இம்மானுவேல்
திருச்சி
கேள்வி
ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னென்ன?
பதில்
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி.
- ஒரு நிறுவனம். தனிப்பட்ட அல்லது பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் போன்ற வகைகளில்
- அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் உரிமம் வாங்குதல் (லைசென்ஸ்)
- அந்த நிறுவனத்தை பதிவு (ரிஜிஸ்டிரேஷன்) செய்ய வேண்டும் (தனிப்பட்ட நிறுவனமாக இருந்தால் தேவையில்லை)
- வங்கியில் நடப்புக் கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்)
- நிறுவனம் பெயரில் பான் கார்டு
- சேல்ஸ் டாக்ஸ் / வாட் பதிவு எண் (நீங்கள் ஏற்றுமதிக்காக உள்நாட்டில் சரக்குகள் வாங்கும் போது சேல்ஸ் டாக்ஸ் / வாட் இல்லாமல் வாங்க முடியும் அல்லது அதைக் கட்டியிருந்தால் திருப்பிப் பெற வாய்ப்புக்கள் உண்டு).
- இம்போர்ட்டர் எக்ஸ்போர்ட்டர் கோடு நம்பர்
- நீங்கள் சார்ந்த ஏற்றுமதி முன்னேற்ற கழகத்தில் பதிவு செய்து கொள்ளுதல்
No comments:
Post a Comment