Tuesday, August 21, 2012

வெங்காய தண்டு போல அலேக்


வெங்காய தண்டு போல அலேக்

ஒசூரில் உற்பத்தியாகும் வெங்காய தண்டுகள் ஜெர்மனி, சிங்கப்பூருக்கு, பல்வேறு வகை உணவு பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதியாகிறது. ஓசூர் தாலுகாவில் காணப்படும் சூழ்நிலை மற்றும் நல்ல மண்வளம் பல்வேறு அரிய வகை விவசாய பயிர்களை சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கு உற்பத்தியாகும் வெங்காய தண்டுகளும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது கூடுதல் சிறப்பாக உள்ளது. ஓசூர் அருகே ஹெச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசலு. இவர் பசுமை குடோனில் (கீரின்ஹவுஸ்) சாகுபடி செய்த வெங்காய தண்டுகளை ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். "ஆனியன் சைவ்ஸ்' வகை வெங்காய செடிகளை சாகுபடி செய்வதின் மூலம் வளரும் தண்டுகள் மற்றும் இலையை அறுவடை செய்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத், கர்நாடகா, ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆனியன் சைவ்ஸ், ஆலியம் சினோபுராசம் என்ற ரெட் ஆனியன், ஒயிட் ஆனியன் வெங்காய செடிகள், நல்ல மனமும் சுவையும் கொண்டவை.தற்போது, முதல் முறையாக ஓசூர் பகுதியில் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வெங்காய தண்டுகளில் அதிகளவு வைட்டமின், தாதுஉப்புகள், புரதச்சத்துகள் உள்ளன. அதனால், ஜெர்மனி, சிங்கபூர் மற்றும் அரேபியா நாடுகளில் பிரைட் ரைஸ், அசைவம், சைவம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர்.இந்த வெங்காய தண்டுகளை சாப்பிட்டால் உடலில் அதிகளவு சூட்டை ஏற்படுத்துவதால், குளிர்நிறைந்த ஜெர்மன் மக்கள், உடலில் சூடு வருவதற்காக இந்த வெங்காய தழைகளை அதிகளவு சாப்பிடுகின்றனர்.இந்த வெங்காய செடிகளை, ஒரு முறை சாகுபடி செய்தால், 20 ஆண்டு வரை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய பசுமை குடோன் அமைக்க, 24 லட்சம் ரூபாய், சாகுபடி, பராமரிப்பு செலவு உட்பட மொத்தம், 40 லட்சம் ரூபாய் செலாவகிறது. ஏக்கருக்கு இரண்டரை டன் வரை தழைகளை உற்பத்தி செய்யலாம். ஆனால், அவற்றில் தரம் வாய்ந்த ஒரு டன் தழைகளை மட்டுமே தரம் பிரித்து ஏற்றுமதி செய்ய முடியும். ஒரு கிலோவுக்கு, 600 ரூபாய் வரை கிடைக்கும் என்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. 

No comments:

Post a Comment