கலைச்செல்வி
ஸ்ரீரங்கம்
கேள்வி
தமிழ்நாட்டிலிருந்து சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு வாய்ப்புக்கள் எப்படி?
பதில்
சின்ன வெங்காயம் பெரும்பாலும் தென்னிந்தியர்கள் தாம்
உபயோகிக்கிறார்கள். மற்ற மாநிலத்தவர்கள் உபயோகிப்பதில்லை.
ஆதலால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு பெரிய வாய்ப்புக்கள் தென்னிந்தியர்கள்
எங்கெல்லாம் இருக்கிறார்கள்ளோ அங்கு தான் இருக்கிறது. ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் விலை எப்போதும் தாறுமாறாக இருக்கும். உதாரணத்திற்கு மூன்று மாதம் முன்பு சின்ன வெங்காயம் ஜுலை மதம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு தருகிறோம் என்று வெளிநாட்டில் உள்ளவரிடம் காண்டிராக்ட் போட்டிருந்தீர்களேயானால் தற்போது ரூபாய் 100க்கும் மேல் வந்து நிற்கிறது. நீங்கள் நஷ்டப்பட்டிருப்பீர்கள். ஆதலால் நீங்கள் வெளிநாட்டில் இறக்குமதியாளரிடம் காண்டிராக்ட் போட்டவுடன், இங்கும் உங்களுக்கு சரக்கு விற்பவர்களிடமும் ஒரு காண்டிராக்ட் போடுவது உத்தமம். அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது.
No comments:
Post a Comment