கேள்வி பதில்
ராமசுப்ரமணியன்
தூத்துக்குடி
கேள்வி
இளநி ஏற்றுமதி செய்ய முடியுமா?
பதில்
இளநியை மரத்தில் இருந்து பறித்து ஏற்றுமதி செய்வது என்பது கடினம். ஏன் கடினம் என்று சொல்கிறேன் என்றால், நீங்கள் பறித்து அதை ஏற்றுமதி செய்யும் போது அது அந்த நாட்டை அடையும் போது அவ்வளவு ப்ரஷாக இருக்காது. மேலும், விலையும் டபுளாக கூடிவிடும் (நீங்கள் அனுப்பும் விலை மற்றும் சரக்குக் கட்டணம் மற்ற செலவுகள் சேர்த்து). இளநியாக அனுப்புவதை விட பதப்படுத்தப்பட்ட இளநீர் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. அதை அனுப்ப முயற்சிக்கலாம். அதற்கு வரவேற்பு இருக்கும். தாய்லாந்தில் கிடைக்கும் இளநீர் சுவை மிகவும் அருமையானது. அந்த வகை தென்னை மரங்களை இங்கு வளர்க்க முயற்சி செய்தால் அது உள்நாட்டிலேயே அவ்வகை இளநீருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பெரிய மற்றும அதிக தண்ணீர் உள்ள மிகவும் சுவையான இளநிகள்.
தேங்காய் ஏற்றுமதி தமிழ்நாட்டில் இருந்து பரவலாக நடைபெறுகிறது. தூர நாடுகளுக்கு செல்லவில்லை என்றாலும், அருகிலுள்ள நாடுகளுக்கு செல்கிறது.
தாய்லாந்து இளநி வெளித்தோல் மட்டும் சீவப்பட்டு (சிங்கையில் கிடைக்குது பாருங்க அப்படி) நன்றாக பேக் செய்யப்பட்ட நிலையில் இங்கே உறையவச்ச நிலையில் இங்கே நியூஸிலாந்தில் சூப்பர் மார்கெட்டில் கிடைக்கிறது.
ReplyDelete