மருந்துப் பொருட்கள் கண்காட்சி
மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகத்திலேயே புரடக்ஷன் வால்யூமை வைத்துப் பார்த்தால் 4வது இடத்தில் வருகிறது. உள்நாட்டில் உபயோகிப்பதில் உலகத்திலேயே 13வது இடத்தில் வருகிறது. உலகத்திலேயே ஜெனிரிக் பார்முலேசன்ஸ் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. 150 நாடுகளுக்கு மேலாக இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக்திற்கு தேவையான மீசல்ஸ் தடுப்பூசியில் 40 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புடையது இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறை. மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம் வரும் ஏப்ரல் மாதம் 24 முதல் 26 வரை மும்பையில் iPHEX 2013 என்ற மருத்துப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் கண்காட்சியை நடத்துவுள்ளது. இதில் 400 உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் இருந்து 5000 விசிட்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment