சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
சேதுராமன் சாத்தப்பன்
வளமான ஏற்றுமதி
ஒரு சினிமா பல வாரங்கள் தொடர்ந்து ஓடினால் வெற்றிகரமான 10வது வாரம், 20வது வாரம் என்று போஸ்டர் அடிப்பார்கள். அது போல போஸ்டர் அடிக்க வேண்டிய தருணம் இது. இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து பல மாதங்களாக சென்ற வருடம் இதே கால ஏற்றுமதியை விட உயர்ந்து செல்கிறது. ஜுலை மாத ஏற்றுமதியும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்ற வருட இதே கால ஏற்றுமதியை விட 82 சதவீதம் கூடுதலாக உள்ளது. அதிகமான எஞ்சினியரிங், பெட்ரோலியம் பொருட்கள், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், வைரம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதி இந்த உயர்வுக்கு காரணமாக இருந்தது.
ஆனால், இந்த கனவு ஓட்டம் தொடர்ந்து இருக்குமா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அமெரிக்க, ஐரோப்பிய பிரச்சனைகள் இந்தியாவின் ஏற்றுமதி வரும் மாதங்களில் குறைக்கும்.
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆயத்த ஆடைகள்
டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்டிரியை மூன்றாக பிரிக்கலாம், காட்டன் யார்ன், மேன்மேட் பைபர்ஸ் (எம்.எம்.எப்), ரெடிமேட் கார்மெண்ட்ஸ் என்று. இதில் காட்டன் யார்ன் மற்றும் ரெடிமேட் கார்மெண்ட்ஸ் இண்டஸ்டிரி பெரிய கம்பெனிகள் 5 சதவீதம் மார்க்கெட்டை தங்கள் வசம் வைத்துள்ளன. ப்ரோவோக், கேவல் கிரான் கிளாதிங், ஜோடியாக், மதுராம் கார்மெண்ட்ஸ் போன்றவை ரெடிமேட் கார்மெண்ட்சிலும், வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ், டிரைடெண்ட் லிமிடெட், நாகர் ஸ்பின்னிங் மில், கேபிஆர் மில் லிமெடெட் ஆகியவை காட்டன் யார்ன் இண்டஸ்டிரியிலும் முன்னணியில் இருக்கின்றன.
மேன்மேட் பைபர் இண்டஸ்டிரியில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், இந்தோ ரமா, பாம்பே டையிங், ஜேபிஎப் போன்றவையும், விஸ்கோஸ் இழையில் கிராசிம், ஆதித்ய பிர்லா நுவோ, செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், கேசோரோம் போன்ற கம்பெனிகளும் முன்னணி வகிக்கின்றன. ஏன் இவ்வளவையும் கூறியுள்ளோம் என்றால், தொழிலில் யார் சிறப்பாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். மேலும், உங்கள் தயாரிப்புக்களையும் அவர்களிடம் சந்தைப்படுத்தவும் உதவும்.
டெக்ஸ்டைல்சுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஜுலை 12 முதல் விதித்திருந்த வாட் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி.
ஏலக்காய்
அதிகமான் உற்பத்தி ஏலக்காயை மொத்த விலை ஒரு கிலோ 600 ரூபாய் என்ற அளவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்கிறார்கள். சென்ற வருடம் இதே சமயத்தை விட 5 மடங்கு வரத்து அதிகமாகியுள்ளது. பொதுவாக உலகளவில் கமாடிட்டி விலைகள் குறைந்து வருகின்றன. ஆதலால் அதிகமாக ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டாம். விலைகள் குறைய வாய்ப்புக்கள் உள்ளது.
வாருங்கள் ஒமனுக்கு ஏற்றுமதி செய்யலாம்
இந்திய ஒமன் வர்த்தகம் சென்ற வருடம் 4.5 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது சுமார் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. முன்பெல்லாம் ஒமனுக்கு ஏற்றுமதி என்றால் உணவுப் பொருட்கள் மட்டும் தான் நடைபெற்று வந்தது. தற்போது இது தவிர மெஷினரி, எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், கன்சல்டன்சி, டிரெயினிங் ஆகியவையும் அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது.
இது தவிர இந்தியா பாசுமதி அல்லாத அரிசியை வருடத்திற்கு 10000 டன்கள் ஏற்றுமதி செய்ய ஒத்துக் கொண்டுள்ளது.
இது தவிர இந்தியா பாசுமதி அல்லாத அரிசியை வருடத்திற்கு 10000 டன்கள் ஏற்றுமதி செய்ய ஒத்துக் கொண்டுள்ளது.
ஆர்கானிக் பொருட்கள்
உலகளவில் ஆர்கானிக் பொருட்களுக்கு உள்ள மவுசு கூடிக் கொண்டெ போகிறது. காரணம் ஆர்கானிக் பொருட்களுக்கு கிடைக்கும் விலை கூடுதலாக இருப்பது தான். ஆனால் இந்தியாவிலிருந்து 86 ஆர்கானிக் பொருட்களே ஏற்றுமதி செய்யபடுகிறது. இதன் மொத்த மதிப்பு 450 கோடி ரூபாய் வரை தான். பீகாரில் ஆர்கானிக் விவசாயத்திற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு இதற்கான முயற்சிகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. இது அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடும் விவசாய பல்கலைகழகத்துடன் இணைந்து இது போல முயற்சிகளில் ஈடுபட்டால் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் உயரும், ஏற்றுமதியும் உயரும்.
மாவட்டம் தோறும் ஏற்றுமதி மையங்கள்
ஏற்றுமதியில் பலரும் தமிழ்நாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், சரியான வழிகாட்டிகள் இல்லை. அரசாங்கம் மாவட்டம் தோறும் மாவட்ட தொழில் மையங்களில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி மையங்களை இன்னும் நல்ல முறையில் விளம்பரபடுத்தி, நல்ல நூலக வசதிகளை ஏற்படுத்தி அங்கு ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து நூல்களும் இருக்குமாறும், தகுந்த ஆலோசனைகள் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை வளப்படுத்த உதவும்.
வெங்கடேஷ், சென்னை
கேள்வி: ஏற்றுமதிக்கு முன் பணம் கொடுக்க ஒத்துக் கொண்ட வெளிநாட்டு இறக்குமதியாளர், அதற்காக எங்களிடம் ஒரு கியாரண்டி கேட்கிறார்கள். அதை கொடுக்கலாமா எப்படி கொடுப்பது?
பதில்: வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு முன்பணம் அனுப்புவர் நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அதற்கான சரக்குகளை அனுப்புவீர்களா மாட்டீர்களா என்ற சந்தேகம் வருமே, அதற்காகத்தான் கேட்கிறார். நீங்கள் கொடுக்கு கியாரண்டி அட்வான்ஸ் பேமண்ட் கியாரண்டி எனப்படும். உங்கள் வங்கியில் சென்று கேளுங்கள், அவர்கள் என்ன செய்வது என்று கூறவார்கள்.
கேள்வி: எல்லா பொருட்களுக்கும் ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் தேவையா?
பதில்: ஏற்றுமதி ஆகும் எல்லா பொருட்களுக்கும் இன்ஸ்பெக்ஷன் தேவையில்லை. அரசாங்கம் இந்த பொருட்களுக்கு கட்டாயமாக இன்ஸ்பெக்ஷன் தேவை என்று வைத்துள்ள பொருட்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டும். இது தவிர வெளிநாட்டிலுள்ள இறக்குமதியாளர் பொருட்களை இன்ஸ்பெக்ஷன் செய்து தான் அனுப்ப வேண்டும் என்ற அந்த பொருட்களுக்கும் செய்து அதற்கான அத்தாட்சியுடன் அனுப்ப வேண்டும்.
http://www.freshplaza.com/
விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் இருப்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணையதளம். காய்கறிகள், பழங்கள், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், நட்ஸ்ஸ, பேக்கேஜிங், மெஷினரி, விலை விபரஙகள், கண்காட்சிகள் போன்று ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. படிக்கத்தான் நேரம் வேண்டும். ஏற்றுமதி செய்ய விரும்புபவர்களுக்கு நிறைய தகவல்கள் கொண்ட ஒரு இணையதளம்.
இந்த தொடரை பற்றிய உங்கள் விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com
No comments:
Post a Comment