Friday, August 31, 2012

தரமான பாக்கேஜிங் செய்வது எப்படி ? கண்காட்சி


தரமான பாக்கேஜிங்  செய்வது எப்படி ? கண்காட்சி

தரமான பொருட்கள் தயாரித்தால் மட்டுமே போதாது, எந்த பொருளையும் கெடாமல் நீண்டநாட்கள் வைத்திருக்க வேண்மடுமானல் நல்ல பாக்கேஜிங் மிகவும் முக்கியம். இது சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அது சம்பந்தமான கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். செப்டம்பர் 11 முதல் 13 வரை இது சம்பந்தமான ஒரு கண்காட்சி மும்பையில் நடக்கவுள்ளது. இதில் 25 நாடுகளை சேர்ந்த 350 கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. 150 மிஷின்கள் உங்களுக்கு நேரடியான லைவ் டெமோ செய்து காண்பிக்கவுள்ளன. இதில் உணவுப் பொருட்கள், இனிப்பு, காரம், பால், பால் பொருட்கள் போன்றவை பாக்கேஜிங் எப்படி செய்யப்படவேண்டும் என்று கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புக்கள் இருக்கும். இந்த தொழில்களில் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். www.koelnmensse-india.com<http://www.koelnmensse-india.com>

Wednesday, August 29, 2012

பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி பதில்

கண்ணப்பன்
சென்னை

கேள்வி
பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்
பால் ஏற்றுமதி என்பது சிறிது கடினமான ஒன்று தான். அதை சிறிய அளவில் செய்ய இயலாது. ஏனெனில் பால் சேகரிப்பு, பாதுகாப்பு, குளிர்சாதன பெட்டிகளில் வைத்து அனுப்புவது என்று இது பெரிய அளவு செய்யக் கூடிய தொழில். ஆதலால் அதிகமாக அதாவது மீதப்படும் பால், பால் பொருட்கள் தயாரிப்பதில் உபயோகப்படுத்தப்படுகிறது. பால் அதிகம் ஏற்றுமதி ஆகாவிட்டாலும், பால் பொருட்கள் ஏற்றுமதி அதிகம் இருக்கிறது. சரி, தமிழ்நாடு எவ்வளவு பால் உற்பத்தி செய்கிறது என்று தெரியுமா? ஒரு வருடத்திற்கு 6.79 மில்லியன் டன்கள். இந்தியாவில் உத்திரபிரதெசம் 20.20 மில்லியன் டன்களும், ராஜஸ்தான் 12.33 மில்லியன் டன்களும் உற்பத்தி செய்கின்றன. பால் துறையில் புரட்சி செய்த குஜராத் எங்கு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? 9.39 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்கிறது.


அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.


அன்னாசி 

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 1415000 டன்கள் அன்னாசி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் வருடத்திற்கு சுமார் 2000 டன்கள் தாம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் மேற்கு வங்காளம் தான். தமிழ்நாடு கடைசியில் தான் இருக்கிறது. அண்ணாச்சி வாங்க அன்னாசி பயிரிடலாம்.

Monday, August 27, 2012

சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா?


சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா? 

சைனாவில் தற்போது விற்பனையில் மிகவும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சைனா எதை உற்பத்தி செய்தாலும் அது லட்சக்கணக்காக இருக்கும் அல்லது கோடிக்கணக்காக இருக்கும். இதனால் குவாலிட்டியில் சிறிது காம்ரமைஸ்  செய்தாலும், விலை குறைத்து கொடுத்து உலகளவில் போட்டி போட அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது. ஆனால் சைனா பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலம் தான் உழைக்கும் என்பதை தற்போது பலரும் உணர்ந்தார்களோ என்னவோ, அந்த நாட்டு விற்பனையில் தேக்கம் இருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தரமான பொருட்கள் தயாரிக்கும் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். சைனாவில் தேக்கம் ஒரு வாய்ப்பா? இல்லை உலகத்திற்கே ஒரு அவசர அறிவிப்பா என்று வருங்காலத்தில் தெரியும். 

தரைவிரிப்புக்கள் ஏற்றுமதி



தரைவிரிப்புக்கள் ஏற்றுமதி

கைவேலைப்பாடான தரைவிரிப்புகள் தயாரிப்பதில் இந்தியா மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக காஷ்மீர் தரைவிரிப்புகள் கண்ணை கவரும், மனதையும் கவரும், பர்சையும் கவரும். உள்நாட்டில் அதிகம் பெரிய பணக்காரர்களால் மட்டுமே வாங்கப்படும் இந்த வகை தரைவிரிப்புகள் வெளிநாடுகளில் வீடுகளை அலங்கரிக்க எல்லோராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த வருடம் ஜுலை மாதம் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சைனா, லத்தீன் அமெரிக்க நாடுகள் தற்போது இந்தியாவிலிருந்து வாங்குவதை கூட்டியுள்ளன. அதே சமயம் இதுவரை அதிகம் வாங்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க போன்றவை சிறிது சுணக்கம் காட்டுகின்றன. நாடுகளே தத்தளிக்கும் போது தரைவிரிப்புகள் தேவையா? என்று நினைத்திருக்கலாம். பெரிய ஊர்களுக்கு செல்லும் போது காஷ்மீர் எம்போரியத்திற்கு ஒரு முறை சென்று பாருங்கள். அப்போது தெரியும் அதன் அழகு. தரைவிரிப்புகள் ஏற்றுமதிக்கென்றே தனியாக ஒரு ஏற்றுமதி முன்னேற்ற கழகம் இந்தியாவில் இருக்கிறது.

Friday, August 24, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும்   இணையதளம்


ஸ்டீல் இண்டஸ்டீரிக்கு செய்திகள் மிகவும் முக்கியம். அது உள்நாட்டு வியாபாரமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு வியாபாரமாக இருந்தாலும் சரி. உலகளவில், உள்நாட்டு அளவில் ஸ்டீல் தொழில் பற்றிய செய்திகள், அது சம்பந்தப்பட்ட டைரக்டரிகள், அளவுகளை கன்வர்ட் செய்ய உபயோகப்படும் டேபிள்கள், நாடுவாரியான விபரங்கள் என்று பல்வேறு செய்திகள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உபயோகமான இனையதளம்.


தேங்காய் உபயோகத்தில் இந்தியா முதலிடம், ஆதலால் ஏற்றுமதி குறைவு.


தேங்காய் உபயோகத்தில் இந்தியா முதலிடம், ஆதலால் ஏற்றுமதி குறைவு. 

இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. 

இங்கு ஒரு ஹெக்டேரில் 8,303 தேங்காய்கள் விளைகின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 7,223 தேங்காய்கள் விளைகின்றன.உலகளவில், தேங்காய் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1,495 கோடி தேங்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மொத்த தேங்காய் உற்பத்தியில் 95 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. 100 தேங்காய் உற்பத்தி செய்தால் 95 யை இங்கே நாம் உபயோகப்படுத்தி விடுகிறோம்.

உலகளவில், தேங்காய் இறக்குமதியில் மலேசியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, ஆண்டுக்கு சராசரியாக 140 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்கிறது.

இந்தியா தேங்காயை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. இலங்கையில் தேங்காய் உற்பத்தி, தமிழ்நாட்டை விட, குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவை விட, இலங்கை மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.

Thursday, August 23, 2012

பருப்பில்லாத ரசம்


பருப்பில்லாத ரசம்  

மத்திய அரசு பருப்பு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததால் அனைத்து பருப்பு விலையிலும், உயர்வு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகும் பருப்பை, மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆதலால் உள்நாட்டில் விலை கூடி வருகிறது.  இன்னைக்கு ஸபெஷல் மெனு பருப்பில்லாத ரசம் வைப்பா...

