Saturday, September 15, 2012

எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரம் சரியில்லை என்று டாக்குமெண்டை இறக்குமதியளரின் வங்கி நிராகரிக்க முடியுமா? ஏற்றுமதி கேள்வி பதில்


கருப்பசாமி
கோவைப்புதூர்

கேள்வி

எல்.சி. மூலம் ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரம் சரியில்லை என்று டாக்குமெண்டை இறக்குமதியளரின் வங்கி நிராகரிக்க முடியுமா?
ஏற்றுமதி இறக்குமதி 

பதில்

நிச்சியமாக எல்.சி. மூலம் டாக்குமெண்ட் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை நிராகரிக்க முடியாது. அதே சமயம் சரியான, நல்ல தரமான பொருட்களை அனுப்புவது உங்கள் கடமை. அவருக்கு பொருட்களின் தரம் சரியாக இல்லாதபட்சத்தில் உங்கள் மீது வேறு வகைகளில் வழக்குகள் போடலாம். அதாவது காண்டிராக்ட் படி இல்லை என்று காண்டிராக்ட் ஆக்ட் படி உங்கள் மீது வழக்கு தொடரலாம் (பெரிய தொகையாக இருக்கும் பட்சத்தில்). எண்ணங்கள் நல்லபடியாக இருக்க வேண்டும், வியாபார தொடர்புகள் நீண்டகாலம் வேண்டும், தரமான சரக்குகளையே அனுப்ப வேண்டும், இந்தியாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கைகளை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. //இந்தியாவின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கைகளை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.//

    இதுதான் ஒரு கேள்விக்குறி?

    ReplyDelete