கேள்வி பதில்
ராமசாமி
திருப்பூர்
கேள்வி
ஏற்றுமதி சரக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் ஒரே சமயத்தில் செல்லுமா? என்னுடைய வாடிக்கையாளர் அப்படி அனுப்பும் படி கூறுகிறார்.
பதில்
ஏன் செல்லாது? பல இடங்களில் துறைமுகமும், சரக்குகள் சேர வேண்டிய இடமும் தூரத்தில் இருக்கும். அது போல சமயங்களில் சரக்குகள் கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் செல்லும். இது போல இரண்டு வாகனங்களில் செல்லும் போது அது மல்ட்டி மோடல் டிரான்ஸ்போர்ட் என அழைக்கப்படும். இரண்டு சரக்கனுப்பு ரசீதுகள் இருக்காது. ஒரே ரசீது தான் இருக்கும்.
உதாரணம் பெங்களூரிலிருந்து சரக்குகள் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டுமானால் பெங்களூரிலிருந்து சரக்குகள் விமானம் மூலம் சென்னை செல்லலாம் அல்லது லாரி மூலம் சென்னை செல்லலாம். அதன் பிறகு கப்பல் மூலம் சென்னையிலிருந்து சிங்கபூருக்கு செல்லலாம். இதை இரண்டையும் சேர்த்து ஒரு சரக்கனுப்பு ரசீது வழங்கப்படும்.
No comments:
Post a Comment