Tuesday, August 21, 2012

வெங்காய தண்டு போல அலேக்


வெங்காய தண்டு போல அலேக்

ஒசூரில் உற்பத்தியாகும் வெங்காய தண்டுகள் ஜெர்மனி, சிங்கப்பூருக்கு, பல்வேறு வகை உணவு பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதியாகிறது. ஓசூர் தாலுகாவில் காணப்படும் சூழ்நிலை மற்றும் நல்ல மண்வளம் பல்வேறு அரிய வகை விவசாய பயிர்களை சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கு உற்பத்தியாகும் வெங்காய தண்டுகளும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது கூடுதல் சிறப்பாக உள்ளது. ஓசூர் அருகே ஹெச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசலு. இவர் பசுமை குடோனில் (கீரின்ஹவுஸ்) சாகுபடி செய்த வெங்காய தண்டுகளை ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். "ஆனியன் சைவ்ஸ்' வகை வெங்காய செடிகளை சாகுபடி செய்வதின் மூலம் வளரும் தண்டுகள் மற்றும் இலையை அறுவடை செய்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத், கர்நாடகா, ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆனியன் சைவ்ஸ், ஆலியம் சினோபுராசம் என்ற ரெட் ஆனியன், ஒயிட் ஆனியன் வெங்காய செடிகள், நல்ல மனமும் சுவையும் கொண்டவை.தற்போது, முதல் முறையாக ஓசூர் பகுதியில் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வெங்காய தண்டுகளில் அதிகளவு வைட்டமின், தாதுஉப்புகள், புரதச்சத்துகள் உள்ளன. அதனால், ஜெர்மனி, சிங்கபூர் மற்றும் அரேபியா நாடுகளில் பிரைட் ரைஸ், அசைவம், சைவம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர்.இந்த வெங்காய தண்டுகளை சாப்பிட்டால் உடலில் அதிகளவு சூட்டை ஏற்படுத்துவதால், குளிர்நிறைந்த ஜெர்மன் மக்கள், உடலில் சூடு வருவதற்காக இந்த வெங்காய தழைகளை அதிகளவு சாப்பிடுகின்றனர்.இந்த வெங்காய செடிகளை, ஒரு முறை சாகுபடி செய்தால், 20 ஆண்டு வரை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய பசுமை குடோன் அமைக்க, 24 லட்சம் ரூபாய், சாகுபடி, பராமரிப்பு செலவு உட்பட மொத்தம், 40 லட்சம் ரூபாய் செலாவகிறது. ஏக்கருக்கு இரண்டரை டன் வரை தழைகளை உற்பத்தி செய்யலாம். ஆனால், அவற்றில் தரம் வாய்ந்த ஒரு டன் தழைகளை மட்டுமே தரம் பிரித்து ஏற்றுமதி செய்ய முடியும். ஒரு கிலோவுக்கு, 600 ரூபாய் வரை கிடைக்கும் என்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. 

Monday, August 20, 2012

சீரகம் ஏற்றுமதியும் உயர்வு, விலையும் உயர்வு


சீரகம் ஏற்றுமதியும்  உயர்வு, விலையும் உயர்வு 
 
உலக அளவில் சர்வதேச அளவில், இந்திய சீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டில், குஜராத் மாநிலத்தில் தான் சீரகம் அதிகம் விளைகிறது. ஆனால் அங்கு மழை குறைவால் உற்பத்தி குறைந்து விலை கூடி வருகிறது. ஏற்றுமதியில்  உலகளவில், சீரக உற்பத்தியில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்நாடுகளில், இதன் உற்பத்தி குறைந்துள்ளதால், பல நாடுகள், இந்திய சீரகத்தை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இதனாலும், இதன் விலை உயர்ந்துள்ளது. உலகளவு சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சீரகத்தின் விலை குறைவாக உள்ளது. 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில் சீரக உற்பத்தி, 40 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010-11ம் பருவத்தில் 29 லட்சம் மூட்டைகளாக இருந்தது. ஒரு மூட்டை என்பது 55 கிலோ ஆகும். சென்ற ஏப்ரல் மாதத்தில், 2,500 டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது

என்னுடைய வலைதளத்திருக்கு வரவிருக்கும் 50,000 தாவது வாசகர் யார் ?

