செவன் ஸ்டார் ப்ரூட்ஸ்
செவன் ஸ்டார் ப்ரூட்ஸ் என்ற கம்பெனி இந்தியாவிலிருந்து அதிக அளவில் பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற வருடம் அதிகம் அளவில் திராட்சை ஏற்றுமதி செய்த கம்பெனி என்ற பெயரை எடுத்துள்ளது. இது தவிர மாதுளம்பழம், மாம்பழங்களும் அதிகம் அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து முதல் முறையாக குஜராத்தின் கேசர் மாம்பழத்தை ஏற்றுமதி செய்த பெருமையை பெறுகிறது. இதை கடல் மூலமாக முழுவதும் குளிரூட்டப்பட்டு கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்டெய்னர் மூலமாக யு.கே. யிலுள்ள பவ்பார்ட் இம்போர்ட்ஸ் என்ற கம்பெனிக்கு செய்துள்ளது. இந்த கம்பெனி தான் யு.கே.யிலுள்ள அனைத்து மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment