சேதுராமன் சாத்தப்பன்
சேதுராமன் சாத்தப்பன் கனடாவைச் சேர்ந்த மிகப் பெரிய வங்கியான “ஸ்கோஷியா பாங்க்” (Scotiabank)‐ன் இந்தியாவின் உதவி பொது மேலாளராக மும்பையில் உள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக தினமலர் பத்திரிக்கையில் பங்கு வர்த்தகம், பொருளாதாரம், ஏற்றுமதி குறித்து கட்டுரைகள் வாரந்தோறும் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இது தவிர சேமிப்பு, முதலீடு குறித்து பல பத்திரிக்கைகளில் (குமுதம், மல்லிகை மகள், மராத்திய முரசு, லெமூரியா, தமிழ் தொழில் உலகம், தொழில் முன்னேற்றம், நக்கீரன், நாணல் ) போன்ற பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார்.
இவர் ஏற்றுமதி ‐ இறக்குமதி துறையில் 18 வருட அனுபவம் உள்ளவர். உலக அளவில் நடைபெற்ற ஏற்றுமதி ஆவணங்களுக்கான (Export Documents) தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பதில் இந்தியாவின் மிகச் சிறந்த வல்லுனராகக் கருதப்படுகிறார்.
ஏற்றுமதிக்கான ஆவணங்களை பிழையில்லாமல் தயாரிப்பது எப்படி என்றும், அதற்கான விதிகளுக்காக (UCPDC) இந்தியாவிலும் / வெளிநாடுகளிலும் நடத்தப்படும் பல கருத்தரங்குகளில் / பயிற்சி முகாம்களில் சிறப்பு பயிற்சி அளிப்பவர். தமிழ்நாட்டில் தினமலர் பத்திரிக்கைக்காக பல இடங்களில் ஏற்றுமதி கருத்தரங்கள் நடத்தியுள்ளார். இவரின் கரூர் கருத்தரங்கத்தில் 1700 பேர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
இதுவரை 9 புத்தகங்கள் (5 தமிழிலும், 4 ஆங்கிலத்திலும்) எழுதியுள்ளார்.