Wednesday, February 29, 2012

பாசுமதி அரிசி

பாசுமதி அரிசி

பாசுமதி அரிசி ஏற்றுமதி கூடிக்கொண்டு வருகிறது. 2008-09ம் ஆண்டில் 1.55 மில்லியன் டன்களும், 2009-10ம் ஆண்டில் 2.01 மில்லியன் டன்களும், 2010-11ம் ஆண்டில் 2.18 மில்லியன் டன்களும் ஏற்றுமதி செய்துள்ளோம். முன்பு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 900 அமெரிக்க டாலர்களாக இருந்தது. பின்னர் அது 700 அமெரிக்க டாலர்களாக குறைக்கப்பட்டது. உலகளவில் விலை குறைந்து வருவதால் குறைந்த பட்ச விலைக்கு விற்கப்படவேண்டும் என்பதை நீக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்பு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை என்று இருந்த போது, பலர் பாசுமதி என்ற பெயரில் பாசுமதி அல்லாத மற்ற அரிசிகளையும் ஏற்றுமதி செய்து வந்தனர். இதனால் அப்போது குறைந்தபட்ச விலை 900 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி அனுமதி இருக்கும் போது ஏன் குறைந்தபட்ச விலை என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸதான் முதன் முதலாக இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்துள்ளது. 2500 டன்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது.

Sunday, February 26, 2012

களிமண்ணும் கலையாகும், ஏற்றுமதியாகும், ஜனவரி ஏற்றுமதி உயர்வு, பொதினா ஆயில் ஏற்றுமதி, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, பாகிஸ்தான் இந்தியா வர்த்தகம்

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


ஏற்றுமதி உலகத்திலும் பங்குச் சந்தை போல ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. எந்த ஒரு தொழிலிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.




களிமண்ணும் கலையாகும், ஏற்றுமதியாகும்


சமீபத்தில் பரிதாபாத்தில் நடைபெற்ற சுரஜ்கண்ட் கைவினைபொருட்கள் மேளாவில் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மிகுந்த மவுசு இருந்தது. பிண்டோ பர்மானி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கலைஞர் களிமண்ணால் செய்து பேப்ரிக் கலரால் பெயிண்ட் செய்யப்பட்டிருந்த பென் ஸ்டாண்ட், வால் செயின், பிள்ளையார், ராதாகிருஷ்ணா, யாணைகள், குதிரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை மிகுந்த வரவேற்பை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களிடமிருந்து பெற்றன. மண்டையில் என்ன களிமண்ணா இருக்கு என்று இனி நாம் யாரையும் கேட்க மாட்டோம்.


ஜனவரி ஏற்றுமதி உயர்வு


ஜனவரி மாத ஏற்றுமதி சென்ற வருடம் இதே காலத்தை விட 10 சதவீதம் கூடி 25.4 பில்லியன் டாலராக இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜனவரி வரை ஏற்றுமதி 242 பில்லியன் டாலராக இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 300 முதல் 305 பில்லியன் டாலராக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட டார்கெட்டான 300 பில்லியனை எட்டி பிடித்து விடும். ஆனால் அடுத்த வருட டார்கெட்டை எட்டுவது தான் குதிரைக் கொம்பாக இருக்கும்.




பொதினா ஆயில் ஏற்றுமதி


இந்தியா உலகின் மிகப்பெரிய பொதினா உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகும். பொதினா இலைகளிலிருந்து எடுக்கப்படும் மிண்ட் ஆயில் (பொதினா ஆயில்) அதிகப்படியாக உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும், மிட்டாய் தயாரிப்பிலும், மருந்துகள் தயாரிப்பிலும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலிருந்து 17000 முதல் 20000 டன்கள் வரை கடந்த மூன்று வருடத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1200 முதல் 1700 கோடி ரூபாய்கள் வரையாகும்.




கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி


வருடத்திற்கு 3500 கோடி ரூபாய் மதிப்புள்ள கைவினைப் பொருட்கள் பானிப்பட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு மட்டும் 350 ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் ஒரு முறை சென்று பார்க்க வேண்டிய ஊர். அப்போது தான் ஒரு ஐடியா கிடைக்கும்.




டாலரும் ரூபாயும்


டாலருக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றுக் கொண்டே வந்தது.
49க்கும் கீழே சென்று ஏற்றுமதியாளர்களை பயமுறுத்தியது. தற்போது சுமார் 70 பைசா வரை வலுவிழந்து 49 ரூபாயை தாண்டியுள்ளது.


பாகிஸ்தான் இந்தியா வர்த்தகம்


இந்தியா பாகிஸதான் வர்த்தகம் தற்போது வருடத்திற்கு 2.7 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2001ம் வருடம் 144 மில்லியனாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து நிறைய பொருட்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது காட்டன், கன்பெக்ஷனரி பொருட்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ், காய்கறிகள் போன்றவை. காய்கறிகள் போன்றவை மட்டும் சென்ற ஆண்டு 350 கோடி ரூபாய்களுக்கு மேல் ஏற்றுமதியாகியுள்ளது.




இந்த வார இணையதளம்


www.indiayellowpagesonline.com

இந்தியாவில் பொருட்கள் தயாரிப்பவர்களின் பெயர் மற்றும் விலாசங்கள், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை யார் யார் தயாரிக்கிறார்கள், விலை விபரம் எப்படி என்று அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். இது போன்ற பல யெல்லோ பேஜஸ் இருக்கின்றன.












கேள்வி பதில்


அரசு
சமயபுரம்


கேள்வி
திருச்சி பகுதியில் வாழை அதிகம் விளைகிறது. ஏற்றுமதி வாய்ப்புக்கள் எப்படி?


பதில்


இந்தியா உலகளவில் அதிகம் வாழைப்பழம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் ஏற்றுமதி மிகக்குறைந்த அளவே செய்கிறோம். ஏற்றுமதிக்கு தகுந்த வெரைட்டிகளை உற்பத்தி செய்வதில்லை என்பதே காரணம். ஆனால் வாழைக்காய் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதை முயற்சி செய்யலாம். திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்தில் இதற்கென நிறைய பயிற்சிகள் தருகிறார்கள்.






இந்தத் தொடர் குறித்து உங்களது சந்தேகங்களையும், கேள்விகலையும் எழுத ஏண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathap

Friday, February 24, 2012

கயிறு பொருட்கள் ஏற்றுமதி


கயிறு பொருட்கள் ஏற்றுமதி 

கயிறு பொருட்கள் உற்பத்தியில், ஏற்றுமதியில் கேரளா முண்ணனியில் இருக்கிறது. இந்தியாவின் 90 சதவீத உற்பத்தி கேரளாவில் தான் நடைபெறுகிறது. கேரளாவில் 99 சதவீத உற்பத்தி ஆலப்புழா மாவட்டத்தில் தான் நடக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் 10 கோடி ரூபாய் அளவிற்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. கேரளாவிற்கு மூலப்பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் அதிகம் செல்லுகிறது.


Thursday, February 23, 2012

முதலீடு இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியுமா?

கேள்வி முதலீடு இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்முடியாது. உங்களுடைய திறமைகளை ஏற்றுமதி செய்தால் மட்டுமே இது சாத்தியம். உதாரணமாக நீங்கள் ஆடிட்டர் ஆக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டுக்காரகளுக்கு வேலைகளை இங்கு இருந்தோ அல்லது அங்கு சென்றோ முடித்துக் கொடுத்து பணம் பெறலாம். இது போன்ற வேலைகள் செய்யும் போது மட்டும் தான் முதலீடு முற்றிலும் தேவைப்படாது அல்லது அதிகம் தேவைப்படாது.  மற்ற எல்லாவற்றிக்கும் சரக்குகள் வாங்க / பொருள் தயாரிக்க / மற்ற செலவுகளுக்கென முதலீடு தேவைப்படும்.

ஏற்றுமதி சரக்குகளை கையில் எடுத்து சென்று மற்ற நாடுகளில் விற்க முடியுமா?


கோபாலகிருஷ்ணன்
தஞ்சாவூர்


கேள்வி 

ஏற்றுமதி சரக்குகளை கையில் எடுத்து சென்று மற்ற நாடுகளில் விற்க முடியுமா?

பதில்

தங்க, வைர நகைகள் இது போன்று எடுத்து சென்று விற்கப்பட்டாலும், மற்ற பொருட்களில் இது கஷ்டமான விஷயம். ஏனெனில் அந்த நாட்டில் உங்களுக்கு ஒரு நிறுவனம் இல்லாதபட்சத்தில் நீங்கள் ஏற்றுமதி செய்த சரக்குகளை அங்கு கிளியர் செய்வது மிகவும் கடினம். மேலும் தங்கம், வைரம் போன்று கையிலும் எடுத்துச் செல்ல முடியாது, நீங்கள் போய் வரும் செலவுகள் அதிகமாகி விடும், லாபங்கள் குறைந்து விடும் அல்லது இல்லாமல் போய் விடும்.

Wednesday, February 22, 2012

ஏற்றுமதியில் எல்.சி.என்றால் என்ன?


கேள்வி 

ஏற்றுமதியில் எல்.சி.என்றால் என்ன?  

பதில்

எல்.சி. என்றால் லெட்டர் ஆப் கிரிடிட் எனப்படும். இது தமிழில் கடனுறுதி கடிதம் என அழைக்கப்படும். ஏற்றுமதி இறக்குமதியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால், இறக்குமதியாளர் தனது வங்கியிடம் கூறி எல்.சி. ஏற்பாடு செய்வார். இது இறக்குமதியாளரின் வங்கியிலிருந்து ஏற்றுமதியாளருக்கு கிடைக்கும் ஒரு உத்திரவாதக் கடிதம் ஆகும். இதை வைத்துக் கொண்டு அவர் ஏற்றுமதி செய்யலாம். அதே சமயம் ஏற்றுமதி செய்த பின் சமர்பிக்கப்படும் டாக்குமெண்ட்களும் தவறில்லாமல் இருக்க வேண்டும். உள்நாட்டு வியாபாரத்திற்கும் எல்.சி.யை பயன்படுத்தலாம்.

Sunday, February 19, 2012

ரூபாயின் தொடர்ந்த உயர்வு, 2013ம் வருடமும், ஏற்றுமதி டார்கெட்டும், மாம்பழம் ஏற்றுமதி, மிளகாய் வற்றலும் ஏற்றுமதியும், காதலர்கள் தினமும், ரோஸ் ஏற்றுமதியும் , அரிசி ஏற்றுமதி


சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்



இந்தத் தொடருக்கு கிடைத்து வரும் ஆதரவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாசகர்கள் பலர் பல கேள்விகள் கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில்கள் அனுப்புகிறேன். மேலும், பலருக்கும் உபயோகமான கேள்விகளை இந்தத் தொடரிலும் சேர்க்கிறேன். இனி சென்ற வார ஏற்றுமதி உலகத்திற்குள் செல்வோம்.


ரூபாயின் தொடர்ந்த உயர்வு

ஏற்றுமதியாளர்களை சில மாதங்களுக்கு முன்பு மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தற்போது தலைகீழாக மாறிவிட்டது. 50 ரூபாய் வரை ரேட் வைத்து தங்களது சரக்குகளுக்கு விலை நிர்ணயம் செய்திருந்தவர்களே கையை பிசையும் நிலை. 53 ரூபாய் வரை வைத்திருந்தவர்களை கேட்கவே வேண்டாம்.

டாலரின் எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும், ஒடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பது போன்ற கதை தான். தற்போது டாலர் மதிப்பு 49 ரூபாய்க்கும் கீழே வந்துள்ளது.  ஏன் இப்படி அநியாத்திற்கு கூடிக்கொண்டே செல்கிறது என்றால் இரண்டு காரணங்கள். ஒன்று, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு பணங்களை அனுப்புவது. இரண்டாவது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் அதிக அளவு முதலீடு செய்வது. 


2013ம் வருடமும், ஏற்றுமதி டார்கெட்டும்

2013-14ம் வருடத்திற்கு ஏற்றுமதி டார்கெட் 500 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி அடைவது என்பதைப் பற்றி கர்நாடாக பியோ (FIEO) ஒரு கருத்தரங்கத்தை வரும் பிப்ரவரி மாதம் மங்களூரில் ஏற்பாடு செய்துள்ளது.


மாம்பழம் ஏற்றுமதி

பாகிஸதானில் மாம்பழம் ஏற்றுமதிக்கு USAID (United States Agency for International development) நிறைய உதவிகள் செய்து வருகிறது. நமது கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர்களும் ஏன் அவர்களை தொடர்பு கொண்டு உற்பத்தி மற்றும் விற்பனை முயற்சிகளை கூட்டுவதற்கு வாய்ப்புக்களை உருவாக்ககூடாது. இவர்களுக்கு இந்தியாவிலும் அலுவலகம் உள்ளது. www.usaid.gov/in/ என்பது அவர்களின் இணையதள முகவரி.


மிளகாய் வற்றலும் ஏற்றுமதியும்

சென்ற வாரம் மிளகாய் ஏற்றுமதியை பற்றி பார்த்தோம். இந்த வாரமும் பார்ப்போம். ஏனெனில் இன்னும் காரம் குறையவில்லை ஆனால் விலை குறைந்து வருகிறது. விலை குறைவது பல ஏற்றுமதியாளர்களையும், உள்ளூர் வியாபாரிகளையும் கவலையைடையச் செய்துள்ளது. புதிதாக காண்டிராக்ட் போடுபவர்களுக்கு நல்ல லாபம்.


காதலர்கள் தினமும், ரோஸ்  ஏற்றுமதியும்

ரோஸ்  ஏற்றுமதி இந்த வருடம் 8 முதல் 10 சதவீதம் வரை கூடியுள்ளது. குறிப்பாக புனேயில் உற்பத்தி கூடியுள்ளது. கோடை காலத்தில் 4 செ.மீ வரை இருக்கும் ரோஸகள், குளிர்காலத்தில் 5 செ.மீ. வரை இந்தியாவில் தற்போது இருக்கிறது. மேலும், ரூபாய் மதிப்பு சமீபகாலத்தில் குறைந்ததும் நாம் கென்யாவை விட விலை குறைத்து கொடுக்க வாய்ப்புக்கள் இருந்த்து. இது எல்லாம் காதலர்கள் தினத்தை உலகம் சிறப்பாக கலர்புல்லாக  கொண்டாட நமது ஏற்றுமதியாளர்களும் ஒரு காரணமாக இருக்கப் போகிறோம். ஹோசூர் ரோஜாக்களும் உலகின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

அரிசி ஏற்றுமதி

பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் வருகிறது. 



கண்காட்சிகள்

கண்காட்சிகள் ஏற்றுமதியாளர்களின் கண்களை திறக்கும் ஒரு உன்னதமான அதிகம் செலவில்லாத ஒரு வாய்ப்பாகும்.
மார்ச் 27, 28, மும்பை, உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்கள் கண்காட்சி

இந்தக் கண்காட்சிகளுக்கு செல்வதால் என்ன லாபம்? உங்கள் பொருட்கள் சம்பந்தப்பட்ட புதிய ஐடியாக்கள் கிடைக்கலாம், இதுவரை நீங்கள் கையால் தயார் செய்து கொண்டிருந்தவைகளுக்கு இயந்திரங்கள் மூலம் தயாரிக்க முடியுமா அப்படியெனில் அந்த இயந்திரங்கள் எங்கு கிடைக்கும், யார் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம், பல தரப்பட்ட வியாபாரிகளைக் காணலாம், பிசினஸ்  டீலிங்க்ஸ்  நடக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு.



