மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது
தமிழ்நாடு மக்காச்சோளம் அதிகம் தயாரிக்கும் மாநிலங்களில் ஒன்று. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடக்கிறது. 10,000 டன் மக்காச்சோளம், பிஸ்கட், மாவு உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் தயாரிக்க வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் கறிக்கோழி தீவனத்திற்காக கோழிப் பண்ணைகளுக்கும் அனுப்பப்படுகிறது. ஏற்றுமதிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உள்நாட்டிலேயே போதுமான தேவை இருப்பதால் வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அறுவடை செய்தபின், மீதமாகும் சோள தட்டை மாட்டுக்கு தீவனமாக போடப்படுகிறது. விறகாகவும் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment