Monday, April 30, 2012

2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்


2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் எவ்வளவு தெரியுமா? சுமார் 320,000 கோடி ரூபாய்கள். இவ்வளவு ரூபாய்களை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு சென்ற வருடம் அனுப்பியுள்ளார்கள் என்றால், நம்முடைய ஏற்றுமதிக்கு எவ்வளவு வாய்ப்புக்கள் உள்ளது என்று நினைத்துப் பாருங்கள். எத்தனை லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு தேவை உள்ளது, அவர்கள் மூலம் எவ்வளவு ஏற்றுமதி வாய்ப்புக்களை பெற முடியும். வானமே எல்லை, முயற்சி செய்யுங்கள்.

Sunday, April 29, 2012

இந்த வார ஏற்றுமதி இணையதளம்


இந்த வார ஏற்றுமதி இணையதளம்

உலகமெங்கும் விளையும் விவசாய விளைபொருட்களின்
விலை விபரங்கள், பொருட்கள் பற்றிய புதிய செய்திகள், வாங்குபவர் விற்பவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருமையான இணையதளம். பல நாடுகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது. சென்று பாருங்கள்.

Friday, April 27, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


ஏற்றுமதி கேள்வி பதில்

ராமநாதன்
அருப்புக்கோட்டை

கேள்வி

நான் தற்போது ஒரு கம்பெனி வைத்து நடத்தி வருகிறேன். அதற்கு லஷ்மி அண்டு கம்பெனி என்று பெயர் வைத்துள்ளேன். இனி ஏற்றுமதியில் ஈடுபட விருப்பம். அதற்காக கம்பெனி பெயரை லஷ்மி இண்டர்நேஷனல் அல்லது புதிதாக இன்னொரு கம்பெனி லஷ்மி இண்டர்நேஷனல் என்று துவங்கலாம் என்றுள்ளேன். இது சரியான முடிவா?

பதில்

முன்னமே ஒரு கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருப்பதால் அந்தக் கம்பெனி பெயரிலே ஏற்றுமதி செய்யலாம். அதில் தவறு ஏதும் இல்லை. ஏற்றுமதிக்காக தனிக் கம்பெனி துவங்க வேண்டும் என்பதும் இல்லை. ஆதலால் தங்களது தற்போதைய கம்பெனியிலேயே உங்களது ஏற்றுமதி வியாபாரத்தையும் செய்யுங்கள். அந்தக் கம்பெனி பெயரிலேயே ஐ.ஈ.சி. கோடு எடுங்கள்.

Wednesday, April 25, 2012

300 பில்லியன் ஏற்றுமதி


300 பில்லியன் ஏற்றுமதி

இந்தியா பல ஏற்ற இறக்கத்திற்கு பிறகு 300 பில்லியன் ஏற்றுமதி டார்கெட்டை இந்த வருடம் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) கஷ்டப்பட்டு நிறைவு செய்தது. வருடத் துவக்கத்தில் நன்றாக இருந்த ஏற்றுமதி பின்னர் மாதந்தோறும் குறைந்து வந்தது. இருந்தாலும் 300 பில்லியன் டார்கெட்டை எட்டிவிட்டது.
 
உங்களுக்கு தெரியுமா?
சிறிய நாடான வியட்நாம் இந்தியாவை விட 5 மடங்கு அதிகமாக மிளகு ஏற்றுமதி செய்கிறது.

Tuesday, April 24, 2012

ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க்


ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ்  பார்க்

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்காக ஸ்பைசஸ் பார்க்குகள் இந்தியாவெங்கும் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது போன்ற பார்க்குகள்  7  இடங்களில் நிறுவ அரசாங்கம் முடிவு செய்திருந்தது. அதில் தற்போது 3 இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேஷ்
ஆகிய மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பார்க் ஜீரகம், கொத்தமல்லி ஆகியவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இன்னும் பல மாநிலங்களில் இது போல பார்க்குகள் நிறுவப்படவுள்ளது. இது வாசனை பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்தும்.

Monday, April 23, 2012

லிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி


லிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 

பீகாரில் உள்ள முஸாபூர் மாவட்டத்தில் 76 கிராமங்களை சேர்ந்த 2,100 விவசாயிகள் 1,200 ஹெக்டேரில் ஆர்கானிக் லிச்சி  உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது  15,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
தில்லி மற்றும் மகாராஷ்டிரா, உ.பி. போன்ற மாநிலங்களில் லிச்சிக்கு பெரிய சந்தை உள்ளது. தென்இந்தியாவில் குறிப்பாக  ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் லிச்சி விரும்பப்படுகிறது. தற்போது கேரளா மாநிலத்திலும் பீகாரின் ஆர்கானிக்  லிச்சிக்கு ஆர்வம் காட்டப்படுகிறது.
தேசிய மொத்த உற்பத்தியில் 55 சதவீதத்தை பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பீகாரில் உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் லிச்சியில் சுமார் 1000 கிலோ வரை அந்த மாநிலத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. இது அவர்களின் விற்பனையை கூட்டுவதற்கு உதவுகிறது என்கிறார்கள். மேலும், இண்டர்நேஷனல் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை.

Friday, April 20, 2012

சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி புரமோஷன் கவுன்சிலின் இணையதளம்


இந்த வார இணையதளம்


சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி புரமோஷன் கவுன்சிலின் இணையதளம். இந்த புரமோஷன் கவுன்சில் சிறிய மற்றும நடுத்தர தொழில்கள் செய்பவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யும் என்பதை காண்போம்:

1. உங்கள் பொருட்களுக்கு மார்க்கெட்டிங் உதவி
2. வெளிநாடுகளில் உங்கள் பொருட்களுக்கு உள்ள இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க
3. உங்கள் தொழில்களுக்கு ஜாயிண்ட் வென்சர் மற்றும் முதலீடு செய்பவர்களை கண்டுபிடிக்க
4. உங்கள் பொருட்களுக்கு ஏஜெண்ட் / ரெப்ரசன்டேடிவ்களை நியமிக்க
5. உங்கள் பொருட்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை நிலவரம் அறிய 
6. வெளிநாடுகளில் உங்கள் சரக்குகளை வாங்க விரும்பும் இறக்குமதியாளர்களைப் பற்றிய நன்னம்பிக்கை அறிக்கை பெற
7. உங்கள் தொழில்களுக்கு சரியான ரா மெட்டீரியல் சரியான விலையில் வாங்க 
8. சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களின் பொருட்களை வெளிநாடுகளில் கண்காட்சிப்படுத்த
9. குரூப் மார்க்கெட்டிங் உதவி
10. வெளிநாடுகளுக்கு மார்க்கெட்டிங் செய்ய உங்களை அழைத்து செல்ல
11. வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகளில் பங்குபெற அழைத்துச் செல்ல

Thursday, April 19, 2012

நாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரிப்பு


நாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரிப்பு

நாசிக்கில் இருந்து இந்த வருடம் திராட்சை ஏற்றுமதி 18,000 டன்கள். இந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளது மற்றும் மாத இறுதிக்குள் இது 24,000 டன்னாக எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திராட்சை நெதர்லாந்து, பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. 

மகாராஷ்டிரா நாட்டின் மொத்த திராட்சை ஏற்றுமதி 90% பங்களிக்கிறது, இது 75% நாசிக்கில்  சாகுபடி செய்யப்படுகின்றன.

நாசிக்கில் திராட்சை ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாசிக் திராட்சை ஏற்றுமதி 2002ல் 3775 டன்னாக இருந்தது. இது 2010ல் 35,671 டன்னாக கூடியுள்ளது. ஆனால் 2011ல் சீசன் இல்லாத சமயத்தில் மழை பெய்ததால் திராட்சை ஏற்றுமதி குறைந்தது.

Wednesday, April 18, 2012

மியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்


மியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்

பர்மா ஒரு பொன் விளையும் பூமி. பர்மாவின் காடுகளை திருத்தி அதை பொன் விளையும் பூமியாக மாற்றியதில் இந்தியர்களின் பங்கு பெரும்பான்மை இருக்கிறது. ஏனெனில் அங்கு நூறு வருடங்களுக்கு முன்பு சென்று அங்குள்ள மக்களுக்கு கடன்கள் கொடுத்து அவர்கள் காடுகளை விளைநிலங்களாக மாற்ற உதவி செய்தவர்கள் இந்தியர்கள். ஆனால், பின்னர் அங்கிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். தற்போது அங்கு சூழ்நிலைகள் சரியாகி வருகிறது. ஆதலால் பல நாடுகள் அங்கு முதலீடுகள் செய்ய முன் வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியர்களின் உதவியால் பொன் விளையும் பூமியாக மாறிய மியன்மாரில் இருந்து தற்போது பீன்ஸ, பருப்பு வகைகள் ஆகியவைகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்திய மியன்மார் வர்த்தகம் தற்போது 1207 மில்லியன் டாலர்களாக இருக்கிறது (சுமார் 6000 கோடி ரூபாய் அளவில்). அங்கு ஸ்டீல் மற்றும மருந்துப் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் நிறைய இருக்கிறது.

Monday, April 16, 2012

கயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு


கயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு

கயிறு பொருட்கள் இந்த வருடம் 20 சதவீதம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. சென்ற வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் பிப்ரவரி வரை  3.35 லட்சம் டன்கள் கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 771 கோடி ரூபாய்கள் ஆகும்.

அடுத்த வருடம் இது 1000 கோடி ரூபாய்களாகக் கூடும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். புதிய சந்தைகளாக லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் யு.கே., ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, ஜப்பான், கீரீஸ், சுவீடன், தென் ஆப்பிரிக்கா, ஜக்கிய அரபு நாடுகள், போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதிகம் கயிறு, காயர் மெத்தைகள், கயிற்றிலான கார்பெட், ரக்ஸ்  ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Sunday, April 15, 2012

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி
தாமோதரன்
டைரக்டர், கிரேட்

நாங்கள் திருச்சியில் கிரேட் என்ற பெயரில் ஒரு பெண்கள் சுய உதவிக்குழு வைத்துள்ளோம். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உதவியுடனும், தஞ்சாவூர் பயிர் பதனப்படுத்தும் நிலையம் உதவியுடனும் வாழைப்பூ தொக்கு   தயார் செய்து வருகிறோம். இதை தற்போது தமிழ்நாடு அளவில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். ஐ.ஈ.சி. கோடு எடுக்க விரும்புகின்றோம். என்ன செய்வது?

பதில்

வாழ்த்துக்கள். ஐ.ஈ.சி. கோடு வாங்குவது எளிது. உங்களது நிறுவனம் பெயரில் வங்கியில் ஒரு கரண்ட் அக்கவுண்ட் இருக்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் என்ன ரிஜிஜ்டிரேஷன்கள் தேவையோ அவையும் வேண்டும் (TIN, SHG registration போன்றவை). இவையெல்லாம் இருந்தால்  http://zjdgft.tn.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்றால் ஐ.ஈ.சி. கோடு வாங்குவதற்கான அப்ளிகேஷன் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் பெயர் ஆயத் நிரயத் பார்ம் ANF2A என்று பெயர். இன்னும் பல இணையதளங்களிலும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கும். முழு விபரங்களுக்கு இந்த இணையத்தளத்தையும் பார்க்கலாம்http://www.eximguru.com/iec-code/default.aspx

திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இருப்பதால், வாழைப்பூ தொக்கு தவிர மற்ற வாழை சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபடுங்கள். மேலும் உங்கள் ஏற்றுமதிப் பொருட்களுக்கென ஒரு இணையதளம் ஆரம்பியுங்கள். நிச்சியம் வெற்றியைத் தரும், ஏற்றுமதி செய்ய வாய்ப்புக்கள் உண்டு. என்னுடைய ஆதரவு / உதவியும் எப்போதும் உண்டு.



