Sunday, August 14, 2011

சென்ற வார ஏற்றுமதி உலகம் 9

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

சென்ற வார ஏற்றுமதி உலகத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றது என்று பார்ப்போம்.

டாலரும், ரூபாயும்
முக்கியமான நிகழ்வு என்று பார்க்கப் போனால் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்வது. இப்படி உயருவது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது. ஏனெனில் முன்பு ஒரு பொருளை ஒரு டாலருக்கு நீங்கள் விற்பனை செய்து கிடைத்த அந்த ஒரு டாலருக்கு 45.50 ரூபாய்  வங்கியிலிருந்து பெற்றிருந்தால், தற்போது அதே ஒரு டாலருக்கு உங்களுக்கு 44.20 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு சந்தோஷமான செய்தி அல்ல. அதே சமயம் விலையையும் கூட்டி வைத்து விற்கமுடியாது. அதாவது நீங்கள் ஒரு டாலருக்கு விற்ற பொருளை 1 டாலர் 20 சென்ட் என்று விற்றால் அவர் உங்களிடமிருந்து வாங்கமாட்டார். வேறு எந்த நாட்டில் அதே பொருள் 1 டாலருக்கு கிடைக்கிறது என்று தேட சென்று விடுவார், அங்கு வாங்கி விடுவார். அதே சமயம் உங்களுக்கு மூலப்பொருட்களின் விலை குறைந்திருக்காது. இது இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கதை தான். எப்படி சமாளிப்பது? நீங்கள் இறக்குமதியாளருக்கு விலை குறிப்பிட்டு அவர் ஒத்துக்கொண்டு கான்டிராக்ட் போடும் போதே வங்கியில் சென்று பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது சிறந்தது. அதாவது, இந்தத் தேதியில் இவ்வளவு வெளிநாட்டு பணம் தருகிறேன் என்று நீங்கள் கூறினால் அவர்கள் ஒரு டாலருக்கு இவ்வளவு ரூபாய் தருகிறேன் என்று கூறுவார்கள். இது போன்ற காண்டிராக்ட் போடுவது மூலமாக உங்களின் ஏற்றுமதி பணம் பத்திரமாக இருக்கும்.


கூட்டுறவே ஏற்றுமதியில் சிறந்த வழி

 தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்குக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்ற ஆசையும் அதிகமாக இருக்கிறது. பல ஒருமித்த கருத்துடையவர்கள் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏற்றுமதியை செய்வார்களேயானால் அது லாபகரமாக முடியும். உதாரணமாக போடிநாயக்கனூரில் இருக்கும் பத்து பேர் சேர்ந்து ஏலக்காய் ஏற்றுமதி பற்றியும், திருச்சியில் இருக்கும் பத்து இளைஞர்கள் சேர்ந்து வாழை ஏற்றுமதி பற்றியும், பத்தமடையில் இருக்கும் பத்து பேர் சேர்ந்து கோரம்பாய் ஏற்றுமதி பற்றியும் சிந்திப்பார்களேயானால் அதுவே ஏற்றுமதியில் ஈடுபட சிறந்த வழி. கூட்டுறவே நாட்டுயுர்வு.கடல் பொருட்கள் ஏற்றுமதி

 உலகளவில் கடல் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் 10 இடங்களில் இந்தியாவும் இருக்கிறது. மலேஷியா, தாய்லாந்து, வியட்நாம், ஹாங்காங் போன்ற நாடுகளில் மீன் பிரதான உணவாக இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த காலங்களில் அதிகப்படியாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சைனா என்றே இருந்தது. தற்போது மேலே கூறிய நாடுகளுக்கும் அதிகரித்துள்ளது. அதிகப்படியாக ஏற்றுமதியாகும் கடல் மீன் வகைகள், டைகர் ப்ரான், ரிப்பன் பிஷ், வெள்ளை ப்ரான், க்ராப் ஆகியவை ஆகும். பெரும்பாலும் மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகின்றது.உருளைக்கிழங்கு ஏற்றுமதி


உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்காததால் குளிர்சாதன கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் உள்நாட்டு வியாபாரத்திற்கு வருகின்றன. இது உள்நாட்டு விலையை கிலோவிற்கு 2 முதல் 3 வரை குறைக்க உதவியது. சாதாரணமாக உருளைக்கிழங்கிற்கு அதிகப்படியாக காமன்வெல்த் நாடுகளில் இருந்து தான் கிடைக்கும். தற்போது அது குறைந்திருப்பதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த வருடம் அதிகப்படியான விளைச்சலும், உபயோகிப்போர் மற்ற கிரீன் வெஜிடபுள்களை விரும்பி சாப்பிடுவதாலும் கிராக்கி இல்லை. இது இன்னும் உள்நாட்டு விலையை குறைக்கும்.
                                                கேள்விக்கு என்ன பதில்?
முரளி
சேலம்

கேள்வி: ஜன்னல்களுக்கு பொருத்தப்படும் ப்ளோட் கிளாஸ்  இறக்குமதி செய்ய விரும்புகிறோம். செய்ய முடியுமா?

பதில்: தாரளமாக இறக்குமதி செய்ய முடியும். இது தடையில்லா இறக்குமதி பொருட்கள் வகையில் வரும். ஆனால், சுங்க வரி செலுத்த வேண்டியிருக்கும். ஐஈசி கோடு கட்டாயம் தேவை.

நாகராஜன்

கேள்வி
பதில்: ஏன் முடியாது? மெனுபாக்சரிங் எக்ஸ்போர்ட்டர் என்றால் நீங்களே பொருள் தயாரிப்பவர் என்று அர்த்தம். மர்ச்செண்ட் எக்ஸ்போர்ட்டர் என்றால் நீங்கள் மற்றவரிடம் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று அர்த்தம். இரண்டும் ஒரு நபர் தாராளமாக செய்யலாம்.

                                          இந்த வார இணையதளம்
இண்டர்நெட்டில் பல சமயங்களில் தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், தகவல்கள் நம்ப தகுந்ததா என்ற சந்தோகம் பலருக்கு வரும். அதுவும் வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையான இணையதளம் வேண்டும். இந்த இணையதளம் உலகத்தின் 50 மில்லியன் கம்பெனிகளுடைய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது. ஆனால், இவை இலவசமாக கிடைப்பதில்லை. பணம் செலுத்த வேண்டும். எத்தனை கம்பெனி தகவல்கள் பெறுகிறோமோ அதற்கு தகுந்தாற்போல் செலுத்தினால் போதும். உங்களுக்கு ஒரு கம்பெனி ஆர்டர் கொடுத்து அந்த கம்பெனி நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம்.

தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

No comments:

Post a Comment