கேள்விக்கு என்ன பதில்?

கருணாகரன்
கோவை

கேள்வி
வெளிநாட்டிற்கு எப்படி பாக்கிங் செய்யப்பட வேண்டும்?

பதில்

இந்தக் கேள்வி ஏற்றுமதி செய்ய நினைப்பவர்களுக்கு பல சமயங்களில் வருவதுண்டு. பாக்கிங் வெளிநாட்டிலிருந்து உங்களிடம் சரக்குகள் வாங்குபவர் எப்படி கூறுகிறாரோ அப்படித்தான் இருக்கவேண்டும். உதாரணமாக இங்கு ரெடிமேட் சட்டைகள் வாங்கினால் அதற்கு அழகான அட்டைப்பெட்டி போட்டு அதில் வைத்துத்தான் பல இடங்களில் கொடுப்பார்கள். அப்படி இருந்தால் தான் நமக்கும் வாங்கிய ஒரு திருப்தி இருக்கும். ஆனால், வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது அவர்கள் சட்டையை அட்டைப்பெட்டி, பிளாஸடிக் பை போன்றவற்றில் போடவிரும்பமாட்டார்கள். சட்டையை வாங்கிய பிறகு அந்த பிளாஸடி பையையும், அட்டைப்பெட்டியையும் எப்படி அப்புறப்படுத்துவது என்ற கேள்வியும் வருவதால் தான். இது ஒரு சிறிய உதாரணம் தான். இது போன்று பல உள்ளது. ஆதலால் பேக்கிங் எப்படி செய்யப்படவேண்டும் என்பது பற்றி கான்டிராக்டிலேயே போட்டுக் கொள்வது நல்லது.

  

இந்தத் தொடர் குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரிsethuraman.sathappan@gmail.com

Sunday, February 12, 2012

மாற்று எரிசக்தி, மலேஷியா இந்தியா வர்த்தகம், கேரளா ஏற்றுமதி செய்யும் காயர் பொருட்கள், காரமான குண்டூர், பிபிஒ செக்டார் ஏற்றுமதி,

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

ஏற்றுமதி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டாலரின் ஏற்ற இறக்கம் ஏற்றுமதியாளர்களையும், இறக்குமதியாளர்களையும் கிறங்கச் செய்தாலும் இந்த உலகத்தில் பரபரப்புக்கு எந்த குறையும் இல்லை.


மாற்று எரிசக்தி

இந்தியா காற்று, சோலார், பயோமாஸ, பயோபியூல்ஸ ஆகியவை சம்பந்தப்பட்ட மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்ட தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிகளில் இந்தியா மிகச்சிறந்து விளங்கும் என்று தென்பிராந்திய கன்பிரடேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்டீரீசின் தலைவர் டி.டி. வாசு தெரிவித்துள்ளார். மாற்று எரிசக்தியில் தமிழ்நாடு முன்னேறி வருவது குறிப்பிடதக்கது. குறிப்பாக சிரிராம் குரூப் இந்தத் துறையில் தனி கம்பெனி நிறுவி முயற்சிகள் எடுத்து வருகிறது. கயத்தாறு பக்கம் நீங்கள் சென்றிருந்தீர்கள் என்றால் காற்றாலை மின்சாரத் தொழில்  எவ்வளவு பெரிய அளவில் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.


மலேஷியா இந்தியா வர்த்தகம்

மலேஷியா இந்தியா வர்த்தகம் 15 பில்லியன் டாலரை இந்த வருடம் 
எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேஷியாவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழகத்திலிருந்து எல்லாவிதமான பொருட்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்கின்றது. வாய்ப்புக்களும் அதிகம், போட்டியும் அதிகம்.
முயற்சி செய்யுங்கள், உங்களது பொருட்களுக்கும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கும்.


கேரளா ஏற்றுமதி செய்யும் காயர் பொருட்கள்

கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் அதே அளவிற்கு தென்னை மரங்கள் உண்டு. ஆனால் தென்னை மரத்தின் காயர் பொருட்கள் உற்பத்தியில் கேரளாவிற்கு இணயாக வர இயலவில்லை தமிழ்நாட்டால். இந்தத் துறையில் கேரளாவின் மார்க்கெட்டிங் முயற்சி மிகவும் பிரமாதமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி தவிர, உள்நாட்டில் விற்பனையிலும் கேரளா மிகவும் சக்கை போடு போடுகிறது. அது போல தமிழ்நாடும் மிகுந்த மார்க்கெட்டிங் முயற்சியோடு செயல்பட்டால் அது தமிழ்நாட்டில் பலருக்கு பெரிய அளவு உதவியாக இருக்கும், நல்ல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கும்.


