Friday, August 24, 2012

தேங்காய் உபயோகத்தில் இந்தியா முதலிடம், ஆதலால் ஏற்றுமதி குறைவு.


தேங்காய் உபயோகத்தில் இந்தியா முதலிடம், ஆதலால் ஏற்றுமதி குறைவு. 

இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. 

இங்கு ஒரு ஹெக்டேரில் 8,303 தேங்காய்கள் விளைகின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 7,223 தேங்காய்கள் விளைகின்றன.உலகளவில், தேங்காய் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1,495 கோடி தேங்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மொத்த தேங்காய் உற்பத்தியில் 95 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. 100 தேங்காய் உற்பத்தி செய்தால் 95 யை இங்கே நாம் உபயோகப்படுத்தி விடுகிறோம்.

உலகளவில், தேங்காய் இறக்குமதியில் மலேசியா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, ஆண்டுக்கு சராசரியாக 140 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்கிறது.

இந்தியா தேங்காயை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. இலங்கையில் தேங்காய் உற்பத்தி, தமிழ்நாட்டை விட, குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவை விட, இலங்கை மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.

No comments:

Post a Comment