந்தத் துறையில் நாம் முன்னேறி வருகிறோம். இந்தத் துறைக்கு அரசாங்க உதவிகளும் கிடைத்து வருகின்றன. இந்த துறை 2016-17 வருடத்தில் 31.4 பில்லியன் அளவிற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அதாவது கிட்டதட்ட 152,000 கோடி ரூபாய்கள் மதிப்புள்ளதாக இந்த துறை இருக்கும்). டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  துறையில் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமோடிவ் டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ டெக்ஸ்டைல்ஸ், தீயனைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகள், புல்லட் புரூப் உடைகள், விண்வெளி வீரர்களின் உடைகள் போன்றவையும் அடங்கும். இதற்காக சமீபத்தில் மும்பையில் ஒரு உலகளவிலான கண்காட்சி நடந்தது குறிப்பிடதக்கது.




நறுமன பொருட்களின் ஏற்றுஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நறுமன பொருட்களின் ஏற்றுமதி 23 சதவீதம் (சென்ற வருடம் இதே காலத்தை விட) குறைந்தது. காரணம் என்ன தெரியுமா? சைனாவிற்கு மிளகாய் ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைந்தது தான். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் நறுமணப் பொருட்களில் மிகவும் முக்கியமானது மிளகாய். சென்ற வருடம் 255000 டன்கள் ஏற்றுமதி செய்திருந்தோம், ஆனால் தற்போது 195000 டன்னாக இது குறைந்திருந்தது. இது தவிர கொத்துமல்லி, ஜீரா ஏற்றுமதிகளும் குறைந்திருந்தன. அதே சமயம் ஏலக்காய், மிளகு போன்றவைகளின் ஏற்றுமதி கூடியிருந்தது






இந்திய கடலுணவு பொருட்கள் சீனாவிற்கு
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரச்சனைகள் தலைக்தூக்கி இருக்கும் சமயத்தில் இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருட்கள் அதிக அளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு நல்ல செய்தியாகும். சீன இறக்குமதியாளர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க விரும்புகின்றனர். இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருடக்ள் இறக்குமதி செய்வதில் தற்போது சீனா முன்னணி  வகிக்கும் அளவிற்கு முன்னேறி வருகிறது. கிட்டதட்ட 15 சதவீத ஏற்றுமதி சீனாவிற்கு நடைபெறுகிறது. தாய்லாந்தில் வெள்ளத்தால் அதிக கடலுணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால் இந்திய ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புக்கள் கூடி வருகிறது. இந்தியாவில் குஜராத்திலிருந்து தான் அதிகளவு ஏற்றுமதி கடலுணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் டிமாண்ட் குறைந்து வருகிறது.


தாய்லாந்தும், அரிசி ஏற்றுமதியும்
தாய்லாந்து நாடு அரிசி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது எல்லோரும் அறிந்ததே. அந்த நாட்டு அரசாங்கம் விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக தற்போதைய நெல் விலையில் 50 சதவீதம் கூடுதலாக கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. இதனால் வெளிவியாபாரிகளும் அவ்வாறு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, வெளிநாட்டு விலைகளுக்கு ஏற்ப விற்க இயலுவதில்லை. ஆதலால், அங்கு ஏற்றுமதி குறையும் அபாயம் உள்ளது. நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.


திருப்பூர் ஏற்றுமதி
சாதரணமாக திருப்பூர் நகரின் ஏற்றுமதி வருடத்திர்கு சுமார் 18000 கோடி ரூபாய் அளவில் இருக்கும். தற்போது நிலவி வரும் டையிங் யூனிட் பிரச்சனைகளால் அங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த வருட ஏற்றுமதி 11500 முதல் 12000 கோடி ரூபாய் வரை தான் இருக்கும் என கூறப்படுகிறது. சாயப்பிரச்சனை சுமூகமாக தீர்ந்து ஏற்றுமதி கூடினால் அது திருப்பூருக்கும் நன்மை, இந்திய ஏற்றுமதிக்கும் நன்மை.


கேள்விக்கு என்ன பதில்?
துரை
திருச்சி

கேள்வி

பில் ஆப் லேடிங் என்றால் என்ன?
பதில்

பில் ஆப் லேடிங் என்பது கப்பல் சரக்கு ரசீது என தமிழில் அழைக்கப்படும். அதாவது ஏற்றுமதி சரக்குகளை கப்பல் மூலமாக அனுப்பும் போது கொடுக்கப்படும் ரசீது ஆகும். இது ஏற்றுமதியில் மிகவும் முக்கியமான டாக்குமெண்டாகும்.து சாதாரணமாக 3 ஒரிஜனலாக கொடுக்கப்படும். இதில் நீங்கள் ஏற்றி அனுப்பும் சரக்குகளின் முழு விபரமும் இருக்கும். வாங்குபவர் விலாசம், விற்பரின் விலாசம், ஏற்றி அனுப்பப்படும் தேதி, என்ன சரக்கு அனுப்பப்பட்டுள்ளது, சரக்கின் எடை, எங்கிருந்து எங்கு வரை அனுப்பப்பட்டுள்ளது, சரக்குக்கட்டணம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா?, ஏற்றி அனுப்பிய தேதி, கப்பலின் பெயர் போன்ற விபரங்கள் அடங்கியிருக்கும். இது ஒரு நெகோஷியபுள் இண்ஸ்ட்ருமெண்டாகும். அதாவது, அதை வைத்திருப்பவர் கையெழுத்திட்டு வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.


இந்த வார இணையதளம்www.eudict.com
பல சமயங்களில் குறிப்பிட்ட சில மொழிகளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் நமக்கு பிடிபடாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் என்றால் டிக்ஷ்னரி எடுத்து பார்த்து விடலாம். ஆனால், வேறு மொழிகள் என்றால் கடினம். இதற்காகவே இந்த இணையதளம் இருக்கிறது. 30 மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவுகிறது. அது போல ஆங்கிலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஜெர்மன் மொழியில் இருந்து தமிழுக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. மிகவும் உபயோகமான ஒரு இணையதளம். அதிகமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொழிகளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க உதவும்.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

Monday, October 17, 2011

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு, அம்ரஸ் சாப்பிடலியா அம்ரஸ், ஷாநாஸ் ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?, கயிறு ஏற்றுமதி, வெங்காயம் தானே?. கேள்விக்கு என்ன பதில்?, இந்த வார இணையதளம்

சென்ற வார ஏற்றுமதி உலகம்

ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு
சென்ற வருடம் இதே சமயங்களை வைத்துப் பார்க்கும் போது, ஏப்ரல் முதல் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து கொண்டே தான் வருகிறது. ஏப்ரல் மற்றும மே மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்த உயர்வு இருந்தது. ஜுன் மாதம் 46 சதவீதமாக இருந்தது. இந்த ஜுலை மாதம், சென்ற வருட ஜுலை மாதத்தை விட 82 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் சுமார் 40 சதவீதம் கூடுதலாக இருக்கிறது. ஜுலை மாதத்தை வைத்துப் பார்க்கும் போது ஆகஸ்ட் குறைவாக இருக்கிறது. இருந்தாலும், இந்தியாவின் ஜி.டி.பி.க்கு ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் கைகொடுக்கிறது. இதனால் தான் உலகளவில் பாதிப்புக்கள் ஏற்படும் போது இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் பலருக்கு தோன்றுகிறது.
 

அம்ரஸ்  சாப்பிடலியா அம்ரஸ்
பதப்படுத்தப்பட்ட கெட்டியான மாம்பழ சாறு தான் அம்ரஸ் என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற இந்த மாம்பழச் சாறு, மாம்பழ சீசனில் அதிகம் கிடைக்கும். ஆனால், இனி இதை வருடம் முழுவதும் பிராண்டட் டெட்ரா பாக் அல்லது பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய திட்டுமிட்டுள்ளது பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்களான வாடிலால் கம்பெனி. இது தவிர ஜெயின் இரிகேஷன், சூரத்தை சேர்ந்த விமல் அக்ரோ சர்வீசஸ்  ஆகிய கம்பெனிகளும் இந்த சந்தையில் நுழைய உள்ளன. வாடிலால் “கார்டன் பிரஷ்” என்ற பெயரிலும், ஜெயின் இரிகேஷன் “பார்ம் பிரஷ்” என்ற பெயரிலும், விமல் அக்ரோ “சுவாத்” என்ற பெயரிலும் மார்க்கெட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளன. மாம்பழம் விற்க விரும்பும் கிருஷ்ணகிரிக்காரர்கள் இவர்களை அணுகலாமே? இல்லை அவர்களே ஒரு பிராண்ட்டின் பெயரில் தயாரித்து மார்க்கெட்டிங் செய்யலாமே? வாருங்கள் ஏற்றுமதி செய்வோம்.


ஷாநாஸ்  ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?
ஷாநாஸ்  ஹுசைன் இந்தியாவின் மிகப்பெரிய தொடர் பியூட்டி பார்லர்களின் உரிமையாளர் ஆவார். இவர் ஷாநாஸ்  ஹெர்பல்ஸ்  என்ற பெயரில் ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இது தவிர இவரின் தயாரிப்புக்கள் உள்நாட்டிலும் சக்கை போடு போடுகின்றன. இவரின் பிராண்டின் தற்போதைய மதிப்பு சுமார் 450 கோடி ரூபாய்களாகும். ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்ய நினைப்பவர்கள் இவர்களையோ அல்லது டாபர், சாரக், சென்னையை சேர்ந்த முருகப்பா குரூப்ஸ், ஹிமாலயா ட்ரக்ஸ்  போன்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களுடைய ஆயுர்வேத மூலிகைகள் போன்றவை தரமானவையாக இருந்தால் வாங்கும் வாய்ப்புக்கள் உண்டு.


கயிறு ஏற்றுமதி

கயிறு மற்றும் கயிறு சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவில் பெண்களின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கிறது. ஏனெனில் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்கள் பெண்கள் தாம். இதன் மூலம் செய்யப்படும் பொருட்கள் சுற்றுபுற சுழல் கெடாமல் இருக்கவும் உதவுகிறது. 12வது திட்ட காலத்தில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு இது சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் தானே?

வெங்காயம் தானே என்று அரசாங்கம் சும்மா இருக்காமல் மறுபடி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஏன்? வெங்காய விலைகள் தாறுமாறாக ஏறி வருகின்றன. ஒவ்வொரு முறை வெங்காயம் விலை ஏறும் போது அரசாங்கத்தின் நாடித்துடிப்பும் ஏறிவருகிறது. ஆதலால் வேறு வழியில்லாமல் ஏற்றுமதியை தடை செய்து விடுகிறார்கள். ஏற்றுமதிக்கு ஆர்டர் வாங்கி வைத்திருந்தவர்கள் பாடும் சிறிது திண்டாட்டம் தான். வெங்காயம் போன்ற பொருட்களுக்கு ஏற்றுமதி காண்டிராக்ட் போடும் போதே அரசாங்கத்தின் மூலம் தடைகள் வருமானால் அதனால் இந்த காண்டிராக்ட் கேன்சல் செய்யப்படுமானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று போட்டுக் கொள்வது நல்லது. அது உங்களுக்கு பிரச்சனைகளை குறைக்க உதவும்.


கேள்விக்கு என்ன பதில்?
ராமராஜ்
கரூர்

கேள்வி:
ஆண்டி டம்பிங் டுயூட்டி என்றால் என்ன?
பதில்
ஒரு நாட்டுக்கு தேவையில்லாத பொருட்களை அந்த நாட்டுக்குள் கொண்டு வந்து கொட்டி அதனால் அந்த பொருளின் உள்நாட்டு விலையை குறைப்பார்களேயானால், அப்படி உள்ளே நுழையும் பொருட்களுக்கு ஆண்டி டம்பிங் டுயூட்டி விதிக்கப்படும். இது அந்த பொருளின் வாங்கும் விலையை கூட்டுவதனால், அந்தப் பொருளை இறக்குமதி செய்ய மாட்டார்கள்.

இந்த வார இணையதளம்http://www.bidline.com/

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் தினசரி தங்கள் தேவைகளுக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு இருக்கின்றன. அவையெல்லாம் தற்போது ஈடெண்டர் என்ற முறைப்படியே கொடுக்கப்படுகின்றன. உலகத்தில் வெளியிடப்பெறும் டெண்டர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அவற்றை ஒரு இணையதளம் மூலமாக அளிக்கிறார்கள். கட்டண இணையதளமாக இருந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் உள்ளது. பலர் சேர்ந்து இதன் மூலம் காண்டிராக்ட்கள் பெறுவார்களேயானால் அது மிகவும் பயனளிக்கும்.

தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, October 10, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் - 13

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


கூடிவரும் ஏற்றுமதி
சென்ற வருடம் ஜுலை மாதத்தை விட இந்த ஜுலையில் ஏற்றுமதி சுமார் 82 சதவீதம் கூடியிருக்கிறது. குறிப்பாக பார்த்தால் இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஏற்றுமதி கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ஏப்ரல், மே, ஜுன் மாத ஏற்றுமதி அளவை வைத்துப் பார்த்தால் அது இந்திய ஜி.டி.பி.யில் 25 சதவீதம் இருக்கிறது.


வெற்றிலை ஏற்றுமதி
இந்தியா உலகளவில் 20 நாடுகளுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்து வருகிறது. பாகிஸதான், ஔமன், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ, கென்யா, ஹாங்காங், சவுதி, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் இதில் அடங்கும். 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை  1656 டன்கள் வெற்றிலை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 50000 ஹெக்டேர் அளவில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. மேற்கு வங்களாத்தில் இருந்து தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடகா வருகிறது. கும்பகோணம் என்றதும் டிகிரி காப்பியும், வெற்றிலையும் தான் ஞாபகம் வருகிறது. ஏற்றுமதி செய்பவர்கள் இருந்தால் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன்
ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன் தான் மிகவும் கஷ்டமானது. அதாவது, பொருளை தயாரிப்பதற்கு நீங்கள் எவ்வளவு கவனம் கொடுக்கிறீர்களோ அவ்வளவு கவனம் எல்.சி. மூலம் செய்யப்படும் ஏற்றுமதி டாக்குமெண்டேஷனுக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் உங்கள் டாக்குமெண்டேஷன் கவலையை விட்டுவிடுங்கள். உங்களுக்காக இந்த பகுதி உதவக் காத்திருக்கிறது. ஏற்றுமதி டாக்குமெண்டேஷனில் உலகளவில் அனுபவம் வாய்ந்த சேதுராமன் சாத்தப்பன் உங்களுடைய டாக்குமெண்டேஷன்களை சரிபார்த்து தருவார்.

அரிசி ஏற்றுமதி
அரசாங்கம் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு தடைகள் ஏதும் விதிக்கவில்லை. அதே சமயம் பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதிக்கு முன்பு தடை இருந்தது. தற்போது கட்டுபாடுகள் உள்ளது. அதாவது பொன்னி அரிசி தலா 50000 டன்கள் விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலமாகவும், தலா 25000 டன்கள் தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்கள் மூலமாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர முன்பு 20,25 கிலோ பாக்கிங் கூட ஏற்றுமதி செய்ய அனுமதி இருந்தது. தற்போது அது 10 கிலோ அல்லது அதற்கு கீழே உள்ள பாக்கிங்களில் தான் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டுபாடு இருப்பதால் அது ஏற்றுமதி விலையை வேறு கூட்டி விடுகிறது. இதனால் மற்ற நாடுகளுடன் விலையில் போட்டி போட இயலாமல் போய்விடுகிறது. இதை அரசாங்கத்திடம் எடுத்து சென்றுள்ளார்கள் தென்னிந்திய அரிசி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள். தற்போது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு இருப்பதால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறதா என்று பார்ப்போம்.

லெதர் ஏற்றுமதி
இந்தியா கிட்டதட்ட 18 நாடுகளுக்கு லெதர் மற்றும் லெதர் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் அதிகமாக ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் செல்கிறது. உலகளவில் லெதர் பொருட்கள் தயாரிப்பில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடம் சீனாவிற்கு தான். இந்தியாவில் லெதர் உற்பத்தியில் சென்னை, வேலூர் மாவட்டம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மும்பை வந்து பாருங்கள். தாரவியில் உள்ள லெதர் பொருட்கள் கடைகளில் பெரும்பாலும் தமிழர்களே வைத்துள்ளார்கள்.


பங்களாதேஷ் வழியாக இந்திய ஏற்றுமதி
இந்திய அப்பாரல் ஏற்றுமதியாளர்கள் துணிகளை பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்து அங்கு ஆயத்த ஆடைகளை தயார் செய்து அங்கிருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இது ஏன் என்றால் அங்கு லேபர் மலிவாக கிடைப்பதால் தான். இங்குள்ளவர்கள் கடினமாக உழைக்க ரெடியாக இருந்தால் இங்கேயே செய்யலாமே? தொழிலாளி, முதலாளி என்று இருவரும் யோசிக்க வேண்டிய நேரம் இது.


கேள்விக்கு என்ன பதில்?
அரசன்
திருத்துறைப்பூண்டி

கேள்வி: ஏற்றுமதி செய்ய பான் நம்பர் தேவையா? பான் நம்பர் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டுமா?
பதில்: பலரும் கேட்கும் கேள்வி இது. ஏற்றுமதி செய்ய பான் நம்பர் தேவையில்லை என்றாலும், ஐ.ஈ.சி. கோடு நம்பர் வாங்குவதற்கு கட்டாயம் பான் நம்பர் தேவை. பான் நம்பர் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருமான வரி கட்டும் அளவு வருமானம் இருந்தால் கட்டாயம் வருமான வரி கட்ட வேண்டும். அந்த அளவைத் தாண்டாவிட்டாலும் பான் நம்பர் இருப்பதனால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் தவறானது.

உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய முகவரி sethuraman.sathappan@gmail.com

Monday, October 3, 2011

ஏற்றுமதி உலகம் - 12

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



மாதுளம்பழம் ஏற்றுமதி
இந்தியா உலகத்தில் அதிகமாக பழங்கள் உற்பத்தி செய்தாலும் அதன் ஏற்றுமதியில் சிறக்கவில்லை. இந்தியாவின் முன்னனி பழங்கள் ஏற்றுமதியாளர்களான கேபி எக்ஸ்போர்ட்ஸ் தற்போது கேப் சர்ட்டிபைட் மாதுளம்பழங்களை தங்களது அகமதாபாத் தோட்டத்திலிருந்து விளைவித்து ஏற்றுமதி செய்கிறார்கள். விளைச்சலில் குறைந்த அளவு பூச்சி மருந்துகள் உபயோகித்து விளைவிக்கிறார்கள். வருடத்திற்கு 2000 டன்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சோயா மீல்மாதத்திற்கு சுமார் 150,000 டன்கள் சோயா மீல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகமாக இந்தூரிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோயா மீல் அதிகமாக தீவனங்களில் கலப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது

ஹெ.எஸ். கோடுஒரு பொருளுக்கு இந்தியாவில் ஒரு பெயர் இருக்கும். அதே பொருளுக்கு மற்ற நாட்டில் வேறு பெயர் இருக்கும். இந்தக் குழப்பத்தை தவிர்ப்பதற்காக தான் ஹெ.எஸ். கோடு கொண்டுவரப்பெற்றது. அதாவது, ஹார்மனைஸ்டு கோடு எனப்படும். இது கிட்டதட்ட 11000 பொருட்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நம்பர் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பரை குறிப்பிடும் போது இரு நாட்டவரும் தாம் வாங்கும் பொருள், விற்கும் பொருள் சரியானது தானா என்று சரிபார்த்துக் கொள்ள உதவும். இது புத்தகமாகவும் கிடைக்கிறது. பல இணையத்தளங்களிலும் எளிதாக இந்த கோடுகளை காணலாம்.


இந்தியாவின் ஏற்றுமதிஏப்ரல் முதல் ஜுன் வரை மூன்று மாதங்களில் 108 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். சென்ற வருடம் முழுவதும் 246 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இந்த வருட டார்கெட் 300 பில்லியன் டாலர்களாகும். முதல் மூன்று மாதத்திலேயே 108 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்துவிட்டதால் 300 பில்லியன் டாலர் அளவை இந்த வருடம் எட்டிவிட முடியும் என அரசாங்கம் கருதுகிறது.


முந்திரிப்பருப்பு2009-10 வருடத்தில் இந்தியாவிலிருந்து 117453 டன்கள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2797 கோடி ரூபாய்கள் ஆகும். இந்த வருடம் 2010-11 வருடம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 67792 டன்கள் 1920 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் பண்ருட்டி, கன்யாகுமரி மாவட்டங்களில் பல இடங்கள், கேரளாவில் கொல்லம் ஆகிய இடங்கள் முந்திரி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சென்று பார்த்தால் உங்களுக்கும் இதன் ஏற்றுமதி பற்றி ஆர்வம் வரும். முந்திரி ஏற்றுமதி வாரியம், முந்திரி ஏற்றுமதிக்கு உதவும் வகையில் பல திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளத்தின் ஏற்றுமதி, இறக்குமதிநேபாளம் வருடத்திற்கு 6000 கோடி ரூபாய்கள் தாம் ஏற்றுமதி செய்கிறது. அதே சமயம் இறக்குமதி அதற்கு 6 மடங்கு இருக்கிறது. அதாவது கிட்டதட்ட 36000 கோடி ரூபாய்கள். நேபாளம் நாடு நமக்கு அருகில் இருப்பதால் இந்திய பொருட்களுக்கு அந்த நாட்டிலும், அருகில் உள்ள பூட்டான் போன்ற நாட்டிலும் மவுசு அதிகம். நேபாளத்திலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்
உல்லன் கார்பெட், கார்மெண்ட், பருப்பு வகைகள், டெக்ஸ்டைல்ஸ், பாலியஸ்டர் மற்றும் யார்ன். இது தவிர மற்ற எல்லா பொருட்களுக்கும் இந்தியாவிலிருந்து நிறைய ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருக்கிறது.

என்னனென்ன கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன?ஆர்ட் மெட்டல் பொருட்கள், மர வேலைப்பாடு பொருட்கள், கையால் பிரிண்ட் செய்யப்பட்ட டெக்ஸ்டைல்ஸ், ஸ்கார்ப், எம்பிராய்டட் துணிகள், ஷால், ஜரி மற்றும் ஜரி வேலைப்பாடு உள்ள துணிகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. மாதத்திற்கு 700 கோடி ரூபாய்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இந்த வார இணையதளம்இணையதளங்கள் உங்களது ஏற்றுமதிக்கு மிகவும் இன்றியமையாதது.
http://www.singaporefva.com/ சிங்கப்பூர் பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணையதளம். 1948ல் 18 மெம்பர்களுடன் துவங்கப்பட்ட இந்த சங்கம் தற்போது மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது. இதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன. நிச்சியம் உங்களுக்கு உபயோகமான இணையதளம்.


கேள்விக்கு என்ன பதில்?
ஜவஹர், சீர்காழி
கேள்வி
ஏற்றுமதியை ஏஜெண்ட் மூலமாக செய்யும் போது அவருக்கு கமிஷன் கொடுக்க இயலுமா? அவர் வெளிநாட்டில் இருக்கிறார், ஆகவே வெளிநாட்டிற்கு பணத்தை அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?
பதில்
ஏற்றுமதி வணிகத்தில் நாமே ஆர்டர் பிடிப்பது என்பது சிறிது கடினமான ஒன்று தான். ஆதலால் ஏஜெண்ட்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்கள் வாங்கிக் கொடுக்கும் ஆர்டர்களுக்கு கமிஷன் நீங்கள் வெளிநாட்டுப் பணமாக அனுப்பலாம். இதை ரிசர்வ் வங்கி அனுமதியளிக்கிறது. முன்பு இத்தனை சதவிகிதம் தான் கமிஷன் அனுப்பலாம் என்று இருந்ததை தற்போது எடுத்து விட்டார்கள். எத்தனை சதவீதம் கமிஷன் வேண்டுமானாலும் வங்கி முலமாக அனுப்பலாம்.


துரை, வேலூர்
கேள்வி
ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதுண்டா?
பதில்:
நல்ல கேள்வி. பொதுவாக ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், சில பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்யும் விதமாக ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்தியாவிற்கே தேவையாக இருக்கிறது, அதே சமயம் அதன் ஏற்றுமதியை தடை செய்யாமல் குறைக்க வரி விதிக்கப்படும். அப்படி வரி விதிக்கப்படும் சமயத்தில் அந்தப் பொருளின் விலை அதிகமாவதால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வேறு நாடுகளிலிருந்து அந்தப் பொருளை வாங்கிக் கொள்வார்கள். இதன் மூலம் அந்தப் பொருளின் ஏற்றுமதி குறையும் வாய்ப்புக்கள் உள்ளது.

உங்களது கேள்விகளையும், கருத்துக்களையும் எழுதி அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Sunday, September 4, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 12

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி
கைவினைப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி ஆவது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் தாம். தற்போது அந்த நாடுகளில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளதால் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும். 2008ம் வருடம் இதே போல ஒரு சந்தர்ப்பத்தை இந்தியா சந்தித்தது. அப்போது கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்தது.
தற்போதும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எப்படி சரிக்கட்டுவது? இந்திய அளவில் கைவினைப் பொருட்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது கணவன் மனைவி ஆகிய இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பதாலும்,  வீடுகளை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் அதிகமாகியுள்ளதாலும் இந்திய அளவில் கைவினைப்பொருட்களுக்கும் மவுசு கூடியுள்ளது.


ரூபாயில் ஏற்றுமதி வர்த்தகம்
டாலர் ரூபாயில் அதிக அளவு ஏற்றத் தாழ்வுகள் தினசரி இருப்பதால், ஏற்றுமதியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது இன்வாய்ஸ்களை ரூபாயில் செய்யலாமா என்று யோசித்து வருகிறார்கள், ரூபாய் வர்த்தகத்திற்கு மாறியும் வருகிறார்கள்.
இது எப்படி நடக்கிறது? முன்பு 44000 ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு அமெரிக்க டாலர் 44 ரூபாய் மதிப்பு என்று எடுத்துக் கொண்டு 1000 அமெரிக்க டாலர் அந்த இறக்குமதியாளரிடம் இருந்து வரவேண்டும் என்று கணக்கிட்டு இன்வாய்ஸ் செய்வீர்கள். அவரிடம் இருந்து அப்படி 1000 டாலர் வரும் பட்சத்தில், நீங்கள் பார்வார்டு காண்டிராக்ட் போடாத பட்சத்தில் அன்றைய தினத்தில் டாலருக்கு 44 ரூபாய் கிடைத்தால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைத்ததாக அர்த்தம். அதே சமயம் அன்றைய தினம் டாலர் 42 ரூபாய் என்று இருந்தால் உங்கள் ஏற்றுமதியில் 2000 ரூபாய் நஷ்டம் என்று அர்த்தம். அன்றைய தினம் டாலர் 47 ரூபாய் என்று இருந்தால் உங்கள் ஏற்றுமதியில் மேலும் 2000 ரூபாய் லாபம் என்று அர்த்தம். அதே சமயம் நீங்கள் ரூபாயில் 44000 என்று இன்வாய்ஸ்  செய்தால் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர் 44000 உங்களுக்கு அனுப்பிவிடுவார். உங்களுக்கு எந்த லாப நஷ்டமும் இருக்காது. டாலரின் லாப நஷ்டங்கள் அவரை சேர்ந்தது. ஆனால், உங்களின் இறக்குமதியாளர் இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் இந்திய அரசாங்கத்தின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை இதை அனுமதியளித்துள்ளது. பெரிய பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் இதை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
டாலரும், ரூபாயும்
ஒரு டாலர் தற்போது 45 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இன்னும் 6 மாதத்தில் ரூபாய் இன்னும் வலுவடைந்து விடும் எனவும், ஒரு டாலர் 40 முதல் 41 ரூபாய் வரை வந்து விடுமெனவும் எதிர்பார்க்கிறார்கள் கரன்சி டிரேடர்கள். ஏற்றுமதியாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. உங்களின் ஏற்றுமதிக்கு பார்வட் காண்டிராக்ட் போடுவதே தற்போது சிறந்த வழி ஆகும்.

வாழைப்பழமும், ஏற்றுமதியும்
இந்தியா வருடத்திற்கு 27 மில்லியன் டன்கள் (அதாவது 27,00,00,00,000 கிலோக்கள்) வாழைப்பழங்கள் உற்பத்தி செய்தாலும் அதில் 0.1 சதவீதம் தான் ஏற்றுமதி செய்து வருகிறோம். மீதம் 99.99 சதவீதம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தபப்டுகிறது. இதில் பல மில்லியன் டன்கள் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகிப்போகிறது, அதாவது அழுகி விடுகிறது. பல சமயங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் போதே அழுகி விடுகிறது. இதை தவிர்க்க குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களை பலரும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது பழங்களை 50 நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க உதவுகிறது. இதனால் வருங்காலத்தில் ஏற்றுமதி அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளது.
சரியான குளிர்சாதன வசதி கிடங்குகள் இல்லாததால் இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 30000 கோடி மதிப்புள்ள உணவுப்பொருடகள் வீணாகுகின்றன.

மூலிகை பொருட்கள் ஏற்றுமதி
இந்திய மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய்கள் என்ற அளவில் இருக்கிறது. இதில் 200 கோடி ரூபாய்கள் அளவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. இது தவிர இந்திய மூலிகைப் பொருட்களை அதிகம் வாங்கும் நாடுகள் பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, அயர்லாந்து, யூகே, ஆஸ்ஸதிரேலியா, பங்களாதேஷ், வியட்நாம், மலேஷியா ஆகிய நாடுகள் ஆகும். 500 கோடி ரூபாய்கள் என்பது மூலிகைகள் அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் சிறிய தொகை தான். இந்த துறையில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது.


கேள்வி பதில்
அன்பரசன், கோவை
கேள்வி: எனக்கு வந்த எல்.சி.யை வேறு ஒரு நபருக்கு மாற்றிக் கொடுக்க முடியுமா? அப்படியெனில் நான் அவரிடமிருந்து கமிஷன் வாங்கிக் கொள்ள முடியுமா?
பதில்தாராளமாக நீங்கள் உங்களுக்கு வந்த எல்.சி.யை வேறு ஒரு நபருக்கு மாற்றி கொடுக்க முடியும். இதை யூசிபி600ன் விதி 38 அனுமதியளிக்கிறது. எல்.சி.யை அப்படியே மாற்றி கொடுக்கும் பட்சத்தில், ஏற்றுமதியை நீங்கள் யாருக்கு மாற்றிக் கொடுக்கிறீர்களோ அவர் செய்வார். அப்படி மாற்றி கொடுக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து நீங்கள் கமிஷனும் தனியாக பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது எல்.சி. உள்ள விலை, சரக்கின் அளவு, ஏற்றுமதி செய்யப்படவேண்டிய காலம், டாக்குமெண்ட் சமர்பிக்கவேண்டிய காலம் ஆகியவைகளை குறைத்து (இதில் எல்லாம் அல்லது ஒன்றிரண்டு) அவருக்கு நீங்கள் எல்.சி.யை கொடுக்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு டாக்குமெண்ட்களை அனுப்புவார். நீங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.  மாற்றிக் கொடுப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால், நீங்கள் மாற்றிக் கொடுக்கப்போகும் நபர் சரக்குகளை நன்கு தயாரிப்பவராக இருக்க வேண்டும். இல்லாவிடில் உங்கள் பெயர் கெட்டு விடும்.


ரகுராமன்
திருச்சி
கேள்வி:
மருத்துவத்துறையில் ஆயுஸ் (Ayush) என்றால் என்ன?
பதில்: ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய பெயர்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை வைத்து தான் ஆயுஸ் என அழைக்கப்படுகிறது. அதாவது அலோபதி அல்லாத முக்கிய மருத்துவ துறைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.


உங்களது கேள்விகளையும், கருத்துக்களையும் எழுதி அனுப்ப வேண்டிய
ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Sunday, August 28, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம்11

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

 

வளமான ஏற்றுமதி

ஒரு சினிமா பல வாரங்கள் தொடர்ந்து ஓடினால் வெற்றிகரமான 10வது வாரம், 20வது வாரம் என்று போஸ்டர் அடிப்பார்கள். அது போல போஸ்டர் அடிக்க வேண்டிய தருணம் இது. இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து பல மாதங்களாக சென்ற வருடம் இதே கால ஏற்றுமதியை விட உயர்ந்து செல்கிறது. ஜுலை மாத ஏற்றுமதியும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்ற வருட இதே கால ஏற்றுமதியை விட 82 சதவீதம் கூடுதலாக உள்ளது. அதிகமான எஞ்சினியரிங், பெட்ரோலியம் பொருட்கள், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், வைரம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதி இந்த உயர்வுக்கு காரணமாக இருந்தது.

