ஆட்டோ உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி
ஆட்டோ உதிரிப் பாகங்கள் ஏற்றுமதிக்கு இந்தியாவிலிருந்து நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது. 2010-11ம் வருடத்தில் இந்தத் துறை 54 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. 5.20 பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது கிட்டதட்ட 25000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்று இருக்கிறது. இது 2020ம் வருடத்தில் 30 பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது 150,000 கோடி ரூபாய்கள் அளவிற்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் கண்டங்கள் ஆப்பிரிக்கா (7.4 சதவீதம்), வட அமெரிக்கா (24 சதவீதம்), ஐரோப்பா (37 சதவீதம்), ஆசியா (28 சதவீதம்) ஆகும்.
அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் எலக்ட்ரிக்கல் பாகங்கள் (9 சதவீதம்), எக்யூப்மெண்ட்ஸ் (10 சதவீதம்), சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேகிங் பாகங்கள் (12 சதவீதம்), என்ஜின் பாகங்கள் (31 சதவீதம்), ஸ்டீரிங் பார்ட்ஸ (19 சதவீதம்) மற்றும் பாடி, சேசிஸ் (12 சதவீதம்) ஆகும்.
உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 47 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களால் செய்யப்படுகிறது.
நாமக்கல்லிருந்து தற்போது அதிக அளவில் ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.