சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
டாலரும் ரூபாயும்
வாராவாரம் எழுத வேண்டிய அளவிற்கு முக்கியமான விஷயமாகி விட்டது டாலர் ரூபாய். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இழந்து கொண்டே இருக்கிறது. ஒரு நிலையில் 52.73 வரை சென்று ஏற்றுமதியாளர்களுக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டது. ஏன் ரூபாய் மதிப்பு சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டிருக்கிற சரிவை விட அதிகமாக பொருட்களின் விலையில் டிஸகவுண்ட் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தான் கவலையான விஷயம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சிறிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு வென்சர் கேபிட்டல் உதவிகளும், வரி விலக்குகளும் வருங்காலத்தில் இருக்கும் என்று தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாக பெரிய அளவில் புட் பார்க்குகளும், குளிர்சாதன கிடங்குகளும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இந்த வசதிகள் இல்லாமல் பெரிய அளவில் செய்ய முடியாமல் இருக்கிறது. வருங்காலங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு குளிர்காலமாக இருக்கட்டும்.
பாசுமதி அரிசி
அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பாசுமதி அரிசியில் டிரைசைக்லாசோல் டிரேசஸ் இருப்பதாக கண்டுபிடித்து அனுப்பப்பட்ட கண்டெய்னர்களில் 150 வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 டன்கள் அரிசி உள்ளது. ஆனால், குறைந்த அளவு டிரைசைக்லாசோல் இருப்பது துரு அண்டுவதை தடுக்கவும் உதவுகிறது எனவும், இதை அரிசி ஏற்றுமதி நாடுகள் பலவும் (தாய்லாந்து, ஜப்பான் போன்றவை) பயன்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது.
சைனா கண்காட்சி
மும்பையில் சமீபத்தில் நடந்த சைனா கண்காட்சியில் சைனாவை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நுகர்பொருள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. எலக்ட்ரானிக், செக்யூரிட்டி உபகரணங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், பரிசுப் பொருட்கள், கட்டுமானத்துறை பொருட்கள், பாத்ரூம் புராடக்ட்ஸ் போன்றவை இருந்தன. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்தியாவின் மிகப்பெரிய கம்பெனிகள் இந்த கண்காட்சியை பார்க்கவும், வாங்கவும் மிகவும் ஆர்வம் காட்டின.
ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும், போட்டியும்
இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு போட்டி அருகில் உள்ள நாடுகளான பங்களாதேஷும், வியட்நாமும் தான். ஏனெனில் அங்கு லேபர் மிக மலிவாக இருப்பது தான். இதை சமாளிப்பது தான் தற்போது இந்தியாவிற்கு பெரிய தலைவலி. சைனா போன்று பெரிய அளவில் புரடெக்ஷன் செய்யவும் முடியாது, அதே நடுத்தர அளவில் செய்யும் போது மிஷன் மூலம் உற்பத்திகளை அதிகரிக்கலாம் என்றால் அது மூலதனத்தை அதிகப்படுத்துகிறது.
கேள்விக்கு என்ன பதில்?
ராமு
புதுக்கோட்டைஹோம் டெக்ஸ்டைல்ஸ் என்றால் என்ன? அதில் என்னென்ன பொருட்கள் வரும்?
பதில்
ப்ளாங்கெட், திரைசீலைகள், பெட்ஷீட்டுக்கள், பில்லோ கவர்கள், டவல்கள், நாப்கின்கள், ரக், குவில்ட், சமையலறையில் உபயோகப்படுத்தப்படும் துணிவகைகள் போன்றவை அடங்கும்.
விவேக்
சென்னை
கேள்விநாஸ்ட்ரோ, வாஸ்ட்ரோ அக்கவுண்ட் என்றால் என்ன?
பதில்
இந்திய வங்கி தான் வெளிநாட்டில் ஒரு வங்கியுடன் வைத்திருக்கும் அக்கவுண்டிற்கு பெயர் நாஸ்ட்ரோ அக்கவுண்ட் ஆகும். வெளிநாட்டில் இருக்கும் ஒரு வங்கி தன்னுடைய தேவைகளுக்காக இந்தியாவில் உள்ள ஒரு வங்கியுடன் வைத்திருக்கும் அக்கவுண்ட் வாஸ்ட்ரோ அக்கவுண்ட் ஆகும்.
இந்த வார இணையதளம்
www.fibre2fashion.com
இந்தியாவில் ஆயத்த ஆடைகள தயாரிப்பில் இருப்பவர்கள், துணி வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட மிஷினரி தயாரிப்பவர்கள் என்று அனைவருக்கும் பயன்படும் ஒரு சிறப்பான இணையதளம் இது. ஆயத்த ஆடைகள், துணி, லெதர், யார்ன், ஹேண்ட்லூம், ஹோம் டெக்ஸடைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இணையதளம்.
அடுத்த வாரம் இன்னும் பல செய்திகளுடன் சந்திப்போம். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com

சார் நான் நினைக்கிற பல சந்தேகங்களுக்கு விடை உங்கள் வலைப்பூ மூலமா கிடைக்குது. நீங்க போடுற வெப்சைட் என் கேள்விக்கு பதிலா இருக்கு.. ரொம்ப நன்றிங்க
ReplyDelete