பீகாரின் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு
பீகாரில் நாளந்தா மாவட்டத்தில் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த இந்தியன் பொட்டோடோ லிமிடெட் என்ற நிறுவனம் ஒரு லட்சம் டன்கள் உருளைக்கிழங்கை வாங்கி ஏற்றுமதி செய்யவுள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உருளைக்கிழங்கு பயிரிடப்படும் மாநிலங்களில் பீகார் மூன்றாவதாக வருகிறது. முதலிரண்டு இடத்தை உத்திரப்பிரதேசமும், மேற்கு வங்காளமும் பிடித்துள்ளன. நாளந்தா பீகார் முதலமைச்சரின் மாவட்டம் என்பது குறிப்பிடதக்கது. மேலும், இந்த மாவட்டத்தில் தான் சென்ற வருடம் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேருக்கு 72.9 டன்கள் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்து ஒரு உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதியில் பின்தங்கி இருக்கிறோம். இதை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், தமிழக அரசு ஆகியவை தான் நிவர்த்தி செய்யவேண்டும்.
நாட்டின் பின் தங்கிய மாநிலமான பீகாரில் இவ்வாறு நடக்கும் போது முன்னேறிய மாநிலமான தமிழகத்தில் ஏற்றுமதிக்கான நடவடிக்கைகள், என்ன தான் பல்வேரு வகுப்புகள் மற்றும் தங்களைப் போன்ற நிபுணர்களால் பல்வேறு வகையிலும் ஏற்றுமதியைப் பற்றி கருத்தரங்கங்கள், பயிற்சிகள், ஆகியன நடத்தப்பட்டாலும், நமது தமிழக அரசு தானே முன்வந்து தமிழகம் ஏற்றுமதியில் முன்னணியில் வருவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை தங்களையும், தங்களைப் போன்ற தமிழக வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சோம.வள்ளியப்பன், நாகப்பன் போன்ற நிபுணர்கள் அடங்கிய குழு மூலமாக சீரிய நடவடிக்கைகளை எடுத்து, வரலாற்று காலம் தொட்டு கடல் வழிக்கும் அஞ்சாத வாணிபர்களைக் கொண்டு சிறப்போடு விளங்கி, தற்சமயம் [திருப்பூர் போன்ற சில நகரங்கள் தவிர]ஏற்றுமதியில் பிற மாநிலத்தவர்களே நமது மாநிலத்தில் கோலோச்சும் நிலை அறவே இல்லாது, சிறந்த படிப்பறிவைக் கொண்ட தமிழக மக்கள் தயங்காது ஏற்றுமதி செய்து வளம் பெற நீங்கள் சொல்லியது போலம் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அதற்கு தங்களைப் போன்ற சிறந்த அறிவும் நிபுணத்துவமும் மக்களின் ஆதரவும் உள்ளோர்கள் அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்ல வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteசீ வே கிருஷ்ணன்
கோயம்புத்தூர்