Sunday, February 17, 2013

பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?


பழங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது?

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் அதிகம் செய்யப்படுவது எது தெரியுமா?  ஆப்பிள் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்ற எண்ணமும், வேறு ஒருவர் வீட்டுக்கு செல்லும் போது ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு சென்றால் போது அது தொந்தரவு இல்லாதது என்ற எண்ணமும் தான். இந்தியா 2011ம் வருடம் மட்டும் 162000 டன்கள் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளது. அதாவது 16,20,00,000 கிலோக்கள் (16 கோடியே 20 லட்சம் கிலோக்கள்). சைனா, அமெரிக்க, சிலி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

மற்ற பழங்களில் பியர் 18,000 டன்களும், ஆரஞ்சு 10,000 டன்களும், கிவி 3200 டன்களும், கிரேப் 2600 டன்களும், பிளம் 670 டன்களும் இறக்குமதி செய்துள்ளோம்.

வேறு வீடுகளுக்கு செல்லும் போது ஏன் இந்தியாவில் அதிகமாக உற்பத்தியாகும் பழங்களை உடம்புக்கு கெடுதல் இல்லாத பழங்களை வாங்கி செல்லக் கூடாது? அதாவது கெய்யா, பப்பாளி, திராட்சை போன்றவை. ஆப்பிள் இறக்குமதி குறையுமே? 

பழங்களை பற்றி நிறைய பேசி டயர்டாக இருக்கு., ஒரு ஆப்பிள் ஜுஸ சர்க்கரை குறைத்து போடுப்பா!!!!

2 comments:

  1. பழங்களை பற்றி நிறைய பேசி டயர்டாக இருக்கு., ஒரு ஆப்பிள் ஜுஸ சர்க்கரை குறைத்து போடுப்பா!!!//

    மிகவும் ரசித்தேன் சூப்பர்.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி .

    ReplyDelete