Friday, June 1, 2012

ஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்


ஏற்றுமதி வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் பகுதியில், பனியன் துணிகளால் ஆன கையுறைகள் அதிக அளவில் தயாரிக்கப் டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பனியன் செய்தது போக, கழிவு பனியன் துணிகளை கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள குறு தொழிற்சாலைகளில் கையுறைகள் செய்யப்படுகின்றன.

இவற்றை ஓசூர் மற்றும் பெங்களூரிலுள்ள மருந்து, கைகடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு கையுறையை பயன்படுத்துவதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான கையுறைகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இருந்து மட்டும் மாதத்துக்கு, இரண்டு லட்சம் கையுறைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதத்துக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கையுறைகள் பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கையுறைக்கு ஓசூர் மட்டுமன்றி, பெங்களூரு, புனே உள்ளிட்ட தொழிற் நகரங்களில் வரவேற்பு உள்ளதால், நாளுக்கு நாள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறப்பான ஏற்றுமதிக்கு வாய்ப்பும் உள்ளது. 

No comments:

Post a Comment