Thursday, November 29, 2012

விவசாய விளைப்பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்தவர்கள்

விவசாய விளைப்பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்தவர்கள்

பியோ (FIEO) வில் தங்களைப் பதிவு செய்து கொண்டு சென்ற வருடம் அதிக அளவில் விவசாய விளைபொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்த சிறிய அளவு கம்பெனியைச் சேர்ந்தவர்கள், அதாவது எம்.எஸ்.எம்.ஈ., கம்பெனி வகையையில் உள்ளவர்கள் டெல்லியைச் சேர்ந்த பிஷன் சரூப் ராம் எக்சிம் அக்ரோ பிரைவேட் லிமிடெட், மும்பையைச் சேர்ந்த சோப்ரிவாலா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த எக்சிம் ராஜாத்தி இந்தியா பிரைவேட் லிமிடெட், கர்நாடகாவைச் சேர்ந்த போலா சுரேந்திர காமத் அன்ட் சன்ஸ, இந்தூரைச் சேர்ந்த ஆதர்ஷ் குளோபல் பிரைவேட் லிமிடெட், கர்நலை சேர்ந்த ஆர் பி பாஸ்மதி ரைஸ லிமிடெட் ஆகிய கம்பெனிகள் ஆகும்.

பெரிய அளவில் டெல்லியின் அமிரா புட்ஸ இந்தியா லிமிடெட், கொல்கொத்தாவின் எல்.எம்.ஜே. இண்டர்நேஷனல் லிமிடெட், மும்பையின் டி.கே.வி. மார்க்கெட்டிங் இந்தியா பிரைவெட் லிமிடெட், கொல்கத்தாவின் ஏசியன் டீ அன்ட் எக்ஸபோர்ட்ஸ லிமிடெட், இந்தூரின் சுரஜ் இம்பெக்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட், டெல்லியின் எம்சென்ஸ் இன்டர்நேஷன்ல் லிமிடெட் ஆகும்.

இது பியோவில் உறுப்பினராக உள்ளவர்களில் அதிகம் அளவு செய்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

பிராஸ் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?


கலையரசி
சேலம்

கேள்வி

பிராஸ்  பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?

பதில்
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் என்ற ஊரில் 5000 சிறிய, பெரிய பிராஸ்  கம்பெனிகள் இருக்கிறது. எல்லா வகையான பிராஸ்  பொருட்களையும் மொத்தமாக வாங்க சிறந்த இடம்.

பிராஸ் பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?


கலையரசி
சேலம்

கேள்வி

பிராஸ்  பொருட்களை மொத்தமாக வாங்குவதற்கு இந்தியாவில் சிறந்த இடம் எது?

பதில்
குஜராத்தில் உள்ள ஜாம்நகர் என்ற ஊரில் 5000 சிறிய, பெரிய பிராஸ்  கம்பெனிகள் இருக்கிறது. எல்லா வகையான பிராஸ்  பொருட்களையும் மொத்தமாக வாங்க சிறந்த இடம்.

Tuesday, November 6, 2012

நாங்கள் ஏற்றுமதி பொருட்களை தயாரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இ.பி.சி.ஜி. டியூட்டி சலுகை ஸகீம் மூலமாக இறக்குமதி செய்திருந்தோம்.


கேள்வி பதில்

ராஜேந்திரன்
கோயமுத்தூர்


கேள்வி

நாங்கள் ஏற்றுமதி பொருட்களை தயாரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இ.பி.சி.ஜி. டியூட்டி சலுகை ஸகீம் மூலமாக இறக்குமதி செய்திருந்தோம். ஆனால் எங்களால் ஏற்றுமதி செய்ய இயலவில்லை. அந்த மெஷின்களை வேறு ஒரு இ.ஒ.யு. (எக்ஸ்போர்ட்   ஓரியன்டட்  யூனிட்)  கம்பெனி வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறது. விற்க இயலுமா?


பதில்
இ.பி.சி.ஜி. ஸ்கீம் மூலமாக இறக்குமதி செய்வதன் பலன் டியூட்டி சலுகை தான். ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அந்த மெஷினரியை உபயோகித்து இறக்குமதி டியூட்டி மதிப்பை விட எட்டு மடங்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது தான் விதி. நீங்கள் விற்க நினைப்பது வேறு ஒரு எக்ஸபோர்ட் ஓரியண்டட் யூனிட் தாராளமாக விற்கலாம். ஆனால் அப்ரூவல்கள் வாங்கித் தான் செய்ய முடியும்.