என்னுடைய வலைதளத்திருக்கு  வரவிருக்கும் 50,000 தாவது வாசகர்  யார் ?

Sunday, August 19, 2012

ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?


ஏற்றுமதியில் 360 பில்லியன் டாலரை எட்டுவோமா இந்த வருடம்?

இந்த வருடம் ஏற்றுமதி டார்கெட்டாக 360 பில்லியன் டாலர் இருக்கிறது. ஆனால், உலகளவு சுணக்கத்தால் அதை எட்டுவது என்பது இயலாத காரியம் போலத் தோன்றுகிறது. மாதாமாதம் ஏற்றுமதி சென்ற வருடம் இதே காலத்தை விட குறைந்து வருகிறது. இலக்கை எட்ட முடியாது போலத் தான் தோன்றுகிறது. ஆனால் சிறிய ஏற்றுமதியாளர்களும், புதிய ஏற்றுமதியாளர்களும் இந்த இலக்குகளைப் பற்றி கவலைப்படவேண்டாம். அது அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

Saturday, August 18, 2012

நாங்கள் இறக்குமதி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். எங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?


ராமன்
சென்னை

கேள்வி

நாங்கள் இறக்குமதி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். எங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?

பதில்

நீங்கள் இறக்குமதி செய்த பொருளைத் அப்படியே ஏற்றுமதி செய்தால், இறக்குமதி செய்த போது கட்டிய கஸடம்ஸ்  டியூட்டியை திரும்ப பெறலாம். இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு தான் எக்சைஸ்  டியூட்டி கட்ட வேண்டும். நீங்கள் இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் உபயோகப்படுத்தாமல் அப்படியே ஏற்றுமதி செய்தால் எக்சைஸ் டியூட்டியும் கட்ட வேண்டாம்.

Thursday, August 16, 2012

உங்கள் டிரேட் மார்க்கை எப்படி பதிவு செய்வது?


உங்கள் டிரேட் மார்க்கை எப்படி பதிவு செய்வது?
கேள்வி பதில்

ரகுராமன்
கரூர்

கேள்வி

நான் எங்களது தயாரிப்புக்களுக்கு ஒரு டிரேட் மார்க்  வைக்க விரும்புகின்றேன். இது எங்களுடைய தயாரிப்புக்களை பிரபலப்படுத்த ஏற்பட்ட ஒரு எண்ணம். எப்படி செயல்படுத்துவது?


பதில்

நீங்கள் வைக்க விரும்பும் டிரேட் மார்க்கை யாரும் பயன்படுத்தியிருக்காதபட்சத்தில் நீங்கள் தாராளமாக அதை உங்கள் தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், ரிஜிஸடர் செய்து கொள்ளலாம். நீங்கள் வைக்க விரும்பும் பெயர் முன்னமே இருக்கிறதா என்று சர்ச் செய்து பார்த்துக் கொள்ளலாம். அதற்காக செல்ல வேண்டிய இணையதளம்www.ipindiaonline.gov.in/etmr/publicsearch/searchmain.aspx. உங்களது டிரேட் மார்க்கை ஒரு பிரிவில் ரிஜிஸ்டர் செய்ய ரூபாய் 3500 செலுத்த வேண்டும். சினிமாவிற்கு பெயர் ரிஜிஸ்டர் செய்து வைப்பது போல ரிஜிஸ்டர்  செய்து வைக்க முடியாது. நீங்கள் பதிந்து கொண்டால் அந்த டிரேட் மார்க்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

Wednesday, August 15, 2012

யார்ன் கண்காட்சி



யார்ன் கண்காட்சி

பேஷன் உலகிற்கு மிகவும் முக்கியம் அழகான வகை வகையான துணிகள். அந்த துணிகளுக்கு மிகவும் முக்கியமானது நூல் (யார்ன்). அந்த யார்ன் உலகில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன, வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வரும் ஆகஸட் 31, செப்டம்பர் 1, 2 தேதிகளில் திருப்பூரில் இது சம்பந்தமாக “யார்னெக்ஸ்” என்ற கண்காட்சி நடக்கவுள்ளது.
www.yarnex.in என்ற இணையதளத்தை சென்று பாருங்கள் மேலும் விபரங்களுக்கு.

Tuesday, August 14, 2012

பழங்கள்,காய்கறிகள் உற்பத்தி


பழங்கள்,காய்கறிகள் உற்பத்தி

பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சீனாவிற்கு அடுத்தபடியாக. ஆனால் உற்பத்தி அளவை வைத்துப் பார்க்கும் போது சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவின் 
2010-11ம் வருடம் உற்பத்தி 240 மில்லியன் டன்களாக இருந்தது. ஆனால் சீனாவின் 2007-08ம் ஆண்டு உற்பத்தியே 680 மில்லியன் டன்களாக இருந்தது. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்? 


Monday, August 13, 2012

பதன்கோட் சேலைகள்


பதன்கோட் சேலைகள்

பஞ்சாபில் உள்ள பதன்கோட் எம்பிராயிடரி சேலைகளுக்கு உலகப்புகழ் பெற்றது. மேலும் இந்த ஊர் கைவினைப்பொருட்களுக்கும் பெயர் பெற்றது. இவர்கள் தற்போது தங்கள் திறைமைகளை சிறப்பாக வெளிப்படுத்த கிளஸடர் முறையை அமல்படுத்தவுள்ளார்கள். மேலும், தங்களுக்கு வழிகாட்ட என்.ஐ.எப்.டி., யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில்) படித்த மாணவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவுள்ளார்கள். தமிழ்நாட்டில் இது போன்று சிறப்பான கைவினைப் பொருட்கள் செட்டிநாடு பகுதிகளில் தயாராகி வந்தது. அது நூறு வருடங்களுக்கு முன்பு பர்மா, சிலோன் ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்தது. ஆனால் தற்போது அது முற்றிலும் அழியும் நிலை வந்து விட்டது. 

Sunday, August 12, 2012

ஏற்றுமதிக்கு உதவும் நண்பன்


ஏற்றுமதிக்கு உதவும் நண்பன்

ஏற்றுமதிக்கு மிகவும் உதவுவது வாங்குபவர், விற்பவர் சந்திப்பு தான். கன்பெடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்டிரி அடிக்கடி இது போல வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துக்கிறது. அதில் நீங்களும் கலந்து கொண்டால் அது உங்கள் வியாபாரத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும். சி.ஐ.ஐ. யின் மேற்கு பிராந்திய பிரிவு சென்ற வருடம் மட்டும் 5 சந்திப்புக்களை நடத்தியுள்ளது, 400 குறுந்தொழில் செய்பவர்கள் பங்கு பெற்றனர். அடிக்கடி இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள், வெற்றி பெறுங்கள்.

Thursday, August 9, 2012

ஆர்கானிக் உணவு ஏற்றுமதி


ஆர்கானிக் உணவு ஏற்றுமதி 

ஆர்கானிக் உணவு மார்க்கெட் உலகளவில் வளர்ந்து வருகிறது. இந்த வருடம் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து 100 பில்லியன் டாலர்களை எட்டும். அதாவது 400,000 கோடி ரூபாய்களை எட்டும். ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வதால் என்ன லாபம்? பொருட்களின் விலையில் கூடுதலாக 25 சதவீதம் வரை கூடுதலாகக் கிடைக்கிறது.

Wednesday, August 8, 2012

நேற்று வாங்கிய பூட்டு


நேற்று வாங்கிய பூட்டு

நேற்று கடைக்கு சென்று ஒரு பூட்டு வாங்கினேன். மிகவும் நேர்த்தியாக இருந்தது, விலையும் ரூபாய் 50 தான். விலை குறைந்துள்ளதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டேன். கடைக்காரர் சொன்னார் “இது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றார்”. சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை உடனே ஞாபகத்திற்கு வந்தது. இந்தியாவில் பூட்டுக்கு மிகவும் பெயர் பெற்ற உத்திரப்பிரேசத்தில் உள்ள அலிகரில் உள்ள பூட்டு கம்பெனிகள் எல்லாம் சீனா இறக்குமதியால் பூட்டு போட வேண்டிய நிலை என்று குறிப்பிடும் கட்டுரை தான் அது. ஒன்று நாம் நம் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது பெருமளவு உற்பத்தி செய்ய வேண்டும். அது தான் விலையை குறைத்து இறக்குமதியை குறைக்க வழி வகுக்கும்.செய்வோமா?

Tuesday, August 7, 2012

2011ம் வருடமும் ஏற்றுமதியும் - வளர்ச்சி சதவீதத்தில் சீனாவை முந்திய இந்தியா


2011ம் வருடமும் ஏற்றுமதியும் - வளர்ச்சி சதவீதத்தில் சீனாவை முந்திய இந்தியா 

2011ம் வருடம் உலகளவில் ஏற்றுமதியில் அதிக அளவு வளர்ச்சியை பெற்றது இந்தியா தான் என்பது அறிந்து நாம் அனைவரும் பெருமைப்படலாம். 2011ம் வருடம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 16.1 சதவீதமாக இருந்தது. இதே சமயத்தில் சைனாவின் வளர்ச்சி 9.3 சதவீதமாக இருந்தது. சைனாவை இதிலாவது முந்தினோமே என்று சந்தோஷப்பட வேண்டியது தான். 

Monday, August 6, 2012

காயர் போர்டு கண்காட்சி


காயர் போர்டு கண்காட்சி

காயர் போர்டு ஆகஸ்ட் 12 முதல் 16 வரை உலகளவிலான கண்காட்சியை கொச்சியில் நடத்தவுள்ளது. இந்தக் கண்காட்சியில் காயர் சம்பந்தப்பட்ட புதிய டிரண்ட்கள் என்னென்ன வந்துள்ளது, எந்த வகையில் மிஷின்களை உபயோகித்து தயாரிப்பை இன்னும் அதிகமாக்கலாம் என்றும், வாங்குபவர்- விற்பவர்கள் சந்திப்புக்களும், செமினார்களும் நடைபெறவுள்ளது. காயர் தயாரிப்பில் உள்ளவர்களும், ஏற்றுமதியாளர்களும் கலந்து கொள்ள வேண்டிய கண்காட்சியாகும்.

ஏற்றுமதி உலகம் இணையதளத்தை பற்றி வாசகர் கருத்து


ஏற்றுமதி  உலகம் இணையதளத்தை பற்றி வாசகர் கருத்து 

அய்யா

நான் கடந்த ஒரு வருடமாக நான் இந்த வலைதளத்தின் வாசகனாக இருந்து வருகிறேன். இந்த   வலைதளத்தில் பல வியப்பான தகவல்களும் ஆச்சாpய முட'டும் எண்ணற்ற செய்திகளும் கிடைக்கப் பெற்றேன்.

நம்முடைய வலைதளம் ஏற்றுமதியாளர்களுக்கு  பல அறிய தகவல்களை வழங்குகிறது. புதிய ஏற்றுமதியாளர்களுக்கு  ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. தங்களின் வலைதளத்தை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் ஒரு வெற்றி பெற்ற ஏற்றுமதியாளராக விளங்க முடியும். தங்களுடைய இந்த பணி என்றெனறும் தொடர வேண்டும். ஏராளமான வாசகா;களை வாசிக்க வைத்து பல ஏற்றுமதியாளா;களை உருவாக்க வேண்டும்.

எற்றமதியில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதற்கு தங்களைப் போன்றவர்களால்  மட்டுமே முடியும். தங்களின் வலைதளத்தில் தினந்தோறும் புதிய தகவல்களை பதிய வேண்டும். தமிழ் வலைதளத்தில் 142ம் இடத்தில் இருக்கும் தங்கள் வலைதளம் முதல் 50 இடத்துக்குள் வர வேண்டும். அனுதினமும் இருபது வாசகர்களை  கொண்டிருந்த நம்முடைய வலைதளம் தற்போது சராசரி 300 வாசகர்களுடன்  வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அது மென்மேலும் வளர்ந்து  தினமும்  2000  வாசகர்களை எட்ட வேண்டும். தினம் ஒரு தகவல் என்ற முறையில் அதிக பதிவுகளை செய்யும்போது அதிக வாசகர்களை  பெற முடியும்.

கீழ்கண்ட ஆலோசனைகளை சமர்பிக்கிறேன் 

1.ஆரம்பகால ஏற்றுமதியாளர்களின்  அனுபவங்களை பகிர்ந்து  கொள்வது 
2.வெற்றி பெற்ற ஏற்றுமதியாளர்களின்  கடந்து வந்த பாதைகளை எழுதுவது 
3.வெற்றி பெற்ற நிறுவனங்களை அறிமுகப்படுத்துவது 
4.ஏற்றுமதி மேம்பாட்டு நிறவனங்களின் புதிய அறிமுகங்கள் அரசு துறையின் அறிவிப்புகள் 
5. சர்வதேச  சந்தை பொருட்காட்சிகளின் அறிவிப்புகள் 
6.சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருட்களை விளம்பரபடுத்துதல்
7.இந்தியா இதுவரை ஏற்றுமதி செய்யாத ஆனால் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள நாடுகளை அறிவித்து அதற்கான வாய்ப்புகளை விளம்பரபடுத்துதல்
8.ஏற்றுமதி நாடுகளுடன் போட்டி போட நம் பொருட்களின் தரத்தை உயர்த்த  ஆலோசனை தெரிவித்தல்

அன்புடன்
சு. துரைசிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாடு


Sunday, August 5, 2012

ஏற்றுமதிக்கு பேஸ்புக் மார்க்கெட்டிங்


ஏற்றுமதிக்கு பேஸ்புக் மார்க்கெட்டிங்

பேஸ்புக், பிக்கி (FICCI) ஆகியவை இணைந்து சிறிய மற்றும் நடுத்தர இஞ்சினியரிங் கம்பெனிகளை டார்கெட் செய்து அவர்களுக்கு இண்டர்நெட் மூலமாக ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று கற்றுத் தர உள்ளது. முதலில் பரிதாபாத் மற்றும் ஹைதரபாத் ஆகிய ஊர்களில் இருக்கும் 600 உற்பத்தியாளர்களை இணைத்து இந்த மார்க்கெட்டிங் காம்பெயினை நடத்தவுள்ளது. பின்னர் இன்னும் 4 ஊர்களில் நடைபெறும். இது போல அமெரிக்கா, யு.கே., ஆகிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் வர்த்தக சபைகளுடன் இணைந்து நடத்திய செமினார்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததால் அதைத் தொடர்ந்து பேஸ்புக்கில் உலகில் அதிக அளவு உறுப்பினர்களை உடைய இந்தியாவிலும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதாவது பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் 50 டாலர் மதிப்புள்ள பேஸ்புக் வவுச்சர்களும், மார்க்கெட்டிங் உத்திகள் பற்றிய புத்தகங்களும் கொடுக்கவுள்ளார்கள்.  தமிழ்நாட்டுக்கும் வருவார்களா? யார் கூப்பிடுவார்கள். 

Thursday, August 2, 2012

ஏற்றுமதி உலகம் ப்ளாக்கில் ஜூலை மாதம் எழுதிய தலைப்புக்கள்


ஏற்றுமதி உலகம் ப்ளாக்கில் ஜூலை மாதம் எழுதிய தலைப்புக்கள்

  • இந்திய உணவு வகைகள் துபாயில்

  • இந்திய சேலைகள்

  • கோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும், மாம்பழமும்

  • வெங்காயம் ஏற்றுமதி 

  • கேள்வி பதில்
தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா?

  • பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி

  • தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள் 

  • ஹைதராபாத் கராச்சி பேக்கரியும், நிலான் என்டர்பிரைசும்

·         ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி?



  • ஏற்றுமதி கேள்வி பதில்
      ஏற்றுமதிக்கான ஆர்டர் வாங்கும் முன்பு அதற்கான காண்டிராக்டை போடும் வழிகள் என்னென்ன?

      ஏற்றுமதிக்கு உதவும்  இணையதளம்

  • எலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 

  • காய்கறிகள் வாங்குவதற்கு

  • சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி

  • வெளிநாட்டில் இருந்து டெக்னீஷியன்களை இந்தியாவிற்கு கூட்டி வர முடியுமா? அவர்களுக்கு வெளிநாட்டு பணமாக கொடுக்க முடியுமா

  • ஏற்றுமதியில் LIBOR  என்றால் என்ன?

  • உலகளவில் ரீடெய்ல் கம்பெனிகளின் விற்பனைகள்

  • பாசுமதி அரிசி ஏற்றுமதி 

·         சணல் பொருட்கள் ஏற்றுமதி


  • அலங்கார மீன் ஏற்றுமதி

  • இன்கோடெர்ம்ஸ்  என்றால் என்ன? அதன் பயன் என்ன?

  • ஏற்றுமதி  சந்தேகங்கள் 


  • 10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி

  • வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

  • செக்கோஸ்லோவோக்கியா வாங்கும் குர்கான் துணிகள்

  • மாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா

  • ஏற்றுமதி கேள்வி பதில்

  • கென்யாவிற்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உள்ளது?

Wednesday, August 1, 2012

இந்த வருடம் ஏற்றுமதி பாலிசியில் இருக்கும் அயிட்டம் அடுத்த வருடம் இல்லாமல் போய் விடுமா?


கேள்வி பதில்

மது
திருவெறும்பூர்

கேள்வி

இந்த வருடம் ஏற்றுமதி பாலிசியில் இருக்கும் அயிட்டம் அடுத்த வருடம் இல்லாமல் போய் விடுமா? இதற்கு வாய்ப்புக்கள் உண்டா?


பதில்

ஏற்றுமதிக்கு நிலையான பாலிசி உண்டு. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வருடம் ஒரு முறை பாலிசி மாறிக்கொண்டிருந்தது. அதனால் இந்தியாவில் இருந்து சரக்குகளை வாங்குவதற்கே பல நாடுகள் பயந்தன. பின்னர் அது மூன்று வருடத்திற்கு ஒரு பாலிசி என்ற முறையில் மாற்றப்பட்டது. தற்போது அது ஐந்து வருடத்திற்கு ஒரு பாலிசி என்ற வகையில் இருக்கிறது. அதே சமயம் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அதாவது சில சமயம் சில பொருட்கள் நமது நாட்டிற்கு தேவைப்பட்டால் அதற்காக ஏற்றுமதியை தடை செய்ய வேண்டுமென்றால் அரசாங்கம் செய்யும். உதாரணம் வெங்காயம், கோதுமை, ஜீனி, இரும்பு தாது போன்றவை. அல்லது ஏற்றுமதி பொருட்களின் ஏற்றுமதியை குறைக்க வரி விதிக்கப்படும்.