Sunday, September 30, 2012

உலகளவிலான ஏற்றுமதி கண்காட்சி



உலகளவிலான ஏற்றுமதி கண்காட்சி

இந்திய ஆசிய வர்த்தக கண்காட்சி வருகிற டிசம்பர் மாதம் 18 முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவிருக்கின்றன. இதில் ஆட்டோமொபைல்ஸ், கெமிக்கல்ஸ், பிளாஸ்டிக், கன்ஸ்டிரக்ஷன், ஜெம் அண்ட் ஜுவல்லரி, விவசாய்ம், புட் புராசசிங், டெக்ஸ்டைல்ஸ் , ஹாண்டிகிராப்ட்ஸ், ஹெல்த்கேர், ஆயுர்வேதா ஆகியவை சம்பந்தப்பட்ட பொருட்களின் வர்த்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. பையர் செல்லர் மீட்டிங், பி2பி மீட்டிங் ஆகியவைகளும் நடைபெறவுள்ளது. மேலும் விபரவங்களுக்கு மேலே கண்ட இணையதளத்தை சென்று பாருங்கள்.

பார்சல்களை குளிருட்டப்பட்ட வாகனத்தில் அனுப்ப


பார்சல்களை குளிருட்டப்பட்ட வாகனத்தில் அனுப்ப


பல சமயம் பொருட்கள் கெட்டுவிடாமல் இருக்க குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அனுப்பவேண்டும். அல்லது குளிரூட்டப்பட்ட வாகனங்களில் அனுப்பப்படவேண்டும். பல வாகன சேவை நிறுவனங்களில் இந்த வசதிகள் இருப்பதில்லை. போருக்காஸ்  லாஜிஸ்டிக்ஸ்  என்ற கம்பெனி கூல் எக்ஸ்  என்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பார்சல்களை குளிரூட்டப்பட்ட வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவதற்கான வசதிகள் உள்ளது. மேலும், கோல்டு ஸ்டோரேஜ்  போன்ற வசதிகளும் இருக்கிறது.

Saturday, September 29, 2012

பாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி விலக்கு


பாசுமதி அரிசிக்கு இருக்கும் 3 சதவீதம் இன்பிரா வரி விலக்கு

பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் அதிக அளவு பாசுமதி ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகும். அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசிக்கு இதுவரை 3 சதவீதம் இன்பிரா டெலலப்மெண்ட் வரி இருந்தது. அதை தற்போது ரத்து செய்து இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் உலகளவில் விற்கும் போது விலைகளை போட்டியாக வைத்து விற்க ஏதுவாக இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி இல்லை. ஆனால் ஏற்றுமதியாளர்கள் வட மாநிலங்களில் இருந்து தான் வாங்கி ஏற்றுமதி செய்கிறார்கள்.

Thursday, September 27, 2012

அண்ணாச்சி கடையா? இல்லை அம்பானி கடையா?


அண்ணாச்சி கடையா?  இல்லை அம்பானி கடையா?

உங்க வீடு எங்க இருக்கு என்ற கேள்விக்கு அடுத்த வருடம் பதில் எப்படி இருக்கும் தெரியுமா? மும்பையில காட்கோபர்ல வால்மார்ட் தெரியுமா? அட என்ன யோசிக்கிற? அதுக்கு பக்கத்துல இருக்கிற டெஸ்கோவாவது தெரியுமா? இந்த சூப்பர் மார்க்கெட் இரண்டுக்கும் நடுவில் இருக்கது தான் எங்கள் வீடு என்று சொல்லும் தொலைவு நாள் அதிக தூரத்தில் இல்லை. வீடு விலையும் ஏறும், அண்ணாச்சி கடையை விட பொருட்களை சிறிது விலை குறைவாகத் தரலாம். ஆனால், இது சிறிய வியாபாரிகளை பாதிக்கும். இது போன்ற வெளிநாட்டு கடைகள் தங்கள் வாங்கும் பொருட்களை இந்தியாவில் இருக்கும் குறந்தொழில் மற்றும் சிறுதொழில் செய்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 50 சதவீதமாவது வாங்க வேண்டும் என்ற வகையில் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டால் நல்லது. அதற்கு தகுந்தாற் போல் நமது சிறு உற்பத்தியாளர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.  

Wednesday, September 26, 2012

நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா?


நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டையில் 95 சதவீதம் நாமக்கல்லில் இருந்து தான் செய்யப்படுகிறது. இந்தியாவில் பறவை நோய் இருந்ததால்  இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன்  நாடு தடை விதித்திருந்தது. இந்தியாவிலிருந்து மாதத்திற்கு சுமார் 5 கோடி முட்டைகள் முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது 2 கோடியாக குறைந்து, ஆச்சரியமாக ஜுன் மாதம் 89 லட்சமாகவும் குறைந்தது. ஓமன் நாடு  தனது இறக்குமதியில் 33 சதவீதத்தை இந்தியாவிலிருந்து செய்வதால் இனி ஏற்றுமதி கூடும் என எதிர்பார்க்கலாம். ஒரு கன்டெய்னரில் 4.72 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யலாம். ஆப்கானிஸதானுக்கும் அதிக அளவில் நாம் முட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். நாமக்கல் முட்டைகளை அதிக அளவில் விரும்பக் காரணம் என்ன தெரியுமா? அவற்றில் அதிக அளவு மஞ்சள் தன்மை இருப்பதால் தான். 

Tuesday, September 25, 2012

இந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது? தமிழ்நாடு எங்கு இருக்கிறது?



கேள்வி பதில்
ரமாமணி
ஊட்டி


கேள்வி
இந்தியாவில் கார்பெட் உல் எங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது? தமிழ்நாடு எங்கு இருக்கிறது?


பதில்
அதிகமாக ராஜஸ்தானிலும், அடுத்ததாக ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆகியவை வருகின்றன. தமிழ்நாடு கடைசியில் தான் இருக்கிறது. இது தவிர கார்பெட்டுக்கான உல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. 

Sunday, September 23, 2012

பழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்


இணையதளம்

பழங்கள், காய்கறிகளை பிரஷ்ஷாக வைக்க, பாக்கேஜிங்
 
வெளிநாடுகளில் பழங்கள், காய்கறிகளை பாக்கேஜிங் செய்து டிஸ்பிளேயில் வைத்துள்ளதை பார்க்கும் போதே வாங்கவேண்டும் என்று தோன்றும். அது போல எப்படி பாக்கேஜிங் செய்வது என்று பலரும் பல சமயத்தில் யோசித்திருக்கலாம். www.stepac.com என்ற இணையதளத்தை சென்று பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியமான பல தகவல்கள் கிடைக்கும்.

கனடாவில் லெதர் பொருட்கள் கண்காட்சி

கனடாவில் லெதர் பொருட்கள் கண்காட்சி


இந்திய லெதர் பொருட்கள் கண்காட்சி கனடாவில் உள்ள மாண்டிரியலில் அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் நடக்கவுள்ளது. இதில் லெதர் கார்மெண்ட்ஸ், லெதர் காலணிகள், காலணிகளுக்கான பாகங்கள், லெதர் கைப்பைகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்படும். இந்தியாவிலிருந்து 25 ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்தியா உலகத்திலேயே லெதர் காலணிகள் தயாரிப்பில் இரண்டாவது இடத்தையும், லெதர் உடைகளில் மூன்றாவது இடத்தையும், லெதர் அக்சசரிஸ்  தயாரிப்பில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Friday, September 21, 2012

பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?


பப்பாளி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?

ஒரு காலத்தில் வீடுகளில் கிணற்றடியில் வைக்கப்படும் செடியாக இருந்தது பப்பாளி. தற்போது மக்களின் அன்றாட உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி சாகுபடியை முழுநேரத் தொழிலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவில் தற்போது செய்து வருகின்றனர். 2006-07 வருடத்தில் இந்தியாவில் 2,482,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது 2010-11ம் ஆண்டில் 4,196,000 டன்களாக உயர்ந்திருக்கிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் குஜராத், அடுத்து ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும். தமிழ்நாட்டின் பங்கு இந்தியாவின் உற்பத்தியில் 2.5 சதவீதம் தான். ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் பதில் அதிகம் இல்லை என்பது தான். ஏனெனில் பெருமளவில் உள்நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது.

Thursday, September 20, 2012

டூப்ளிகேட் பொருட்கள், இறக்குமதியளர்களே உஷார்


டூப்ளிகேட் பொருட்கள், இறக்குமதியளர்களே உஷார் 

உலகத்திலேயே டூப்ளிகேட் பொருட்களுக்கான மார்க்கெட்டில் மிகவும் பிரபலமானது சில்க் ஸ்டீரிட், பீஜிங், சைனா (போலி கன்சுயூமர், இண்டஸ்டிரியல் ப்ராடக்ஸ்), சைனா சுமால் கமாடிட்டிஸ்  மார்க்கெட், யிவுயு, சைனா (சிறிய கன்சுயூமர் ப்ராடக்ஸ்), கார்புஸ்கா, மாஸ்கோ, ரஷ்யா (கன்சுயூமர் எலக்ட்ரானிக்ஸ்  மார்க்கெட்), ருபின் டிரேட் சென்டர், மாஸ்கோ, ரஷ்யா போன்றவை ஆகும். இவையெல்லாம் ஒப்பிடும் போது மும்பை உல்லாஸ்நகர் மார்க்கெட் மிகவும் சிறியது. 

பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ்


பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ் 

கேட்கவே இனிப்பாக இருக்கிறதா? ஆமாம். இதுவரை சிப்ஸ்  போன்றவைகளை சாப்பிட்டு வேறு ஸ்நாக் வரவே வராதா? என்று நினைப்பவர்களுக்காகவே டெல் மாண்டே கம்பெனி பழங்களில் தயாரிக்கப்பட்ட ஸ்நாக் வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவ்து பப்பாளிப்பழம், மாம்பழம், அப்ரிகாட் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்நாக் இனிமேல் உங்கள் அருகில் உள்ள வால்மார்ட்டில் கிடைக்கும். என்ன வால்மார்ட் என்கிறீர்களா? அதுதான் மத்திய அரசாங்கம் சில்லறை விற்பனையில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விட்டதே? ஏன் இந்திய இளைஞர்களும் இது போன்று சிந்தித்து பழங்களில் இருந்து ஸ்நாக்ஸ தயாரிக்க, விற்பனை செய்ய, ஏற்றுமதி செய்ய முயற்சி செய்யக்கூடாது?

Sunday, September 16, 2012

ஏற்றுமதியில் விவசாயம்


ஏற்றுமதியில் விவசாயம்
ஏற்றுமதி இறக்குமதி 
இன்றைய இளைஞர்கள் பலர் விவசாயம் என்றாலே காத தூரம் ஓடி விடுகின்றனர். தந்தை விவசாயத்தில் இருந்தாலும் மகன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்களும், அப்பா ஈடுபட்டாலும் தான் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் மகன்களும் பெருகிவரும் காலம். ஏன் அக்ரிகல்ச்சர் படித்த மாணவர்களே வொயிட் காலர் வேலைக்குத் தான் செல்ல நினைக்கிறார்கள். ஆனால் சென்ற வருடம் இந்தியாவின் ஜி.டி.பி. யில் அக்ரிகல்ச்சர் தான் 14.5 சதவீதம் பங்களித்துள்ளது. மேலும், இந்தியாவின் ஏற்றுமதியில் அக்ரிகல்ச்சர் 10.5 சதவீதம் பங்களித்துள்ளது. 

இந்தியா அதிக அளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும், தண்ணீரையும் அக்ரிகல்ச்சருக்காக செலவழிக்கிறது எனவும், இதை செலவழிக்காமல் நமது நாட்டிற்கு தேவையானவைகளை அதாவது உற்பத்திக்கு மேல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும், இதனால் மிச்சப்படும் விளைநிலங்களை தொழிற்சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி இருக்குங்க?

