Wednesday, August 27, 2014

பானிபட்டும் காட்டன் தூரிகளும்


பானிபட்டும் காட்டன் தூரிகளும்

  
பானிப்பட் காட்டன் தூரிகளுக்கும்ரக்ஸ்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரிய அளவில் அங்கிருந்து ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. அங்கு தயாரிக்கப்படும் காட்டன் ரக்ஸ்தூரிகள் குவாலிட்டியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் தற்போது அமெரிக்காஐரொப்பிய நாடுகளில் இருந்து அவர்களுக்கு வரும் வியாபார விசாரனைகளில் விலையை குறைத்துக் கொடுக்கும்படியும்குவாலிட்டியில் சிறிது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் குவாலிட்டியில் காம்ப்ரமைஸ் செய்யாத ஏற்றுமதியாளர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. அவர்களின் ஏற்றுமதி குறைகிறது.



உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி கூறுங்களேன்?


கேள்வி

உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி கூறுங்களேன்?



பதில்

பலர் அப்பளம்வடாம்ஊறுகாய் போன்றவை ஏற்றுமதி செய்ய அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் அது தான் அதிகம் முதலீடு தேவைப்படாதது. ஆனால் வெளிநாட்டில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பல கட்டுப்பாடுகள் உள்ளது. ஆதலால்பல நாடுகளின் இறக்குமதி சட்ட திட்டங்களைப் பார்த்து தான் நீங்கள் ஏற்றுமதிக்கு முயற்சி செய்ய வேண்டும். மற்றபடி பிராண்டட் பொருட்களை நீங்கள் ஏற்றுமதி செய்வதாக இருந்தால் அந்த கம்பெனியின் அனுமதி பெற்று செய்வது நல்லது. மேலும் இந்தியா பிராண்ட்களின் பெயர்கள் பெரும்பாலும் உள்நாட்டை சார்ந்து இருப்பதால் பல வெளிநாட்டவர்கள் அந்த பிராண்ட்கள் இந்தியாவில்தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு தெரியாது. ஆதலால் விற்பனை பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.


Monday, August 25, 2014

கப்பல் ரசீதிற்கும், ஏர்வே பில்லிற்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி பதில்

ராமசாமி
கரூர்


கேள்வி

கப்பல் ரசீதிற்கும்ஏர்வே பில்லிற்கும் என்ன வித்தியாசம்?

பதில்

கப்பல் ரசீது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். அதாவது நெகோஷியபிள். அதாவது சரக்குகளை எடுக்காமலே வேறு ஒரு நபருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். அவர் சரக்குகளை அந்த கப்பல் ரசீதைக் காட்டி எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏர்வே பில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றி கொடுக்க முடியாது. ஏர்வே பில் நான் நெகோஷியபுள்.


Sunday, August 24, 2014

பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?

பையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன?



நீங்கள் சரக்குகளை இறக்குமதி செய்கிறீர்கள். அதற்கு வெளிநாட்டு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வீர்கள்உங்களிடம் இருக்கும் பணத்தை கொடுப்பீர்கள். அல்லது வங்கிகளிடம் லோன் வாங்கி அதைக் கொடுப்பீர்கள். வங்கிகளிடம் இந்தியாவில் இந்திய பணமாக லோன் வாங்கும் போது அதற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கும்.

இந்த வட்டிகளை குறைக்க வெளிநாட்டு வங்கிகளிடம் வட்டிக்கு கடனாக வாங்கி அதை இறக்குமதிக்கு உபயோகப்படுத்திக் கொண்டால் எப்படி இருக்கும். அது தான் பையர்ஸ் கிரிடிட். இது சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டியில் கிடைக்கும். இந்தக் கடனை வெளிநாட்டுப்பணமாக வாங்குவதால் அப்படியே திருப்பி கொடுக்க வேண்டும். ஆதலால் அதற்கு பார்வர்ட் காண்டிராக்ட் புக் செய்வதற்கு ஒரு 2 முதல் 3 சதவீதம் வரை வந்தாலும்மொத்தமாக 6 சதவீதத்திற்குள் தான் வரும். ஆகையால் இந்தியாவில் கடன் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். ஆதலால் வட்டிச் செலவுகளைக் குறைக்க இதை பலர் நாடுகிறார்கள்.


