Sunday, February 12, 2012

மாற்று எரிசக்தி, மலேஷியா இந்தியா வர்த்தகம், கேரளா ஏற்றுமதி செய்யும் காயர் பொருட்கள், காரமான குண்டூர், பிபிஒ செக்டார் ஏற்றுமதி,

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

ஏற்றுமதி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டாலரின் ஏற்ற இறக்கம் ஏற்றுமதியாளர்களையும், இறக்குமதியாளர்களையும் கிறங்கச் செய்தாலும் இந்த உலகத்தில் பரபரப்புக்கு எந்த குறையும் இல்லை.


மாற்று எரிசக்தி

இந்தியா காற்று, சோலார், பயோமாஸ, பயோபியூல்ஸ ஆகியவை சம்பந்தப்பட்ட மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்ட தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிகளில் இந்தியா மிகச்சிறந்து விளங்கும் என்று தென்பிராந்திய கன்பிரடேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்டீரீசின் தலைவர் டி.டி. வாசு தெரிவித்துள்ளார். மாற்று எரிசக்தியில் தமிழ்நாடு முன்னேறி வருவது குறிப்பிடதக்கது. குறிப்பாக சிரிராம் குரூப் இந்தத் துறையில் தனி கம்பெனி நிறுவி முயற்சிகள் எடுத்து வருகிறது. கயத்தாறு பக்கம் நீங்கள் சென்றிருந்தீர்கள் என்றால் காற்றாலை மின்சாரத் தொழில்  எவ்வளவு பெரிய அளவில் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.


மலேஷியா இந்தியா வர்த்தகம்

மலேஷியா இந்தியா வர்த்தகம் 15 பில்லியன் டாலரை இந்த வருடம் 
எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேஷியாவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழகத்திலிருந்து எல்லாவிதமான பொருட்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்கின்றது. வாய்ப்புக்களும் அதிகம், போட்டியும் அதிகம்.
முயற்சி செய்யுங்கள், உங்களது பொருட்களுக்கும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கும்.


கேரளா ஏற்றுமதி செய்யும் காயர் பொருட்கள்

கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் அதே அளவிற்கு தென்னை மரங்கள் உண்டு. ஆனால் தென்னை மரத்தின் காயர் பொருட்கள் உற்பத்தியில் கேரளாவிற்கு இணயாக வர இயலவில்லை தமிழ்நாட்டால். இந்தத் துறையில் கேரளாவின் மார்க்கெட்டிங் முயற்சி மிகவும் பிரமாதமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி தவிர, உள்நாட்டில் விற்பனையிலும் கேரளா மிகவும் சக்கை போடு போடுகிறது. அது போல தமிழ்நாடும் மிகுந்த மார்க்கெட்டிங் முயற்சியோடு செயல்பட்டால் அது தமிழ்நாட்டில் பலருக்கு பெரிய அளவு உதவியாக இருக்கும், நல்ல வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கும்.


காரமான குண்டூர்

குண்டூர் என்றாலே காய்ந்த மிளகாய் தான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு காரமான ஊர் குண்டூர். மசாலா பொருட்கள் ஏற்றுமதியில் மிளகாய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், குண்டூர் இதுவரை மசாலா பொருட்கள் ஏற்றுமதிக்காக ஸ்பைஸ பார்க் என்ற ஸ்டேடஸ்  விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து பல மிளகாய் ஏற்றுமதி செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் ஒரு முறை குண்டூர் சென்று பார்த்து வரவேண்டும்.


பிபிஒ செக்டார் ஏற்றுமதி

இந்தியாவின் பெரிய ஏற்றுமதிகளில் ஒன்றாக பிபிஒ செக்டார் வளர்ந்து வருகிறது. அதாவது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவிலிருந்து ஆட்கள் வேலை செய்து கொடுப்பது. பிபிஒ என்றால் பிசினஸ புராசஸ்  அவுட்சோர்சிங் என்பதன் சுருக்கம் தான். சென்ற வருடம் இந்தத் துறை இந்தியாவில் 88 பில்லியன் டாலர் அளவு சம்பாதித்துள்ளது. இதில் 60 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததின் மூலம் மட்டும் கிடைத்துள்ளது. 


கேள்விக்கு என்ன பதில்?

அருண்
காங்கேயம்

கேள்வி

ஏற்றுமதியில் சி.ஐ.எப்., பிரைஸ்  (CIF PRICE) என்றால் என்ன?


பதில்

Cost, Insurance and Frieght என்பதன் சுருக்கம் தான் CIF price எனப்படும். அதாவது வெளிநாட்டில் உள்ளவர் உங்களிடமிருந்து வாங்கும் சரக்குக்கான விலையை இப்படி குறிப்பிட சொன்னால் நீங்கள் உங்கள் சரக்கின் விலை, சரக்குகள் வெளிநாட்டில் வாங்குபவர் இருக்குமிடம் வரை செல்லும் கட்டணம், சரக்குகள் வெளிநாட்டில் வாங்குபவர் கூறும் துறைமுகம் வரை செல்லும் கட்டணம் ஆகியவை சேர்ந்தது தான் இந்த விலை குறிப்பிடல் ஆகும்.  இதில் சரக்குகளை உங்களது பாக்ட்ரியில் இருந்து துறைமுகம் வரை கொண்டு செல்லும் கட்டணமும் அடங்கும், உங்களது லாபத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த வார இணையதளம்


பிரேசில் இந்தியாவின் ஒரு முக்கிய ஏற்றுமதி பார்டனர் ஆகும். அங்குள்ள 13000 கம்பெனிகளின் விபரம் இந்த யெல்லோ பேஜஸ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாடு பற்றிய தகவல்கள் பற்றியும், ஏற்றுமதி இறக்குமதி பற்றியும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உபயோகமான இணையதளம்.

இந்தத் தொடர் குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரிsethuraman.sathappan@gmail.com

1 comment:

  1. dear sir,
    Vanakkam.

    Pl.advise me about exporting t-shirts,bath towels,and jeans denims to various countries

    ReplyDelete