திராட்சை ஏற்றுமதி
வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு நாசிக் ஒரு உதாரணம். இந்தியாவிலேயே அதிக அளவு திராட்சை ஏற்றுமதி செய்யும் மாநிலம் மஹாராஷ்டிரா தான். இந்த வருடம் ஐரோப்பாவில் சீட்லெஸ் திராட்சைக்கு பற்றாக்குறை வந்துள்ளது என்று தெரிந்தவுடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது நாசிக்கிலுள்ள ஏற்றுமதியாளர்கள் தாம். உடனடியாக களத்தில் இறங்கி பெருமளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். அது வெற்றியாக மாறியது. யூரோ புரூட்ஸ் என்ற திராட்சை ஏற்றுமதியாளர் கடந்த 21 வருடமாக ஏற்றுமதி செய்து வருகிறார். ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ஒவ்வொரு வருடமும் ஏற்றுமதியில் வேறு வேறு சேலஞ்ச்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று.
Euro Fruits
Tel: +91 22 2520 7838
Fax: +91 22 2520 5080
Email: nitin@eurofruits.com
www.eurofruits.com
No comments:
Post a Comment