இந்தியாவிலிருந்து ஏலக்காய் ஏற்றுமதி
இந்தியாவிலிருந்து சவூதி அரேபியா நாட்டுக்கு சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் 4 மடங்கு கூடியுள்ளது. சென்ற வருடம் 723 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அது இந்த வருடம் 2968 டன்களாக உயர்ந்திருக்கிறது. அரபு நாடுகளில் விருந்தினர்களுக்கு பேரீச்சம்பழத்துடன், உயர்தரமான ஏலக்காய் சாற்றில் தயாரிக்கப்பட்ட காபியை அளிப்பார்கள். மேலும், அவர்களுடைய தினசரி உணவிலும் அதிக அளவில் வாசனை சாமான்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அங்கு தரமிக்க ஏலக்காய்க்கு நல்ல வரவேற்பு அதிகம். இந்திய ஏலக்காய்களுக்கு அங்கு மதிப்பு அதிகம். ஏலக்காய் விற்பவர்கள் சவூதி அரேபியாவில் நல்ல இறக்குமதியாளர்களை தொடர்பு கொண்டால் வியாபார வாய்ப்புக்கள் பெருகும். மேலும், சவுதியில் உள்ள இந்திய சவூதி வர்த்தக சபை அடிக்கடி வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துகிறது.
No comments:
Post a Comment