Saturday, June 22, 2013

தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற

தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற www.learningexports.com

ஆங்கிலத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்திகளை தெரிந்து கொள்ள

ஆங்கிலத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்திகளை தெரிந்து கொள்ள சென்று பாருங்கள்.

http://www.indiaexportnews.blogspot.in/

Wednesday, June 19, 2013

டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி

டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி

இந்தியாவின் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி குறைந்து வருகிறதுஅதே சமயம் அருகில் உள்ள நாடுகளான பாகிஸ்தான்பங்களாதேஷ்இலங்கை ஆகிய நாடுகளின் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி கூடி வருகிறதுஇது நமக்கு ஒரு கவலைக்குரிய விஷயம் தான்போட்டி கூடி வருகிறதேபல முன்னேறிய நாடுகளில் துணிமணிகள் வாங்கும் போது அதில் மேட் இன் பங்களாதேஷ் என்று பெரும்பாலும் போட்டிருக்கிறதுபாகிஸ்தானின் இந்த வருடம் நவம்பர் மாதம் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி 23 சதவீதம் கூடியுள்ளதுஇந்திய டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தியாளர்களேகுறை என்ன என்று கண்டுபிடித்த அதை களைய முயற்சி செய்யுங்கள்.

Tuesday, February 19, 2013

அதிகமாக வரும் கேள்வி


அதிகமாக வரும் கேள்வி

கேள்வி

எனக்கு ஏற்றுமதித் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஏற்றுமதி பற்றி அடிப்படையிலிருந்து ஈமெயில் மூலமாக தெரிவிக்க முடியுமா?

பதில்

எப்படி இது போன்ற கேள்விகளுக்கு பதில் எழுதுவது. ஏற்றுமதித் துறையில் உங்களுக்கு ஆர்வம் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் ஏற்றுமதி என்பதும் மற்ற தொழில்களைப் போன்றது தான். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் ஆரம்பிப்பதற்கு முன். நிறைய ஏற்றுமதி பற்றி படியுங்கள். நிறைய புத்தகங்கள் தமிழில், ஆங்கிலத்தில் உள்ளன. பின்னர் ஏதாவது குறிப்பிட்ட சந்தெகம் இருந்தால் ஈமெயில் செய்யுங்கள். இது போன்ற பொதுப்படையான கேள்விகளை அனுப்பாதீர்கள்.

Sunday, February 17, 2013

பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?


பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் அதிகம் செய்யப்படுவது எது தெரியுமா?  ஆப்பிள் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்ற எண்ணமும், வேறு ஒருவர் வீட்டுக்கு செல்லும் போது ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு சென்றால் போது அது தொந்தரவு இல்லாதது என்ற எண்ணமும் தான். இந்தியா 2011ம் வருடம் மட்டும் 162000 டன்கள் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளது. அதாவது 16,20,00,000 கிலோக்கள் (16 கோடியே 20 லட்சம் கிலோக்கள்). சைனா, அமெரிக்க, சிலி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

மற்ற பழங்களில் பியர் 18,000 டன்களும், ஆரஞ்சு 10,000 டன்களும், கிவி 3200 டன்களும், கிரேப் 2600 டன்களும், பிளம் 670 டன்களும் இறக்குமதி செய்துள்ளோம்.

வேறு வீடுகளுக்கு செல்லும் போது ஏன் இந்தியாவில் அதிகமாக உற்பத்தியாகும் பழங்களை உடம்புக்கு கெடுதல் இல்லாத பழங்களை வாங்கி செல்லக் கூடாது? அதாவது கெய்யா, பப்பாளி, திராட்சை போன்றவை. ஆப்பிள் இறக்குமதி குறையுமே? 

பழங்களை பற்றி நிறைய பேசி டயர்டாக இருக்கு., ஒரு ஆப்பிள் ஜுஸ சர்க்கரை குறைத்து போடுப்பா!!!!

Monday, February 4, 2013

டெக்ஸடைல்ஸ் மிஷினரி ஏற்றுமதி



டெக்ஸடைல்ஸ் மிஷினரி  ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து டெக்ஸடைல்ஸ்  மிஷினரி ஏற்றுமதி கடந்த வருடத்தில் 14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய வருடத்தை விட 17 சதவிதம் கூடுதலாகும். வியட்நாம், பாகிஸ்தான், எகிப்து, ஈரான், சைனா ஆகியவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் ஆகும். ஸ்பின்னங் மிஷினரி, ஸபேர் பார்ட்ஸ், யார்ன் புராசசிங் மிஷின்ஸ்  ஆகியவை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Sunday, February 3, 2013

மருந்துப் பொருட்கள் கண்காட்சி


மருந்துப் பொருட்கள் கண்காட்சி

மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகத்திலேயே புரடக்ஷன் வால்யூமை வைத்துப் பார்த்தால் 4வது இடத்தில் வருகிறது. உள்நாட்டில் உபயோகிப்பதில் உலகத்திலேயே 13வது இடத்தில் வருகிறது. உலகத்திலேயே ஜெனிரிக் பார்முலேசன்ஸ்  ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. 150 நாடுகளுக்கு மேலாக இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக்திற்கு தேவையான மீசல்ஸ்  தடுப்பூசியில் 40 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புடையது இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறை. மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம் வரும் ஏப்ரல் மாதம் 24 முதல் 26 வரை மும்பையில் iPHEX 2013 என்ற மருத்துப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் கண்காட்சியை நடத்துவுள்ளது. இதில் 400 உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் இருந்து 5000 விசிட்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, January 30, 2013

ஏற்றுமதில் டாக்குமெண்டில் தவறுகள்


ஏற்றுமதில் டாக்குமெண்டில் தவறுகள்

எல்.சி. மூலமாக நீங்கள் ஏற்றுமதி செய்யும் போது பொருட்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், நீங்கள் தயாரிக்கும் எல்.சி. டாக்குமெண்ட்களூம் அவ்வளவு சிறப்பாக இருக்கவேண்டும். தவறில்லாமல் எல்.சி. படி இருக்க வேண்டும். இல்லாவிடில் உங்களுக்கு ஏற்றுமதிக்கண பணம் கிடைக்காது. 

தேங்காய் செய்திகள்


தேங்காய் செய்திகள்

தேங்காய் ஏற்றுமதியில் தற்போது கேரளா, தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. சில தேங்காய் செய்திகள் உங்களுக்கு. தேங்காய் 90 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தால் அழுகி விடும். தேங்காய் விலை பண்டிகைகளை ஒட்டி கூடி விடும். ஏற்றுமதி காண்டிராக்ட் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கள், ஒணம், சபரிமலை சீசன் போன்றவைகள் சமயத்தில், ஏன் சில சமயம் உங்களுக்கு தேவையான தேங்காய் கூட கிடைக்காது.

அழுகும் பொருளாக இருப்பதால் உற்பத்தி அதிகரித்தால் விலை குறையும். உற்பத்தி குறைந்தால் விலை கூடும்.

Thursday, January 24, 2013

ஆந்திராவும், மீன் ஏற்றுமதியும்


ஆந்திராவும், மீன் ஏற்றுமதியும்

ஆந்திராவில் இருந்து மீன் ஏற்றுமதி வருடா வருடம் கூடிக் கொண்டே செல்கிறது. 2009-10 வருடம் 10000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்திருந்தார்கள். இது 2010-11ம் வருடம் 13000 கோடி ரூபாயாக கூடியிருந்தது. இந்தியாவின் ஏற்றுமதில்  40 சதவீதம் இங்கிருந்து தான் செய்யப்படுகிறது. இங்கிருந்து பிளாக் டைகர் ஷிரிம்ப், வண்ணமெய் அதாவது வெள்ளை காலுடைய ஷிரிம்ப் ஆகியவை அவர்களுடைய ஏற்றுமதியில் 45 சதவீதம் செய்யப்படுகிறது. மேலும் இங்கு டூனா மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. 
ஆனால் தமிழ்நாடு, கேரளாவில் உள்மாநில உபயோகம் அதிகம், ஆந்திராவில் குறைவு தான்.  

Wednesday, January 23, 2013

கல்ப் நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி


கல்ப் நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து பெரிய சைஸ் தேங்காய்கள் 10 ரூபாய் என்ற அளவு விலைக்கு வாங்கி 13 முதல் 13.50 வரை வைத்து கல்ப் நாடுகளில் விற்கப்படுகிறது என கேரளவை சேர்ந்த பேர் எக்ஸபோர்ட்ஸ் தெரிவிக்கிறது. அவர்கள் மாதம் 50,000 தேங்காய்களை ஏற்றுமதி செய்கிறார்கள். பெரும்பாலும் கல்ப் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது 

ஆயில் மீல் ஏற்றுமதி


ஆயில் மீல் ஏற்றுமதி

நவம்பர் மாத ஆயில் மீல் ஏற்றுமதி 6.41  லட்சம் டன்களாக இருந்தது. இது கிட்டதட்ட 21 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. ஆயில் மீல் வாங்கும் நாடுகள் அதை என்ன செய்கின்றன. பொரும்பாலும் மாட்டு தீவனத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. சவுத் கொரியா, இரான் ஆகிய நாடுகள் முக்கிய இறக்குமதி நாடுகள் ஆகும். ஜப்பான், வியட்னாம், தாய்லாந்து, இந்தொனெஷியா ஆகிய நாடுகளும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.

Tuesday, January 22, 2013

பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி


பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி


பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி சென்ற வருடத்தை விட இந்த வருடம் 15 சதவீதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி 7.1 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 2.3 சதவீதமாக இருக்கிறது.
யு..., அமெரிக்காயு.கே., இந்தொனெஷியாசவுதி அரேபியாவியட்னாம் ஆகிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறாது.மேலும் ஆப்பிரிக்காதென் அமெரிக்கா ஆகியவை புதிய ஏற்றுமதி மார்க்கெட்டுக்களாக கண்டறியப்பட்டுள்ளது
பிளாஸ்டிக் மிஷினரி தவிர பிளாஸ்டிக் ஷீட்ஸ்சாக்குகள்பேக்மோல்டட் புராடக்ட்ஸ்எழுது பொருட்கள்மெடிக்கல்டிஸ்போசபல்ஸ்டியூப்ஸ்  பைப்ஸ்பிட்டிங்க்ஸ் ஆகியவைகளும் அதிகம் ஏற்றுமதியாகின்றது.

ஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா?


ஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா?

இந்தியாவில் அதிக அளவு ஊதுபத்தி விற்பவர்களில் ஐ.டி.சி. கம்பெனியும் ஒன்றாகும். ஏன் முதலிடத்திலேயே வரலாம். ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவில் அகர்பர்த்தி மார்க்கெட் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் குடிசைத் தொழில் போல் செய்பவர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள். ஆர்கனைஸ்டாக செய்பவர்கள் சிலர் தாம். 3000 கோடி ரூபாய் மார்க்கெட்டில் ஐ.டி.சி., க்கு 7 முதல் 8 சதவீதம் மார்க்கெட் இருக்கிறது. இவர்கள் சிறிய உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக அவர்களிடமிருந்து வாங்கி விற்கிறார்கள். ஆனால் இவர்களிடம் விற்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.  குவாலிட்டி விஷயத்தில் அவ்வளவு ஸ்டிரிக்டாக இருப்பார்கள். மங்கள்தீப் என்ற பெயரில் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் விற்கிறார்கள். சிறிய அளவில் அகர்பர்த்தி தயாரிப்பவர்கள், மார்க்கெட்டிங் செய்ய இயலாதவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். 

Monday, January 21, 2013

ஹரியானா மாநிலத்தின் ஏற்றுமதி


ஹரியானா மாநிலத்தின் ஏற்றுமதி 

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகும் ஹரியானா. அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் 1.37 சதவீதமும், மக்கள் தொகையில் 1.97 சதவீதமும் மட்டுமே கொண்டுள்ள ஹரியானா சென்ற வருடம் இந்திய ஏற்றுமதியில் 48530 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் மூன்றில் இரண்டு மடங்கும், டிராக்டர்களில் 50 சதவீதமும், மோட்டார் சைக்கிள்களில் 60 சதவீதமும், ரெப்ரிஜிரேட்டர்களில் 50 சதவீதமும், சைக்கிள்களில் 4ல் ஒன்றும், சானிடரி சாதனங்களில் 25 சதவீதமும் இந்த மாநிலத்திலிருந்து தான் உற்பத்தி செய்யபடுகிறது. இவ்வளவு சின்ன மாநிலமே இவ்வளவு கோடிக்கு ஏற்றுமதி செய்யும் போது, தமிழ்நாடு ஏன் இன்னும் அதிகம் செய்யக் கூடாது? 

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு


பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு

2008-09ம் ஆண்டு பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி 3659 கோடி ரூபாய்க்கு நடந்தது. இதுவே 2009-10ம் ஆண்டு 5400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட கெர்கின்களுக்கும், வெள்ளரிக்காய்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. வாழைப்பழம் ஏற்றுமதிக்கும் கல்ப் நாடுகளில் இருந்து வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது. 

Sunday, January 20, 2013

பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியில் சுணக்கம்


பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியில் சுணக்கம்

பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் கப்பல், விமானத்தில் சென்றால் தான் ஏற்றுமதி என்று. அப்படியெல்லாம் இல்லை. 
பாகிஸ்தானுக்கு பெரும்பான்பையான சரக்குகள் ரயில் மூலம் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரயில்வே வேகன்கள் கிடைக்கததால் கடந்த 4 வாரங்களாக சரக்குகள் அமிர்ஸ்டர் ரயில்வே ஸ்டேஷனில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தங்கிக் கிடக்கின்றன. மாதம் 2500 வேகன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அக்டோபரில் கிட்டதட்ட 100 வேகன்கள் தான் அனுப்பப்பட்டுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏற்றுமதியில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 

Saturday, January 19, 2013

அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்


அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து  கட்டுப்பாடுகளையும்  நீக்க வேண்டும் 

இந்திய விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு அரிசி, கோதுமை மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு உள்ள அனைத்து  கட்டுப்பாடுகளையும்  நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவை உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு அடைந்துள்ளது. ஆதலால், இந்த பொருட்களுக்கு உள்ள ஏற்றுமதி கட்டுபாடுகள் நீக்கப்பட்டால் அது இவைகளின் ஏற்றுமதியை கூடுவதற்கு வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் விவசாயத்திற்கென  ஒரு தனி பட்ஜெட் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்கிறார்கள். 

கொச்சினில் ரப்பர் வாரியம் ஏற்றுமதி பயிற்சி

கொச்சினில் ரப்பர் வாரியம் ஏற்றுமதி பயிற்சி 

ரப்பர் வாரியம்  கொச்சினில் உள்ள ரப்பர் பயிற்சி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் இயற்கை ரப்பர் ஏற்றுமதி மேலாண்மை பற்றி   பயிற்சிகள்  அடிக்கடி நடத்தி வ்ருகிறது.  இயற்கை ரப்பர் சந்தையில் எதிர்கால வர்த்தகம், ஏற்றுமதி வாய்ப்புக்கள், வெளிநாட்டு வர்த்தகம், கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயங்கள், விலை நிர்ணயம், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், உரிமம்,  ரப்பர் சந்தையின்  வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பற்றிய எக்ஸிம் கொள்கைகள் போன்றவை பயிற்சியளிக்கப்படுகிறது.  தொடர்பு தொலைபேசி 0481 - 2353325, 2353127.  ரப்பர் ஏற்றுமதி தொழில் இடுபட்டுள்ளவர்களுக்கு இது பயனளிக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய பேர் ரப்பர் தொழில் செய்து வருகின்றனர். 

Friday, January 18, 2013

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்றாலும் ஏற்றுமதி தான்


சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 

இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 2005 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. இவைகளில்  இதுவரை 219,000 கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 945,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு இந்த மண்டலங்கள் முலம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மண்டலங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கின்றது. இவைகளுக்கு பொருட்களை சப்ளை செய்தாலும் அது ஏற்றுமதி என்று தான் கணக்கில் எடுதுக்கொள்ளபடும். ஏற்றுமதி மண்டலங்களில் என்னென்ன கம்பனிகள் இருக்கின்றது, அவைகளுக்கு என்னென்ன தேவை என்று அறிந்து செய்தால் அதுவும் ஏற்றுமதி தான். எங்க போய்கிட்டு இருக்கீங்க? எங்க சிறப்பு பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் இருக்கின்றது என்று கண்டுபிடிக்கவா? வாழ்த்துக்கள்.

ஹீரோ மோட்டார் பைக்குகள் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி

ஹீரோ மோட்டார் பைக்குகள் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி 

ஹீரோ ஹோண்டா என்று சொன்னால் தான் பலருக்கு தற்போதும் புரியும். ஆனால் தற்போது அதன் பெயர் ஹீரோ தான். ஏனெனில் ஹோண்டாவுடன் தற்போது ஜாயின்ட் வென்சர் தற்போது இல்லை. ஆதலால் தற்போது ஹீரோ என்ற பெயர் மட்டும் தான். உலகின் பல நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வந்தாலும் தற்போது தான் ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது. 

Thursday, January 17, 2013

நேபாள், இந்தியா கைவினை பொருட்கள் ஏற்றுமதி

நேபாள், இந்தியா கைவினை பொருட்கள் ஏற்றுமதி 

நேபாள் நாட்டின் கைவினை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவும், இந்தியா கைவினை பொருட்களை அங்கு விற்பனை செய்யவும் ஒரு உடன் படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் மெசின்களால் செய்யப்பட்ட  கைவினை பொருட்கள் விலை குறைவாகவும், நேர்த்தியாகவும் இருப்பதால் அந்த பொருட்களுடன் போட்டி போடும் வகையில் இருக்குமாறு சிறப்பான பொருட்களை தயாரித்து விற்க முடிவு செய்துள்ளார்கள். கைவினை பொருட்கள் கையால் அல்லவா தயாரிக்கப்பட வேண்டும். யார் சீனாவிற்கு கூறுவார்கள்?

இளநி ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி பதில்
ராமசுப்ரமணியன்
தூத்துக்குடி

கேள்வி
இளநி ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்
இளநியை மரத்தில் இருந்து பறித்து ஏற்றுமதி செய்வது என்பது கடினம். ஏன் கடினம் என்று சொல்கிறேன் என்றால், நீங்கள் பறித்து அதை ஏற்றுமதி செய்யும் போது அது அந்த நாட்டை அடையும் போது அவ்வளவு ப்ரஷாக இருக்காது. மேலும், விலையும் டபுளாக கூடிவிடும் (நீங்கள் அனுப்பும் விலை மற்றும் சரக்குக் கட்டணம் மற்ற செலவுகள் சேர்த்து). இளநியாக அனுப்புவதை விட பதப்படுத்தப்பட்ட இளநீர் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அதை அனுப்ப முயற்சிக்கலாம். அதற்கு வரவேற்பு இருக்கும். தாய்லாந்தில் கிடைக்கும் இளநீர் சுவை மிகவும் அருமையானது. அந்த வகை தென்னை மரங்களை இங்கு வளர்க்க முயற்சி செய்தால் அது உள்நாட்டிலேயே அவ்வகை இளநீருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பெரிய மற்றும அதிக தண்ணீர் உள்ள மிகவும் சுவையான இளநிகள்.
தேங்காய் ஏற்றுமதி தமிழ்நாட்டில் இருந்து பரவலாக நடைபெறுகிறது. தூர நாடுகளுக்கு செல்லவில்லை என்றாலும், அருகிலுள்ள நாடுகளுக்கு செல்கிறது.