Saturday, August 23, 2014

மாதுளம்பழம் ஏற்றுமதி



மாதுளம்பழம் ஏற்றுமதி 

இந்தியாவிலிருந்து அதிக அளவில் மாதுளம்பழம் ஏற்றுமதி செய்து வருபவர்கள் மும்பையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. பார்க்ம்ஸ் என்ற கம்பெனி தான். கிமாயே என்ற பிராண்ட் பெயரில் மாதுளம்பழங்களை ஐரோப்பாவிற்கு அதிக அளவு ஏற்றுமதி செய்து வருகிறது. அவர்களின் வெப்சைட் முகவரி www.inifarms.com

Wednesday, August 20, 2014

வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்


வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்



இந்திய அளவில் வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. சுமார் 80,00,000 டன்கள் தமிழ்நாடு உற்பத்தி செய்துள்ளது. இதையடுத்து மஹாராஷ்டிரா 40,00,000 டன்கள் உற்பத்தி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 3 கோடி டன்களாக இருக்கிறது. இதில் மிகச் சிறிய அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றதெல்லாம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி வெரைட்டியை பயிரிட முயற்சி செய்து ஏற்றுமதி செய்யுங்கப்பா.... இந்திய வாழைப்பழமும் உலகளவில் பெயர் பெறட்டும்.

Monday, August 18, 2014

ஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி


ஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பழங்கள் ஏற்றுமதி வருடத்திற்கு 4200 கோடி ரூபாயாக கூடியுள்ளது. அதிகப்படியாக ஆப்பிள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும்இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் உபயோகிக்கும் ஆப்பிள்களில் 90 சதவீதம் அந்த மாநிலத்தில் இருந்து தான் வருகிறது.


திராட்சை ஏற்றுமதி

திராட்சை ஏற்றுமதி


வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு நாசிக் ஒரு உதாரணம். இந்தியாவிலேயே அதிக அளவு திராட்சை ஏற்றுமதி செய்யும் மாநிலம் மஹாராஷ்டிரா தான். இந்த வருடம் ஐரோப்பாவில் சீட்லெஸ் திராட்சைக்கு பற்றாக்குறை வந்துள்ளது என்று தெரிந்தவுடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது நாசிக்கிலுள்ள ஏற்றுமதியாளர்கள் தாம். உடனடியாக களத்தில் இறங்கி பெருமளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். அது வெற்றியாக மாறியது. யூரோ புரூட்ஸ் என்ற திராட்சை ஏற்றுமதியாளர் கடந்த 21 வருடமாக ஏற்றுமதி செய்து வருகிறார். ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமாஒவ்வொரு வருடமும் ஏற்றுமதியில் வேறு வேறு சேலஞ்ச்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று.


Euro Fruits
Tel: +91 22 2520 7838
Fax: +91 22 2520 5080
Email: nitin@eurofruits.com
www.eurofruits.com




Saturday, August 16, 2014

இந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி

இந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி
  


இந்தியாவிலிருந்து நைஜீரியாவிற்கு கடந்த வருடம் 307 மில்லியன் டாலர் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியா அதிகமாக மருந்துப் பொருட்களை இந்தியாவிலிருந்த்து தான் இறக்குமதி செய்து வருகிறது. சமீபத்தில் அங்குள்ள இந்திய தூதரகம் ஒரு வாங்குபவர், விற்பவர் சந்திப்பை நடத்தியது. அதில் 70 இந்திய கம்பெனிகள் கலந்து கொண்டன. முக்கியமான விஷயம் அதில் 1000 வாங்குபவர்கள் கலந்து கொண்டது தான். வாய்ப்புக்கள் உள்ள நாடு. அதே சமயம் போலி இறக்குமதியாளர்கள் அதிகம் உள்ள நாடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Friday, August 15, 2014

ப்ளாக்கில் 500 வது மெம்பர் ஆகப்போவது யார்?

எனது ப்ளாக்கில் 498 பேர் இதுவரை மெம்பராக உள்ளார்கள். 500 வது நபராக யார் மெம்பராக ஆகப்போகிறார்களோ அவருக்கு எனது புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பி வைக்கப்படும். அவர் எனது ப்ளாக்கில் மெம்பராக ஆனவுடன் அவருடைய ஈமெயில் விலாசத்தை எனது ஈமெயில் ஐ.டி.க்கு அனுப்பவும் sethuraman.sathappan@gmail.com.  அன்புடன் சேதுராமன் சாத்தப்பன்

டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்குமா?

அருண்
கரூர்
 
கேள்வி
டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்குமா?

பதில்
டிரேடு ஜர்னல் என்பது நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறை வெளியிடும் மாதந்திர அல்லது காலாண்டு பத்திரிக்கையாக இருக்கும். அதில் உங்கள் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை வெளியிடும் போது அது உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆதலால் உங்கள் வியாபார வாய்ப்புக்கள் பெருக வாய்ப்பு உண்டு. செய்யலாம் ஆனால் சில சமயங்களில் கட்டணங்கள் கூடுதலாக இருக்கும்.

பாவா மூப்பன் - 1000 முறை படிக்கப்பட்ட ஏற்றுமதி செய்தி

பாவா மூப்பன்


பாவா மூப்பன்

கேரளாவில் திரூர் என்ற ஊரிலிருக்கும் 65 வயது முதியவர் பாவா மூப்பன் என்பவர் காலையில் எழுந்தவுடன் தினசரி அன்றைய பேப்பர்களில் பார்ப்பது என்ன தெரியுமா பாகிஸதான் சம்பந்தப்பட்ட நல்ல, கெட்ட செய்திகளைத் தான். ஏனெனில் அவர் வாரம் 5 டன் வெற்றிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து அதிக அளவு பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர் இவர் தான். இவரிடமிருந்து இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது, இரண்டாவது இரண்டு நாடுகளுக்கிடையே ஆன செய்திகளை தெரிந்து கொள்வதில் காட்டும் முக்கியத்துவம். 

செய்திகள் மிகவும் முக்கியம். பாகிஸ்தானில் ஏதாவது பிராபளம் என்றால் அந்த வாரம் வெற்றிலை ஏற்றுமதி குறைந்து விடும், அதை என்ன செய்வது என்று அவர் யோசிக்க வேண்டும். 

Thursday, August 14, 2014

ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னென்ன?


இம்மானுவேல்
திருச்சி


கேள்வி
ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னென்ன?

பதில்
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி.

  • ஒரு நிறுவனம். தனிப்பட்ட அல்லது பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் போன்ற வகைகளில்
  • அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் உரிமம் வாங்குதல் (லைசென்ஸ்)
  • அந்த நிறுவனத்தை பதிவு (ரிஜிஸ்டிரேஷன்) செய்ய வேண்டும் (தனிப்பட்ட நிறுவனமாக இருந்தால் தேவையில்லை)
  • வங்கியில் நடப்புக் கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்)
  • நிறுவனம் பெயரில் பான் கார்டு
  • சேல்ஸ் டாக்ஸ் / வாட் பதிவு எண் (நீங்கள் ஏற்றுமதிக்காக உள்நாட்டில் சரக்குகள் வாங்கும் போது சேல்ஸ் டாக்ஸ் / வாட் இல்லாமல் வாங்க முடியும் அல்லது அதைக் கட்டியிருந்தால் திருப்பிப் பெற வாய்ப்புக்கள் உண்டு).
  • இம்போர்ட்டர் எக்ஸ்போர்ட்டர் கோடு நம்பர்
  • நீங்கள் சார்ந்த ஏற்றுமதி முன்னேற்ற கழகத்தில் பதிவு செய்து கொள்ளுதல்

ஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை அனுப்ப இயலும். அதற்கு பணம் கிடைக்குமா?


கேள்வி பதில்
பாலகிருஷ்ணன்
சமயபுரம்


கேள்வி
ஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை அனுப்ப இயலும். அதற்கு பணம் கிடைக்குமா?

பதில்
அரசாங்க விதிகளின் படி ஏற்றுமதி சாம்பிள்கள் ரூபாய் 5 லட்சம் வரை அனுமதி எதுவும் தேவையில்லாமல அனுப்ப இயலும். சாதாரணமாக சாம்பிள்களுக்கு பணம் கிடைக்காது. ஆனால், கேட்பதில் தவறில்லை. அப்படி அதற்கு பணம் கிடைத்தால் அது லாபம் தான்.
சாம்பிள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கக்கூடாது என்பதை நினைவில் வைக்கவும்.

