Thursday, April 5, 2012

கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க


கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க

கிரீன் டீ தற்போது ஒரு பெரிய பிசினஸ்  வாய்ப்பாகிவிட்டது. மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் இந்தியா அளவில் கிரீன் டீ குடிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கிரீன் டீ குடிப்பவர்கள் இந்தியாவில் வருடந்தோறும் 10 சதவீதம் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்தியா உலகளவில் இரண்டாவது டீ உற்பத்தி செய்யும் நாடு. வருடந்தோறும் 9 முதல் 11 மில்லியன் கிலோக்கள் கிரீன் டீயும் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆதலால் ஏற்றுமதி அதிகம் நடை பெறவில்லை.

சைனா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு சென்றிந்தால் பார்த்திருக்கலாம். அங்கு ஹோட்டல்களில் கிரீன் டீ என்பது ஒரு பிரதன பானமாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ சீனக்காரர்களில் குண்டானவர்களையே பார்க்கமுடிவதில்லை. மேலும் உணவில் தினாரி மாமிசம் எடுத்துக் கொண்டாலும் அது அவர்களை பாதிப்பதில்லை. நாயர் ஒரு கிரீன் டீ போடுங்க என்று வருங்காலங்களில் டீக்கடைகளில் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

3 comments:

  1. நாமும் குடிப்போம்

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது மிகச் சரி
    கிரீன் டீ கடைகளே தனியாக வந்தாலும் வரும்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. சீனர்களின் உடல் வாகிற்கு கிரீன் டீ மட்டும் காரனமல்ல. அதுவும் ஒரு காரணம். முக்கியமாக்ன காரணம் அவர்களின் இறைச்சியில் எண்ணெய் பெருமளவில் நம்மைப் போல சேர்த்துக் கொளவதில்லை. சிக்கன் துண்டுகள் எந்த பெரிய ருசியுமில்லாமல் அப்படியே வெள்ளையாக இருக்கும். மேலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளும் காய் கறிகள் நம்மைப் போல குறைந்தது 10 மடங்கு இருக்கும். அரிசி குறைவாகச் சாப்பிடுகிறார்கள்.

    ReplyDelete