காரமான குண்டூர்

குண்டூர் என்றாலே காய்ந்த மிளகாய் தான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு காரமான ஊர் குண்டூர். மசாலா பொருட்கள் ஏற்றுமதியில் மிளகாய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், குண்டூர் இதுவரை மசாலா பொருட்கள் ஏற்றுமதிக்காக ஸ்பைஸ பார்க் என்ற ஸ்டேடஸ்  விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து பல மிளகாய் ஏற்றுமதி செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் ஒரு முறை குண்டூர் சென்று பார்த்து வரவேண்டும்.


பிபிஒ செக்டார் ஏற்றுமதி

இந்தியாவின் பெரிய ஏற்றுமதிகளில் ஒன்றாக பிபிஒ செக்டார் வளர்ந்து வருகிறது. அதாவது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவிலிருந்து ஆட்கள் வேலை செய்து கொடுப்பது. பிபிஒ என்றால் பிசினஸ புராசஸ்  அவுட்சோர்சிங் என்பதன் சுருக்கம் தான். சென்ற வருடம் இந்தத் துறை இந்தியாவில் 88 பில்லியன் டாலர் அளவு சம்பாதித்துள்ளது. இதில் 60 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததின் மூலம் மட்டும் கிடைத்துள்ளது. 


கேள்விக்கு என்ன பதில்?

அருண்
காங்கேயம்

கேள்வி

ஏற்றுமதியில் சி.ஐ.எப்., பிரைஸ்  (CIF PRICE) என்றால் என்ன?


பதில்

Cost, Insurance and Frieght என்பதன் சுருக்கம் தான் CIF price எனப்படும். அதாவது வெளிநாட்டில் உள்ளவர் உங்களிடமிருந்து வாங்கும் சரக்குக்கான விலையை இப்படி குறிப்பிட சொன்னால் நீங்கள் உங்கள் சரக்கின் விலை, சரக்குகள் வெளிநாட்டில் வாங்குபவர் இருக்குமிடம் வரை செல்லும் கட்டணம், சரக்குகள் வெளிநாட்டில் வாங்குபவர் கூறும் துறைமுகம் வரை செல்லும் கட்டணம் ஆகியவை சேர்ந்தது தான் இந்த விலை குறிப்பிடல் ஆகும்.  இதில் சரக்குகளை உங்களது பாக்ட்ரியில் இருந்து துறைமுகம் வரை கொண்டு செல்லும் கட்டணமும் அடங்கும், உங்களது லாபத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த வார இணையதளம்


பிரேசில் இந்தியாவின் ஒரு முக்கிய ஏற்றுமதி பார்டனர் ஆகும். அங்குள்ள 13000 கம்பெனிகளின் விபரம் இந்த யெல்லோ பேஜஸ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாடு பற்றிய தகவல்கள் பற்றியும், ஏற்றுமதி இறக்குமதி பற்றியும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உபயோகமான இணையதளம்.

இந்தத் தொடர் குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரிsethuraman.sathappan@gmail.com

Saturday, February 11, 2012

10000 வது வாசகர்

இன்றைய தினம் என்னுடைய வலை பதிவு 10000 வது வாசகரை எட்டி பிடிக்கும் என நினைக்கிறேன். அந்த ஸ்பெஷல் வாசகருக்கு என் வாழ்த்துக்கள். அன்புடன் சேதுராமன் சாத்தப்பன் மும்பை 

Thursday, February 9, 2012

ஏற்றுமதி உலகம் ப்ளாக்கில் இதுவரை எழுதியுள்ள தலைப்புக்கள்

Sunday, June 19
ஏற்றுமதி உலகம்
 
ஃ         கடல்பொருட்கள் ஏற்றுமதி உயர்வு
ஃ         குறைந்து வரும் மஞ்சள் ஏற்றுமதி
ஃ         வெள்ளிப் பொருட்கள்
ஃ         தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது எப்படி?
ஃ         ஏற்றுமதி உதவும் இணையதளங்கள்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
 
Wednesday, June 29
ஏற்றுமதி உலகம் 
 
ஃ         டியூட்டி என்டைடில்மெண்ட் திட்டம் நீடிப்பு
ஃ         கூடி வரும் ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதி செய்ய தனித்திறமை தேவையா?
ஃ         ஆர்கானிக் பொருட்கள்
ஃ         ஏலக்காய் ஏற்றுமதி மணக்கிறது
ஃ         ஏற்றுமதி பொருட்காட்சிகள்
ஃ         கேள்விக்கு என்ன பதில்
ஃ        ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
 
Monday, July 4
ஏற்றுமதி உலகம்
ஃ         காரமான ஏற்றுமதி
ஃ         உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்குஉலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு என்ன தெரியுமா?
ஃ         வரும் மாதங்களில் ஏற்றுமதி குறையுமா?
ஃ         கனடா தேடும் இந்தியா
ஃ         எக்சிம் வங்கியும், ஆப்பிரிக்க நாடுகளும்
ஃ         மலேஷியாவிற்கு ஏற்றுமதி செய்யலாமா?
ஃ         இந்தியாவின் தடை பாகிஸ்தானின் ஆதாயம்
ஃ         ஏற்றுமதி வட்டி விகிதங்கள்
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?

Sunday, July 10
ஏற்றுமதி உலகத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
ஃ         ஜொலிக்கும் வைரம்
ஃ         விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி
ஃ         மங்கும் மெழுகுவர்த்தி ஏற்றுமதி
ஃ         பத்தமடை, தைக்கால், திருச்சி பாய்கள்
ஃ         டெக்ஸடைல்ஸ் மற்றும் ஆயத்த ஆடைகள்
ஃ         இஞ்னியரிங் பொருட்கள் ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
Sunday, July 17
இந்திய ஏற்றுமதி உலகம் 5
ஃ         ஏலக்காய் மணக்கிறது
ஃ         இந்தியா மலேஷியா வர்த்தக ஒப்பந்தம்
ஃ         பில்லியன் டாலர் ஏற்றுமதி கனவு எப்படி நனவாகும்?
ஃ         நெய் என்றால் உருகாத மனது
ஃ         மாம்பழமாம் மாம்பழம்
ஃ         கேள்விக்கு என்ன பதில் ?

Monday, July
சென்ற வார ஏற்றுமதி உலகம் 6
ஃ         வெங்காய ஏற்றுமதி
ஃ         ஜுன் ஏற்றுமதி உயர்வு
ஃ         கைவினைப்பொருட்கள்
ஃ         ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
ஃ         கிருஸ்துமசுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள்
ஃ         தோல் பொருட்கள் ஏற்றுமதி கண்காட்சி
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
Sunday, July 31, 2011
ஏற்றுமதி உலகம் 7

ஃ         பங்களாதேஷும் இந்திய ஏற்றுமதியும்
ஃ         மில்லியன், பில்லியன்
ஃ         கார்மெண்ட் ஏற்றுமதி இலக்கு
ஃ         சைனா, இந்தியா
ஃ         புண்ணாக்கு ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

Sunday, August 7, 2011
சென்ற வார ஏற்றுமதி உலகம் 8
ஃ         விவசாய ஏற்றுமதி மண்டலங்கள் தேவையா?
ஃ         பொருட்கள் ஏற்றுமதி, சர்வீசஸ்  ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதியில் என்னென்ன முக்கியமான டாக்குமெண்ட்கள்
ஃ         இறக்குமதி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஃ         கோழி முதலா, முட்டை முதலா?
ஃ         உணவுப் பொருட்கள் கண்காட்சி
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
Sunday, August 14,
சென்ற வார ஏற்றுமதி உலகம் 9
ஃ         டாலரும், ரூபாயும்
ஃ         கூட்டுறவே ஏற்றுமதியில் சிறந்த வழி
ஃ         கடல் பொருட்கள் ஏற்றுமதி
ஃ         உருளைக்கிழங்கு ஏற்றுமதி
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
Sunday, August 21, 2011
சென்ற வார ஏற்றுமதி உலகம் -10
ஃ         குறைந்து வரும் வெண்கலப் பொருட்கள் ஏற்றுமதி
ஃ         வர்த்தக கண்காட்சி
ஃ         பேரிச்சம்பழம் இறக்குமதி
ஃ         ஏற்றுமதி டாகுமென்ட்டில்  என்ன தவறுகள் நேரலாம்
ஃ         பாகிஸ்தான் மாம்பழம் அமெரிக்காவிற்கு
ஃ         வலுக்கும் டாலர்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?


Sunday, August 28, ௨௦௧௧
சென்ற வார ஏற்றுமதி உலகம்11
ஃ         வளமான ஏற்றுமதி
ஃ         டெக்ஸ்டைல்ஸ்  மற்றும் ஆயத்த ஆடைகள்
ஃ         ஏலக்காய்
ஃ         வாருங்கள் ஒமனுக்கு ஏற்றுமதி செய்யலாம்
ஃ         ஆர்கானிக் பொருட்கள்
ஃ         மாவட்டம் தோறும் ஏற்றுமதி மையங்கள்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
Sunday, September 4, 2011
சென்ற வார ஏற்றுமதி உலகம் 12
ஃ         கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி
ஃ         ரூபாயில் ஏற்றுமதி வர்த்தகம்
ஃ         டாலரும், ரூபாயும்
ஃ         வாழைப்பழமும், ஏற்றுமதியும்
ஃ         மூலிகை பொருட்கள் ஏற்றுமதி
ஃ         கேள்வி பதில்
 
Monday, October 3, 2011
ஏற்றுமதி உலகம் - 12
ஃ         மாதுளம்பழம் ஏற்றுமதி
ஃ         சோயா மீல்
ஃ         ஹெ.எஸ். கோடு
ஃ         இந்தியாவின் ஏற்றுமதி
ஃ         முந்திரிப்பருப்பு
ஃ         நேபாளத்தின் ஏற்றுமதி, இறக்குமதி
ஃ         என்னனென்ன கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன?
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
 
Monday, October 10
சென்ற வார ஏற்றுமதி உலகம் - 13
ஃ         கூடிவரும் ஏற்றுமதி
ஃ         வெற்றிலை ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதியில் டாக்குமெண்டேஷன்
ஃ         அரிசி ஏற்றுமதி
ஃ         லெதர் ஏற்றுமதி
ஃ         பங்களாதேஷ் வழியாக இந்திய ஏற்றுமதி
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
Monday, October 17, 2011
ஆகஸ்ட் மாத ஏற்றுமதி உயர்வு,
அம்ரஸ் சாப்பிடலியா அம்ரஸ்,
ஷாநாஸ் ஹுசைன் தெரியுமா உங்களுக்கு?,
கயிறு ஏற்றுமதி,
வெங்காயம் தானே?.
கேள்விக்கு என்ன பதில்?,
ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
 
