Tuesday, March 20, 2012

கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க

கிரீன் டீ தற்போது ஒரு பெரிய பிசினஸ வாய்ப்பாகிவிட்டது. மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் இந்தியா அளவில் கிரீன் டீ குடிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கிரீன் டீ குடிப்பவர்கள் இந்தியாவில் வருடந்தோறும் 10 சதவீதம் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்தியா உலகளவில் இரண்டாவது டீ உற்பத்தி செய்யும் நாடு. வருடந்தோறும் 9 முதல் 11 மில்லியன் கிலோக்கள் கிரீன் டீயும் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகின்றன. சைனா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு சென்றிந்தால் பார்த்திருக்கலாம். அங்கு ஹோட்டல்களில் கிரீன் டீ என்பது ஒரு பிரதன பானமாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ சீனக்காரர்களில் குண்டானவர்களையே பார்க்கமுடிவதில்லை. மேலும் உணவில் தினாரி மாமிசம் எடுத்துக் கொண்டாலும் அது அவர்களை பாதிப்பதில்லை. நாயர் ஒரு கிரீன் டீ போடுங்க என்று வருங்காலங்களில் டீக்கடைகளில் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.




மதுரை மல்லி

மதுரை என்றால் மல்லிக்கைப்பூவை யாரும் மறக்கமாட்டார்கள். உலகளவில் பிரசித்தி பெற்றது மதுரை மல்லி. அந்த மல்லிகைப்பூவை உலகளவில் ஒரு பிராண்டாக கொண்டு செல்ல கோவை விவசாயப் பல்கலைக்கழகமும், இக்ரிசாட்டும் சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது. அப்படியென்ன மதுரை மல்லியில் விசேஷம் என்கிறீர்களா? தூக்கும் வாசனை, அதிகநாட்கள் கெடாமல் இருப்பது, கனமான இதழ்கள். அப்புறம் என்ன வேணும் மதுரை மல்லி உலக பிராண்டாக வருவதற்கு? மல்லிகைச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சரியான குளிர்பதனக்கிடங்குகளும் இருக்குமெனில் மதுரை மல்லி இன்னும் மணக்கும் என்பது அங்குள்ள உற்பத்தியாளர்களின் கோரிக்கை. நிறைவேறுமா? அடுத்த முறை மதுரை சென்று வரும் போது உங்கள் மனைவிக்கும் மறக்காமல் ஒரு முழும் மல்லிகைப்பூ வாங்கிச் செல்லுங்கள். கல்யாணம் ஆகாதவர்கள் காதலிக்கு வாங்கிச் செல்லுங்கள். 

No comments:

Post a Comment