Monday, November 5, 2012

டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


 
டைம்ஸ்  ஆப்  இந்தியாவின்  ஏற்றுமதிக்கு ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

டைம்ஸ ஆப் இந்தியாவின் இணையதளம். இது உங்களது உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி இறக்குமதியை கூட்டுவதற்கு உதவும்.
மேலும், டெண்டர்கள் பற்றிய விபரங்கள், டைரக்டரிகள் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. சென்று பாருங்கள் நல்ல உபயோகமான இணையதளம். 

Friday, November 2, 2012

ஏற்றுமதியில் சிறந்து விளங்குபவர்கள்


ஏற்றுமதியில் சிறந்து விளங்குபவர்கள்

கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் சிறிய அளவு பிரிவில் சிறந்து விளங்குபவர்கள் மைசூரைச் சேர்ந்த் என்.ரெங்காராங் அன் சன்ஸ், ஜெய்ப்பூரை சேர்ந்த சங்கல்ப் இண்டர்நேஷனல், பதோகியைச் சேர்ந்த ரூபேஷ்குமார் அன்டு பிரதர்ஸ், மொராதாபாத்தை சேர்ந்த டிசைன்கோ என்ற கம்பெனிகள் ஆகும்.

பெரிய அளவில் செய்பவர்களில் டெல்லியை சேர்ந்த சி.எல். குப்தா எக்ஸ்போர்ட்ஸ்  லிமிடெட் என்ற கம்பெனியாகும். என்ன தமிழ்நாட்டுக் கம்பெனிகளைத் தேடுறீங்களா? அது உங்க கம்பெனியாகக் கூட இருக்கக்கூடும், கடுமையாக உழையுங்கள்.

ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது? பர்சுக்கு நல்லதா?



ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது? பர்சுக்கு நல்லதா?

ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள். ஆப்பிள் இல்லாத வீடே இருக்காது என்ற அளவிற்கு வாங்கித் தள்ளுகிறோம். இதற்கு ஒரு உதாரணம் வேண்டுமா? அமெரிக்கா ஆப்பிளுக்கு பெயர் போனது என்று தெரியும். அங்குள்ள வாஷிங்டனிலிருந்து சென்ற வருடம் மட்டும் 40,00,000 பாக்ஸ ஆப்பிள்கள் இறக்குமதி செய்துள்ளோம். 
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு ஆப்பிள் விலை 30 ரூபாயை எட்டிவிட்டதால், ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால் மாதம் ரூபாய் 900 வந்து விடுகிறது. தற்போதைய பழமொழி என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதை விட தொந்தரவு வரும் போது டாக்டரிடம் செல்வதே மேல் என்பது தான். ஒரு ஜோக் தான்,சீரியசாக நிறுத்தி விடாதீர்கள். 

Thursday, November 1, 2012

ஆப்பிரிக்க நாட்டு ஆர்டர்களா, உஷார்


ஆப்பிரிக்க நாட்டு ஆர்டர்களா, உஷார்

எப்படியாவது ஏற்றுமதி செய்து விட வேண்டும் என்று பலரும் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல வருவது ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஆர்டர்கள் தாம். ஆனால் இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேல் போலியானவை. உங்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலை தான். ஆதலால் ஆப்பிரிக்க நாடுகளின் ஆர்டர்கள் என்றால் கவனமாக இருங்கள். பெரிய ஆர்டராக இருக்கும், உடனடியாக காண்டிராக்ட் கையெழுத்திட்டு அனுப்புங்கள் என்று கூறுவார்கள். பின்னர் உங்களிடமிருந்து அதற்கு இதற்கு என்று பணம் பறிக்க முயலுவார்கள். ஆதலால் கவனமாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியத் இரண்டு. ஒன்று அந்த இறக்குமதியாளரைப் பற்றிய ஒப்பினியன் ரிப்போர்ட் எடுப்பது (ஏற்றுமதி செய்து தான் தீருவேன் என்று முடிவு எடுத்துவிட்டால்), இரண்டாவது பணம் ஏதும் நீங்கள் அனுப்பாமல் இருப்பது.