Wednesday, February 22, 2012

ஏற்றுமதியில் எல்.சி.என்றால் என்ன?


கேள்வி 

ஏற்றுமதியில் எல்.சி.என்றால் என்ன?  

பதில்

எல்.சி. என்றால் லெட்டர் ஆப் கிரிடிட் எனப்படும். இது தமிழில் கடனுறுதி கடிதம் என அழைக்கப்படும். ஏற்றுமதி இறக்குமதியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால், இறக்குமதியாளர் தனது வங்கியிடம் கூறி எல்.சி. ஏற்பாடு செய்வார். இது இறக்குமதியாளரின் வங்கியிலிருந்து ஏற்றுமதியாளருக்கு கிடைக்கும் ஒரு உத்திரவாதக் கடிதம் ஆகும். இதை வைத்துக் கொண்டு அவர் ஏற்றுமதி செய்யலாம். அதே சமயம் ஏற்றுமதி செய்த பின் சமர்பிக்கப்படும் டாக்குமெண்ட்களும் தவறில்லாமல் இருக்க வேண்டும். உள்நாட்டு வியாபாரத்திற்கும் எல்.சி.யை பயன்படுத்தலாம்.

1 comment:

  1. லெட்டர் ஆப் கிரிடிட் - எங்கள் நிறுவனங்களில் அவ்வப்போது இந்த வார்த்தை காதில் விழுந்தாலும் இப்போது தான் அதன் விளக்கம் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete