Friday, October 24, 2014

இந்த வார இணையதளம் http://www.learningexports.com


இந்த வார இணையதளம்



தமிழில் ஏற்றுமதி சம்பந்தமாக விரிவாக தபால் மூலம் படிக்க, ஏற்றுமதி ஆவணங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் முழு விபரங்கள் கிடைக்கும்.


காயர் பொருட்கள் ஏற்றுமதி


காயர் பொருட்கள் ஏற்றுமதி


முன்பெல்லாம் காயர் ஏற்றுமதி என்றால் மிதியடிகள் 80 சதவீதம் இருக்கும். ஆனால் தற்போது அவை காயர் ஏற்றுமதியில் 50 சதவீதம் அளவே பங்கு வகிக்கின்றன. காயர் ஏற்றுமதி என்றால் கேரளா எல்லோருக்கும் உடனடியாக ஞாபகம் வரும். கேரளாவில் என்.சி.ஜான் அண்ட் சன்ஸ் கம்பெனி காயர் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

Thursday, October 23, 2014

மாட்டிறைச்சி ஏற்றுமதி


மாட்டிறைச்சி ஏற்றுமதி


மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. அதாவது எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியில். பசு மாட்டு இறைச்சி ஏற்றுமதி இந்தியாவிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடம் இந்தியா, பிரேசில் நாட்டை விட அதிகமாக ஏற்றுமதி செய்து முதலிடத்தைப் பெற்றது. சென்ற வருடம் 1.7 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சி இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டிலும் 2.1 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சி உபயோகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

அபிடா நிறுவன இணையதளத்திற்கு சென்றால் இன்னும் அதிக விபரங்கள் கிடைக்கும்.

Sunday, October 19, 2014

விவசாய உபகரணங்கள் இறக்குமதி


விவசாய உபகரணங்கள் இறக்குமதி


நெதர்லாந்தை சேர்ந்த ஸ்டீன்க்ஸ் சர்வீசஸ் என்ற கம்பெனி விவசாயத்திற்கு உதவும் பல உபகரணங்களைத் தயாரித்து வருகிறது. இது விவசாய நாடான இந்தியாவிற்கு பலவிதமாகவும் உதவும். இவர்களின் இணையத்தளமான http://www.steenks-service.nl/site/en  சென்று பாருங்கள். இறக்குமதி செய்து விற்பதற்கு யோசிக்கலாம்.

Saturday, October 18, 2014

கார்ன் ஏற்றுமதி


கார்ன் ஏற்றுமதி


சாதாரணமாக மே, ஜுன் மாதங்களில் பீகாரிலிருந்து கார்ன் ஏற்றுமதி தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவலாக இருக்கும். சுமார் 500,000 டன்கள் வரை இருக்கும். இந்த முறை அங்கு மழை பெய்ததால் ஏற்றுமதி தடைப்படுகிறது. இது பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த நாடுகளில் இந்த வருடம் பம்பர் விளைச்சல். ஆதலால் அங்கிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கியுள்ளது. பெய்தும் கெடுக்கிறது, பெய்யாமலும் கெடுக்கிறது.

ஏற்றுமதி செய்வதற்கு, உள்நாட்டில் விற்பதற்கு லிச்சி பழங்கள் எங்கு வாங்கலாம்?

அன்பழகன்

சென்னை



கேள்வி

ஏற்றுமதி செய்வதற்கு, உள்நாட்டில் விற்பதற்கு  லிச்சி பழங்கள் எங்கு வாங்கலாம்?

பதில்



இந்தியாவில் பீகார் தான் லிச்சி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் உற்பத்தியில் 70 சதவீதம் இந்த மாநிலத்தில் தான் செய்யப்படுகிறது. குறிப்பாக ஐ.ஜி. இண்டர்நேஷனல் என்ற கம்பெனி தான் இந்தியாவில் லிச்சி பழங்களை அதிகம் விற்பனை செய்து வருகிறது. அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Thursday, October 9, 2014

இந்த வார இணையதளம்

இந்த வார இணையதளம்



நெதர்லாந்தை சேர்ந்த செர்தான் என்ற கம்பெனி பசுமைக் குடில்கள் அமைப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் மலர்கள், காய்கறிகள் என்று தற்போது பசுமைக் குடில்களில் வளர்ப்பது அதிகம் ஆகிவருகிறது. இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் பல பசுமைக் குடில்கள் பற்றி பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும்.

Wednesday, October 8, 2014

செவன் ஸ்டார் ப்ரூட்ஸ்


செவன் ஸ்டார் ப்ரூட்ஸ்


செவன் ஸ்டார் ப்ரூட்ஸ் என்ற கம்பெனி இந்தியாவிலிருந்து அதிக அளவில் பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற வருடம் அதிகம் அளவில் திராட்சை ஏற்றுமதி செய்த கம்பெனி என்ற பெயரை எடுத்துள்ளது. இது தவிர மாதுளம்பழம், மாம்பழங்களும் அதிகம் அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து முதல் முறையாக குஜராத்தின் கேசர் மாம்பழத்தை ஏற்றுமதி செய்த பெருமையை பெறுகிறது. இதை கடல் மூலமாக முழுவதும் குளிரூட்டப்பட்டு  கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்டெய்னர் மூலமாக யு.கே. யிலுள்ள பவ்பார்ட் இம்போர்ட்ஸ் என்ற கம்பெனிக்கு செய்துள்ளது. இந்த கம்பெனி தான் யு.கே.யிலுள்ள அனைத்து மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Tuesday, October 7, 2014

மதுரை ஏர்போர்ட்டிலிருந்து கார்கோ ஏற்றுமதிக்கு அனுமதி


மதுரை ஏர்போர்ட்டிலிருந்து கார்கோ ஏற்றுமதிக்கு அனுமதி


இதுவரை மதுரை பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்பவர்கள் திருவனந்தபுரம், கொச்சின், திருச்சி, சென்னை, கோவை என்று சென்று தான் ஏற்றுமதி சரக்குகளை ஏற்றுமதி செய்து வந்தார்கள். ஆனால், தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்யலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளது. இது ஏற்றுமதி செலவுகளைக் குறைக்கும். மதுரை பகுதிகளிலிருந்து காய்கறி, பூ, பழங்கள், இஞ்சினியரிங் பொருட்கள், ஹாண்ட்லூம், ஆட்டோமொபைல் பார்ட்ஸ், கிரானைட் ஆகியவை ஏற்றுமதி ஆகிறது.

Monday, October 6, 2014

கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு மார்க்கெட் டெவலப்மெண்ட் அசிஸ்டன்ஸ்

கார்மெண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு மார்க்கெட் டெவலப்மெண்ட் அசிஸ்டன்ஸ்


இந்தியப் கார்மெண்ட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்ய கண்காட்சிகளில் பங்குபெறுவது மிகவும் முக்கியம். அப்படி உலக நாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெற இதுவரை 15 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது 30 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் கார்மெண்ட் ஏற்றுமதியை கூட்டுவதற்கு உதவும். குறிப்பாக திருப்பூர்கார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  

Sunday, October 5, 2014

மரத்திலான கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அத்தாட்சி

மரத்திலான கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அத்தாட்சி


கைவினைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வருடத்திற்கு
17970 கோடி ரூபாய் மதிப்பிற்கு செய்யப்படுகிறதுஇதில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு மரத்திலான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றனஅனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதுஅப்படி அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்களில் இருந்து செய்யப்படும் மரத்திலான கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பல நாடுகளில் தடை இருக்கிறது.இதை தவிர்க்க இந்தியா “விரிக்ஷ்” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அனுமதியுடன் வெட்டப்பட்ட மரங்களிலிருந்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகுந்த அத்தாட்சிகள் பெற்று அதற்கான விரிக்ஷ் என்ற சான்றிதழை வழங்கவுள்ளதுஇது பல நாடுகளில் நமது மரத்திலான கைவினைப் பொருட்கள் விற்பதற்கு உதவும்.