Saturday, September 15, 2012

ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்



ஏற்றுமதி வாய்ப்புக்களை கண்டறிய இணையதளம்


இந்த இணையதளம் மூலமாக பல நாடுகளின் பி2பி இணையதளங்களுக்கு செல்லும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். ஏற்றுமதிக்கு முக்கியமானது இறக்குமதியாளர்களே. ஒவ்வொரு நாட்டிற்கும் பி2பி இணையதளங்களை அமைத்து இதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும், உணவுப் பொருட்கள் சம்பந்தமாக www.foodstradingholding.comஎன்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார்கள். சென்று பாருங்கள், நல்ல இணையதளங்கள்.

எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரம் சரியில்லை என்று டாக்குமெண்டை இறக்குமதியளரின் வங்கி நிராகரிக்க முடியுமா? ஏற்றுமதி கேள்வி பதில்


கருப்பசாமி
கோவைப்புதூர்

கேள்வி

எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரம் சரியில்லை என்று டாக்குமெண்டை இறக்குமதியளரின் வங்கி நிராகரிக்க முடியுமா?
ஏற்றுமதி இறக்குமதி 

பதில்

நிச்சியமாக எல்.சி. மூலம் டாக்குமெண்ட் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை நிராகரிக்க முடியாது. அதே சமயம் சரியான, நல்ல தரமான பொருட்களை அனுப்புவது உங்கள் கடமை. அவருக்கு பொருட்களின் தரம் சரியாக இல்லாதபட்சத்தில் உங்கள் மீது வேறு வகைகளில் வழக்குகள் போடலாம். அதாவது காண்டிராக்ட் படி இல்லை என்று காண்டிராக்ட் ஆக்ட் படி உங்கள் மீது வழக்கு தொடரலாம் (பெரிய தொகையாக இருக்கும் பட்சத்தில்). எண்ணங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும், வியாபார தொடர்புகள் நீண்டகாலம் வேண்டும், தரமான சரக்குகளையே அனுப்ப வேண்டும், இந்தியாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கைகளை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Friday, September 14, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி
அருணாசலம்
அம்பத்தூர், சென்னை

ஒரு ஏற்றுமதியாளர் வருடத்திற்கு இவ்வளவு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டா?

பதில்
நல்ல கேள்வி. அப்படி கட்டுப்பாடுகள் இல்லை. சிலவகை பொருட்களுக்கு முன்பு கோட்டா இருந்தது. தற்போது அதுவும் இல்லை. தடையற்ற, எல்லையற்ற வியாபாரம் என்பது தான் தற்போது உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் தாரக மந்திரம். எல்லைகள் இல்லாத உலகத்தை உலக வர்த்தக மையம் கொண்டுவர நினைக்கிறது

Wednesday, September 12, 2012

மாம்பழத்திற்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்


மாம்பழத்திற்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்

விவசாயத்தில் இஸ்ரேலின் தொழில்நுட்பம் உலகறிந்தது. குஜராத் அரசாங்த்திற்கு இஸ்ரேல் மாம்பழத் தொழில்நுட்பத்தை அளிக்கவுள்ளது.  குஜராத்தில் உள்ள கிர் என்ற ஊரில் ஒரு ஹார்டிக்கல்ச்சர் சென்டர் தொடங்கவும், மாம்பழம் பயிரிட சிறந்த தொழில்நுட்பங்களையும் அளிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது போன்று வாழைப்பழம் சாகுபடி சம்பந்தமாகவும் ஒரு ஒப்பந்தம் ஏற்படவுள்ளது. மாம்பழமும், வாழைப்பழமும் தமிழ்நாட்டிலும் சிறப்பாக விளையும் பொருட்கள். மேலும், தேசிய வாழை ஆராயச்சி மையைமும் திருச்சியில் தான் உள்ளது. ஆதலால் தமிழ்நாடும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு நன்மை தரும். ஏற்றுமதி இறக்குமதி 

Tuesday, September 11, 2012

சுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொருட்கள்


சுவிட்சர்லாந்து சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்திய பொருட்கள்

சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்களில் ஒன்றாகும் மிக்ரோஸ. இதுவரை இடைத்தரகர்கள் மூலமாக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இந்தக் கம்பெனி, இந்தியாவிலிருந்து வாங்குவதை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் புதுடெல்லியில் ஒரு சோர்சிங்கிற்காக ஒரு கம்பெனியை தொடங்கி உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்துள்ளது. விற்பதற்கு ரெடியாகுங்கள். இந்த சூப்பர் மார்க்கெட் இதற்கு முன்னமே சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நேரடி கொள்முதல் நிலையங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Monday, September 10, 2012

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்


பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டம்

உலகத்திலேயே அதிக பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடங்களில் ஒன்று உண்டு. ஆனால், இவைகளின் ஏற்றுமதியில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2017ம் வருடத்திற்குள் இதற்காக மத்திய அரசாங்கம் 5000 கோடி ரூபாய்கள் செலவழிக்கவுள்ளது. இதன் மூலம் தனியார் கம்பெனிகள் விவசாயிகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு உற்பத்தி செய்யும் திட்டமாகும். 33 தனியார் கம்பெனிகள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளன. இன்னும் பல கம்பெனிகள் வரலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு கடன்களும், உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். மேலும் நிலையான வருமானத்திற்கும், நாட்டின் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும்.

Sunday, September 9, 2012

மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி


மருந்து பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி

இந்திய மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் நடத்து உலகளவிலான ஒரு கண்காட்சி அடுத்த வருடம் ஏப்ரல் 24 முதல் 26 வரை  மும்பையில் நடக்கவுள்ளது. இதில் உலகின் பல பாகங்களிலிருந்து சுமார் 400 இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதன் முக்கிய அம்சம் என்னெவென்றால் சிறிய அளவில் மருந்து தயாரிப்பவர்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது தான். இந்த மேம்பாட்டுக் கழகத்தில் மேல் விபரங்கள் கிடைக்கும்.

Saturday, September 8, 2012

உங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத்த பணம் கொடுக்கும் இணையதளம்


உங்கள் ஐடியாக்களுக்கு வடிவம் கொடுக்கும், செயல்படுத்த பணம் கொடுக்கும் இணையதளம்

உங்களிடம் நல்ல ஜடியாக்கள் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த நிறைய பணம் தேவைப்படும் என்ற பட்சத்தில் உங்கள் ஐடியாக்களை இந்த இணையதளத்திற்கு தெரிவித்தால் உங்களுக்கு உதவி செய்ய பலர் காத்திருக்கிறார்கள். இதுவரை 20,000 ஐடியாக்களுக்கு வடிவம் கொடுத்துள்ளார்கள். இதன் மதிப்பு 1000 கோடி ரூபாய்களுக்கு மேலே இருக்கும். சென்று பாருங்கள் உங்கள் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் இணையதளமாக இது இருக்கலாம். www.kickstarter.com. உங்களது ஐடியாக்களுக்கு ஒரு வழி கிடைக்க வாழ்த்துக்கள்.


Thursday, September 6, 2012

வீவ்ஸ் ஆப் இந்தியா


வீவ்ஸ்  ஆப் இந்தியா

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் என்ன வகையான் டிரஸ்  மெட்டீரியல்கள், சாரீஸ்  தயாரிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். 

பீகார்
பகல்பூர் சில்க் டிரஸ்  மெட்டீரியல், துசார் மற்றும் மட்கா சில்க் சாரிகள்

ராஜஸ்தான்
பந்தானி சில்க் சாரிகள், ஜல்புரி குர்த்தீஸ், ஹாண்ட் ப்ளாக் பிரிண்ட், ப்ளாக் பிரிண்ட் டிரஸ மெட்டீரியல்

உத்திரபிரதேஷ்
பனாரஸ்  சில்க் சாரிகள், ஜாம்வர் சில்க சாரிகள், புராகெட் டிரஸ்  மெட்டீரியல்

கர்நாடகா
பெங்களூர் சில்க், மைசூர் சில்க், ஹுப்ளி காட்டன் மற்றும் சில்க் சாரிகள்

தமிழ்நாடு
காஞ்சிபுரம் சில்க் சாரிகள், திருப்புவனம் சில்க் சாரிகள்

மேற்கு வங்காளம்
சாந்தி நிகேதன் காந்தா சில்க் சாரிகள், பாஸ்மினா சாரிகள், நிம்சாரி சாரிகள், பிரிண்டட் சில்க் சாரிகள்

ஆந்திரா
கலம்காரி சாரிகள், மங்கள்கிரி, போச்சம்பள்ளி சில்க் சாரிகள், தர்மாவரம் சில்க் சாரிகள்

மத்திய பிரதேஷ்
சந்தாரி மற்றும் மகேஷ்வரி காட்டன் மற்றும் சில்க் சாரிகள்

ஜம்மு காஷ்மீர்
தாபி சில்க் சாரிகள், சினன் சில்க் சாரிகள்

சட்டீஸகர்க்
கோசா சில்க் சாரிகள்

குஜராத்
பட்டோலா சில்க் சாரிகள், குஜராத்தி கண்ணாடி வேலைப்பாடுகள் சாரிகள், டிசைனர் குர்த்தீஸ் 

தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி


தேங்கும் இறால் மீன் ஏற்றுமதி

ப்ளாக் டைகர் ஷிரிம்ப் என்ற வகை மீன்கள் சுமார் 700 டன்கள் ஏற்ருமதி செய்யப்படமுடியாமல் குளிர்சாதனபெட்டிகளில் இருந்து வருகிறது என்று வெஸ்ட் கோஸ்ட் ப்ரோஷன் புட்ஸ்  கம்பெனி தெரிவித்துள்ளது. என்ன காரணம்? ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றில் மந்த நிலையும், மேலும் முன்பு அனுப்பபட்ட இந்த வடை மீன்களில் ஒருவித கெமிக்கல்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேலும் இருப்பதும் ஆகும்

Monday, September 3, 2012

எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்


எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்

எண்ணெய் வித்துக்கள் இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன விலையில் கிடைக்கிறது, எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது, என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறும் இணையதளம். மேலும், உலகளவில் எண்ணெய்களுக்கு என்ன விலை கிடைக்கிறது, இறக்குமதி விலைகள் என்ன என்பதையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள் சால்வண்ட் எக்ஸ்டிராக்ட்ஸ்  அசோஷியேஷன் ஆப் இந்தியா நிறுவனம். www.seaofindia.com


Sunday, September 2, 2012

பீகாரின் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு


பீகாரின் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு

பீகாரில் நாளந்தா மாவட்டத்தில் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த இந்தியன் பொட்டோடோ லிமிடெட் என்ற நிறுவனம் ஒரு லட்சம் டன்கள் உருளைக்கிழங்கை வாங்கி ஏற்றுமதி செய்யவுள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உருளைக்கிழங்கு பயிரிடப்படும் மாநிலங்களில் பீகார் மூன்றாவதாக வருகிறது. முதலிரண்டு இடத்தை உத்திரப்பிரதேசமும், மேற்கு வங்காளமும் பிடித்துள்ளன. நாளந்தா பீகார் முதலமைச்சரின் மாவட்டம் என்பது குறிப்பிடதக்கது. மேலும், இந்த மாவட்டத்தில் தான் சென்ற வருடம் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேருக்கு 72.9 டன்கள் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்து ஒரு உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதியில் பின்தங்கி இருக்கிறோம். இதை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், தமிழக அரசு ஆகியவை தான் நிவர்த்தி செய்யவேண்டும்.

Saturday, September 1, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம் 

பேஸ்புக் மக்களை இணைக்க உதவும் ஒரு இணையதளம் என்பது உங்களுக்கு நன்கே தெரியும். அதே சமயம் இது போல ஒரு இணையதளம் பிசினஸ்  மக்களையும் இணைத்தால் எப்படி இருக்கும் என்று பலர் பல சமயத்தில் கற்பனை செய்திருப்பீர்கள். அது போல ஒரு இணையதளம் இருக்கிறது. அது தான் www.biznik.com <http://www.biznik.com>. இதில் சிறிய பிசினஸ்  செய்பவர்களும், செய்ய நினைப்பவர்களும் இருப்பதால் உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. சென்று பாருங்கள், நல்ல இணையதளம்