Monday, October 24
ஏற்றுமதி உலகம் 15
ஃ         டெக்னிகல் டெக்ஸடைல்ஸ்
ஃ         இந்திய கடலுணவு பொருட்கள் சீனாவிற்கு
ஃ         தாய்லாந்தும், அரிசி ஏற்றுமதியும்
ஃ         திருப்பூர் ஏற்றுமதி
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

Monday, October 31
ஏற்றுமதி உலகம்
 
ஃ         டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி
ஃ         பே பால் மூலமாக ஏற்றுமதி பணம்
ஃ         புளி ஏற்றுமதி
ஃ         ஜீரா ஏற்றுமதி
ஃ         செப்டம்பர் மாத ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதி புள்ளி விபரங்கள் தவறா?
ஃ         வெளிநாட்டு வர்த்தக கொள்கை
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
Monday, November 7
சென்ற வர ஏற்றுமதி உலகம் 17
ஃ         டாலரும், ரூபாயும்
ஃ         பஜாஜ் ஆட்டோவின் ஏற்றுமதி
ஃ         ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை
ஃ         இந்திய பர்மா உறவுகள்
ஃ         டெல்லியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி
ஃ         பின்னலாடைகள் ஏற்றுமதி
ஃ         பஹாமஸ்  தந்த பயம்
ஃ         கேள்விக்கு என்ன பதில்?
ஃ         ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

Sunday, November 13, 2011
சென்ற வாரம் ஏற்றுமதி உலகம் - 18,
சிவகாசி வெடி,
காய்கறிகள் ஏற்றுமதி,
எந்த வங்கியில் கணக்கு வைக்கலாம்?,
கார்பெட் ஏற்றுமதி,
சிட்பியின் மார்க்கெட்டிங் உதவி,
தஞ்சாவூர் ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி இருக்கிறது?

Tuesday, November 15, 2011
முருங்கக்காய்

Wednesday, November 16, 2011
இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க வழி
Monday, November 21, 2011
சென்ற வார ஏற்றுமதி உலகம் 19,
உலகத்தில் ஏற்றுமதியில் உயர்ந்து நிற்கும் நாடுகள் (டாலர் மதிப்பில்),
செப்டம்பர் மாத இந்திய ஏற்றுமதி,
உலகத்தின் நம்பர் ஒன் பால் உற்பத்தியாளர் இந்தியா

Sunday, November 27
சென்ற வார ஏற்றுமதி உலகம் - 20,
ஆர்கானிக்,
ஏமாற்று புராடக்ட்கள்,
சணல் பொருட்கள் ஏற்றுமதி,
அக்டோபர் மாத ஏற்றுமதி,
கேள்விக்கு என்ன பதில்?,
ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள்

Tuesday, December 13, 2011
சென்ற வார ஏற்றுமதி உலகம்

டாலரும் ரூபாயும்,
பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
பாசுமதி அரிசி,
சைனா கண்காட்சி,
ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும் போட்டியும்

Sunday, டிசம்பர்
சென்ற வார ஏற்றுமதி உலகம்,
போலி ஆர்டர்கள் உஷார்,
மீன்கள் ஏற்றுமதி,
வெங்காயம்

Monday, December 19, 2011
என்னுடைய அடுத்த புத்தகம் எனது அன்பளிப்பாக

Sunday, December 25, 2011
ஏறுகிறதா ஏற்றுமதி?
அடைவோமோ இந்த வருட டார்கெட்டை?,
மஞ்சள் விலை மர்மம்,
காடு வளர்ப்பும், ஏற்றுமதியும்,
ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்,
 
Sunday, January 1, 2012
ஏற்றுமதி / இறக்குமதி கடன்களை டாலரில் வாங்குவதா? ரூபாயில் வாங்குவதா?,
மிளகு,
யோகா ஏற்றுமதி,
டெனிம்,
இந்திய துறைமுகங்கள்,
உலகத்தில் வேகமாக வளர வாய்ப்புள்ள நாடுகள்
 
Sunday, January 8, 2012
அரிசி ஏற்றுமதி,
தலித் தொழிலதிபர்கள்,
கயிறும் ஏற்றுமதியாகிறது,
கொய்யாப்பழம் ஏற்றுமதி,
 
Sunday, January 15, 2012
முடியும் ஏற்றுமதியாகிறது?,
இந்திய கார்பெட்கள்,
பத்தமடைப் பாய்கள்,
ராஜகுமாரிக்கு ஒரு இந்திய ரோஜா,
ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்
 
Sunday, January 22, 2012
தேன்,
ஆயுர்வேதம்,
இருதரப்பு ஒப்பந்தங்கள்,
மாட்டு மாமிசம்

Sunday, January 29, 2012
நெல்லிக்காய் ஏற்றுமதியாகிறது?,
ஊறுகாய் ஏற்றுமதி,
விளைந்து கெடுக்கும் வெங்காயம்,
யுசிபி என்றால் என்ன?
 
