Saturday, October 20, 2012

எங்களது வெளிநாட்டு கம்பெனி நாங்கள் இந்தியாவிற்குள் அவர்கள் சொல்லும் கம்பெனிக்கு சப்ளை செய்வதற்காக எங்களுக்கு பாரின் கரன்சியாக பணத்தை அனுப்ப இயலுமா? அதை நாங்கள் ஏற்றுமதி வரவு என்று எடுத்துக் கொள்ள இயலுமா?


ஏற்றுமதி கேள்வி பதில்

ராமசுப்ரமணியன்
கோவை


கேள்வி

இந்தியாவில் ஒரு கம்பெனி வெளிநாட்டில் இருந்து சரக்குகளை ஆர்டர் செய்துள்ளது.  அந்த வெளிநாட்டுக் கம்பெனிக்கு இந்தியாவில் தொழிற்சாலை இருப்பதால், அந்த தொழிற்சாலையை இந்தியாவிலிருந்து வாங்கும் கம்பெனிக்கு சப்ளை செய்யச் சொல்கிறது. வெளிநாட்டு கம்பெனிக்கு இந்திய கம்பெனி வெளிநாட்டு பணமாக அனுப்பி விடும். எங்களது வெளிநாட்டு கம்பெனி நாங்கள் இந்தியாவிற்குள் அவர்கள் சொல்லும் கம்பெனிக்கு சப்ளை செய்வதற்காக எங்களுக்கு பாரின் கரன்சியாக பணத்தை அனுப்ப இயலுமா? அதை நாங்கள் ஏற்றுமதி வரவு என்று எடுத்துக் கொள்ள இயலுமா?


பதில்
கடினமான கேள்வி. இரண்டு முறை படித்தால் தான் புரியும். பதில் சுலபம். நீங்கள் சரக்குகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யாததால் அதை நீங்கள் ஏற்றுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதில் தப்பில்லை. ஆனால் அதை ஏற்றுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டாவது இந்தியாவில் உங்களிடமிருந்து பொருட்கள் வாங்கும் கம்பெனியும் பாரின் கரன்சியை அனுப்ப நினைப்பதால் (சரக்குகளை  இந்தியாவில் இருந்து வாங்கிக்கொண்டு) ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவேண்டும்.

Wednesday, October 17, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


உலகளவில் நடைபெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சம்பந்தபட்ட கண்காட்சி வரும் வருடம் பிப்ரவரி மாதம் 6 முதல் 8 வரை பெர்லினில் நடைபெறவுள்ளது. இதில் உலகளவிலிருந்து 2400 ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Monday, October 15, 2012

வாழைப்பழம் நமக்கு ஜோக்கிற்கு மட்டுமே பயன்படுகிறது


வாழைப்பழம் நமக்கு ஜோக்கிற்கு மட்டுமே பயன்படுகிறது 

வாழைப்பழம் நமக்கு ஜோக்காக மட்டுமே இருந்து வருகிறது. அதைப் பற்றிய சில உண்மைகள். உலகளவில் 100 பில்லியன் வாழைப்பழங்கள் வருடந்தோறும் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒரு பில்லியன் என்பது 100 கோடி, அதாவது 10000 கோடி வாழைப்பழங்கள். பார்த்து வழுக்கி விடுந்து விடாதீர்கள். அதாவது கோதுமை, அரிசி, கார்ன் ஆகியவைகளுக்கு அடுத்ததாக உற்பத்தி மற்றும் உபயோகத்தில் இருக்கிறது. இந்தியாவிலும் அதிக அளவு வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறடு, ஆனால் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கவன்டிஸ என்ற வகை வாழைப்பழங்களை இந்தியாவில் அதிகம் நாம் உற்பத்தி செய்வதில்லை என்பது தான்.

Saturday, October 13, 2012

தமிழ்நாட்டில் 50 இடங்களில் குளிர்சாதன கிடங்குகள்


தமிழ்நாட்டில் 50 இடங்களில் குளிர்சாதன கிடங்குகள்

தமிழ்நாட்டில் பலரும் பல காலமாக எதிர்பார்த்த ஒன்று நடக்கப்போகிறது. விவசாய விளைப் பொருட்களை பாதுக்காக்க, அதற்கு நல்ல விலை கிடைக்க நல்ல குளிர்சாதன கிடங்குகள் தேவை. தனியார் நிறுவனங்கள் இவற்றை பெரிய அளவில் செய்ய இயலாது. ஏனெனில் அவர்கள் வசூலிக்கும் கட்டணம் விவசாயிகளுக்கு கட்டாது. ஆதலால் அரசாங்கத்தையை இதற்கு நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. இதன் தேவையை உணர்ந்த தமிழ்நாடு அரசாங்கம் தற்போது தமிழ்நாட்டில் 50 இடங்களில் குளிர்சாதன கிடங்குகளை அமைக்கவுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இது வழி செய்யும்.

Friday, October 5, 2012

ஆயத்த ஆடை ஏற்றுமதி கண்காட்சிகள்


ஆயத்த ஆடை ஏற்றுமதி கண்காட்சிகள்

ஆயத்த ஆடைகளுக்கு முக்கியமான மார்க்கெட் அமெரிக்காவும், ஐரோப்பாவும் தான். இவை தற்போது பொலிவிழந்து காணப்படுவதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனம்,  கொலம்பியா, பனாமா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 

Thursday, October 4, 2012

சீனா வாங்குபவரா? போட்டியாளரா?



சீனா வாங்குபவரா? போட்டியாளரா?

இதுவரை தோல் பொருட்கள் தொழிலைப் பொறுத்த வரை இந்தியாவிற்கு போட்டியாக சீனாவும் இருந்து வந்தது. அங்கு புரடக்ஷன் செலவுகள் அதிகமாகி வருவதாலும், தொழிலாளர்களின் சம்பளங்கள் கூடி வருவதாலும் இந்தியாவில் இருந்து தோல் பொருட்களை பெருமளவில் சீனா வாங்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஷாங்காய்  லெதர் கண்காட்சியில் இந்திய லெதர் கார்மெண்ட்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. இந்தியாவின் லெதர் தொழிலில் முக்கியமான தமிழ்நாடும் ஆள் பற்றாக்குறையினால் தடுமாறுகிறது.

Wednesday, October 3, 2012

இ.சி.சி.ஜி. ஏற்றுமதி ஸ்கோர் கார்டு


இ.சி.சி.ஜி. ஏற்றுமதி  ஸ்கோர் கார்டு 

இ.சி.சி.ஜி. அதாவது எக்ஸ்போர்ட் கிரிடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் நமது ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் விதமாக வெளிநாட்டில் இருந்து நம் நாட்டவர்களிடம் சரக்குகளை இறக்குமதி செய்யும் 90,000 ஆக்டிவ் இறக்குமதியாளர்களை பற்றிய ரேட்டிங் பற்றிய தகவல்களை வைக்க  ஸ்கோர்  கார்ட் தயார் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி பற்றி நினைப்பவர்கள் இ.சி.சி.ஜி. பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது, இது முக்கியம்.

கடந்த வருடம் இந்த நிறுவனம் 713 கோடி ரூபாய்களை கியாரண்டி பணமாக கொடுத்துள்ளது. அதிகம் க்ளயம் வரும் செக்டார்கள் அக்ரிகல்ச்சர், ஜுவல்லரி, ரெடிமேட் கார்மெண்ட்ஸ், காட்டன், எஞ்சினியரிங் சாமான்கள். அதிகம் க்ளயம் வரும் நாடுகள் அமெரிக்கா, யு.கே., யு.ஏ.ஈ., ஜெர்மனி மற்றும் இத்தாலி.

Monday, October 1, 2012

வெளிநாட்டு காய்கறிகளை இறக்குமதி செய்து இங்கு விற்க இயலுமா?


கேள்வி பதில்

ராமநாதன் 
திண்டுக்கல்


கேள்வி
வெளிநாட்டு காய்கறிகளை இறக்குமதி செய்து இங்கு விற்க இயலுமா?

பதில்
கட்டாயம் விற்க இயலும். இவைகளுக்கு இந்தியாவில் ஹோட்டல்களில் அதிக அளவு தேவை இருக்கிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு தங்கி பணிபுரிபவர்கள் வாங்குவதும் நடைபெறுகிறது. ஆதலால், இறக்குமதி செய்து விற்கலாம். இது தவிர வெளிநாட்டு காய்கறிகளான அஸ்பரகாஸ், பிட்டர் லெமன், ப்ராக்கொலி, எக்சாடிக் பெப்பர், சுச்சினி ஆகியவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது தவிர மால்களிலும் அதிகம் வாங்கப்படுகிறது. 20 அக்ரிகல்ச்சர் கிராஜுவேட்கள் சேர்ந்து செய்ய இது ஒரு நல்ல தொழில்.