நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி கூடுமா?
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டையில் 95 சதவீதம் நாமக்கல்லில் இருந்து தான் செய்யப்படுகிறது. இந்தியாவில் பறவை நோய் இருந்ததால் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் நாடு தடை விதித்திருந்தது. இந்தியாவிலிருந்து மாதத்திற்கு சுமார் 5 கோடி முட்டைகள் முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது 2 கோடியாக குறைந்து, ஆச்சரியமாக ஜுன் மாதம் 89 லட்சமாகவும் குறைந்தது. ஓமன் நாடு தனது இறக்குமதியில் 33 சதவீதத்தை இந்தியாவிலிருந்து செய்வதால் இனி ஏற்றுமதி கூடும் என எதிர்பார்க்கலாம். ஒரு கன்டெய்னரில் 4.72 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யலாம். ஆப்கானிஸதானுக்கும் அதிக அளவில் நாம் முட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். நாமக்கல் முட்டைகளை அதிக அளவில் விரும்பக் காரணம் என்ன தெரியுமா? அவற்றில் அதிக அளவு மஞ்சள் தன்மை இருப்பதால் தான்.
No comments:
Post a Comment