சரவணன்
கோவை
கேள்வி
ஏற்றுமதி சரக்குகளை தபால் மூலம் அல்லது கூரியர் மூலம் அனுப்ப முடியுமா?
பதில்
தாராளமாக அனுப்பலாம். இந்திய அரசின் இந்தியா போஸ்ட் மூலம் இண்டர்நேஷனல் போஸ்ட் பார்சல் மூலம் அனுப்பலாம். அல்லது தனியார் கூரியர் (டி.எச்.எல்., போன்றவை) மூலம் அனுப்பலாம். இவைகளும் இந்திய கஸ்டம்ஸை கடந்து தான் செல்ல வேண்டும். இவைகள் மூலம் சரக்குகள் அனுப்பும் போது அவை நேரடியாக இறக்குமதியாளரைச் சென்றடையும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது சரக்குகளை பெற்றுக் கொண்டு பணம் தராமல் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. முன் பணம் அதாவது அட்வான்ஸ் பேமண்ட் வாங்கிக் கொண்டு இந்த வகை ஏற்றுமதி செய்வது நல்லது.