Saturday, April 14, 2012

19000 வது வாசகர்

ஏற்றுமதி உலகம் என்ற ப்ளாக்யை துவக்கிய பொது மாதம் 500 வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது தினசரி 200 வாசகர்கள் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இன்றைய தினம் 19000  வது வாசகரையும் எட்டியுள்ளது. துவங்கிய 6 மாதத்தில் இவ்வளவு வாசகர்களை எட்டியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.  அன்புடன் சேதுராமன் சாத்தப்பன் மும்பை

Thursday, April 12, 2012

உங்களுக்கு தெரியுமா?


உங்களுக்கு தெரியுமா?

உலகத்திலேயே அதிகமாக மாம்பழம் உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் தான். ஆனால் ஒரு ஏக்கருக்கு 2.56 மெட்ரிக் டன் தான் உற்பத்தி செய்கிறோம். இது உலகளவில் மிகவும் குறைவு. 

தற்போது வயல் வெளி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது தான் சிரமமாக இருக்கிறது. வெங்காயம் விதை நடுவதற்கும் அதை விளைந்த பின் அறுவடை செய்வதும் தற்போது இயந்திரமயமாகியுள்ளது. இது ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் ஆட்களின் தேவையை 75 முதல் 100 மனித நாட்கள் வரை குறைக்கிறது. 

ஏற்றுமதி கேள்வி பதில்


கேள்வி


ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானவையாக கருத்தில் கொள்ள வேண்டியவை எவை?


பதில்


ஏற்றுமதியின் கண்களாக கருதப்படவேண்டியவை
1. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரம்
2. சரியான நியாமான விலை
3. நேரம் தவறாது குறித்த காலத்தில் ஏற்றுமதி செய்தல்.

Tuesday, April 10, 2012

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளம்


www.importexportplatform.com


இது ஒரு B2B இணையதளம். வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணைக்கும் இணையதளம். இந்த இணையதளத்தின் சிறப்பு என்னவென்றால் பொருட்களின் விலைவிபரங்களும் போடப்பட்டுள்ளது ஆகும். இது உலகளவில் பொருட்களின் விலை விபரங்களை தெரிந்து கொள்ள உதவும். உதாரணமாக நீங்கள் முந்திரிப் பருப்பு ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதை என்ன விலைக்கு கொடுப்பது, அது சரியான விலையாக இருக்குமா?, நீங்கள் குறிப்பிடப் போகும் விலையை வெளிநாட்டில் இருக்கும் இறக்குமதியாளர் ஒத்துக் கொள்வாரா? என்ற சந்தேகங்கள் வரலாம். இந்த இணையதளத்தில் தேடும் போது உங்களுக்கு முந்திரிப்பருப்பை வெளிநாட்டில் இருந்து விற்பனை செய்பவர் என்ன விலைக்கு கொடுக்கிறார் என்று தெரியவரும். அது உங்களுக்கு ஒரு அளவுகோலாக இருக்க உதவும்.

ஒட்ஸ்

ஒட்ஸ்


ஒட்ஸ்  சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால் எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு உணவு. இந்தியர்களுக்கு எதிலும் சிறிது மசாலா இருந்தால் தான் உள்ளே செல்லும். தற்போது மசாலா ஒட்ஸ்  என்று மக்களுக்கு பிடித்த வகையில் காய்கறி, மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு சிறிய பாக்கெட் வடிவில் ஒட்ஸ்  சில கம்பெனிகள் கொண்டு வந்திருக்கின்றன. பெப்சி கம்பெனியை சேர்ந்த குவாக்கரும் இது போன்ற ஒரு ஒட்சை மார்க்கெட் செய்து வருகிறது. இதை தயாரித்து பெப்சி கம்பெனிக்கு கொடுப்பது யார் தெரியுமா? நமது திருசெங்கோட்டில் இருக்கும் கிறிஸ்டி ப்ரைடுகிராம் என்ற கம்பெனி தான். வெளிநாட்டவர்களுக்கும் தற்போது மசாலா சேர்ந்த உணவு வகைகள் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆதலால் இன்னும் கொஞ்ச நாளில் இதன் ஏற்றுமதியும் ஆரம்பித்து விடும்.

Monday, April 9, 2012

ஏற்றுமதியாளர்கள் இப்படியும் ஏமாற்றப்படுகிறார்கள்


ஏற்றுமதியாளர்கள் இப்படியும்  ஏமாற்றப்படுகிறார்கள்

வெளிநாட்டில் இருந்து உங்களிடம் சரக்குகள் வாங்குகிறோம் என்று ஆர்டர் கொடுப்பார்கள். பின்னர் அக்ரிமெண்ட் போடவேண்டும் என்று கூறுவார்கள். அக்ரிமெண்ட் போட்டவுடன் அந்த அக்ரிமெண்டை அந்த நாட்டில் நோட்டரைஸ்  செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு ஆகும் செலவை இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள். பின்னர் செலவு 1000 டாலர் ஆகிறது, நீங்கள் 500 டாலர் உங்கள் பங்கை அனுப்பி வையுங்கள் என்று கூறுவார்கள். அதை அனுப்பியவுடன் அமைதியாகிவிடுவார்கள். எந்தவிதமான பதிலும் இருக்காது. ஏனெனில் வேறு ஆளிடம் ஏமாற்ற சென்று விடுவார்கள். இவர்களிடம் கவனமாக இருங்கள். இறக்குமதியாளரை பற்றி நன்னபிக்கை அறிக்கை வாங்கிய பிறகே ஏற்றுமதி செய்யுங்கள். 

Saturday, April 7, 2012

நாமக்கல்லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்றுமதி


உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 47சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களால் செய்யப்படுகிறது.

நாமக்கல்லிருந்து தற்போது அதிக அளவில் ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


Friday, April 6, 2012

கார்மெண்ட் ஈடெயிலிங்


கார்மெண்ட் ஈடெயிலிங்

கார்மெண்ட் ஈடெயிலிங் என்றால் என்ன? அதாவது கடைகள் வைத்து டிஸபிளே செய்து வியாபாரம் செய்வதை விட இண்டர்நெட் மூலமாக ஆடைகளின் படங்களையும், அளவுகளையும் வெளியிட்டு மக்களை அதன் மூலமாகவே வாங்கச் செய்வது ஈடெய்லிங் எனப்படும். சமீபகாலமாக இந்தத் துறை மிகவும் வளர்ந்து வருகிறது. இந்த சந்தை 2015ம் வருடம் சுமார் 6000 கோடி ரூபாய் அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சயம் நூற்றுக்கணக்கான ஈடெய்லிங் இணையதளங்கள் வந்துவிட்டாலும் பிலிப்கார்ட், லெட்ஸ்பை, பேஷன் அண்டு யூ, ஏபி, ஸ்நாப்டீல் ஆகியவை அதிகம் பிரபலமானவை.

Thursday, April 5, 2012

கொய்யாபழம் ஏற்றுமதி


கொய்யாபழம் ஏற்றுமதி

கொய்யாபழத்தில் பல வகைகள் உண்டு. இந்தியாவில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடப்படுவது அலகாபாத் சபேதா, சர்தார், லலித், அனகாபள்ளி, பனாரசி, ஆர்கா மிருதுலா, நாக்பூர் சீட்லெஸ் போன்றவையாகும். இவற்றில் அலகாபாத் சபேதா, சர்தார் ஆகியவை மிகவும் அதிகம் அளவில் பயிரிடப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட கொய்யாபழம், சாறு ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. சென்ற வருடம் சுமார் 20 கோடி ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. அதிகம் ஏற்றுமதியாகும் நாடுகள் அரபு நாடுகள், நெதர்லாந்து, யு.கே., இந்தோனேஷியா ஆகியவை ஆகும். 

கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க


கிரீன் டீ சாப்பிடலாம் வாங்க

கிரீன் டீ தற்போது ஒரு பெரிய பிசினஸ்  வாய்ப்பாகிவிட்டது. மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் இந்தியா அளவில் கிரீன் டீ குடிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கிரீன் டீ குடிப்பவர்கள் இந்தியாவில் வருடந்தோறும் 10 சதவீதம் கூடிக்கொண்டே செல்கின்றனர். இந்தியா உலகளவில் இரண்டாவது டீ உற்பத்தி செய்யும் நாடு. வருடந்தோறும் 9 முதல் 11 மில்லியன் கிலோக்கள் கிரீன் டீயும் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆதலால் ஏற்றுமதி அதிகம் நடை பெறவில்லை.

சைனா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு சென்றிந்தால் பார்த்திருக்கலாம். அங்கு ஹோட்டல்களில் கிரீன் டீ என்பது ஒரு பிரதன பானமாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ சீனக்காரர்களில் குண்டானவர்களையே பார்க்கமுடிவதில்லை. மேலும் உணவில் தினாரி மாமிசம் எடுத்துக் கொண்டாலும் அது அவர்களை பாதிப்பதில்லை. நாயர் ஒரு கிரீன் டீ போடுங்க என்று வருங்காலங்களில் டீக்கடைகளில் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

Wednesday, April 4, 2012

தனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா?


கேள்விக்கு என்ன பதில்?

கேள்வி

அன்பரசன்
கரூர்

தனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா?

பதில்

பலரும் பல சமயங்களில் கேட்கும் கேள்வி தான். தனி நபர் தாராளமாக ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், பொருட்கள் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் வேண்டும். தனி நபர் அதிகம் முதலீடு செய்ய முடியாததால் நல்ல பொருட்களாக தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிடில் போட்டி மிகவும் கடினமாக இருக்கும்.

தனி நபராக ஏற்றுமதி நிறுவனம் தொடங்கினால் உள்ள லாபங்கள்:
ஆரம்பித்து எளிது, எந்தவொரு முடிவையையும் உடனடியாக எடுக்கலாம் யாரையும் கலந்தாலோசிக்க வேண்டாம், அதிகம் அரசு கட்டுப்பாடுகள் இல்லை, வியாபார ரகசியம் காக்கப்படுகிறது, வீட்டிலேயே தொடங்கலாம்.

இருந்தாலும் ஒத்த கருத்துடைய ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து ஒரு பொருளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்தால் அது மிக நல்ல பயனைத் தரும். 

சில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன

சில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன. ஏன் என பலருக்கு சந்தேகம் வரலாம். தமிழ்மணம் இணையத்தில் சில போஸ்ட்க்கள் முன்பு சேர்க்க  படவில்லை. ஆதலால் மறுபடி சேர்க்க வேண்டியதாயிற்று. ஆதலால் மறுபடி போட வேண்டியதாகவுள்ளது. இது இன்னும் சில நாட்களுக்கு தொடரும்.  பொறுத்துக் கொள்ளவும்.


அதே சமயம் புதிய போஸ்ட்க்களும் தினசரி போடப்படுகின்றன.



மதுரை மல்லி


மதுரை மல்லி 

மதுரை என்றால் மல்லிக்கைப்பூவை யாரும் மறக்கமாட்டார்கள். உலகளவில் பிரசித்தி பெற்றது மதுரை மல்லி. அந்த மல்லிகைப்பூவை உலகளவில் ஒரு பிராண்டாக கொண்டு செல்ல கோவை விவசாயப் பல்கலைக்கழகமும், இக்ரிசாட்டும் சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது. அப்படியென்ன மதுரை மல்லியில் விசேஷம் என்கிறீர்களா? தூக்கும் வாசனை, அதிகநாட்கள் கெடாமல் இருப்பது, கனமான இதழ்கள். அப்புறம் என்ன வேணும் மதுரை மல்லி உலக பிராண்டாக வருவதற்கு? மல்லிகைச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சரியான குளிர்பதனக்கிடங்குகளும் இருக்குமெனில் மதுரை மல்லி இன்னும் மணக்கும் என்பது அங்குள்ள உற்பத்தியாளர்களின் கோரிக்கை. நிறைவேறுமா? அடுத்த முறை மதுரை சென்று வரும் போது உங்கள் மனைவிக்கும் மறக்காமல் ஒரு முழும் மல்லிகைப்பூ வாங்கிச் செல்லுங்கள். கல்யாணம் ஆகாதவர்கள் காதலிக்கு வாங்கிச் செல்லுங்கள். 

ஏற்றுமதிக்கு புரோஷர்


ஏற்றுமதிக்கு புரோஷர் 

ஏற்றுமதிக்கு புரோஷர் அடித்து வெளிநாடுகளில் உள்ள இறக்குமதியாளர்களுக்கு அனுப்புவது என்பது 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்று வந்தது. தற்போது உங்கள் பொருட்களுக்கு புரோஷர் அடித்து அதை அனுப்புவது என்றால் அது வரும் வரை எந்த இறக்குமதியாளரும் காத்திருக்கமாட்டார்கள். ஆதலால் ஏற்றுமதிக்கு இணையதளம் மிகவும் முக்கியம். அதில் உங்கள் பொருட்களை பார்வைக்கு வைக்கலாம். அது உலகில் எங்கு வேண்டுமானாலும் உடனடியாக சென்று சேரும்.

Monday, April 2, 2012

இன்கோ டெர்ம்ஸ்


இன்கோ டெர்ம்ஸ் 

விலைக் குறியீடுகள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் மிகவும் முக்கியம். 2010ல் இந்த விலைக்குறியீடுகள் உலகளவில் திருத்தி அமைக்கப்பட்டன. முன்பு 13 குறியீடுகள் இருந்தன. தற்போது 11 குறியீடுகள் தாம் உள்ளது. காண்டிராக்ட் போடும் போது இதை கவனமாக எடுத்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.
EXW – Ex Works .
FCA – Free Carrier 
CPT - Carriage Paid To 
CIP – Carriage and Insurance Paid to 
DAT – Delivered at Terminal 
DAP – Delivered at Place 
DDP – Delivered Duty Paid 
FAS – Free Alongside Ship 
FOB – Free on Board 
CFR – Cost and Freight 
CIF – Cost, Insurance and Freight
 

சாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா?


கேள்வி பதில்
கேள்வி
சாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா?

பதில்
ஏன் முடியாது? 50 ஐயிட்டங்கள் வரை இறக்குமதி வரி கட்டாமல் இறக்குமதி செய்யலாம்.

பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள

பொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொள்ள

விவசாய விளை பொருட்களின் அகில இந்தியாவின் பல ஊர்களின் விலைகளை பல ஆங்கில வணிக தினசரிகள் வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பாக காபி, கோப்ரா (தேங்காய்), நெய், டிரை புரூட்ஸ், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள், பெப்பர், ஏலக்காய், இஞ்சி, மில்க் பவுடர், எண்ணெய் வகைகள், புண்ணாக்கு, ரப்பர், ஜீனி, கோதுமை போன்றவைகளின் அகில இந்திய விலைகள் வருகின்றன. நமது தினமலர் நாளிதழும் தினசரி மார்க்கெட் நிலவரங்களை தொகுத்து அழகாகத் தருகிறதே.

இது தவிர காய்கறி, மலர், பழங்கள் ஆகியவைகளின் தமிழ்நாட்டு மார்க்கெட்  விலைகளை தெரிந்து கொள்ள ஒரு அருமையான இணையதளம் சென்று பாருங்கள் http://indg.in/india/market_information.