Wednesday, August 13, 2014

மாங்காய் கிரேடிங்

மாங்காய் கிரேடிங்


மாங்காயில் கிரேடிங் மிகவும் முக்கியம். அதை துரிதப்படுத்தப்படுத்த கம்ப்யூட்டர் விஷன் என்ற விதத்தை உபயோகப்படுத்தி அதன் மூலம் மிக வேகமாக தரம் பிரிக்க செய்யலாம் என்று ஒரு ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளார்கள் பூனா மற்றும் பண்டர்பூரைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள். அந்த ஆய்வறிக்கையை முழுவதும் படிக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Tuesday, August 12, 2014

ஏற்றுமதி சரக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் ஒரே சமயத்தில் செல்லுமா?


கேள்வி பதில்
ராமசாமி
திருப்பூர்

கேள்வி
ஏற்றுமதி சரக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் ஒரே சமயத்தில் செல்லுமா? என்னுடைய வாடிக்கையாளர் அப்படி அனுப்பும் படி கூறுகிறார்.

பதில்
ஏன் செல்லாது? பல இடங்களில் துறைமுகமும், சரக்குகள் சேர வேண்டிய இடமும் தூரத்தில் இருக்கும். அது போல சமயங்களில் சரக்குகள் கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் செல்லும். இது போல இரண்டு வாகனங்களில் செல்லும் போது அது மல்ட்டி மோடல் டிரான்ஸ்போர்ட் என அழைக்கப்படும். இரண்டு சரக்கனுப்பு ரசீதுகள் இருக்காது. ஒரே ரசீது தான் இருக்கும்.

உதாரணம் பெங்களூரிலிருந்து சரக்குகள் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டுமானால் பெங்களூரிலிருந்து சரக்குகள் விமானம் மூலம் சென்னை செல்லலாம் அல்லது லாரி மூலம் சென்னை செல்லலாம். அதன் பிறகு கப்பல் மூலம் சென்னையிலிருந்து சிங்கபூருக்கு செல்லலாம். இதை இரண்டையும் சேர்த்து ஒரு சரக்கனுப்பு ரசீது வழங்கப்படும். 

Monday, August 11, 2014

PACKAGING WEBSTIE


இணையதளம்

நீங்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் காய்கறிகள், பழங்கள் விற்பவராகவோ அல்லது பாக்கேஜிங் துறையில் ஈடுபட்டு இருப்பவராக இருந்தாலோ உங்களுக்கு இந்த இணையதளம் மிகவும் உபயோகப்படும். பாக்கேஜிங் பற்றி பல தகவல்கள் உள்ளது.

Sunday, August 10, 2014

இந்தியா உலகத்தின் பத்தாவது ஏற்றுமதியாளர்


இந்தியா உலகத்தின் பத்தாவது ஏற்றுமதியாளர்

சமீபத்தில் வெளிவந்த எகானமிக் சர்வே படி விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகத்தின் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதிலிருந்தது என்ன தெரிகிறது? இந்திய விவசாய விளைபொருட்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு இருக்கிறது, உங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்கிறது.

நாங்கள் மண் பானை, மண் தொட்டி, மண் விளக்கு ஆகியவை தயாரித்து வருகிறோம். இவற்றிக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி இருக்கிறது?

கேள்வி பதில்
ரங்கராஜ்

கேள்வி
நாங்கள் மண் பானை, மண் தொட்டி, மண் விளக்கு ஆகியவை தயாரித்து வருகிறோம். இவற்றிக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி இருக்கிறது?

பதில்
நீங்கள் குறிப்பிட்டிருக்கு அனைத்தும் விலை குறைவான மேலும் எளிதில் உடையும் பொருட்கள். இவற்றிக்கு வாய்ப்புக்கள் குறைவு. அதே சமயம் இவற்றின் மூலம் கலைப்பொருட்களை உற்பத்தி செய்தால் அவைகளுக்கு விலையும் கூடுதலாகக் கிடைக்கும், வாய்ப்புக்களும் அதிகம். சென்னையிலுள்ள ஹாண்டிகிராப்ட்ஸ் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

Saturday, August 9, 2014

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு

பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு


பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு இடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அபிடா தெரிவித்துள்ளது. அதாவது விளையும் இடத்திலிருந்து, மாவட்ட மற்றும மாநில அளவிலுள்ள ஹார்டிக்கல்ச்சர் டிபார்ட்மெண்ட்கள், டெஸ்டிங் லாப்ஸ், ஏற்றுமதியாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த பார்கோடு கொண்டு வரப்படும். வெளிநாடுகள் பலவும் இந்த பார்கோடு திட்டத்தை கொண்டு வந்துள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் ஏற்றுமதியிலும் இதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



யூசிபி என்றால் என்ன? அது எதற்கு உபயோகப்படுகிறது?

