Friday, July 31, 2015

கார்பெட் ஏற்றுமதி


கார்பெட் ஏற்றுமதி


இந்திய கார்பெட் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியை கூட்டுவதற்காகபிரேசிலில் இந்திய அரசாங்கம் ஒரு கிடங்கை திறந்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் சரக்குகளை அங்கு கொண்டு சென்று வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து தங்கள் ஐரோப்பிய இறக்குமதியாளர்களுக்கு சப்ளை செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் தயாரிக்கும் கார்பெட்களில் 95 சதவீதம் ஏற்றுமதி தான் ஆகிறது. 1961-62ம் வருடங்களில் சுமார் மில்லியன் டாலர்கள் தாம் கார்பெட் ஏற்றுமதி இருந்தது. தற்போது அது 2014-15ம் வருடம் 1010 மில்லியன் டாலர்களாக கூடியுள்ளது.

தமிழ்நாடு கார்பெட் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. உத்திரபிரதேசத்தில் பதோகி என்ற ஊர் தான் கார்பெட் தயாரிப்பிற்கு மிகவும் புகழ் பெற்றது.


Thursday, July 30, 2015

ஏற்றுமதிக்கு 20 பொருட்கள் வைத்துள்ளேன்

கேள்வி பதில்

ஆனந்த்
கோவை


கேள்வி
எனக்கு ஏற்றுமதியில் மிகுந்த ஆர்வம். நான் ஒரு இருபது பொருட்கள் ஏற்றுமதிக்கென தேர்வு செய்து வைத்துள்ளேன்எனக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்க வழி சொல்லுங்கள்.


பதில்

முதலில் இருபது பொருட்கள் ஏற்றுமதிக்கு தேர்வு செய்வதே ஒரு தவறான முடிவாகும். ஏற்றுமதி செய்ய நினைத்தால் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பதே உசிதமாகும். நீங்கள் எந்தப் பொருளும் தயாரிக்கவில்லைவாங்கி ஏற்றுமதி செய்ய நினைத்தால் ஒரு ஐந்து பொருட்களை அதிகபட்சமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.  அதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். அப்போது தான் ஏற்றுமதியில் வெற்றி பெற முடியும்.  

Tuesday, July 28, 2015

நீங்கள் மாம்பழம் ஏற்றுமதி செய்பவரா? இந்த வார இணையதளம் www.mango.org


இந்த வார இணையதளம்


மாம்பழம் என்றாலே டயாபிடிஸ் காரர்களுக்கே ஒரு சிறிய ஆசை வரும். அந்த அளவு எல்லோருக்கும் பிடித்த பழம். அப்படிப்பட்ட பழத்திற்கு என்று ஒரு தனி வெப்சைட். அதில் மாம்பழம் பற்றிய இண்டஸ்டிரி செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. சென்று பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.



Monday, July 27, 2015

எப்படி கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை குறைப்பது?


எப்படி கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை குறைப்பது?

தேவையில்லாத இறக்குமதிகள் கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை கூட்டுகின்றன. மேலும்அது அந்நிய செலாவணி கையிருப்பை குறைக்கின்றது என்ற கவலை எல்லோருக்கும் இருக்கிறது. இதைக் குறைப்பதற்கு வழி தங்கம்வெள்ளிஎலக்ட்ராணிக் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிகளை குறைப்பது தான். இவற்றின் இறக்குமதிகளை குறைக்க முடியாது. ஆதலால் இவற்றிக்கு அதிகம் இறக்குமதி வரிகள் விதிக்கப்படலாம். வரும்காலங்களில் எலக்ட்ராணிக் பொருட்களின் விலைகள் கூடும் அபாயம் உள்ளது. ஏற்றுமதியை ஊக்கப்படுவதும் கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டை குறைக்க வழி வகுக்கும். ஆதலால் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.


நேபாளுக்கு காய்கறி ஏற்றுமதி



நேபாளுக்கு காய்கறி ஏற்றுமதி


2013-14ம் வருடத்தில் நேபாளுக்கு 150 கோடி ரூபாய் மதிப்பிற்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்துள்ளோம். இது அதற்கு முந்தைய வருடத்தை விட 50 சதவீதம் கூடுதலாகும். அதிகபட்சமாக 60700   டன்கள் உருளைக்கிழங்கும், 58300   டன்கள் வெங்காயமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  இது தவிர எல்லாவிதமான காய்கறிகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நீங்களும் முயற்சி செய்யலாம்.

நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நேபாளுக்கு ஏற்றுமதி செய்தால் அது ஏற்றுமதியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்று? கட்டாயம் அது ஏற்றுமதியில் எடுத்துக் கொள்ளப்படும்.

Sunday, July 26, 2015

ஏற்றுமதி ஆவணங்களுக்காக நடைபெறும் சி.டி.சி.எஸ்., தேர்வு எப்போது நடைபெறும்?

கேள்வி பதில்


ராஜ்
சென்னை



கேள்வி

ஏற்றுமதி ஆவணங்களுக்காக நடைபெறும் சி.டி.சி.எஸ்.தேர்வு எப்போது நடைபெறும்?


பதில்
சி.டி.சி.எஸ்.தேர்வு அடுத்த முறை 2016 ம் வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறும். மிகவும் கடினமான  தேர்வாகும். கட்டணம் ரூபாய் 40,000 இருக்கும். சென்னையில் ஒரு தேர்வு மையம்  உள்ளது. வாழ்த்துகள். சென்று பாருங்கள் www.cdcs.org


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்  


உலகத்தின் பெரிய பழங்கள், காய்கறிகள் உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர். 

இந்த இணையதளத்தில் பழங்கள் உற்பத்தி, ஏற்றுமதி, பாக்கிங் ஆகியவை பற்றி நன்றாக  கூறப்பட்டுள்ளது. சென்று பாருங்கள்

Thursday, July 23, 2015

ஈமார்கெட்டிங் என்றால் என்ன?


கேள்வி பதில்

ஜானகிராம்
திருச்சி


கேள்வி
ஈமார்கெட்டிங் என்றால் என்ன?


பதில்
ஈமார்கெட்டிங் செய்ததால் நல்ல பலன் களை தமிழ்நாட்டு அனுபவித்து இருக்கிறதுகோவையில் 50,000 சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகள் உள்ளதுஇதில் 20 முதல் 30 சதவீத கம்பெனிகள் தங்களுக்கென வெப்சைட்கள் வைத்துள்ளனஇவை தங்களுக்கென வெப்சைட்கள் ஆரம்பித்ததும் ஆர்டர்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளனதங்கள் வியாபாரம் 20 சதவீதம் கூடுதல் ஆகியிருப்பதாக தெரிவிக்கின்றன
ஈமார்கெட்டிங் செய்வதால் என்ன லாபம்குறைந்த செலவுநல்ல பலன்கள்வெளிநாட்டு ஆர்டர்கள், 24 மணிநேர மார்க்கெட்டிங் போன்றவை ஆகும். தற்போது மார்க்கெட்டிங் பேஸ்புக், டிவிட்டர் என விரிந்து செல்கிறது. ஆன்லைன் பற்றி தெரிந்து கொள்ளாமல் உங்கள் வர்த்தகத்தை வெளி ஊர்களில், வெளி நாடுகளில் பரப்புவது கடினம். 


மூக்குப் பொடியும் ஏற்றுமதி ஆகிறது

மூக்குப் பொடியும் ஏற்றுமதி ஆகிறது


பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பொருள் மூக்குப் பொடி ஏற்றுமதிஇந்தியா இந்த ஏற்றுமதியில் கிட்டதட்ட முதலிடம் வகிக்கிறதுஇந்தியா அமெரிக்காஅரபு நாடுகள்யு.கேஆகிய நாடுகளுக்கு முறையே 43, 31, 17 டன்கள் மூக்குபொடி 2010-11ம் வருடத்தில் ஏற்றுமதி செய்துள்ளதுஒரு காலத்தில் டி..எஸ்.ரத்தினம் பட்டணம் பொடி தான் தமிழ்நாட்டில் புகழ்பெற்றதாக இருந்ததுஎன்ன இந்த மேட்டர் மூக்குபொடி போட்டது போல காரமாக இருக்கிறதா?

எண்ணெய் (பாமாயில் போன்றவை) எப்படி இறக்குமதி செய்யப்படுகிறது?

கண்ணன்
சென்னை

கேள்வி
எண்ணெய் (பாமாயில் போன்றவை) எப்படி இறக்குமதி செய்யப்படுகிறது?

பதில்
எண்ணெய் பெரும்பாலும் டாங்கர்கள் மூலமாகத் தான் இறக்குமதி செய்யப்படுகிறதுசில சமயம் முழு டாங்கர் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சிலர் 
ஒன்று சேர்ந்து ஒரு டாங்கர் மூலமாக சரக்குகளை இறக்குமதி செய்வார்கள்உதாரணம் பாமாயில் இறக்குமதிஇந்தியாவில் இருந்து இறக்குமதியாளர்கள்மலேஷியாவில்இருந்து ஒரு ஏற்றுமதியாளரிடமிருந்து கால் டாங்க் என்ற அளவில் 
இறக்குமதி செய்தால் அந்த சரக்குகள் எல்லாவற்றையும் ஒரே கண்டெய்னரில் 
அனுப்பி வைப்பார்கள்இது செலவுகளைக் குறைக்கும். இது கோ மிங்கிளிங் எனப்படும். இது ஏற்றுமதியில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

Wednesday, July 22, 2015

கன்டெய்னரில் எத்தனை வகைகள் உள்ளது?

சிவக்குமார்
ஈரோடு

கேள்வி
கன்டெய்னரில் எத்தனை வகைகள் உள்ளது?

பதில்
கன்டெய்னரில் 20 அடி40 அடி என்று இரண்டு வகையான கன்டெய்னர்கள் உள்ளதுஇதில் ஒபன் டாப் கன்டெய்னரும் உள்ளது, அழுகும் பொருட்களை எடுத்துச் செல்ல குளிரூடப்பட்ட கன்டெய்னரும் உள்ளது.

ஏற்றுமதியில் நஷ்டம் தவிர்ப்பது எப்படி?


ராம்நாராயணன்
கோவை

கேள்வி
ஏற்றுமதியில் நஷ்டம் தவிர்ப்பது எப்படி?


பதில்

கீழ்கண்டவற்றை பின்பற்றினால் நஷ்டம் தவிர்க்கலாம்.
சிறிய அளவிலிருந்து ஏற்றுமதியை தொடங்க வேண்டும்
நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவேண்டும்.
இறக்குமதியாளரைப்  பற்றி நன்கு தெரிந்து கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டும்
அதாவது அவரைப் பற்றி நன்னம்பிக்கை அறிக்கை எடுத்த பிறகு செய்வது.
ஏற்றுமதி பற்றி படித்து தெரிந்து கொள்வதுஏற்றுமதி பற்றிய அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்இல்லாவிடில் மிகவும் கடினம்.
ஏற்றுமதி இன்சுரன்ஸ் செய்து கொண்டு பின் ஏற்றுமதி செய்வது.
மேலே கண்டவை உங்கள் தாரக மந்திரமாக இருக்கட்டும்.

Tuesday, July 21, 2015

தமிழ்நாட்டிலிருந்து சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் எப்படி?


கலைச்செல்வி
ஸ்ரீரங்கம்


கேள்வி

தமிழ்நாட்டிலிருந்து சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் எப்படி?


பதில்

சின்ன வெங்காயம் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் தாம்
உபயோகிக்கிறார்கள்மற்ற மாநிலத்தவர்கள் உபயோகிப்பதில்லை.
ஆதலால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு பெரிய வாய்ப்புக்கள் தென்னிந்தியர்கள் 
எங்கெல்லாம் இருக்கிறார்கள்ளோ அங்கு தான் இருக்கிறதுஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்வெங்காயம் விலை எப்போதும் தாறுமாறாக இருக்கும்உதாரணத்திற்கு மூன்று மாதம் முன்பு சின்ன வெங்காயம் ஜுலை மதம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு தருகிறோம் என்று வெளிநாட்டில் உள்ளவரிடம் காண்டிராக்ட் போட்டிருந்தீர்களேயானால் தற்போது ரூபாய் 100க்கும் மேல் வந்து நிற்கிறதுநீங்கள் நஷ்டப்பட்டிருப்பீர்கள்ஆதலால் நீங்கள் வெளிநாட்டில் இறக்குமதியாளரிடம் காண்டிராக்ட் போட்டவுடன்இங்கும் உங்களுக்கு சரக்கு விற்பவர்களிடமும் ஒரு காண்டிராக்ட் போடுவது உத்தமம்அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது.

மல்லாக்கொட்டை பெரிய பிசினஸுங்க


மல்லாக்கொட்டை பெரிய பிசினஸுங்க


மல்லாக்கொட்டை அதாங்க நிலக்கடலை பெரிய பிசினஸ் வாய்ப்புக்களை கொடுக்கிறது நம்நாட்டில்.

2006-07 ம் வருடம் நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 70 சதவீதம் எண்ணெய் தயாரிக்கப்பயன்படுத்தப்பட்ட்துதற்போது 40 சதவீதம் எண்ணெய் தயாரிக்கவும்சதவீதம் ஏற்றுமதிக்கும்12 சதவீதம் விதைக்காகவும்மீதம் 43 சதவீதம் ஸ்நாக்ஸ் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம் ஸ்நாக்ஸ் இண்டஸ்டிரியில் சதவீதம் அளவு தான் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததுதற்போது 15 சதவீதம் இந்த இண்ட்ஸ்டிரியில் உபயோகப்படுத்தப்படுகிறதுஅதுபோல முன்பு ஏற்றுமதி சதவீதம் தான் இருந்ததுதற்போது சதவீதமாக இருக்கிறது.