ஆனால், இந்த கனவு ஓட்டம் தொடர்ந்து இருக்குமா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அமெரிக்க, ஐரோப்பிய பிரச்சனைகள் இந்தியாவின் ஏற்றுமதி வரும் மாதங்களில் குறைக்கும்.

டெக்ஸ்டைல்ஸ்  மற்றும் ஆயத்த ஆடைகள்

டெக்ஸ்டைல்ஸ்  இண்டஸ்டிரியை மூன்றாக பிரிக்கலாம், காட்டன் யார்ன், மேன்மேட் பைபர்ஸ்  (எம்.எம்.எப்), ரெடிமேட் கார்மெண்ட்ஸ்  என்று. இதில் காட்டன் யார்ன் மற்றும் ரெடிமேட் கார்மெண்ட்ஸ்  இண்டஸ்டிரி பெரிய கம்பெனிகள் 5 சதவீதம் மார்க்கெட்டை தங்கள் வசம் வைத்துள்ளன. ப்ரோவோக், கேவல் கிரான் கிளாதிங், ஜோடியாக், மதுராம் கார்மெண்ட்ஸ்  போன்றவை ரெடிமேட் கார்மெண்ட்சிலும், வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ், டிரைடெண்ட் லிமிடெட், நாகர் ஸ்பின்னிங் மில், கேபிஆர் மில் லிமெடெட் ஆகியவை காட்டன் யார்ன் இண்டஸ்டிரியிலும் முன்னணியில் இருக்கின்றன.

மேன்மேட் பைபர் இண்டஸ்டிரியில் ரிலையன்ஸ்  இண்டஸ்டிரீஸ், இந்தோ ரமா, பாம்பே டையிங்,  ஜேபிஎப் போன்றவையும், விஸ்கோஸ்  இழையில் கிராசிம், ஆதித்ய பிர்லா நுவோ, செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், கேசோரோம் போன்ற கம்பெனிகளும் முன்னணி வகிக்கின்றன. ஏன் இவ்வளவையும் கூறியுள்ளோம் என்றால், தொழிலில் யார் சிறப்பாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். மேலும், உங்கள் தயாரிப்புக்களையும் அவர்களிடம் சந்தைப்படுத்தவும் உதவும்.
டெக்ஸ்டைல்சுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஜுலை 12 முதல் விதித்திருந்த வாட் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி.


ஏலக்காய்

அதிகமான் உற்பத்தி ஏலக்காயை மொத்த விலை ஒரு கிலோ 600 ரூபாய் என்ற அளவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்கிறார்கள். சென்ற வருடம் இதே சமயத்தை விட 5 மடங்கு வரத்து அதிகமாகியுள்ளது. பொதுவாக உலகளவில் கமாடிட்டி விலைகள் குறைந்து வருகின்றன. ஆதலால் அதிகமாக ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டாம். விலைகள் குறைய வாய்ப்புக்கள் உள்ளது.


வாருங்கள் ஒமனுக்கு ஏற்றுமதி செய்யலாம்
இந்திய ஒமன் வர்த்தகம் சென்ற வருடம் 4.5 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது சுமார் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முன்பெல்லாம் ஒமனுக்கு ஏற்றுமதி என்றால் உணவுப் பொருட்கள் மட்டும் தான் நடைபெற்று வந்தது. தற்போது இது தவிர மெஷினரி, எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், கன்சல்டன்சி, டிரெயினிங் ஆகியவையும் அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது. 
இது தவிர இந்தியா பாசுமதி அல்லாத அரிசியை வருடத்திற்கு 10000 டன்கள் ஏற்றுமதி செய்ய ஒத்துக் கொண்டுள்ளது.

ஆர்கானிக் பொருட்கள்

உலகளவில் ஆர்கானிக் பொருட்களுக்கு உள்ள மவுசு கூடிக் கொண்டெ போகிறது. காரணம் ஆர்கானிக் பொருட்களுக்கு கிடைக்கும் விலை கூடுதலாக இருப்பது தான். ஆனால் இந்தியாவிலிருந்து 86 ஆர்கானிக் பொருட்களே ஏற்றுமதி செய்யபடுகிறது. இதன் மொத்த மதிப்பு 450 கோடி ரூபாய் வரை தான். பீகாரில் ஆர்கானிக் விவசாயத்திற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு இதற்கான முயற்சிகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. இது அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடும் விவசாய பல்கலைகழகத்துடன் இணைந்து இது போல முயற்சிகளில்  ஈடுபட்டால் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் உயரும், ஏற்றுமதியும் உயரும்.
மாவட்டம் தோறும் ஏற்றுமதி மையங்கள்

ஏற்றுமதியில் பலரும் தமிழ்நாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், சரியான வழிகாட்டிகள் இல்லை. அரசாங்கம் மாவட்டம் தோறும் மாவட்ட தொழில் மையங்களில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி மையங்களை இன்னும் நல்ல முறையில் விளம்பரபடுத்தி, நல்ல நூலக வசதிகளை ஏற்படுத்தி அங்கு ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து நூல்களும் இருக்குமாறும், தகுந்த ஆலோசனைகள் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை வளப்படுத்த உதவும்.


                                                          கேள்விக்கு என்ன பதில்?

வெங்கடேஷ், சென்னை

கேள்வி: ஏற்றுமதிக்கு முன் பணம் கொடுக்க ஒத்துக் கொண்ட வெளிநாட்டு இறக்குமதியாளர், அதற்காக எங்களிடம் ஒரு கியாரண்டி கேட்கிறார்கள். அதை கொடுக்கலாமா எப்படி கொடுப்பது?

பதில்: வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு முன்பணம் அனுப்புவர் நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அதற்கான சரக்குகளை அனுப்புவீர்களா மாட்டீர்களா என்ற சந்தேகம் வருமே, அதற்காகத்தான் கேட்கிறார். நீங்கள் கொடுக்கு கியாரண்டி அட்வான்ஸ்   பேமண்ட் கியாரண்டி எனப்படும். உங்கள் வங்கியில் சென்று கேளுங்கள், அவர்கள் என்ன செய்வது என்று கூறவார்கள்.

கேள்வி: எல்லா பொருட்களுக்கும் ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் தேவையா?
பதில்: ஏற்றுமதி ஆகும் எல்லா பொருட்களுக்கும் இன்ஸ்பெக்ஷன் தேவையில்லை. அரசாங்கம் இந்த பொருட்களுக்கு கட்டாயமாக இன்ஸ்பெக்ஷன் தேவை என்று வைத்துள்ள பொருட்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டும். இது தவிர வெளிநாட்டிலுள்ள இறக்குமதியாளர் பொருட்களை இன்ஸ்பெக்ஷன்  செய்து தான் அனுப்ப வேண்டும் என்ற அந்த பொருட்களுக்கும் செய்து அதற்கான அத்தாட்சியுடன் அனுப்ப வேண்டும்.


                                                                 இந்த வார இணையதளம்

http://www.freshplaza.com/
விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் இருப்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணையதளம். காய்கறிகள், பழங்கள், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், நட்ஸ்ஸ, பேக்கேஜிங், மெஷினரி, விலை விபரஙகள், கண்காட்சிகள் போன்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. படிக்கத்தான் நேரம் வேண்டும். ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு நிறைய தகவல்கள் கொண்ட ஒரு இணையதளம்.

இந்த தொடரை பற்றிய உங்கள் விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

Sunday, August 21, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் -10

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

குறைந்து வரும் வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி

வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் இருந்து ஆர்டர்கள் குறைவாக வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் வெண்கல விலைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதும் ஒரு காரணம். குஜராத்தில் உள்ள இந்த தொழிற்சாலைகள் தற்சமயம் 70 முதல் 75 சதவீதம் வரை தான் தனது கெபாசிட்டியில் உற்பத்தி செய்து வருகின்றன.


வர்த்தக கண்காட்சி

வரும்காலத்தில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ்  துறையில் ஒரு பெரும் பங்கு வகிக்கப்போகிறது. அந்த துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மும்பையில் டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  பற்றிய வர்த்தக கண்காட்சி நடக்கவுள்ளது. மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டிரான்ஸ்போர்ட் டெக்ஸ்டைல்ஸ், இண்டஸ்டிரியல் டெக்ஸ்டைல்ஸ், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஹோம் டெக்ஸ்டைல்ஸ், பாதுகாப்பு டெக்ஸ்டைல்ஸ், ஸ்போர்ட்ஸ்  டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ்  துறை சம்பந்தமான மிஷினரிகள் ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெறும். இது மும்பையில் பாம்பே எக்சிபிஷன் சென்டரில் நடக்கவுள்ளது.



பேரிச்சம்பழம் இறக்குமதி

பேரிச்சம்பழம் என்றதும் தான் ஞாபகம் வருகிறது. குஜராத்தில் ஒருவர் பேரிச்சம் பழ மரங்கள் வளர்ந்து அது நன்கு பலன் தருவதாக பேப்பரில் பெரிய அளவில் செய்திகள் போட்டிருந்தார்கள். தமிழ்நாட்டிலும் இது போல பல பேர் சவூதியில் வேலை பார்த்தவர்கள் வந்து பேரிச்சம் பழ மரங்கள் நட்டு அது நன்கு பலன் தருவதாக முன்பு செய்திகள் வந்தது. இது போல புதிய முயற்சிகளை அவர்கள் பத்திரிக்கைகளுக்கு பெரிய அளவில் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழர்களின் முயற்சிகள் வெளியே தெரிய வரும்.


ஏற்றுமதி டாகுமென்ட்டில்  என்ன தவறுகள் நேரலாம்

நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் அருமையாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் நீங்கள் எல்.சி. மூலம் அனுப்பும் டாக்குமெண்ட்களும் எல்.சி.படி தவறில்லாமல் இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு இருக்குமானேயாலும் உங்களுடைய ஏற்றுமதிக்கான பணம் கிடைப்பதில் மிகவும் கஷ்டம் ஆகிவிடும். ஆகவே இதில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.

பாகிஸதான் மாம்பழம் அமெரிக்காவிற்கு

மாம்பழங்கள் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டால் மற்ற நாடுகளை சென்றடைய அதிக நாட்கள் ஆகும். ஆனால் அனுப்பும் செலவு குறைவு. உதாரணமாக பாகிஸதானிலிருந்து அமெரிக்காவிற்கு மாம்பழங்கள் விமானத்தில் அனுப்பப்பட்டால் ஒரு கிலோவிற்கு ரூபாய் 300 செலவாகிறது. அதே சமயம் கப்பல் மூலம் அனுப்பப்பட்டால் ரூபாய் 25 தான் கிலோவிற்கு ஆகிறது. கப்பல் மூலம் அனுப்பப்பட்டால் இன்னும் அதிகம் ஏற்றுமதி செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். அமெரிக்கா வாங்கும் 650,000 டன்கள் மாம்பழத்தில் 150,000 டன்கள் பாகிஸதானிலிருந்து தான் போகிறது.


வலுக்கும் டாலர்

கடந்த சில வாரங்களாக ரூபாய் வலுத்துக் கொண்டிருந்தது. ஒரு டாலர் ரூபாய் 44 வரை வந்து ஏற்றுமதியாளர்களை கலங்கடித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது டாலர் உலக கரன்சிகளுக்கு எதிராக வலுத்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் ஒரு டாலர் ரூபாய் 44.70 வரை வந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான்.


கேள்விக்கு என்ன பதில்?

சேகர், திருச்சி

கேள்வி: ஏற்றுமதியை கலெக்ஷன் மூலமாக செய்யலாமா?

பதில்: ஏற்றுமதியை பல வகைகளில் செய்யலாம். அதாவது முன்பணம் வாங்கி கொண்டு, கலெக்ஷன் மூலமாக, எல்.சி.மூலமாக என்று மூன்று வகையாக செய்யலாம். கலெக்ஷன் என்பது பலராலும் உபயோகப்படுத்த கூடிய ஒரு வகை தான். இறக்குமதியாளரை உங்களுக்கு தெரியும் பட்சத்தில் தாராளமாக செய்யலாம். அதே சமயம் எல்.சி. கிடைத்தால் தான் ஏற்றுமதி செய்வேன் என்று உடும்பு பிடித்த பிடியாகவும் இருக்ககூடாது. கலெக்ஷன் மூலமாக ஏற்றுமதி செய்யும் போது ஈ.சி.ஜி.சி. யில் இன்சூரன்ஸ்  வாங்கிக் கொண்டு செய்வது மிகவும் முக்கியம்.


கணேசன், நாமக்கல்

கேள்வி: ஏற்றுமதியாளர்களுக்கு வெப்சைட் தேவையா? ஒரு வெப்சைட் ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: முன்பெல்லாம் ஏற்றுமதியாளர்கள் கடிதம் மூலமாக இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டிருந்தார்கள். அப்போது தங்கள் பொருட்களை பற்றிய விபரங்களை ப்ரோஷர் அச்சிட்டு அதை தபால் மூலமாக அனுப்பி ஆர்டர் பெற்று வந்தார்கள். ஆனால், அந்த காலெமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது எதெற்கெடுத்தாலும் இண்டர்நெட் தான். இணையதளம் இல்லாத வியாபாரங்களை வருங்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவே இணையதளம் உங்களுடைய பிசினசுக்கு கட்டாயம் தேவை. ஒரு சாதாரண இணையதளம் ஆரம்பிக்க சுமார் 4000 ரூபாய் வரை தேவைப்படும்.




உங்களை கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com


Sunday, August 14, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 9

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

சென்ற வார ஏற்றுமதி உலகத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றது என்று பார்ப்போம்.

டாலரும், ரூபாயும்
முக்கியமான நிகழ்வு என்று பார்க்கப் போனால் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்வது. இப்படி உயருவது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது. ஏனெனில் முன்பு ஒரு பொருளை ஒரு டாலருக்கு நீங்கள் விற்பனை செய்து கிடைத்த அந்த ஒரு டாலருக்கு 45.50 ரூபாய்  வங்கியிலிருந்து பெற்றிருந்தால், தற்போது அதே ஒரு டாலருக்கு உங்களுக்கு 44.20 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு சந்தோஷமான செய்தி அல்ல. அதே சமயம் விலையையும் கூட்டி வைத்து விற்கமுடியாது. அதாவது நீங்கள் ஒரு டாலருக்கு விற்ற பொருளை 1 டாலர் 20 சென்ட் என்று விற்றால் அவர் உங்களிடமிருந்து வாங்கமாட்டார். வேறு எந்த நாட்டில் அதே பொருள் 1 டாலருக்கு கிடைக்கிறது என்று தேட சென்று விடுவார், அங்கு வாங்கி விடுவார். அதே சமயம் உங்களுக்கு மூலப்பொருட்களின் விலை குறைந்திருக்காது. இது இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கதை தான். எப்படி சமாளிப்பது? நீங்கள் இறக்குமதியாளருக்கு விலை குறிப்பிட்டு அவர் ஒத்துக்கொண்டு கான்டிராக்ட் போடும் போதே வங்கியில் சென்று பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது சிறந்தது. அதாவது, இந்தத் தேதியில் இவ்வளவு வெளிநாட்டு பணம் தருகிறேன் என்று நீங்கள் கூறினால் அவர்கள் ஒரு டாலருக்கு இவ்வளவு ரூபாய் தருகிறேன் என்று கூறுவார்கள். இது போன்ற காண்டிராக்ட் போடுவது மூலமாக உங்களின் ஏற்றுமதி பணம் பத்திரமாக இருக்கும்.


கூட்டுறவே ஏற்றுமதியில் சிறந்த வழி

 தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்குக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்ற ஆசையும் அதிகமாக இருக்கிறது. பல ஒருமித்த கருத்துடையவர்கள் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏற்றுமதியை செய்வார்களேயானால் அது லாபகரமாக முடியும். உதாரணமாக போடிநாயக்கனூரில் இருக்கும் பத்து பேர் சேர்ந்து ஏலக்காய் ஏற்றுமதி பற்றியும், திருச்சியில் இருக்கும் பத்து இளைஞர்கள் சேர்ந்து வாழை ஏற்றுமதி பற்றியும், பத்தமடையில் இருக்கும் பத்து பேர் சேர்ந்து கோரம்பாய் ஏற்றுமதி பற்றியும் சிந்திப்பார்களேயானால் அதுவே ஏற்றுமதியில் ஈடுபட சிறந்த வழி. கூட்டுறவே நாட்டுயுர்வு.



கடல் பொருட்கள் ஏற்றுமதி

 உலகளவில் கடல் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் 10 இடங்களில் இந்தியாவும் இருக்கிறது. மலேஷியா, தாய்லாந்து, வியட்நாம், ஹாங்காங் போன்ற நாடுகளில் மீன் பிரதான உணவாக இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த காலங்களில் அதிகப்படியாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சைனா என்றே இருந்தது. தற்போது மேலே கூறிய நாடுகளுக்கும் அதிகரித்துள்ளது. அதிகப்படியாக ஏற்றுமதியாகும் கடல் மீன் வகைகள், டைகர் ப்ரான், ரிப்பன் பிஷ், வெள்ளை ப்ரான், க்ராப் ஆகியவை ஆகும். பெரும்பாலும் மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகின்றது.



உருளைக்கிழங்கு ஏற்றுமதி


உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்காததால் குளிர்சாதன கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் உள்நாட்டு வியாபாரத்திற்கு வருகின்றன. இது உள்நாட்டு விலையை கிலோவிற்கு 2 முதல் 3 வரை குறைக்க உதவியது. சாதாரணமாக உருளைக்கிழங்கிற்கு அதிகப்படியாக காமன்வெல்த் நாடுகளில் இருந்து தான் கிடைக்கும். தற்போது அது குறைந்திருப்பதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த வருடம் அதிகப்படியான விளைச்சலும், உபயோகிப்போர் மற்ற கிரீன் வெஜிடபுள்களை விரும்பி சாப்பிடுவதாலும் கிராக்கி இல்லை. இது இன்னும் உள்நாட்டு விலையை குறைக்கும்.




                                                கேள்விக்கு என்ன பதில்?
முரளி
சேலம்

கேள்வி: ஜன்னல்களுக்கு பொருத்தப்படும் ப்ளோட் கிளாஸ்  இறக்குமதி செய்ய விரும்புகிறோம். செய்ய முடியுமா?

பதில்: தாரளமாக இறக்குமதி செய்ய முடியும். இது தடையில்லா இறக்குமதி பொருட்கள் வகையில் வரும். ஆனால், சுங்க வரி செலுத்த வேண்டியிருக்கும். ஐஈசி கோடு கட்டாயம் தேவை.

நாகராஜன்

கேள்வி
பதில்: ஏன் முடியாது? மெனுபாக்சரிங் எக்ஸ்போர்ட்டர் என்றால் நீங்களே பொருள் தயாரிப்பவர் என்று அர்த்தம். மர்ச்செண்ட் எக்ஸ்போர்ட்டர் என்றால் நீங்கள் மற்றவரிடம் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று அர்த்தம். இரண்டும் ஒரு நபர் தாராளமாக செய்யலாம்.

                                          இந்த வார இணையதளம்
இண்டர்நெட்டில் பல சமயங்களில் தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், தகவல்கள் நம்ப தகுந்ததா என்ற சந்தோகம் பலருக்கு வரும். அதுவும் வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையான இணையதளம் வேண்டும். இந்த இணையதளம் உலகத்தின் 50 மில்லியன் கம்பெனிகளுடைய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது. ஆனால், இவை இலவசமாக கிடைப்பதில்லை. பணம் செலுத்த வேண்டும். எத்தனை கம்பெனி தகவல்கள் பெறுகிறோமோ அதற்கு தகுந்தாற்போல் செலுத்தினால் போதும். உங்களுக்கு ஒரு கம்பெனி ஆர்டர் கொடுத்து அந்த கம்பெனி நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம்.

தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.