தோல் பொருட்கள் ஏற்றுமதி
நாட்டின் தோல் மற்றும் தோல் பொருட்கள்ஏற்றுமதி, அமெரிக்கா மற்றும்
ஐரோப்பா போன்ற மேற்கத்திய சந்தைகளில் குறைவான தேவை காரணமாக 1
சதவீதம் தான் இந்த வருடம் ஜுன் மாதம் கூடி 444 மில்லியன் அமெரிக்க
டா லராக இருக்கிறது.
2017ம் வருடம், வருட ஏற்றுமதி 17 பில்லியன் டாலராக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய சந்தைகளை சார்ந்திருக்காமல் இருக்கவும், புதிய சந்தைகளை உருவாக்கவும், ஏற்றுமதியாளர்கள் லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட
சந்தைகளில் தற்போது கால் பதித்துள்ளனர்.
தோல் மற்றும் அதன் தயாரிப்புகள் முக்கிய சந்தைகளில் அமெரிக்க, பிரிட்டன்,
ஜெர்மனி,இ த்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளன.
தோல் பொருட்கள், தோல் ஆடைகள், குதிரைக்கு தேவையான சேணம் ஆகியவை
அதிகம் தோல் பொருட்களில் தயாரிக்கப்படுகின்றன.
ஆக்ரா, கான்பூர், கொல்கத்தா, சென்னை, மும்பை,பெங்களூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில்தோல் மையங்கள் உள்ளன. 25 லட்சம் மக்கள் இந்த தொழிலில்
ஈடுபட்டுள்ளனர். இது 2017ம் வருடம் 50 லட்சமாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 70 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment