Friday, February 28, 2014

ஏற்றுமதி கேள்வி பதில்

கேள்வி
இன்கோ டெர்மில் இல்லாத டெர்மில் விலை நிர்ணயிக்கலாமா?

பதில்
நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரிகிறது. அதாவது தற்போது 11 இன்கோ டெர்ம்கள் (சி.ஐ.எப்., எப்.ஒ.பி. போன்றவை)  உள்ளது. அதில் உள்ள டெர்ம்களில் ஒன்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி எடுத்துக் கொள்ளாமல் பழைய இன்கோ டெர்ம்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறீர்கள். விலை விபரங்களை நிர்ணயிக்கம் போது தற்போதுள்ள ஒன்றை எடுத்துக் கொள்வது உசிதமானது. இல்லாவிடில் பிரச்சனைகள் என்று வரும் போது தீர்ப்பது கடினமானது.


சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும். 

சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சென்னையில் ஏற்றுமதி கருத்தரங்கம்

சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும். 

Thursday, February 27, 2014

முருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா ?


முருங்கைக்காய் ஏற்றுமதி  செய்ய முடியுமா ?



கேள்வி
எங்கள் ஊரில் முருங்கைகாய அதிகம் விளைகிற்து. அதை மட்டும் ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்
ஒரு முருங்கைகாய் மூன்று ரூபாய் என்று எடுத்துக் கொண்டு பத்தாயிரம் முருங்கைகாய் அனுப்பினால் கூட 30,000 ரூபாய் தான் வரும். ஆதலால், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து அனுப்பும் போது தான் உங்களுக்கு லாபம் கிடைக்கும். விமான சரக்குக்கட்டணமும் குறைவாக இருக்கும்.

தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற

தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற

தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற www.learningexports.com

ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதி

ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதி

கடந்த இரண்டு வருடத்தில் ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதி மூன்று மடங்காகியுள்ளது. 2011-12ம் ஆண்டில் 115,000 டன்கள் மதிப்புள்ள ஆர்கானிக் பொருட்கள் 360 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது2010-11ம் ஆண்டில் 70,000 டன்கள் மதிப்புள்ள ஆர்கானிக் பொருட்கள் 130 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளதுமஹாராஷ்டிராவில் சாங்கிலி மாவட்டத்தில் ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் அசோசியேஷன் என்ற ஒரு அமைப்பும் இருக்கிறது. இந்த அமைப்பு ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்க விரும்புபவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது.


தபால் மூலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி www.learningexports.com

Wednesday, February 26, 2014

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

பழங்கள்காய்கறிகளை நீண்டநாட்கள் கெடாமல் பேக் செய்து அனுப்புவது ஒரு சேலஞ்ச் தான்நீங்கள் பெரிய வியாபாரியாக இருக்கும் பட்சத்தில் இந்த இணையதளத்தில் இருக்கும் டெக்னாலஜியை உபயோகப்படுத்தலாம்.
பாக்கேஜிங் பற்றி உபயோகமான நிறைய தகவல்கள் உள்ளன.

ஏற்றுமதி கேள்வி பதில்

ஏற்றுமதி கேள்வி பதில்

ராஜாராமன்
திருச்சி

கேள்வி
ஏற்றுமதி டாக்குமெண்ட் அனுப்பும் போது எத்தனை இன்வாய்ஸ் அனுப்ப வேண்டும்?

பதில்
எத்தனை டாக்குமெண்ட் இறக்குமதியாளர் கேட்கிறாராரோ அத்தனை அனுப்ப வேண்டும்அப்படி அவர் ஏதும் கேட்கவில்லை என்றால் நீங்கள் மினிமம் ஒன்று கூட அனுப்பலாம்.


கேள்வி
எங்கள் கம்பெனிக்கு பல நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கின்றன.வெளிநாடுகளில் இருக்கும் எங்களது தொழிற்சாலைகளிலிருந்து உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்து இங்கு விற்கலாம் என்று நினைக்கிறோம்அப்படி இறக்குதி செய்யும் போது அவற்றிக்கு வரிவிலக்கு அல்லது குறைந்த இறக்குமதி வரி கிடைக்குமா?

பதில்
இவ்வகை இறக்குமதியும் சாதாரண இறக்குமதி என்ற வகையில் தான் எடுத்துக் கொள்ளப்படும்ஆதலால்இப்படி இறக்குமதி செய்யும் போது எந்தவிதமான இறக்குமதி வரிவிலக்கோ அல்லது குறைந்த இறக்குமதி வரி சலுகைகளோ கிடைக்காது.

Tuesday, February 25, 2014

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


பழங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள உதவும் இணையதளம். உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. அமெரிக்கா, ஐரோப்பாவில் பழங்களின் விலை விபரங்கள், உலகளவிலுள்ள பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது.
பல நாடுகளில் கண்காட்சிகள் பற்றிய தகவல்கள், பல நாடு சம்பந்தப்பட்ட தகவல்கள் என்று பழ இறக்குமதி / ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

Monday, February 24, 2014

ஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன். யார் வாங்குவார்கள்?

கேள்வி பதில்

தமிழரசன் 
கோவை

கேள்வி

நான் ஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன். யார் வாங்குவார்கள்? 

பதில்

ஆர்கானிக் பொருட்களுக்கும், பழங்களுக்கும் இந்தியா அளவிலேயே தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. தரமான ஆர்கானிக் பழங்களாக இருந்தால் www.awesumorganics.com <http://www.awesumorganics.com> என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். வட அமெரிக்காவில் மிக அதிகமான ஆர்கானிக் ஆப்பிள், புளுபெரி, கிவி, மாம்பழம், பீச், ப்ளம் ஆகியவை இறக்குமதி செய்யும் கம்பெனிகளில் இதுவும் ஒன்றாகும். அமெரிக்கவில் 10,000 க்கும் அதிகமான கடைகளில் இவர்களுடைய புராடக்ட்கள் கிடைக்கின்றன.

பாக்கு

பாக்கு

பாக்கு உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 478,000 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்கிறது வருடத்திற்கு. இது உலகளவு உற்பத்தியில் சுமார் 47 சதவீதம் ஆகும். இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது கர்நாடகாவில். இதில் 2600 டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர பான் மசாலா, சுபாரி ஆகிய வடிவில் சுமார் 1400 டன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொரும்பாலும் உள்நாட்டிலேயே உபயோகிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைவு என்பதால் நாம் இறக்குமதியும் செய்து வருகிறோம். .

Sunday, February 23, 2014

பழங்களில் கோட்டிங்

பழங்களில் கோட்டிங்

இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் நேச்சுரல் ரிசோர்சஸ் அண்ட் கம்ஸ் என்றஅரசாங்க நிறுவனம் பழங்களின் ஷெல்ப் லைப்பை அதிகப்படுத்துவதற்காக ஒருகோட்டிங்கை கண்டுபிடித்துள்ளதுஇதன் மூலம் பழங்களின் ஷெல்ப் லைப்பைவாரங்கள் அதிகப்படுத்தலாம்மேலும் பழங்களில் ஜெர்ம்ஸ்உண்டாகுவதையும் தடுக்கலாம்வாழ்த்துக்கள்.

Saturday, February 22, 2014

ஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி

ஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி

ஜெட்பூரிலிருந்து சாயமேற்றப்பட்ட காட்டன் துணிகள் வருடத்திற்கு சுமார்1000கோடி ரூபாய்கள் வரை ஆப்பிரிக்காஐரோப்பா ஆகிய நாடுகளுக்குஅனுப்பபடுகிறதுகுறிப்பாக சேலைகள்துப்பட்டாகங்காஸ்டெக்ஸ்டைல்ஸ்மெட்டீரியல்ஸ் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.

---------------------------------------------------------
தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற www.learningexports.com

Friday, February 21, 2014

பாகிஸ்தான் அனுப்பும் கின்னாவ்

பாகிஸ்தான் அனுப்பும் கின்னாவ்

கின்னாவ் பழங்கள் ஆரஞ்சு பழங்களின் வகையைச் சேர்ந்தவைபாகிஸ்தானில் அதிக அளவுஉற்பத்தி ஆகிறதுஇந்திய பாகிஸ்தான் நல்லுறவிற்கு பிறகு இந்திய பாகிஸ்தான் ஏற்றுமதிஇறக்குமதி கூடி வருகிறதுசுமார் 40,000 டன் கள் கின்னாவ் பழங்கள் ஏற்றுமதி செய்யவாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் கூறுகிறார்.

==============================

தபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற www.learningexports.com