Wednesday, January 16, 2013

மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி

மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி நீங்கள் சென்று பார்க்க வேண்டிய முக்கியமான இணையதளங்களில் ஒன்று சென்ட்ரல் மெரைன் பிஷரீஸ்  ரிசர்ச் இண்ஸ்டிடியூட் ஆகும் (www.cmfri.org.in). 1947 ம் வருடம் துவங்கப்பட்ட இந்த அரசாங்க நிறுவனத்தில் மீன் சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. 

சிங்கப்பூரில் பிசினஸ் செய்ய


சிங்கப்பூரில் பிசினஸ்  செய்ய

சிங்கப்பூரில் பெரிய அளவு பிசினஸ்  செய்ய ஆசையா. உங்களுக்குwww.iesingapore.com என்ற இணையதளம் உதவும். இல்லையென்றால் அவர்களின் சென்னை அலுவலகம் ரகேஜா டவர்ஸ், அண்ணா சாலையில் உள்ளது. அவர்கள் உதவுவார்கள். இது ஒரு அரசாங்க நிறுவனம் ஆகும்.

Monday, January 14, 2013

மெக்டோனல்ட்ஸ் வாங்கும் நீலகிரி லெட்டூஸ்


மெக்டோனல்ட்ஸ்  வாங்கும் நீலகிரி லெட்டூஸ் 

மெக்டோனல்ட்சில் பர்கர் மற்றும் பல பொருட்கள் வாங்கும் போது பச்சைக் கலரில் ஒரு இலை உள்ளே வைக்கப்பட்டிருக்கும். அதாங்க சலாட் போல.. அதன் பெயர் தான் லெட்டூஸ். இதை தமிழில் இலைக்கோஸ என்றும் அழைப்பார்கள். வைட்டமின்கள் நிறைந்தது. சாலட் கீரைகளில் அரசனாய் திகழ்வது இது தான். இது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இதன் தாயகம் இந்தியா தான். எகிப்து நாட்டில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளில் இக்கீரையின் படம் காணப்படுகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இக்கீரையை புத்தாண்டு தினத்தன்று தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் இக்கீரை இடம் பெறுவது தனிச் சிறப்பு என்று கருதுகின்றனர். நாம் புத்தாண்டு தினம் தவறாமல் தண்ணிப் பார்ட்டிக்கு செல்கிறோமே அது போலத் தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கீரையை மெக்டோனல்ட்க்கு உற்பத்தி செய்து அளிப்பது நமது குன்னூரில் இருக்கும் கிரீன் எர்த் டெய்ரி பார்ம் வைத்திருக்கும் மகேஷ் குமார் தான். வருடத்திற்கு கிட்டதட்ட 1000 டன்கள் உற்பத்தி செய்து அவர்களுக்கு சப்ளை செய்கிறது.

இந்திய பாக்கேஜிங் கம்பெனிகளில் ஆர்வம் காட்டும் இத்தாலியன் கம்பெனிகள்


இந்திய பாக்கேஜிங் கம்பெனிகளில் ஆர்வம் காட்டும் இத்தாலியன் கம்பெனிகள்

மருத்துவத் துறையில் இத்தாலியன் கம்பெனிகள் தரத்த்தில் உலகளவு சிறந்தவை. இந்தக் கம்பெனிகளையை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது இந்திய மருந்து பொருட்கள் பாக்கேஜிங் கம்பெனிகள். இந்திய பாக்கேஜிக் கம்பெனிகளின் புராடக்ட் நாலெட்ஜும், வேலைத் திறமையும் இத்தாலியக் கம்பெனிகள் வருங்காலங்களில் இந்திய கம்பெனிகளை பெருமளவில் உபயோகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. Italy you manufacture, India will pack for you.

Saturday, January 12, 2013

300 மெட்ரிக் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி


கேள்வி
கலையரசன்
சென்னை


கேள்வி 
நான் தனிப்பட்ட நபர். தற்போது தான் ஏற்றுமதி கம்பெனி ஆரம்பித்துள்ளேன். எனக்கு 300 மெட்ரிக் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆர்டர் வந்துள்ளது? என்ன செய்ய வேண்டும்?

பதில்
தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவருக்கு, அதாவது அரிசி ஏற்றுமதியில் அதிகம் ஈடுபடாத ஒருவருக்கு 300 மெட்ரிக் டன் அரிசி ஆர்டர் வருகிறது என்றாலே அது பொய்யான ஆர்டராகத்தான் இருக்கவேண்டும். மேலும் பாசுமதி அரிசி தென் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆதலால் இதை ஒத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் ஏற்றுமதி சிறிய ஆர்டர்களிலிருந்து தொடங்கட்டும்.

Friday, January 11, 2013

அரிசி உற்பத்தியில் நாம் எங்கு இருக்கிறோம்?


அரிசி உற்பத்தியில் நாம் எங்கு இருக்கிறோம்?

உலகளவில் அரிசி உற்பத்தியில் சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது. 2011-12 வ்ருடத்தில் 140.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்துள்ளது. 2012-13ம் வருடத்தில் 142 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற வருடத்தில் 140.3 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்துள்ளது. அடுத்த வருடம் உற்பத்தி 100 மில்லியன் டன்களாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் என்ன ஆகும்? ஏற்றுமதி குறையும் வாய்ப்புக்கள் உள்ளது. மேலும், அரிசி விலை சிறிது கூடவும் வாய்ப்புக்கள் உள்ளது. 

க்ளீன்டெக்


க்ளீன்டெக்

க்ளீன்டெக் சம்பந்தமான ஏற்றுமதிகள் வருங்காலத்தில் மிகவும் கூடும். உலகளவிலான க்ளீன் டெக் மார்க்கெட் 3 முதல் 4 டிரில்லியன் டாலர்களாகும். க்ளீன்டெக் என்றால் என்ன? க்ளீன் டெக்னாலாஜி என்பதன் சுருக்கம் தான். பயோ கெமிக்கல்களை உபயோகிப்பது, சோலார், விண்ட், ஹைட்ரோ மூலமாக மின்சாரம் தயாரிப்பது, மின்சாரம் சேமிக்கும் வகையிலான கட்டிடங்கள் அமைப்பது, வேஸ்ட்களிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, எலக்ட்ரிக் கார்களை உபயோகப்படுத்துவது போன்றது தான். இந்தத் துறைகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றுமதிக்கு பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளது. 

Wednesday, January 9, 2013

காய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்வி பதில்

அன்புக்கரசி
தேனி

கேள்வி

காய்கறிகளை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்ய முடியுமா?


பதில்

காய்கறிகள் சுலபத்தில் அழுகும் பொருட்கள். ஆதலால் சாதாரணமாக சிறிய அளவுகளை கப்பலில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதே சமயம் ஒரு கன்டெய்னர் அளவு இருந்தால் ரெப்ஜிரேட்டட் கன்டெய்னர் மூலமாக செல்லலாம். அழுகாத காய்கறிகளாக இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். உதாரணம் வெங்காயம், கருணைக்கிழங்கு போன்றவை. சாதாரணமாக விமானம் மூலமாகவே பெரும்பாலும் காய்கறி ஏற்றுமதி நடைபெறுகிறது.