கேள்வி பதில்

சரவணன்
சேலம்


கேள்வி
யூசிபி என்றால் என்ன? அது எதற்கு உபயோகப்படுகிறது?


பதில்
யூசிபி என்பது உலகளவிலான ஏற்றுமதி இறக்குமதி டாக்குமெண்டேஷன் விதிகளாகும். இதில் மொத்தம் 39 விதிகள் உள்ளது. இது டாக்குமெண்ட்களை தவறில்லாமல் செய்வதற்கு உதவுகிறது.



ஜோசப்
திருச்சி


கேள்வி
யூசிபி கற்றுக் கொள்வது எளிதா? கற்றுத் தருவீர்களா?

பதில்
யூசிபி என்பது கற்றுக் கொள்வது சிறிது கடினம். தனிப்பட்ட முறையில் கற்றுத் தருவது முடியாது. அவ்வப்போது இதற்கென் செமினார்கள் நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொண்டால் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏற்றுமதியாளராக இருக்கும் பட்சத்தில், ஏற்றுமதிக்கு டாக்குமெண்டேஷனில் சந்தேகம் வரும் போது என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு இலவசமாக உதவுகிறேன்.

Friday, August 8, 2014

இந்திய குழந்தைகள் புத்தகங்களுக்கு உலகளவில் வரவேற்பு



இந்திய குழந்தைகள் புத்தகங்களுக்கு உலகளவில் வரவேற்பு

இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில குழந்தைகள் புத்தகங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழ் பதிப்பாளர்கள் தமிழ் புத்தகங்களைத் தவிர ஆங்கில புத்தகங்களையும் கவனிப்பார்களேயானால் அது அவர்களின் வெளிநாட்டு வருமானத்தையும் கூட்டும்.
உலகளவில் விற்பனையாகும் புத்தகங்களில் 30 சதவீதம் குழந்தைகள் புத்தகங்கள் தாம் விற்பனையாகின்றன. இது வருடத்திற்கு 20 சதவீதம் கூடிவருகிறது. வெளிநாட்டு கம்பெனிகள் தங்கள் புத்தகங்கள் டைப்செட் செய்ய, பிரிண்டிங் செய்ய என இந்தியாவில் வேலைகளைக் கொடுத்து வருகின்றன.

டெஸ்கோ


டெஸ்கோ

உலகத்தின் மிகப் பெரிய ரீடெய்ல் ஸ்டோர்களில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் டெஸ்கோ இந்ததியாவின் வாங்கும் மையம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கென ஒரு சப்ஸ்சிடரி ஒன்று ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் உள்ள டெஸ்கோ ஸ்டோர்களுக்கு பொருட்களை இந்த மையம் வாங்கும். பின்னர் டாடா மூலம் இந்தியாவில் ரீடெய்ல் ஸ்டோர்கள் தொடங்கவும் எண்ணம் உள்ளது. டெஸ்கோவிற்கு விற்க முயலுங்கள். அது உங்களது வியாபாரத்தை பலப்படுத்தும்.

Wednesday, August 6, 2014

கார்பெட் ஏற்றுமதி

கார்பெட் ஏற்றுமதி

இந்திய கார்பெட்கள் உலகளவில் பிரசித்தம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இந்திய கார்பெட்களால் கவரப்பட்டு தங்களுடனே கார்பெட்கள் வாங்கிச் செல்பவர்களும் உண்டு. சென்ற வருடம் 808 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குஏற்றுமதி செய்துள்ளோம். அது இந்த வருடம் 1 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது (கிட்டதட்ட 5400 கோடி ரூபாய்கள்).

ஒரு நல்ல காஷ்மீர் கார்பெட் என்ன விலை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சராசரி விலை என்று வைத்துப் பார்த்தால் சுமார் 40,000 ரூபாய் வரை இருக்கும்.