Sunday, February 5, 2012
வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி,
உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர்,
ரூபாயும், டாலரும்,
கண்காட்சி, கேள்வி பதில்

Sunday, February 5, 2012

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி, வெங்காயம், உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர், ரூபாயும், டாலரும், கண்காட்சி, கேள்வி பதில்

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி குறையக் காரணம் சரியான சப்ளை இல்லாததும், குவாலிட்டி சரியான படி இல்லாததும் தான் என்று சமீபத்தில் ஸ்பைசஸ்  போர்ட் சேர்மன் அறிவித்துள்ளார். வாசனைப் பொருட்கள் உற்பத்தியில், உபயோகிப்பதில் உலகளவில் நம்பர் ஒன்னாக இருக்கிறது.


வெங்காயம்

வெங்காயம் உற்பத்தி மிகவும் அதிகமாகிவிட்டதாலும், நிறைய ஸடாக் இருப்பதாலும் ஒர் டன் அமெரிக்க டாலர் 150 வரை இருந்த மினிமம் ஏற்றுமதி விலை என்ற கட்டுப்பாடையும் நீக்கிவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? வெங்காயம் தொடர்ந்து அரசுக்கும், விவசாயிகளுக்கும் தொந்தரவுகள் தந்து கொண்டே தான் இருக்கிறது, ஏன் அதை உறிக்கும் வீட்டுக்கார அம்மணிக்களுக்கும் தான்.



உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர்

உலகத்தின் பெரிய மாம்பழ உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து இந்தியாவிற்கு இருந்தாலும், ஒரு ஹெக்டேருக்கு அதிகமாக மாம்பழம்
உற்பத்தி செய்யும் நாடு என்ற அந்தஸ்ஸதை பெரு நாடு பெற்றுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 18 டன் மாம்பழம் உற்பத்தி செய்கிறது. இந்தியா ஒரு ஹெக்டேருக்கு 6.3 டன் தான் உற்பத்தி செய்கிறது. ஆனால், வருடத்திற்கு 16.3 மில்லியன் டன் மாம்பழம் உற்பத்தி செய்து உலகின் நம்பர் ஒன் உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. ஆனால், ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். பெரு நாடு மட்டும் வருடத்திற்கு 450 கோடி ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.


ரூபாயும், டாலரும்

டாலருக்கு எதிராக ரூபாய் 54.30 வரை சென்றது. அப்போது ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்வர்ட் காண்டிராக்ட் போடக்கூட மறந்தார்கள். ஆனால், பாருங்கள் தற்போது 50.30 வரை வந்து நிற்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? புதிய ஏற்றுமதியாளர்கள் பார்வர்ட் காண்டிராக்ட் போடுவது முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 கண்காட்சி

மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக் அபிவிருத்தி கழகம் மார்ச் மாதம் 15 முதல் 17 வரை ஒரு உலகளவிளான கண்காட்சியை பெங்களூரில் நடத்தவுள்ளது. இந்தியா ஆயுர்வேதம், ஹெர்பல் ப்ராடக்ஸ் போன்றவைகளில் உலகப் புகழ் பெற்றது. சமீப காலங்களில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அலோபதி தவிர மற்ற மருந்துக்களை பார்க்க, வாங்கத் தொடங்கிவிட்டனர். ஆதலால், இது போன்ற ஒரு கண்காட்சி இந்தியப் பொருட்களின் விற்பனையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அருகில் உள்ள பெங்களூரில் நடப்பதால் இந்தப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் சென்று பார்த்தால் அது நிச்சியம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



கேள்வி பதில்
ராமராஜ்
கரூர்



கேள்வி2012ம் வருடத்தின் டெக்ஸடைல்ஸ டிரண்ட்டுகளை எப்படி தெரிந்து கொள்வது?


பதில்

2012ன் டெக்ஸடைல்ஸ டிரண்ட்டுகளை அறிந்து கொள்ள சமீபத்தில் டெல்லியில் ஒரு மிகப்பெரிய கண்காட்சி நடந்தது. இதில் கார்மெண்ட் மற்றும் அதன் அக்சசரிஸ, பேப்ரிக்ஸ, ஹோம் பர்னிஷிங், மேட் அப்ஸ, இந்தியன் ஹாண்டிகிராப்ட்ஸ, ஹாண்ட்லூம், சில்க், கம்பளி மற்றும் கம்பளி ப்ராடக்ஸ, ஜுவல்லரி மற்றும் கார்பெட் ஆகிய துறைகளில் 2012ல் என்ன டிரண்ட் இருக்கும் என்று இந்த கண்காட்சி நடத்தி காட்டியது. சென்ற வருடம் இதே போல ஒரு கண்காட்சி வெற்றிகரமாக நடந்ததால் இந்த வருடம் ஜனவரி மாதம் டெல்லியில் இது மறுபடி நடந்தது. அடுத்த வருடம் ஜனவரியிலும் இருக்கும்.  இது தவிர டிரெண்ட்களை உங்களை சொல்லித்தர பல இணையதளங்களும் இருக்கின்றன.




இந்தத் தொடர் குறித்து உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய முகவரி sethuraman.sathappan@gmail.com